Wednesday, November 30, 2022

உருளைகிழங்கு சாதம்

 உருளைகிழங்கு சாதம் 

தயாரிப்பு நேரம் - 10 நிமிடங்கள் 

சமையல் நேரம் - 20 நிமிடங்கள்  

தேவையான பொருட்கள் 

நல்லலெண்ணெய் - 1 மேசைக்கரண்டி 
கடுகு - 1/2  தேக்கரண்டி 
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் -2
பெருங்காயத்தூள் - 1/4  தேக்கரண்டி 
மஞ்சள் தூள்  - 1/4  தேக்கரண்டி 
உருளைகிழங்கு - 2 
தேவையான அளவு  உப்பு 
கறிவேப்பிலை 
அரிசி 

மசாலா தூள் தயாரிக்க 

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி 
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 
மிளகு - 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் -7 
மல்லி விதை - 2 தேக்கரண்டி 
சீரகம் - 1 தேக்கரண்டி 
வெந்தயம் - 1/4  தேக்கரண்டி 
புளி 

செய்முறை 

1. முதலில் மசாலா தூள் தயாரிக்க வேண்டும்

 2. உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சிவப்பு மிளகாய், மல்லி விதை, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை  வறுத்துவிட்டு சிறிது நேரம் ஆறவிட்டு அரைக்கவும் 

3. அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும் 

4. இந்த வதக்கியவற்றில் உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து பொன்னிற்றமாகவும் வரை வறுக்கவும் பின்னர் அரைத்துவைத்துள்ள மசாலா தூளை சேர்த்து கலக்கவும் 

5. இந்தக்கலவையில் வேகவைத்த அரிசியை சேர்த்து கலக்கவும்

 6. சுவையான உருளைகிழங்கு சாதம் தயார் 

7. இந்த உருளைகிழங்கு சாதத்துடன் அப்பளம் அல்லது வத்தல் சேர்த்து பரிமாறவும்

மசாலா பொரி

 மசாலா பொரி  

தேவையான பொருட்கள்

பொரி - 1 கப் (200 கிராம்) 
பொட்டு கடலை - 1/4 கப் 
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப் 
பூண்டு - 3 பற்கள் இடித்தது 
கறிவேப்பிலை 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
நெய் - 4 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய், பொட்டு கடலை சேர்த்து சுமார் 2 நிமிடம் வறுக்கவும்.

2. பிறகு வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை, இடித்த பூண்டு சேர்க்கவும். 2 நிமிடம் வறுத்த பிறகு, பொரியை சேர்த்து கலக்கவும்.

3. அடுப்பை குறைந்த தீயில் வைத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.

4. இறுதியாக நெய் சேர்த்து கலந்து விடவும். அருமையான மசாலா பொரி தயார்.

என்ன பிடிக்கும்

 என்ன பிடிக்கும் ?

"அண்ணா, டாக்டர்ஸ் என்னதான் சொல்றாங்க?" ராதுவின் குரலில் பதட்டம்.

" அதேதான்மா. அப்பாவுக்கு ஹார்ட் பம்பிங் ரேட் ரொம்ப குறைச்சலா இருக்கு. ஏற்கெனெவே ரெண்டு சர்ஜரி ஆனதால இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. முடிஞ்ச அளவு மருந்து கொடுத்தாச்சு. இருக்கற வரைக்கும் அவரை சந்தோஷமா வச்சிக்குங்கன்னுதான் சொல்றாங்க".

" இப்போ அப்பா எப்படி இருக்கார்?"

"நார்மலா எப்பவும் போலதான் இருக்கார். இந்த நிமிஷம் வரை பைன்".

" அண்ணா, நான் ஒண்ணு சொல்றேன் கேளு. நான் பசங்களை கூட்டிட்டு இன்னும் ரெண்டு நாள்ல வரேன். நீ ரகு அண்ணாவையும் எல்லோருடனும் வரச்சொல்லு. எல்லாருமா சேர்ந்து அப்பாவோட நாலு நாள் இருக்கலாம். "

" சரிடாம்மா . நான் அவன்கிட்ட பேசறேன்."

" அம்மாவுக்குத் தெரியுமா?"

" தெரியாது. ஹாஸ்பிடல் போனோம். சரியாகி வந்துட்டார்னுதான் நினைச்சிண்டு இருக்கா".

" அப்படியே இருக்கட்டும். அம்மாவை கவலைப்படுத்த வேண்டாம்".

" சரி, நீ டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்லு. நான் காரை எடுத்துண்டு ஸ்டேஷனுக்கு வரேன்".

சாப்பிடும்போது அம்மாவிடமும் அப்பாவிடமும் ராதுவும் ரகுவும் வருவதைப் பற்றி சொன்னான் ரவி. அவ்வளவுதான், அம்மாவுக்கு இரண்டு இறக்கை முளைத்த மாதிரி ஆகி விட்டது. அப்பாவின் மலர்ந்த முகம்தான் அவருடைய சந்தோஷத்தின் அறிகுறி.

" எனக்கே ஒரு வாரமா அவா ரெண்டு பேரையும் குழந்தைகள் எல்லாரையும் பார்க்கணும்னு ஒரு நினைப்பு. நல்லதாய் போச்சு. கொஞ்சம் சாமான் எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன். நீ சித்த போய் மெஷின்ல அரைச்சுண்டு வந்துடு. குழந்தைகளுக்கு கொஞ்சம் பட்ஷணம், அப்புறம் கொஞ்சம் கஞ்சி மாவு, சாம்பார் பொடி, புளிக்காய்ச்சல், சேவை மாவு. ரகு பொண்டாட்டிக்கு என் கை முறுக்கு ரொம்ப பிடிக்கும் ..."

" அம்மா,அம்மா... நிறுத்து கொஞ்சம் மூச்சு விடு..எல்லாம் பண்ணலாம். எங்க எல்லாருக்கும் என்ன பிடிக்கும்னு சொல்றியே, அப்பாவுக்கு என்னல்லாம் பிடிக்கும் சொல்லு".

உங்கப்பாக்கு நான் என்ன பண்ணி குடுத்தாலும் பிடிக்கும்தான்". கீற்றாய் மின்னி மறைந்த நாணம் கலந்த பெருமை அவள் வைரத்தோடை மங்கச் செய்தது.

" சரி, அப்பாக்கு பிடிச்சதா ரெண்டு ஐட்டம் சொல்லு பார்ப்போம்."

" நான் தினமும் அவர் இலைல எஸ்ட்ராவா என்ன போடறேன்னு பார்த்து தெரிஞ்சுக்கோடா". அம்மா சிரித்தபடி எழுந்து சென்றாள்.

ரவிக்கு ஒரு கணம் அம்மாவை நினைத்து கவலையாக இருந்தது. எப்படி தாங்குவாள்?

ராதுவும் ரகுவும் வந்தவுடன் வீடு களை கட்டி விட்டது. அம்மா சமையலறையோடு ஐக்கியம் ஆகி விட்டாள். அப்பாவை சாக்கு வைத்து எல்லோருக்கும் பிடித்தது எல்லாம் அம்மா செய்து தள்ளிக்கொண்டிருந்தாள். அப்பா எல்லோருடனும் சிரித்துப் பேசி மிக மகிழ்ச்சியாக இருந்தார். அப்பாவுக்குப் பிடித்த பழைய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆளாளுக்கு ஆசையாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புது ஷர்ட்டும் புடவையும் வாங்கினார்கள். வீடு வெகு நாட்கள் கழித்து கூச்சலும் கேலியும் விளையாட்டும் அமர்க்களமுமாய் ஆரவாரப்பட்டது. அப்பாவின் உடல்நிலையைப் பற்றிய கவலை கூட சற்று மறந்து விட்டது. சனிக்கிழமை அன்று வெளியில் போவதாகத் திட்டம் போட்டார்கள்.

"எனக்கு எல்லாருடனும் பீச் போகணும்னு ஆசை. அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாம். அம்மாவுக்கு ஒரு வேளை ரெஸ்ட்டா இருக்கட்டும்." அப்பா சொன்னார்.

அன்றைய பொழுது மிக இனிமையாக கழிந்தது. மகிழ்ச்சித் தருணங்கள் எல்லாம் டிஜிட்டல் உதவியுடன் அமரத்துவம் பெற்றன. ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்vறார்கள். " அப்பா, என்ன சாப்பிடறேள்?"

அப்பாவுக்கு பிடித்தது எல்லாம் பார்த்து பார்த்து ஆர்டர் செய்தார்கள்.

" அம்மா, உனக்கு என்ன வேணும்?"

" எனக்கு சாம்பார் இட்லி வேண்டாம்,காரமா இருக்கு." ஒரு வாண்டு கத்தியது.

" இதே வேலை..எதையாவது ஆர்டர் பண்ண வேண்டியது, ஒரு வாய் சாப்பிட்டுட்டு வேண்டாங்க வேண்டியது. " ராது குழந்தையிடம் சிடுசிடுத்தாள்.

" குழந்தையை வையாதே. நான் அதை எடுத்துக்கறேன். அவனுக்கு வேணுங்கிறதை வாங்கிக்கொடேன்" அம்மா .

" உனக்கு வேணும்ங்கிறதை சொல்லும்மா. இவனை விடு".

" பரவாயில்லை, எனக்கு இட்லி போதும், அவன் கேட்கிறதை ஆர்டர் பண்ணு ".

