Rain Holiday*
Special recipe*
*01/11/2022*
*பிஸிபேளாபாத்* *(சாம்பார் சாதம்)*
*▶️🔰தேவை?*
பச்சரிசி - 1 டம்ளர்,
துவரம் பருப்பு - 3/4 டம்ளர்,
கத்தரிக்காய் - 2,
செளசௌ - 1/2,
பீன்ஸ் - 10,
பெரிய கேரட் - 1,
உருளைக்கிழங்கு - 1,
பச்சைமிளகாய் - 2,
தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 15,
சாம்பார் பொடி - 2½ டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் - சிறிது,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.
*▶️🔰அரைக்க...*
நெய் - 1 டீஸ்பூன்,
பட்டை - 2,
கிராம்பு - 2,
துருவிய தேங்காய் - 1/2 மூடி.
*golden🕐*
*▶️🔰செய்முறை*
🔰கடாயில் நெய் விட்டு அரைக்க கொடுத்த பொருட்களை வறுத்து ஆறியதும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புளியை 1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து உப்பு சேர்த்து கொள்ளவும். குக்கரில் அரிசி, பருப்பு, மஞ்சள்தூள், எண்ணெய் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள், சாம்பார் பொடி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 6 டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாக கொதி வந்ததும் காய்கறிகளை சேர்த்து 4 அல்லது 5 விசில் விட்டு அடுப்பை நிறுத்தவும்.
🔰கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலை ஊற்றி கொதி வந்ததும் வெந்த சாதத்தில் கொட்டவும். 2 டீஸ்பூன் வறுத்து அரைத்த பொடியையும் சாதத்தில் கொட்டி நன்றாக கிளறி, சிறு தீயில் 2 நிமிடம் வைத்து இறக்கவும். கடைசியாக ஒரு சட்னி கரண்டி அளவு நெய்யை ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
*கோல்டன் 🕐 சமையல்*
🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment