Friday, November 4, 2022

கண்டிஷன்

 கண்டிஷன்!

(குட்டிக் கதை)

பார்த்திபனுக்கு அன்று ஆபீஸில் வேலையே ஓடவில்லை.

கொஞ்சம் மூடு அவுட் ஆகி இருந்தான்.

அம்மா காலையில் சொன்ன வார்த்தைகள் காதில் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருந்தன.

"அந்த பொண்ணு சுதா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கல ப்பா !"

"நீ என்ன இருந்தாலும் இப்படி கண்டிஷன் போட்டு இருக்கக் கூடாது."

"உனக்கு மூணு வயசு அசோக் மேல கொள்ளைப் பிரியம்தான்.

இல்லன்னு சொல்லல. ஆனா அசோக்கை நல்லா பார்த்துக்கனு ம்னு முதலிலேயே நீ கண்டிஷன் போட்டிருக்க கூடாது."

"அப்பாவும் நானும் வீட்டில் தானே இருக்கோம். அசோக்கை இத்தனை நாள் பார்த்துகிட்ட மாதிரி பார்த்துக்க மாட்டோமா ?'

*"""""""""""""""

அன்று இரவு..

இதே ஞாபகத்தில் படுக்கையில் கண்ணை மூடி படுத்து இருந்தான் பார்த்திபன்.

செல்லில் ஒரு அழைப்பு. புதிய நம்பர்; எடுத்தான்.

"நான் சுதா பேசறேன்.!"

ஆச்சர்யத்துடன் எழுந்து உட்கார்ந்தான்.

"உங்க முடிவு பத்தி அம்மா ஏற்கனவே சொல்லிட்டாங்க

 சுதா !"

"இப்ப என் முடிவை நான் மாத்திகிட்டு கல்யாணத்துக்கு யெஸ் சொல்லிட்டேன்.!" என்று சுதா சொன்ன போது ..

பார்த்திபனுக்கு தன் காதுகளையே நம்ப முடிய வில்லை!

சுதா தொடர்ந்தாள்.

"முதல்லே எனக்கு உங்க அசோக்கை பிடிக்கல. ஆனா ஒரு வளர்ப்பு பிராணி மேலேயே இவ்வளவு அன்பு காட்டற நீங்க கல்யாணத்துக்கு அப்புறம் என் மேலே ரொம்ப பிரியமா இருப்பீங்கன்னு தோணிச்சு.

அதான் சரின்னு சொல்லிட்டேன்!'

பார்த்திபன் மனசு சிறகடித்தது !

மூன்று வயது அசோக்…!

பார்த்திபனின் வளர்ப்பு நாய் !

***"**"*********"******""""**""""""""""**"""

*****""****"""*"**""""""""**""""*"""""""""""""

No comments:

Post a Comment