குழந்தைகள் மிச்சம் மீதி வைத்ததை அம்மாவும் ராதுவும் பகிர்ந்து கொள்ள ஒரு வழியாக டின்னர் முடிந்தது.

திரும்ப வரும்போது அப்பா மிக நெகிழ்ச்சியாக இருந்தது தெரிந்தது.

இரவு தூங்குமுன் அம்மாவிடம் சொன்னார்.

" ரொம்ப நாள் கழிச்சு குழந்தைகள் எல்லோரோடும் இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யறதுகள். எத்தனை பேருக்கு இது வாய்க்கும்?"

" நீங்க சொல்றது சரிதான்". அம்மா ஆமோதித்தாள்.

" ஆனா எனக்கு ஒரு சந்தேகம். எப்பவும் அப்பா, இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது, உடம்புக்கு ஆகாதுன்னு சொல்ற பசங்க இப்ப என்ன ஒரு ரெஸ்ட்ரிக்க்ஷனும் இல்லாம ஓவர் உபசாரம் பண்றதுகளேன்னுதான்."

" ஒரு ரெண்டு நாள் எல்லாரும் சேர்ந்து இருக்கறதுனாலதான் இதெல்லாம். அப்புறம் நானே உங்க ரெகுலர் டயட்டுக்கு மாத்திடுவேன்". அம்மா சிரித்தாள்.

"அதானே பார்த்தேன், சரி , தூங்கலாம். டயர்டா இருக்கு, நாளை காலம்பற மெல்ல எழுந்துக்கோ. லீவு நாள்தானே".

" பார்க்கலாம். அதுவாவே சீக்கிரம் எப்பவும் போல முழிப்பு வந்துடும்."

ஆனால் மறுநாள் காலை அம்மாவுக்கு சீக்கிரம் முழிப்பு வரவில்லை. எல்லோரும் எழுப்பியும் அவள் முழித்துக் கொள்ளவே இல்லை.

வீடு உறைந்து போனது. யாருக்கும் அம்மாவின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை. அப்பா அப்பான்னு அம்மாவை கவனிக்காம விட்டிட்டோமோ, ஒரு நாள் கூட ஒரு வலின்னு கூட சொன்னது இல்லையே என்று புலம்பி மருகினார்கள்.அதிர்ச்சியிலும்,துக்கத்திலும் பத்து நாட்கள் போனது தெரியவில்லை.

" அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு சொன்னால் சமையல்ல சேர்த்துடலாம்".சமையல் மாமி ராதுவிடம் கேட்டார்.

"அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?...ரகு அண்ணா நீ சொல்லேன், அம்மாவுக்கு என்ன பிடிக்கும்? நான் இங்கே வரும்போதெல்லாம் அம்மா எனக்கு பிடிச்சதை செய்வா. அவளுக்கு என்ன பிடிக்கும்னு இப்போ ஒன்னும் தோணலியே.."

" அம்மாவுக்கு என்ன பிடிக்கும் ? ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து செய்வாளே தவிர, அவளுக்குப் பிடிச்சதை கவனிக்கலையே, ரவி, நீ சொல்லு, அம்மாக்கு என்னல்லாம் பிடிக்கும் ?"

" ம்ம்..எப்பவும் எல்லாருக்கும் போட்டுட்டு அம்மா தனியாத்தான் சாப்பிடுவா..எனக்கு இது பிடிக்கும்னு எதுவும் அவ பண்ணினதா தெரியலையே..கடவுளே, என்ன இது..அம்மாக்கு என்ன பிடிக்கும் ..."

" அப்பா, அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?"

" அம்மாவுக்கு... அம்மாவுக்கு என்ன பிடிக்கும்"?

******

அனுராதா ஜெய்ஷங்கர்

Pathologist ன் டைரி குறிப்பு

 ஒரு Pathologist ன் டைரி குறிப்பு தொடர் -28

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்ட தொடர்.. மீண்டும் தொடர்வோம் 

வழக்கமான காலை நேர ஆலோசனை நேரம். பரிசோதனைகள் செய்து கொள்ள வந்தவர்களுக்கு அவர்கள் சிரமங்கள் என்னவென்று கேட்டறிந்து அதற்கேற்ப என்ன பரிசோதனைகள் தேவை என்று விவரித்து அதற்கான தங்கள் மாதிரிகள் அவர்கள் தந்த பின்னர் காலை உணவுக்கு அவர்களை அனுப்பி வைத்தேன்

பரிசோதனைகள் செய்து கொள்ளப் போகிறவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. அவர்கள் அனைவருக்கும் இப்போது சில ஆலோசனைகள்:

1) சர்க்கரை, கொழுப்பு (லிபிட் புரொபைஃல்), தைராய்டு ஹார்மோன் மற்றும் எந்த ஹார்மோன் பரிசோதனை ஆனாலும், மன நல மருத்துவம் சார்ந்த பரிசோதனைகள் (லித்தியம், மருந்து அளவுகள் போன்ற), Tumor Markers என்ற புற்றுநோய் ஆன்டிஜன் சோதனைகள், ANA போன்ற auto immune சோதனைகள், TORCH (Toxoplasma, Rubella, Cytomegalo Virus, Herpes Viruses Type 1,2 போன்ற நோய்க்குறி சோதனைகள் போன்றவை ஆனாலும், அனைத்துமே காலையில் உணவு இல்லாமல் வெறும் வயிற்றில் செய்வது நல்லது என்று சொல்வதை விட "வெறும் வயிற்றில் தான்" என்று அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

2) சொளகர்யம் மற்றும் நேரம் கருதி மேல் குறிப்பிட்ட பரிசோதனைகள் நினைத்த நேரத்தில் செய்தால் முழுமையாக பலன் கிடைக்காது.

3) வேறு வேலையாக போகும் போது திடீரென ஞாபகம் வந்து அல்லது ஏதாவது ஒரு ",LAB" போர்ட் கண்ணில் பார்த்ததும் உள்ளே நுழைந்து ஒரு "Random test" order செய்வதும் மிகவும் தவறு. ஏதோ ஒரு ரிசல்ட் கிடைக்கும் 

4) வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள் போலன்றி (நம் lab technicians) இவ்வாறு வந்தவரை "இன்று போய் நாளை வெறும் வயிற்றில் வாரும்" என்று திரும்பி அனுப்ப அவர்கள் ராமர்களும் அல்ல, இது ஒண்ணும் ராமாயண காலமும் அல்ல

5) "வெறும் வயிற்றில்" என்றால் என்ன?

இரவு உணவிற்கும் அடுத்த நாள் காலை பரிசோதனை மாதிரி (Test sample--Blood)யை லேப் ல்  தரும் நேரத்திற்கும் சுமார் 10 முதல் 12 மணி இடைவெளி இருக்க வேண்டும். இது தான் வெறும் வயிறு 

இந்த இடைவெளியில் திட உணவு கண்டிப்பாகக் கூடாது. குடி  நீர் அருந்தலாம் 

ஆனால் இரவில் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டியவர்கள் சில சமயம் நடு இரவில் ஒன்றிரண்டு மாரி பிஸ்கட் சாப்பிடுவதாய் இருப்பின் அதில் ஒரு குழப்பமும் இல்லை. சாப்பிடலாம்

ஆனால் மிகவும் முக்கியமாக, பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் எதையும் (Dairy products)இந்த இடைவெளி நேரத்தில் சாப்பிடக் கூடாது.

கூடுதல் ஆலோசனை:

(அடிவயிறு ஸ்கேன் என்ற Ultrasound abdomen and Pelvis) செய்து கொள்ள வேண்டியவர்கள் இந்த விஷயம் கவனிக்க வேண்டும். 

பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிட்டு ஸ்கேன் செய்தால் "பித்தப்பை" என்ற‌ "Gall Bladder" Scanல் சரியாகத் தெரியாது. 

இந்த பித்தப்பை நம் உடலில் மிகவும் முக்கிய உறுப்பு. இந்த காலங்களில் நிறையவே பலர் Gall Bladder stones பாதிப்பு ஏற்பட்டு (Cholelithiasis) Gall Bladder surgeryல் இந்த முக்கிய உறுப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். (Cholecystectomy)

அது போல காஃபி போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிட்டு பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்தால், ரத்தத்தில் Triglycerides என்ற கொழுப்பின் அளவு அதிகமாக காணப்படலாம். 

Treatment சமயம் இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஒன்றும் சாப்பிடாமலேயே Triglycerides அளவு வெறும் வயிற்றில் 160 மிகி/100ml of blood ல் இருக்கும் போது இதை குறைப்பதற்கு fe........te என்று ஒரு மாத்திரை தரப்பட வேண்டும். 

Dairy products, மற்றும் சில Carbohydrates ஆல் இந்த Triglycerides அதிகரித்ததா, இயற்கையாகவே இந்த பேஷண்ட் ரத்தத்தில் அதிகமாக உள்ளதா என்று தெரியாமல் போய்விடும். 

