Wednesday, October 6, 2021

கொடி_மடி

 முகநூல் கீர்த்தி வாசன்

#கொடி_மடி 😂😂

இன்னிக்கு அப்பாவுக்கு ஸ்ரார்த்தம், பஞ்சமி திதி, அதோட ரிஷி பஞ்சமி விரதம் எடுத்துக்கறது இன்னிக்கு ரொம்ப ஸ்ரேஷ்டம். ஸ்ரார்த்தம் இன்னொருத்தர் ஆத்துல ஏற்பாடு. பண்ணி வைக்கற வாத்யார், போஜன பிராமணாள் நேர அங்க வந்துடுவா.

அந்த இடத்துல ஸ்நானம், மடி உலர்த்த no way, அதனால கார்த்தால ஒரு ஸ்நானம் பண்ணிட்டு மொட்டை மாடில கொடில வஸ்திரங்களை காய போட்டுட்டு கூடவே நானும் காயறேன். Walking போறபோது யாராவது பட்டுட்டா பித்ருக்கள் கோவிச்சுப்பா 😆😆. திருமலை தென் குமரி சினிமால நடிகை காந்திமதி நார்மடி கட்டின பாட்டியா வரும் பொழுது பேரன், காமாட்சி பாட்டி வரா யாரும் குறுக்க வராதீங்கோ பராக் பராக்னு சொல்ற மாதிரி நானும் காவல் காக்கறேன். அந்த காலத்து நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகதுல வர மாதிரி வெண் திரை கட்டியாச்சு. நவராத்திரி சினிமால சாவித்ரி வந்தேனேன்னு சத்யவான் சாவித்ரி மாதிரி பாடாத குறை ஒண்ணுதான் பாக்கி.

அப்பப்ப காஞ்சுடுத்தான்னு தொட்டு பார்த்தா மேல இருந்து பித்ருக்கள் தொட்டா மடி போயிடும்னு சத்தம் போடறா. மொட்டை மாடில வடாம் காய போட்டுட்டு ஒரு குடையை வச்சுட்டு போயிண்டே இருக்கலாம்.

அந்த நாள்ள எங்க அப்பாவோட பெரியப்பா, பெரியம்மா வருஷத்துக்கு 5 ஸ்ரார்த்தங்கள் எப்படித்தான் பண்ணினாளோ, விறகு அடுப்பு, குமுட்டி, உமிதூள், 30-35 பேருக்கு குறையாமல் சாப்பாடு அதோட கட்டுசாத கூடை மாதிரி கையில் பட்சணங்கள் நினைச்சு பார்த்தாலே தலை சுற்றி கண்ணுல துருவ நட்சத்திரம் தெரியறது.

எங்க அத்தையோட மாமனார், மாமியாருக்கு ஒரே நாளில் திதி வரும். மாமனார் போன பத்து வருஷம் கழிச்சு மாமியார் அதே திதியில் காலமானதால் ஒரே நாளில் இரண்டு ஸ்ரார்த்தங்கள் பண்ணுவார்கள்.

முதலில் மாமனார் ஸ்ரார்த்தம் முடிந்து பிராமணாள் போஜனம் ஆன பிறகு அகத்தை அலம்பி துடைத்து மெழுகி அடுப்புகளை துடைத்து குளித்து மடி பண்ணிக் கொண்டு இரண்டாவது ஸ்ரார்த்தம் செய்வார்கள். தனித் தனி சமையல் வேறு பண்ண வேண்டும். இரண்டாவது ஸ்ரார்த்தம் முடிந்த பிறகுதான் கர்த்தாக்கள் சாப்பிட முடியும்.

கல்யாணம் பண்ணுவது கூட சுலபம். ஆனால் ஸ்ரார்த்தம் பண்ணுவது கம்பி மேல் நடப்பது போல ஆகும். சும்மாவா சொன்னார்கள் அந்த நாளைய பெரியவர்கள், தெவசமோ திப்பிசமோ என்று.

No comments:

Post a Comment