#மாளையபஷம் சமையல்
21.09.2021 முதல் நாள்
********
மெனு--
1)வாழைகாய் பொரியல்
2)புடலங்காய் கூட்டு
3) புளி இல்லாத மாங்காய் குழம்பு
4)புளி இல்லாத ரசம்
செய்முறை--
1) வாழைகாயை சதுரம் சதுரமாக கட் பண்ணி தண்ணீரில் அலம்பி எடுத்து வச்சு கொஞ்சமாக உப்பு, மஞ்சள் தூள், கொஞ்சமாக இரண்டு டேபிள் ஸ்பூன் புளி ஜலம் விட்டு பிசிறி வைத்து மூடவும். சிறிது நேரம் கழித்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, அரை ஸ்பூன் பெருங்காய தூள் போட்டு தாளித்து, வாழைக்காயை பிழிந்து அதில் போட்டு பிரட்டவும். தேவைபட்டால் மேலும் கொஞ்சமாக உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி போட்டு நன்றாக வதக்கவும்.
2)புடலங்காயை அலம்பி பிறகு சின்ன சின்னதா கட் பண்ணி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி உப்பு மஞ்சள் தூள், பெருங்காய தூள் போட்டு மூடி வேக வைக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் கொஞ்சம் தேங்காய் துருவல், சிகப்பு மிளகாய் ஒன்று, ஒரு ஸ்பூன் சீரகம் மையாக அரைத்து கூட்டு வெந்ததும் போட்டு கிளறவும். பிறகு கடுகு, உ.பருப்பு, ஒரு மிளகாய் வத்தல், கருவேப்பிலை கிள்ளி போட்டு தாளித்து கொட்டவும்.
3)புளிப்பான மாங்காயை சின்னதாக சதுரமாக தலையெடுக்கும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் உ.ப. ஒரு தனியா, இரண்டு மிளகு, இரண்டு மிளகாய் வத்தல் வறுத்து இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் போட்டு வதக்கி அடுப்பை அனைக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு அரைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் இரண்டு மில்லி ஊற்றி கடுகு, வெந்தயம், இரண்டு மி.வத்தல், கருவேப்பில்லை ,பெருங்காயம் தாளித்து மாங்காயை அலம்பி போடவும். மஞ்சள் பொடி ,உப்பு போட்டு புரட்டி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். நன்றாக வெந்ததும் இரண்டு கரண்டி வேகவைத்த து.பருப்பை கடைந்து ஊற்றவும். பிறகு அரைத்து வைத்ததை ஊற்றி இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
4) ஒருதக்காளி பழத்தை கொதிக்கிற தண்ணீரில போட்டு சிறிது நேரம் கழித்து தக்காளியை எடுத்து நன்றாக கையால் பிசையவும். பிறகு அதில் ரசபொடி அல்லது சாம்பார் இரண்டு ஸ்பூன் போட்டு கல்லூப்பு, பெருங்காயம், கருவேப்பில்லை கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு பிறகு சிம்மில் வைத்து இன்னொரு அரை தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு பருப்பு ஜலம் விட்டு தேவையான தண்ணீர விட்டு நுரை ததும்ப விட்டு கொத்துமல்லி தழைய கிள்ளி போட்டு அடுப்பை அணைக்கவும். கடாயில் இரண்டு மில்லி நெய் விட்டு கடுகு, ஒரு மி.வ, பெருங்காய தூள் போட்டு தாழிட்டு கொட்டவும்.
இரவு பலகாரம்--
காஞ்சிபுரம் இட்லி
இட்லி அரிசி, பச்சரிசி,உளுந்து தலா ஒரு கப், வெந்தயம் அரை ஸ்பூன் மூணு மணிநேரம் ஊறபோட்டு கிரைண்டரில் பொடி ரவை மாதிரி அரைத்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். கரெக்டா மதியம் 12மணிக்குள் அரைத்தால் இரவு எட்டு மணிக்கு இட்லி வைக்கலாம். வைப்பதற்கு முன்னாடி மிளகு சீரகம் கரகரப்பாக பொடி பண்ணனும்,இரண்டு ஸ்பூன், இஞ்சி துருவியது ஒரு துண்டு, சுக்குப் ஒரு ஸ்பூன் மாவில் கொட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உ.ப, க.ப, தலா ஒரு ஸ்பூன் முந்திரிபருப்பு, கருகபில்லை தாளித்து மாவில் கொட்டவும்.
தொட்டுக்க தக்காளி சட்னி
தக்காளியை நாலா நறுக்கி அதில் இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி உப்பு போட்டு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சை மிளகாய் ஒன்னு முழுதாக போட்டு தாளித்து பெருங்காய தூள் போட்டு அரைத்த தக்காளியை போட்டு வதக்கி இரண்டு நிமிடம் தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு: அவசரத்தில் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்
Padma kumar
No comments:
Post a Comment