ஏனெனில் டாக்டர் ஒவ்வொரு பேஷண்டிடம் " நீங்கள் ரத்தம் எப்படி கொடுத்தீர்கள், எப்போது கொடுத்தீர்கள்" என்று எல்லாம் கேட்பது கிடையாது. ரிசல்ட் பார்ப்பார். உங்கள் பெரிய பிரிஸ்கிரிப்ஷன் ரெடி. Ultimate : You are the Loser "

டிரைகிளிசரைடுகள் அளவு கட்டுப்பாடு இல்லை எனில் கணையம், கல்லீரல், கிட்னி, மூளை, பித்தப்பை என்று பல முக்கிய உறுப்புகளில் கொழுப்பு படிந்து செயல் திறன் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே கவனம் தேவை

6) பலர் பரிசோதனை நாள் அன்று தன் மனம் போன போக்கில் உணவு உண்பது, குறைத்து உண்பது, அன்று மட்டும் சர்க்கரை இல்லாமல் காஃபி குடிப்பது, மாத்திரை நிறுத்தி விடுவது, நினைத்த போது பரிசோதனை மாதிரி தருவது என்று விளையாட்டு காட்டுவார்கள். "சுய டாக்டரிஸம்"

7)பரிசோதனை நாளன்று, வழக்கமான உணவு, அளவு மற்றும் வகை & விதம் பின் பற்ற வேண்டும். தினமும் உதாரணமாக நான்கு இட்லி அளவு உணவு என்றால், டெஸ்ட் தினமும் அதே அளவு தான் சாப்பிட வேண்டும். 

8)வழக்கமான எல்லா மாத்திரைகளை டெஸ்ட் நாள் அன்றும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் ஊசி போடுபவர் என்றால் அதையும் போட வேண்டும். அப்போது தான் அவர் சாப்பிடும் மாத்திரைகள் சரியா, கூட்ட வேண்டுமா, குறைக்க வேண்டுமா அல்லது மாற்றவேண்டுமா என்று தெரியும்.

9) வெறும் வயிற்றில் ரத்தம் கொடுத்த பிறகு மாத்திரைகள் சரியான அளவு மற்றும் முறையில் (சில உணவுக்கு முன்/சில உணவுடன் (along with food)/சில உணவு முடிந்த உடன்/சில உணவு முடிந்த அரை மணி நேரம் கழித்து) இவ்வாறு பரிசோதனை தினத்தன்றும் சாப்பிட வேண்டும்

10) உணவு ஆரம்பித்து ஒன்றரை மணி நேரம் கழித்து ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள் PP  என்ற (post prandial) டெஸ்ட் செய்ய மீண்டும் ஒரு முறை ரத்தம் மாதிரி தரவேண்டும்

11) உணவு உண்பதற்கு முன் சிறுநீர் கழிக்க வேண்டும். உணவு முடிந்த பிறகு அடுத்த PP டெஸ்ட் செய்ய ரத்தம் மாதிரி தருவது போல சிறுநீர் மாதிரி (Urine sample) தரவேண்டும். அது வரை சிறுநீர் கழிக்கக் கூடாது. சிரமமாக இருக்கும் எனில் உணவு முடிந்த குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து சிறுநீர் தரலாம்

12) காலையும் சிறுநீர் மாதிரியை டெஸ்ட் செய்ய தர விரும்பினால் ஒரு சுத்தமான container ல் (அருகில் மெடிக்கல் ஷாப் ல் கிடைக்கும்) காலை எழுந்தவுடன் வரும் சிறுநீரில் சில அளவு போக விட்டு சுமார் 25 மிலி அளவு mid-stream urine சேகரித்து ஒரு மணி நேரத்தில் லேப் ல் தந்து விட வேண்டும்.

தாமதமாகத் தரும் மாதிரி பயனில்லை. அதில் கிருமிகள் பல்கிப் பெருகும்

13) காலை ஓரிரு முறை சிறுநீர் கழித்து விட்டு பிறகு சோதனைச் சாலையில் urine sample தருவது பயனுடையதாக இருக்காது. 

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏

டாக்டர் இரகுராமன் வரதாச்சாரி

திருச்சிராப்பள்ளி

இட்லி

 ஆமணக்கு  விதை சாப்பாட்டில் யூஸ் பண்ணலாமா....?

--------

இட்லிக்கு வெளியில் கொடுத்து அரைப்போர், மாவாகவே வாங்குவோர் லெஃப்ட் எடுத்து விரைவாக தாண்டி சென்று விடவும்.

--------

இட்லி அரிசி,

ரேஷன் புழுங்கல் அரிசி, 

ரேஷன் பச்சையரிசி அனைத்தும் தலா அஞ்சி கப் தண்ணீர் விட்டு  நாலு முறை நல்லா கழுவிட்டு அரிசிக்கு மேல ஒரு அங்குலம் தண்ணீர் இருப்பது போல தண்ணி சேத்து ஊர வைங்க. அப்படியே அரைகப் வெந்தயம் எடுத்து நல்லா கழுவி அதில் ரெண்டு கப் தண்ணீர் விட்டு இதையும் ஊர வைங்க. வெந்தயத்தை மட்டும் முதல்நாளே ஊரவைத்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தா இன்னும் அமோகம்.

அரிசி ஊரவைத்த ஐந்து மணி நேரம் கழித்து மூனு கப் உளுந்து எடுத்து நாலுமுறை கழுவி இதையும் ஊர வைங்க. உளுந்து ரெண்டு மணி நேரம் ஊரினாலே போதும்.

மாவு அரைக்கும்போது இந்த ஊரவைத்த தண்ணீரையே யூஸ் பண்ணா மழை பனி காலத்தில் மாவு அருமையா பொங்கி வரும். நல்லா கழுவ வேண்டியதன் அவசியம் இதுதான்.

கோடைக்காலத்தில் ஐஸ் வாட்டர் சேர்த்து அரைக்கலாம்.

அடுத்து ஆமணக்கு விதைல ஒரு டஜன் எடுத்து மேலுள்ள ஓட்டை தட்டி உரிச்சிடுங்க.

முதல்ல உளுந்து அரைப்பதில் உள்ள சௌகர்யம் என்னன்னா... வேல முடிஞ்சி கிரைண்டர கழுவ ஈசியா இருக்கும். அரிசி அரைப்பதால் உளுந்தின் கொழகொழப்பு இருக்காது. 

உளுந்துடன் வெந்தயம் சேர்த்து நல்லா நைஸா அரைக்கனும். அரிசியுடன் ஆமணக்கு விதை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாவும் அரைக்கலாம்.

 (இன்னொரு ரகசியம்... :) இத்துடன் மூனு பச்சை மிளகாய பொடியா கட்பண்ணி போட்டு அரைச்சிப் பாருங்க... பாத்துட்டு சொல்லுங்க...)

தேவையான உப்பை அரைக்கும்போதே போட்டுடுங்க. 

இந்த மாவு நாலைந்து மணி நேரத்திலேயே இட்லிக்கு தயாராகிடும்.

By: Shiva's Kitchen.

Tuesday, November 29, 2022

பாதுகா ஸஹஸ்ரம்

 #பாதுகா_ஸஹஸ்ரம்:-

உங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு அதிசயஸ்லோகம்.

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்று சொல்கிறார்களே.

அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா?

ஆபத்தில் இறைவனின் திருவடி உதவுவதை போன்று உடன் பிறந்த அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பது தான். 

எந்த  ஆலயத்திற்கு சென்றாலும் இறைவனை தரிசிக்கும் போது, திருவடிகளை தான் முதலில் தரிசிக்கவேண்டும். அதுவும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.

இறைவனின் அருள் கொட்டிக் கிடக்கும் இடம் அவன் திருவடிகளே.

பக்தர்களின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை அவற்றுக்கு உண்டு. 

ஆகையால் தான் பெருமாள் கோவில்களில் சடாரி வைக்கும் வழக்கம் இருக்கிறது.

இறைவனின் திருவடியை கிரீடம் போன்று செய்திருப்பார்கள். அதை வைத்து நமக்கு ஆசி கூறுவார்கள். 

அது எத்துனை முறை நம் தலை மீது வைக்கப் படுகிறதோ அவ்வளவுக்களவு நமது  தலையெழுத்து நன்றாக இருக்கும். 

இறைவனின் திருவடியை பணிபவர்களுக்கு வேறு எவர் காலிலும் விழவேண்டிய அவசியம் எந்த நாளும் ஏற்படாது.

தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான். மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்து விடுகிறார். 

எனவே இராமனின் பாதுகைகளை கொண்டு போய் அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான் பரதன்.

இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக் கொள்ளுங்கள்.

திருவரங்கத்தில் குடிகொண்டுள்ள இறைவனின் திருவடிகளை மையமாக வைத்து #பாதுகா #ஸஹஸ்ரம் என்ற ஸ்லோகத்தையே #ஸ்ரீ_வேதாந்த_தேசிகர்  இயற்றியிருக்கிறார். 

முழுக்க முழுக்க இறைவனின் திருவடிப் பெருமைகளையே உரைக்கும் இந்த ஸ்லோகங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. 

ஒரே இரவுக்குள் இந்த பாதுகா ஸஹஸ்ரம் என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் முழுவதையும் அவர் எழுதி முடித்தார் என்பது தான் இதன் சிறப்பு.

ஸ்ரீ #பாதுகா #ஸஹஸ்ர விதி

தினமும் காலையில் எழுந்த அவரவர்க்குரிய சமயக் கடமைகளை செய்யவேண்டும். 

பின்னர் தாம் பாராயணம் செய்ய விரும்பும் ஸ்லோகத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் .

