சிங்கவரம்
குடைவரை கோயில் என்பதால் பாறையை குடைந்து கட்டப்பட்டு சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் தளம். கந்தவர்களைப்பற்றி, பெருமாளின் நாபிக்கமலத்தில் நான்முகனைப்பற்றி, கருடாழ்வார் பற்றி, மதுகைடவர் பற்றிய பதிவுகளை சுமந்திருக்கும் தளம். சங்கு, சக்கரம், நாமம், திருப்பாதம் மற்றும் அனுமனின் ஐந்து சிற்பங்களும் உள்ளன. இக்குடைவரை கோயிலில் வீற்றிருக்கும் ரங்கநாதர் கோயில் இருக்கும் ஊரான செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜாவின் குல தெய்வம் என்று சொல்லப்படுவது உண்மைதானா? என்பதை நேரில் சென்று மெய்பொருள் ஆராய்ந்தே காண்போமே? எமனை எச்சரிப்பதை போல பெருமாள் முகத்தை திருப்பி வைத்திருக்கிறார் என்றும் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சிமியை தனது மார்பில் வைத்துக்கொண்டு தன் பாதத்தை குபேரன் இருக்கும் திசை நோக்கி எதற்காக வைத்திருக்கிறார்? என்பதையும் பாப்போம். தன்னையே வணங்கவேண்டும் என்று சொன்ன இரணிய கசிபுவை எதிர்த்த அஞ்சாநெஞ்சன் பிரகலாதனை பலியிட எத்தனித்தபோது பெருமாள் வந்து காப்பாற்றிய கதை இங்கு நடந்ததுதான் என்றும் சொல்லப்படுகிறது. செஞ்சிக்கு அருகே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்கவரம் திருத்தலம். ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுர வாசலில் இருந்து அந்த ஊரின் சூழலைப் பார்க்கும்போது பலநூறு ஆண்டுகள் பின்னோக்கி போய் வாழ்ந்துகொண்டிருக்கும் எண்ணம் உதிக்காமல் இருக்காது. அத்தனை அமைதியாகவும், மனதைக் குளிர்விக்கும் இயற்கை எழிலுடனும் காணப்படுகிறது. கண்கள் விட்டுத் திரும்பாத அளவுக்கு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தரும் பெருமாள். மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ரங்கநாதர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர் என்கிறார்கள். குடைவரையில் உள்ள வாயிற்காவலர் சிற்பங்கள் போன்றவை மகேந்திரவர்மன் காலத்தவையா என்பதையும் நேரில் சென்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் துணையுடன் தெரிந்துகொள்ளலாம். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிங்கவரம் கிராமத்தில் உள்ள சிறிய மலையில் ஒரே கல்லில்குடைந்து உருவாக்கப்பட்ட கோயில்.
வணக்கம் வாசகர்களே,
தடாகம் பதிப்பகம் அடுத்த வரலாற்று பயணத்திற்கு தயாராகிவிட்டது. இம்முறை செஞ்சியில் உள்ள ஆறு மிகமுக்கியமான வரலாற்றுத் தலங்களான மேல்சித்தாமூர், திருநாதர் குன்று, சிங்கவரம், மண்டகப்பட்டு, தளவானூர், பனைமலை என்ற ஆறு வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் தலங்களை பார்க்க பயணப்படப்போகிறோம். ஏசி பேருந்தில் பயணம். இந்த செஞ்சி வரலாற்று பயணத்தை ஒருங்கிணைப்பதற்கும், தொல்லியல் துறை நிபுணரின் வரலாற்று தகவல் பரிமாற்ற ஏற்பாட்டிற்கும் தடாகம் பதிப்பகம் கட்டணமாக ஒரு நபருக்கு 950 ரூபாய் நிர்ணயித்திருக்கிறது. வரலாற்று பயணத்திற்கு விருப்பப்படும் வாசகர்கள் Gpay மூலமாக கட்டணம் செலுத்தி தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். கோவிட் தடுப்பூசி ஒரு டோஸ் போட்டிருக்கவேண்டியது கட்டாயம். அதற்கான சான்றிதழை அலைபேசியில் வைத்துக்கொள்ளுங்கள். மாஸ்க் அணிவது கட்டாயம். குறிப்பிட்ட இருக்கைகளே இருப்பதால் எவ்வளவு விரைவாக பயணத்திற்கான கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துவைத்திருக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. வாருங்கள் வரலாற்றுப் பயணத்தில் காலவெளிகளைக் கடந்து பயணிப்போம்.
தடாகம் வாட்சாப் - 9840070870
No comments:
Post a Comment