ப்ராணாயமம் செய்து மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு ஸங்கல்பத்தை செய்து கொள்ளவேண்டும்.  பிறகு,

ஸ்ரீமாந் வேங்கட நாதார்யா : கவிதார்க்கிகேஸரீ வேதாந்தசார்யவர்யோ மே ஸந்நிததத்தாம் ஸதாஹ்ருதி

என்று சொல்லி பாதுகா சஹாஸ்ரத்தை அருளிய நிகமாந்த தேசிகரை மனதால் நினைத்து வணங்க வேண்டும்.

பின்னர் 108 முறை கீழே தரப்பட்டுள்ள ஸ்லோகத்தை ஜபிக்கவேண்டும்.

ஸ்லோகங்களை ஜபிக்கும் போது, மனதில் இறைவனின் பாதுகைகள் மீதே நம் மனம் இருக்க வேண்டும். 

பக்தி சிரத்தையுடன் நம்பிக்கையுடன் இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜபித்து வந்தால் கோரிய பலன் கிட்டும்.

ஒருவேளை அது தாமதமானாலும் அவநம்பிக்கை கொள்ளாது பொறுமையுடன் இருந்தால் நிச்சயம் கோரியது கிடைக்கும். 

யார் உங்களை கைவிட்டாலும் பாதுகா உங்களை கைவிடாது.

பாராயணம் முடிந்த பின்னர்,

கவிதார்க்கிகஸிம்ஹாய கல்யாண குணசாலிநே

ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம 

என்று சொல்லி பூர்த்தி செய்ய வேண்டும்.

கெட்ட எழுத்து நல்ல எழுத்தாக மாற

கெட்ட எழுத்து என்றால் பிரம்மாவினால் ஒவ்வொருவர் நெற்றியிலும் எழுதியுள்ள எழுத்து. அதாவது அவரவர் பாக்கியம் எனலாம். 

அத்தகைய பாக்கியம் கெட்டதாக துர்பாக்கியமாக இருந்தால் அது மாறுதலடைந்து சுக பாக்கியங்கள் ஏற்படுவதற்கு கீழ்கண்ட ஸ்லோகத்தை ஜபிக்கவேண்டும்.

பரிஸர விநதாநாம் மூர்த்நி துர்வர்ண பங்க்திம்
பரிணமயஸி சௌரே: பாதுகே த்வம் ஸுவர்ணம்
குஹகஜந விதூரே ஸத்பதே லப்த வ்ருத்தே:
க்வநு கலு விதித: தே கோப்யஸௌ தாதுவாத:

#பொருள்:-

பாதுகையே! உன்னைத் தங்கள் தலைகளில் ஏற்றுக் கொண்டவர்களுக்கு நீ செய்வது என்ன? 

அவர்கள் தலைகளில் கெட்ட எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளவற்றை (தலை எழுத்து) தங்கத்தால் எழுதப்பட்ட நல் எழுத்துக்களாக நீ மாற்றி விடுகிறாய்.

உன்னைத் தீய மக்கள் அண்டி விடாதபடி நீ வெகு தூரத்தில் உள்ளாய். 

இப்படிப்பட்ட ரஸவாதவித்தையை நீ எங்கு கற்றாய்?

#விளக்கம்:-

சாதாரண பொருள் ஒன்றைத் தங்கமாக மாற்றும் வித்தைக்கு #ரஸவாதம் என்று பெயர். 

இங்கு மக்களின் தலை எழுத்துக்கள் சாதாரணமாக உள்ளன.

ஆனால் பாதுகையைத் தங்கள் தலையில் ஏற்பவர்களின் தலை எழுத்தானது தங்கமாக மாறி விடுகிறது.

இதனால் அவர்களும் இந்த உலகத்தில் தங்கம் போன்று அனைவராலும் போற்றும்படியாகமாறிவிடுகின்றனர்.

தங்கத்தால் செய்யப்பட்ட சடாரி தான் நம்முடைய தலை எழுத்தைத் தங்கமாக மாற்றும் என்று அவசியம் இல்லை. வெள்ளிச் சடாரியும் தலை எழுத்தைத் தங்கமாக மாற்றும்.

வாழ்க வளமுடன்.  

ஶ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம

பச்சை மிளகாய் ஊறுகாய்

 பச்சமிளகாய நன்னா அலம்பி, சுத்தமான உலர்ந்த துணியால தொடச்சு வைக்கவும். 100 கிராம் மிளகாய்க்கு மசாலா தயாரிக்க கடுகு 2 டீஸ்பூன், 2 டீஸ்பூன் கருப்பு எள்ளு, சோம்பு 3 டீஸ்பூன், வெந்தயம் 3 டீஸ்பூன், கலௌஞ்சி(வெங்காய விதைகள்) 2 டீஸ்பூன், 1 டீஸ்பூன் மஞ்சள் பொடி, 1 டீஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு தேவையான அளவு, 1/2 டீஸ்பூன் பெருங்காயம், 3 எலுமிச்சை பழச்சாறு. இவற்றில் கடுகு, வெந்தயம், எள்ளு, கலௌஞ்சி, சோம்பு ஆகியவற்றை தனி தனியாக வாசனை வரும் வரை ட்ரை ரோஸ்ட்

பண்ணி, ஆரியப்பின் மிக்ஸியில் கொர கொரவென்று பொடிக்கவும். அதில் மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் போடி, பெருங்காயம் எல்லாம் போட்டு நன்றாக கையால் கிளறவும். அந்த கலவையில் நல்லெண்ணெய் 100 gms எடுத்து லேசாக சூடு பண்ணி நன்றாக ஸ்பூன் போட்டு கிளறவும். ஒரு கண்ணாடி பாட்டிலில் உலர்ந்த பச்சை மிளகாயை கொஞ்சம் போட்டு, இந்த நல்லெண்ணெய் விட்டு பெரட்டின மசாலாவை சிறிது போட்டு பின்னர் மிளகாய், மசாலா என்று எல்லா மிளகாயும் மசாலாவுடன் கலந்து, மேலே எலுமிச்சை சாற்றை விட்டு நன்றாக அடி வரை கிளறி ஒரு சுத்தமான துணியால் பாட்டில் வாயை கட்டி, மேலே மூடியால் மூடி வெயிலில் வைக்கவும். 2 நாள் கழித்து கட்டின துணியை அவிழ்த்து நன்றாக கிளறி விட்டு அதே மாதிரி மூடி வைக்கவும். இது போல 1 வாரம் செய்ய வேண்டும். 8 வது நாள் பச்சை மிளகாய் ஊறுகாய் ரெடி. இது போட்டா, சப்பாத்தி, பருப்பு சாதம், புலாவ், வைஜிடேபள் சாதம் எல்லாவற்றிற்கும் தொட்டுக்க சுவையான சைட் டிஷ்.

Monday, November 28, 2022

அசோகா அல்வா

மாலினி மாமியின் அசோகா அல்வா

   7358451587

*▶️🔰தேவை*

பயற்றம் பருப்பு 1 கப்
சர்க்கரை 3 கப்
கோதுமைமாவு 1/4 கப்
ரீபைன்ட் ஆயில் அல்லது நெய் 2 கப்
முந்திரி கொஞ்சம்
கிராம்புப் பொடி 1/2 டேபிள்ஸ்பூன்
கேசரி பவுடர் கொஞ்சம் (வேண்டும் என்றால் போடலாம்)

*▶️🔰செய்முறை:*

🔰பயற்றம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, குக்கரில் நன்கு குழையும் வண்ணம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

🔰பிறகு சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுக்கவும். சிறிது எண்ணெய்யில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.

🔰கோதுமையுடன் வேக வைத்த பருப்பு, சக்கரை, கேசரி பவுடர் சிறிதளவு, கிராம்புப் பொடி சேர்த்து கிளரவும். நன்கு சுருண்டு வந்தவுடன் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.

GL

🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

புளியோதிரை

  புளியோதிரை

தயாரிப்பு நேரம் - 30 நிமிடங்கள் 

சமையல் நேரம் - 20 நிமிடங்கள் 

தேவையான பொருட்கள்  

மசாலா தூள் தயாரிக்க
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி 
மிளகு  - 1/4  தேக்கரண்டி 
வெந்தயம் - 1/4  தேக்கரண்டி 
எள் - 1 தேக்கரண்டி
தனியா - 2  தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/4  தேக்கரண்டி 

புளி கரைசல் செய்ய 

அரைத்த மசாலா பொடி 
புளி - 100 கிராம்
தண்ணீர் -  2 கப் 
நல்லெண்ணெய் -  3 மேசைக்கரண்டி
கடுகு  - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1/4 கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/4  தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2  தேக்கரண்டி
வெல்லம் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை 
உப்பு - தேவைக்கு ஏற்ப 

செய்முறை 

1. முதலில் மசாலாதூள் அரைக்க, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, எள்ளு, வெந்தயம், தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும்.

2. இந்த மசாலாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.

3. புளியை இரண்டு கப் தண்ணீரில் முப்பது நிமிடங்கள் ஊறவைத்து, புளியை நன்கு கரைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். 

4. அடுத்த ஒரு கடாயில், நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு,  வேர்க்கடலை சேர்த்து கிளறவும்.

5. கடுகு பொரிந்தவுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

6. பருப்புகள் அனைத்தும் வறுபட்ட பிறகு புளிக்கரைசலை ஊற்றி, பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். 

7. அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கலக்கவும்.

8. பிறகு அரைத்த மசாலா பொடி முழுவதும் சேர்த்த பச்சை மனம் நீங்கி, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். புலி கரைசல் தயார்.

9. அடுத்து வேக வைத்த சூடான சாதத்துடன் தேவையான அளவு புளி கரைசல் சேர்த்து கிளறவும்.

10. சுவையான புளியோதரை தயார்.

தக்காளி முட்டைகோஸ் காரக் கறி

 *என் சமையல்.* 

உமா 

தக்காளி முட்டைகோஸ் காரக் கறி.

தேவையான பொருட்கள்..
முட்டைகோஸ் – 1/4 கிலோ
தக்காளி – 1 சிறியது
வெங்காயம் – 1 சிறியது
மி. பொடி – 2 தே. கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – தாளிக்க

செய்முறை:

முட்டைகோஸை 1/2 அங்குல நீளத்திற்கு நன்றாக நறுக்கிம்கொள்ளவும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு,உளுந்து போட்டு தாளித்து உடன் வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் இவற்றையும் உடன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின்னர் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸையும் சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வாணலியை மூடி அவ்வப்பொழுது கிளறி வரவும்.

தண்ணீர் நன்கு சுண்டியதும் ஒரு தேக்கரண்டி எண்னை விட்டு கிளறி 1 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.

தக்காளி முட்டைகோஸ் காரக் கறி தயார்.

குறிப்பு:

முட்டை கோஸ் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் தண்ணீர் அளவுக்கதிகமாகாமல் இருக்கட்டும் இல்லையேல் overcook(தமிழ் பெயர் என்ன?) ஆகி பதார்த்தம் சுவையிழந்துவிடும்.

உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். உடன் சிறிது புளி சேர்த்தால் இன்னும் சுவைக்கும்.

Sunday, November 27, 2022

சஹேலி வாங்கியும் பர்த்தாவும்

 சஹேலி வாங்கியும் பர்த்தாவும் கிட்டத்தட்ட கஸின்ஸ் மாதிரி. ரொம்ப வித்தியாசம் இல்லே...

முக்கியமா இதுக்கு தேவை கும்மட்டி அடுப்பு... எங்கேயோ கேட்ட ஞாபகம்... இல்லே.. எங்கிட்ட கேஸ் ஸ்டவ்தான் இருக்கு கும்மட்டிக்கு எங்க போறதுன்னு சொல்றவா தயவு செய்து இடத்தை காலி பண்ணலாம். பெரிய ஸைஸ் கத்திரிக்காய் மார்க்கட்டில பார்த்திருப்பீங்களே.... நாலு பேருக்கு ஒண்ணு போதும்.. ஊதாவோ பச்சையோ எது கிடைக்குதோ வாங்கிக்குங்க.... அடுப்புக்கரி கருப்பா இருக்குமே .. அதுதான் கும்மட்டில போட்டு நல்லா தணல் பண்ணிக்க வேண்டியது ..இதுக்கு கொட்டாங்குச்சி ரொம்ப உபயோகமா இருக்கும்.   .சரி ஆச்சா பீடிகை.. இப்ப அந்த ஓவர் சைஸ் கத்தரிக்காய  கழுவிட்டு ஈரம் போக துடைச்சு லேசா அதும் மேல கடலெண்ணை தடவிட வேண்டியது. இப்ப கத்திரிக்காய கும்மட்டி தணல்ல போட்டு எல்லா பக்கமும் சுடணும். முக்கியமா ஒண்ணு சொல்ல விட்டு போயுடுத்து . கத்தரிக்காய் காம்பை எடுக்க கூடாது. ஏன்னா அதைப் பிடிச்சுண்டு தான் திருப்பறோம். ஆச்சா இப்ப தோலி கறுப்பா கலர் மாறி இருக்கா .. இப்ப சுட்ட கத்திரிக்காய் ஜம்முனு வாசனையோட இருக்கும். அதை தணல் லேந்து எடுத்து ஒரு தட்டுல போட்டு ஷார்ப்பான முள் கரண்டியால அங்கங்கே குத்தணும் . கொஞ்சம் உப்பு மிளகாய்த் தூள் கலந்த மிக்ஸரை இந்த ஓட்டைல போடணும்.. ஆறிடுத்தான்னு பார்த்துட்டு தோலை உரிச்சு எடுத்துட வேண்டயது. இதுக்கு மின்னாடி சாம்பார் வெங்காயம் நாலு அஞ்சு தக்காளி பெரிய சைஸ் ஒண்ணு பொடியா கட் பண்ணி வெச்சிக்க வேண்டியது காரம் கொஞ்சம் ஜாஸ்தியா வேணுங்கறவா பச்சை மிளகாய் ஒண்ணு போட்டுக்கலாம். கடாயை அடுப்புல வெச்சு கடலை எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு பெருங்காயம் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு கடுகு வெடிச்சு உளுத்தம் பருப்பு சிவந்து வாசனை வந்தப்பறம் இந்த நறுக்கி வெச்ச வெங்காயம் போட்டு கொஞ்சம் பொறுத்து தக்காளி கருவேப்பிலை சேர்த்து இதல்லாம் நல்லா வெந்தப்பறம் மஞ்சள் தூள் போட்டு பிசைஞ்சு வெச்சிருக்கற கத்தரிக்காய இதில போட்டு நல்லா வதக்கிக்க வேண்டியது   தேவைப்பட்டா உப்பு இன்னும் கொஞ்சம் போட்டுக்கலாம்..நல்லா வாசனை வரும்.அப்ப எறக்கிடலாம்.சூடான சாதம் பிசைஞ்சு சாப்பிட லாம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்க நல்லா இருக்கும் இந்த மராட்டி சஹேலி வாங்கி.

கொஸ்து / பாம்பே சட்னி

 *என் சமையல்.* 

உமா

கொஸ்து / பாம்பே சட்னி

தேவையான பொருட்கள்..

பெரிய வெங்காயம் : 2
தக்காளி:1
உருளைக்கிழங்கு:2
பச்சைமிளகாய்:5/6
கடலை பருப்பு: 1 பிடி
கடலை மாவு : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
கடுகு,உளுந்து : தாளிக்க
உப்பு தேவையான அளவு
மல்லி இலை

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், தக்காளி இவற்றை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும் (1 inch நீளம்). பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து உடன் கடலை பருப்பையும்சேர்த்து வதக்கவும், பின்னர் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய் படபடப்பு அடங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கி உடன் தக்காளியும் சேர்த்து வதக்கி மூடிவைக்கவும்.

5 நிமிடத்திற்கு பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி பாத்திரத்தை மூடவும்.

கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

கொதி வந்தவுடன் கடலைமாவு தண்ணீரை உருளைக்கிழங்கு கலவையில் ஊற்றி நன்றாக கிளறவும்.

5 நிமிடம் சென்றபின் கிளறி கொத்துமல்லி தூவி கிளறவும்.

கொஸ்து தயார்.

இது சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி இவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு:

தண்ணீர் சிறிதளவு பயன்படுத்தினால் போதும் இல்லையேல் குழம்பு போல் ஆகிவிடும்.

மிளகாய் காரத்திற்கு ஏற்ப பயன் படுத்தவும்.

உருளைக்கிழங்கு இல்லாமலும் தயாரிக்கலாம்.

Friday, November 25, 2022

பித்ரு சேஷம்

 பித்ரு சேஷம் என்றால் என்ன ?

பித்ரு சேஷம் - ச்ராத்தத்தில் பித்ருவாக வரிக்கப்பட்ட ப்ராமணர்கள் சாப்பிட்டு எஞ்சிய வஸ்துக்கள் ஆகும்.

ச்ராத்தத்தில் பித்ருவாக வரிக்கப்பட்டு சாப்பிடுவது தோஷம் என்பதால்தான். சப்பிடுகிறவருக்கு காம்பென்சேஷனாக தக்ஷிணைகள் வழங்கப்படுகிறது.

மற்றவர் இல்ல ச்ராத்தத்தில் பங்காளி அல்லாத ஒருவர் சாப்பிட்டால் கிட்டத்தட்ட அதற்குச் சமமான தோஷம் உண்டாகும்.

பித்ரு சேஷம் சாப்பிட்டதற்கு பரிஹாரமாக குறிப்பிட்டு எந்த பரிந்துரையும் காணப் படவில்லை.

எனவே பித்ருசேஷம் சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

அதுபோல், ச்ராத்தம் - விருந்தினருடன் செய்யவேண்டிய கொண்டாட்டம் அல்ல

அது ஒரு ப்ரத்யேக பூஜை, அதிகப்படியான நபர்கள் சேரச் சேர அந்த பூஜையை ச்ரத்தையாகவும், சிறப்பாகவும் செய்ய இயலாது.

எனவேதான் ஆப்தீகத்திற்கு அழைப்பு அனுப்பும்போது

"அவசியம் எழுந்தருளியிருந்து ..." என்கிற வாசகத்தைப் பயன்படுத்தாமல்

"திருவுள்ளம் அறியவும்" என்கிற வாசகம் பயன்படுத்தப்படுகிறது.

ச்ராத்தம் முடியும்போது - "இஷ்டை: ஸஹ புஜ்யதாம்" என்கிற வாசகத்தை

"விரும்பியவர்களுடன் சாப்பிடவும்" எனத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்,

இதற்கான சரியான அர்த்தம் "யார் சாப்பிட விரும்புகிறார்களோ அவர்களுடன்"  என்று அர்த்தமே

தவிர கர்த்தா "தான் யாருடன் சாப்பிட விரும்புகிறாரோ" என்பது பொருள் அல்ல.

ச்ராத்தத்துக்கு மறுநாள் பூரிபோஜனம் என்று ததியாராதனமாக செய்யச் சொல்லியுள்ளது,

இதில் அனைவரையும் அழைத்து விருந்து வைக்கலாம், நன்மையும், புண்ணியமும் கூட.

என்.வி.எஸ்

பஞ்சாபி சென்னா மசாலா

 பஞ்சாபி சென்னா மசாலா

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலையை வேகவைக்க
கொண்டைக்கடலை - 2 கப்
பட்டை
பிரியாணி இலை
டீ பேக் - 1
உப்பு - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
தண்ணீர்

பஞ்சாபி சென்னா மசாலா செய்ய  

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை
பிரியாணி இலை
சீரகம்
வெங்காயம் - 2 நறுக்கியது
தக்காளி - 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 கீறியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
ஆம்சூர் பவுடர் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
அனார்தனா பவுடர் - 2 தேக்கரண்டி
கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை:

1. குக்கரில் ஊறவைத்த கொண்டக்கடலை, தண்ணீர், உப்பு, டீ பேக், பிரியாணி இலை, பட்டை, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

2. பின்பு குக்கரை திறந்து பிரியாணி இலை, பட்டை, டீ பேக் இவற்றை எடுத்து விட்டு தனியாக வைக்கவும்.

3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்க்கவும்.

4. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

5. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

6. பின்பு கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், அம்சூர் பவுடர் சேர்த்து கலந்துவிடவும்.

7. பிறகு உப்பு, வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கலந்துவிடவும்.

8. பின்பு தண்ணீர் ஊற்றி கலந்து கடாயை மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.

9. கடைசியாக அனார்தனா பவுடர், கசூரி மேத்தி, நெய் சேர்த்து கலந்து இறக்கவும்.

10. பஞ்சாபி சென்னா மசாலா தயார்!

உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

 உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3
மைதா - 1/4 கப்
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
எள்ளு எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
இஞ்சி - 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது 
வெங்காயம் - 1 நறுக்கியது
குடைமிளகாய் - 1/2 நறுக்கியது
உப்பு
மிளகு தூள்
மிளகாய் தூள்
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
வினிகர் - 1/2 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 1 1/2 மேசைக்கரண்டி  
டொமேட்டோ கெட்சப் - 2 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள்

செய்முறை:

1. உருளைக்கிழங்கை கழுவி, தோலை நீக்கி சம அளவிலான துண்டுகளாக வெட்டவும்.

2. நிறம் மாறாமல் இருக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய உருளைக் கிழங்கை போட்டு வைக்கவும்.

3. ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும்.

4. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் வேகவைத்த உருளைக்கிழங்கை மாவு கலவையில் தோய்த்து ஒவ்வொன்றாக போடவும்.

6. பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

7. ஒரு அகலமான பானில், எள் எண்ணெய், பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

8. அடுத்து உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.

9. தீயை குறைத்து வைத்து அதில் சோயா சாஸ், வினிகர், ரெட் சில்லி சாஸ், டொமேட்டோ கெட்சப் சேர்த்து நன்றாக கலக்கவும்.

10. பிறகு வறுத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விடவும்.

11. இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து விடவும்.

12. சுவையான, காரமான மற்றும் சுலபமாகச் செய்யக்கூடிய உருளைக்கிழங்கு மஞ்சூரியன், சிறிது டொமேட்டோ கெட்சப்புடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.

மைசூர் போண்டா

 மைசூர் போண்டா


 *தேவையான* *பொருட்கள்* 

உளுத்தம் பருப்பு - 1 கப் பச்சை மிளகாய் - 2 இஞ்சி - 1/2 இன்ச் கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

 *செய்முறை* 

 முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் கிரைண்டரில் போட்டு, லேசாக தண்ணீர் ஊற்றி, நைஸாக சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை போட்டு கலந்து கொள்ளவும். அடுத்து அதில் மிளகு, சீரகம், துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள கலவையை எலுமிச்சை அளவு எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மைசூர் போண்டா ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

🪷🪷🪷

டபுள் பீன்ஸ் புளிக்குழம்பு

 டபுள் பீன்ஸ் புளிக்குழம்பு


 *தேவையான* *பொருட்கள்* 

நல்லெண்ணெய் - 1/4 கப்
* கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம்/சர்க்கரை - 1 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உலர்ந்த டபுள் பீன்ஸ் - 1/2 கப்

 *செய்முறை:* 

* முதலில் டபுள் பீன்ஸை சுடுநீரில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை குக்கரில் போட்டு, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும் பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மசாலா பொடிகளான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் அனைத்தையும் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் புளிச்சாறு, வேக வைத்த டபுள் பீன்ஸ் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லம்/சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், டபுள் பீன்ஸ் புளிக்குழம்பு தயார்.

🪷🪷🪷

மஞ்சள் வெங்காய சட்னி

 🌺( *பேச்சுலர்களுக்கான* *ஈஸியான..* *மஞ்சள் வெங்காய* *சட்னி* )

 *தேவையான* *பொருட்கள்* 

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  வரமிளகாய் - 4-5
வெங்காயம் - 2 (நறுக்கியது)  தக்காளி - 1 (நறுக்கியது)  உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்  புளி - 1 சிறிய துண்டு தாளிப்பதற்கு...  எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன்  பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 

 *செய்முறை:* 

 முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  பின் அந்த எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.  பின்பு அதில் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கி, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி இறக்க வேண்டும்.  அடுத்து, வதக்கியதை நன்கு குளிர வைத்து, பின் மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், மஞ்சள் வெங்காய சட்னி தயார்.

🪷🪷🪷

ஈஸி குவிக் வெஜ் பிரியாணி

 *என் சமையல்.* 

உமா

ஈஸி குவிக் வெஜ் பிரியாணி

தேவையான பொருட்கள்..

பட்டை - ஒன்று
கிராம்பு - ஐந்து
ஏலக்காய் - ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
மராட்டி மொக்கு - ஒன்று
சோம்பு - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஐந்து
மிளகாய் வற்றல் - ஒன்று
தயிர் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு - மூன்று (வாசனைக்கு மட்டும் தான்)
லெமன் - அரை மூடி
சீரகம் - ஒரு டீஸ்பூன்
தக்காளி - 1
காய்கறிக்கலவை - ஒரு கப் + அரை கப் (உருளை, பீன்ஸ், காரட், முள்ளங்கி, காலிஃப்ளவர், பச்சை பட்டாணி)
உப்பு - தேவையான அளவு
நெய் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
அரிசி - 1 (1/2) கப்
மல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை..

எண்ணெய் மற்றும் நெய்யை பாத்திரத்தில் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, மிளகு, சீரகம், மராட்டி மொக்கு எல்லாத்தையும் சேர்த்து பொரிய விடவும்.

மிளகாய் வற்றலும் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கி காய்கறிகளை போட்டு வதக்கவும்.

அதில் அரிசி, தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதனுடன் தயிர் சேர்த்து பாதி அளவு மிளகாய் தூள் சேர்த்து நான்கு டம்ளர் நீர் விட்டு கிளறி உப்பு போட்டு வேக விடவும்.

சாதம் நன்கு வெந்ததும் மீதம் உள்ள மிளகாய் தூள் தூவி கிளறி மல்லி இலை தூவி லெமன் பிழிந்து இறக்கவும்.

ரைஸ் குக்கரில் சமைப்பவர்கள் இதே முறைப்படி செய்து தண்ணீர் சேர்த்தவுடன் ரைஸ் குக்கருக்கு மாற்றி சமைக்கவும். தம் பிரியாணி செய்பவர்கள் இதே போல் செய்து நீர் சேர்த்து அரிசி மற்றும் காய்கறி பாதி அளவு வெந்ததும் தம் போடலாம். *மைக்ரோவேவ் ஓவனில் செய்பவர்கள் நீர் சேர்த்து கலவையை மைக்ரோவேவ் பாத்திரத்திற்கு மாற்றி இருபத்துமூன்று நிமிடம் அல்லது உங்கள் அவனிற்கு தகுந்ததாற்போல் நேரம் கூட குறைய வைத்து எடுக்கவும். நார்மல் குக்கரிலும் இதே போல் செய்யலாம்.

சுவையான தயிர் வடை

 ஆயில் free தயிர் வடை

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் 1கப்
ப மிளகாய் 2
சீரகம் ஒரு தேக்கரண்டி
காரட் துருவல் ஒரு கப்
கொத்தமல்லி இலை
பூந்தி ஒரு கப்
கெட்டி தயிர் /மோர்
பிரட் ஸ்லைஸ் தேவையான அளவு

செய்முறை

முதலில் தேங்காய் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

ஒரு அகலமான பாத்திரத்தில் இதை போட்டு தயிர் சேர்த்து சற்று தளர கிரேவி போல் ரெடி செய்து கொள்ளவும்

பின்னர் ப்ரெட் ஸ்லைஸ்களை ஓரம் கட் பண்ணி மிதமான வெண்ணீறில் நனைந்து பிழிந்து உருண்டையாக வடை போல் தட்டி கிரேவியில் வரிசையாக வைத்து

சீரகம் தாளித்து மேலே காரட் கொத்தமல்லி மற்றும் பூந்தி போட்டு அலங்கரிக்கவும் 

மிகவும் சுவையான தயிர் வடை தயார்

கிரீன் ரைஸ்

 *என் சமையல்.* 

உமா

கிரீன் ரைஸ்

தேவையான பொருட்கள்..

கீரை - ஒரு கட்டு
கொத்தமல்லி - இரண்டு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி (தேவைப்பட்டால்)
பீன்ஸ் - ஒரு கப்
பச்சை பட்டாணி - அரை கப் (தேவைப்பட்டால்)
பெருங்காயம் - இரண்டு பின்ச்
மிளகாய் வற்றல் - மூன்று
சாதம் - ஒன்றரை கப் (அல்லது) இரண்டு கப்

தாளிப்பதற்கு:

கடுகு
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
நிலக்கடலை
கறிவேப்பிலை
முந்திரி

செய்முறை..

ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொத்தமல்லி, கீரை, புதினா, உப்பு போட்டு நன்கு வேக விடவும்.

அடுப்பில் இன்னொரு பாத்திரத்தில் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியை வேக விடவும்.

கீரை கலவை மற்றும் பீன்ஸ் கலவை வெந்ததும் கீரை கலவையை மிக்சரில் போட்டு நீர் விடாமல் அரிது எடுக்கவும்.

ஒரு கடையில் சிறிது ஆயில் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பெருங்காயம், பீன்ஸ் மற்றும் பட்டாணி போட்டு வதக்கி கீரை கலவையை அதில் கொட்டவும்.

இரண்டு நிமிடம் வதக்கி சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.

கொள்ளு ரசம்

 *வாய்க்கு ருசியான கொள்ளு ரசம் செய்வது எப்படி ?*

🌹🌹🌹🌹

 பொதுவாக நாம் ரசம் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் வேகமாக நடக்கும். இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம்.

கொள்ளு ரசம் நம் உடம்பில் உள்ள கொழுப்புகளை குறைக்க கூடிய சக்தி கொள்ளுவிற்கு உண்டு மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டா கொள்ளுவை வைத்து எப்படி ரசம் செய்வது?

*தேவையான பொருட்கள்*

1 கப் கொள்ளு
பாதி எலுமிச்சை பழம் அளவு புளி கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்
 1 tbsp சீரகம் 
1 tbsp மிளகு 
 ½ tbsp கடுகு                            
¼ tbsp பெருங்காய பொடி
6 பல் பூண்டு
 எண்ணெய் தேவையான அளவு
கருவேப்பிலை சிறிது கொத்த மல்லி சிறிது

*செய்முறை*

முதலில் கொள்ளுவை ஒரு கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். கொள்ளு நன்றாக வறுந்த வந்ததும் பின் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

 பிறகு இந்த நேரத்தில் புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும் மற்றும் சீரகம், மிளகு, பூண்டு மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு அரை அரைத்துக் கொள்ளவும்.

பின்பு கொள்ளு வெந்து வந்ததும் இன்னும் சற்று தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் அதன் பிறகு கொள்ளை தண்ணீரில் கரைத்தால் கெட்டியான கொள்ளு தண்ணீர் கிடைக்கும்.

 பிறகு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை சூடேறும் வரை காத்திருக்கவும் என்னை சூடேறியவுடன் கடுகு, பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.

தாளித்த பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை வடிகட்டி ஊற்றவும் பின்பு இதனுடன் கொள்ளு கரைசலையும் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள சீரகம் மிளகு பூண்டு இவற்றையும் ரசத்துடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு ரசம் கொதிக்கும் பக்குவத்திற்கு வரும் போது கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும் இப்போது சுவையான கொள்ளு ரசம் இனிதே தயாராகிவிட்டது.🌹🌹

ஜவ்வரிசி கிச்டி

 *என் சமையல்.* 

உமா

ஜவ்வரிசி கிச்டி (வட இந்திய உணவு வகை)

தேவையான பொருட்கள்:-

ஜவ்வரிசி – 2 கப்
உருளைக் கிழங்கு – 1
வறுத்த வேர்கடலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் நறுக்கியது)
உப்பு தேவையான அளவு
சர்க்கரை – சிறிதளவு (விரும்பினால்)
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு (விரும்பினால்)

தாளிக்க:-

எண்ணை – தேவையான அளவு
சீரகம் – 1  தே. கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
கரம் மசாலா – சிறிதளவு
தயார் செய்தல்:

1. ஜவ்வரிசி:-

ஜவ்வரிசியை நன்றாக நீர் விட்டு அலசவும்.

ஜவ்வரிசி  மூழ்குமளவு நீர் விட்டு 8 மணி நேரம் ஊறவிடவும்.

எஞ்சிய நீரை வடிகட்டி விடவும். ஜவ்வரிசி தயார்.

காற்றுபுகாத பார்த்திரத்தில் அடைத்தால், இதை 2 வாரம் வரை குளிர்பதனப் பெட்டியில் சேமிக்கலாம்.

2. உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சிறிய சதுரங்களாக நறுக்கவும்.

3. வேர்க்கடலையை நன்றாக வறுத்து கரகரப்பாக உடைத்துக் கொள்ளவும்.

செய்முறை:-

 கனமான பாத்திரத்ததை அடுப்பிலேற்றி, சிறிது எண்ணை விட்டு, காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

 உருளைக் கிழங்கு துண்டுகள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

 மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

 ஜவ்வரிசி, வேர்க்கடலை சேர்த்து நன்றாக கிளறி மூடி விடவும்.

 மிதமான வெப்பத்தில் அவ்வப்பொழுது கிளறியபடி 15 நிமிடங்கள் வேக விடவும்.

 ஜவ்வரிசி மிகவும் மென்மையாக, கண்ணாடி போன்று தெரிந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.

 விரும்பினால் சர்க்கரை மற்றும் எலுமிச்சைச்  சாறு சேர்த்து பரிமாரவும்.

Thursday, November 24, 2022

துவரம் பருப்பு சட்னி

 *சமையல் குறிப்புகள்*

*பத்தே நிமிசத்துல சூப்பரா துவரம் பருப்பு சட்னி அரைக்கலாம் தெரியும்மா?*

டிபனுக்கு மட்டும் இல்லங்க, சுட சுட சாதம் வைச்சு இதை போட்டு சாப்டா செம்ம டேஸ்டா இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

காலையில் எழுந்த உடனே முதல் டென்ஷனே காலை டிபனுக்கு என்ன செய்வது, மதியம் சமையலுக்கு என்ன செய்வது என்பது தான். வேலைக்கு செல்லும் அவசரத்திலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்திலும் என்ன செய்வது என்று தெரியாமல் சில நேரம் விழி பிதுங்கி விடும். இது போன்ற சமயங்களில் இந்த சட்னி உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். ஏனென்றால் இது அரைத்தால் மதியம் சாப்பாட்டிற்கும் வைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் கரைத்து காலை டிபனுக்கும் வைத்துக் கொள்ளலாம் இரண்டுக்கும் சேர்த்து ஒரே டிஷ் அதை எப்படி செய்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

*தேவையான பொருட்கள்:*

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு -1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4 டேபிள் ஸ்பூன், பூண்டு – 4 பல், சின்ன வெங்காயம் – 5, புளி – 1/2 நெல்லிக்காய் அளவு, மிளகு – 10, கருவேப்பிலை – 1 கொத்து.

 இந்த சட்னி அரைக்க முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் துவரம் பருப்பை அதில் சேர்த்து நல்ல பொன்னிறமாக வறுக்க வேண்டும். துவரம் பருப்பு வறுபட்டதும் நல்ல வாசம் வரும் அந்த நேரத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். இதை ஒரு தட்டில் வைத்து நன்றாக அரா வைத்து கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், புளி, உப்பு இவை எல்லாம் சேர்த்த பிறகு வறுத்து ஆற வைத்து துவரம் பருப்பையும் இதில் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இது நல்ல ஃபைன் பேஸ்ட்டாக அரைக்க வேண்டும் அரைக்கும் போது கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு துவையல் பதத்திற்கு வரும்படி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

 அரைத்து எடுத்த இந்த சட்னியை அப்படியே கெட்டியாக வைத்து சாதத்துடன் சாப்பிட்டால் ஒரு அருமையான துவையல் தயார். இந்தத் துவையல் இருந்தால் போதும் சுடச்சுட சாதத்துடன் இதை போட்டு சாப்பிடும் போது எதற்கு வேறு ஒரு சைட் டிஷ்ஷை கூட தேவையில்லை அட்டகாசமாக இருக்கும். இது காலை டிபனுக்கு செய்வதாக இருந்தால் இத்துடன் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு தாளிப்பை மட்டும் இதில் சேர்த்த பிறகு சாப்பிட்டால், இதுவரை நீங்கள் சுவைத்திடாத அருமையான ஒரு சட்னி தயார். ஒரே டிஷ் வைத்து பருப்பு சாதமாகவும் சாப்பிடலாம் சட்னியாகவும் சாப்பிடலாம் இரண்டுமே அட்டகாசமான சுவையில், இதோட டேஸ்ட் ரொம்பவே நல்லாவே இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

தேங்காய் போடணும்

ரசத்திற்கு  சூப்பர் காம்பினேஷன் பருப்பு துவையல் துவரம் பருப்புஒரு பங்கு அதே அளவு 

கடலைபருப்பு தே துருவல்கடலைப் பருப்பு, தேங்காய் , வரமிளகாய், பெருங்காயம்.‌கொஞ்சூண்டு கடலை எண்ணெய் விட்டு சூடானப்பறம் பெருங்காயம் கட்டி கடலைப்பருப்பு அப்பறம் மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். ரொம்ப சேப்பா ஆகக்கூடாது. லைட்டா வறுத்துக்கணம். இனிப்பும் மிக்ஸில இதை எல்லாத்தையும் தேங்காயும் கொட்டி தேவையான உப்பு சேர்த்து நைசாகவும் இல்லாமல் கரகரப்பாகவும் இல்லாமல் அரைத்தால் சூப்பர் தொகையில் தய்யார்






ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனை

 This is also a great help.......  08047104600  எண்

மனித உயிர்களுக்கு  ஆபரேசன் பல லட்சம் செலவாகும் என்ற நிலை வரும்போது தலை சுற்றி கண் கலங்கி கடவுளே எங்களுக்கு ஏன் இந்த சோதனை?

 என்று குழம்பாமல் பெங்களூர் ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனை ஒயிட் பீல்டு எண்ணுக்கு கால் செய்தால் முதலில் கம்ப்யூட்டர் வாய்சில் உங்கள் எண் பதிவாகி விடும்.

 அடுத்து அவர்களே கால் செய்து நமது விருப்ப மொழியிலேயே என்ன உடல்நலகுறைபாடு அதன் சம்பந்தமான டெஸ்ட் ரிப்போர்ட் என்ன உள்ளது என்பதை கேட்டு அங்குள்ள வரிசைப்படி உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட உங்கள் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும்.

 அதன் விபரப்படி நோய்வாய்ப்பட்டார் உடன் ஒரு அட்டண்டர் மட்டுமே கேட்டில் அனுமதிப் பார்கள்.

 அந்த தேதி முதல் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் ஆலோசனை அறிவுரை கிடைக்கும்.

 ஒரு பைசா செலவில்லாமல் சிகிச்சை ஆபரேசன் தேவையென்றால் அட்மிஷன் செய்து நோயாளிக்கு மட்டும் உணவு மருந்து அனைத்தும் அவர்களே இலவசமாக உலகத் தரத்தில் செய்வார்கள்.

 இது மருத்துவமனை அல்ல கோவில்.

 இதனுள் நமக்கு அட்மிஷன் கிடைத்து விட்டால் அவர்களுக்கு மறுபிறவி.

 மற்றுமொரு விசயம் 

இதன் அருமைகளை அதிகமாக வங்கதேசம் ஒரிசா கல்கத்தா நேபாள் பீகார் என்று வர போக 10 தினம் ஆகும் தூரத்திலிருந்து பயனடைபவர்களே.

 அதிகம் நம் பக்க மாநிலம் தமிழ்நாடு கேரளா ஆந்திரா ஏன் உள் மாநிலம் கர்நாடகா மக்கள் வெறும் 5 சதவிகித மக்களே 

எனவே இதை பார்க்கும் நம் அன்பர்கள் இத்தகவலை தங்கள் குழுவில் பகிர்ந்து உங்களால் பலரும் அதைப் பார்த்து பயன் அடைந்தால் அது நீங்கள் அவர்களுக்கு வாழ்க்கைக்கு செய்யும் பெரிய உதவி

 நாம் பிறருக்கு பணம் காசு கொடுப்பது மட்டுமே உதவிஅல்ல

 இதுபோன்ற உண்மையான நல்ல விசயங்களை பகிர்வதும் புண்ணியமே

 நல்லதே நடக்கும் முயற்சிப்போம் 

வாழ்க வளமுடன் 🙏

Wednesday, November 23, 2022

ஸ்ரீதர வெங்கடேசர் மடம்


23.11.2022 புதன் கார்த்திகை அம்மாவாசை - திருவிசைநல்லூர்

அய்யாவாள் வீட்டின் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று அந்தத் துண்டுச் சீட்டில் எழுதியிருந்தது. படிப்பதற்கு அதிசயமாக இருக்கிறதா…. ஆம் 

எப்பேர்ப்பட்ட மகான்கள் பிறந்து, வளர்ந்து அதிசயங்கள் நடத்திய மாநிலம் தான் நம் தமிழகம்.

இன்றளவும் சில சிவ திவ்ய நாமங்கள், சிவ தோடயமங்கலம், சிவ நாம ஸங்கீர்த்தனம் பஜனை ஸம்ப்ரதாயத்தில் உயிர்ப்புடன் இன்றும் விளங்குவதற்கு ஶ்ரீதர ஐயாவாளே காரணம்!!

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வருகின்ற அமாவாசையன்று திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் இல்லக் கிணற்றில் இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம்.

கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள். இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்து விட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்து விட்டார். தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூன சேத்ரமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். அர்த்தஜாம பூஜையும் காண்பார். சிவன் மேல் அபார பக்தி கொண்டவர். இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். 

அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார் செய்ய ஏற்பாடு செய்து விட்டு காவிரியில் நீராட சென்றார். நீராடி இல்லம் திரும்பும் போது எதிரே வந்த வயதான ஏழை ஐயாவாளிடம் சுவாமி ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன் என கேட்கவும், அவர் மீது இரக்கம் கொண்ட ஐயாவாள் அவரை இல்லத்திற்கு அழைத்து வந்த போது சிரார்த்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது. பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக் கொடுத்து பசியாற்றினார்.

சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை மீறினார் ஐயாவாள். அவரது செயலைக் கண்ட அந்தணர்கள், *‘இது சாஸ்திர விரோதம். இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்து, அவரை குடும்பத்துடன் நீக்கி வைக்க வேண்டும்’* என்று கூறியதுடன், சிரார்த்தம் செய்யவும் மறுத்து விட்டனர்

‘வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள், அடுத்த திதி வந்து விடுமே!’* என்று மகான் வருந்தினார். 

இறைவனை நினைத்து மனமுருகி ‘கங்காஷ்டகம்' என்னும் துதிபாடினார். அவர் பாடி முடித்ததும், 

அவர் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வழிந்தது.

கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடானது.

இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்டு, அந்த கங்கை நீரில் நீராடினர்கள். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்பு கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்திக்க கங்கையும் அடங்கி அக்கிணற்றிலேயே நிலைத்தது என்பது ஐதீகம். அதைத் தொடர்ந்து திதி கொடுக்கப்பட்டது.

காலையில் நடந்த இந்த நிகழ்வுகளின் காரணமான, மகானால் திருவிசநல்லூர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. 

அன்று மாலை திருவிசநல்லூர் ஈசன் கருவறையில் மூர்த்தங்களிடம், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில், ‘இன்று மதியம் ஸ்ரீதர அய்யாவாள் வீட்டின் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’ எழுதியிருந்தது.

இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிசநல்லூர் 

ஸ்ரீதர வெங்கடேச மடத்தில் நிகழ்கிறது.

மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில், கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு

என்று வேண்டுகிறார். அதனால் இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே!. 

இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். மகான் வசித்த இல்லம் மடமாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பத்தாம் நாளன்று கார்த்திகை அமாவாசை அன்று தான் கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும்.

*கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று, சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு, அங்கிருந்து தீர்த்தம் கொணர்ந்து கிணற்றில் விடுவார்கள். பிறகு கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியில் இருந்து எல்லோரும் நீராடுவார்கள். அப்போது அங்கு நடக்கும் கங்கா பூஜையின்போது அந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதன் அடையாளமாக நுரை மிகுந்துகொண்டு நீர் மட்டம் உயர்ந்து வருமாம். அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாது. இந்த ஞானம் வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று கார்த்திகை அமாவாசையன்று நீராடுவது பெறுவதற்கு அரிய பெரும் பாக்கியமாகும்.*

பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த ஸ்ரீதர வெங்கடேசர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார். கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று 

திருவிடைமருதூர் திருக்கோவில் மகாலிங்க சுவாமிக்கு, ஸ்ரீதர வெங்கடேசர் மடத்திலிருந்து வழங்கப் பெறும் வஸ்திரம் சாத்தப்படுகிறது.

*அதுபோல அன்று உச்சிகாலப் பூஜையின் நைவேத்தியம், திருநீறு முதலிய பிரசாதங்கள் திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் மகானின் மடத்துக்கு தந்தருளும் ஐதீக நிகழ்வும் இன்றளவும் நடக்கிறது.*

கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது.

இன்று அந்த ஸ்ரீ வேங்கடேச ஸ்ரீதர அய்யாவாள் வீடு மடமாக மாற்றப் பட்டுள்ளது. அந்தக் கிணறு இன்றும் உள்ளது. கார்த்திகை அமாவாசியன்று பலரும் இங்குவந்து நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டுச் செல்கிறார்கள்.

நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் இவரது சமகாலத்தவர். திருவிசைநல்லூரில் 

அய்யாவாள் வீட்டில் கங்கை பொங்கிய அற்புதம் நிகழ்ந்த போது சதாசிவர் உடனிருந்ததாகவும் *“ஜய துங்க தரங்கே கங்கே”* என்ற கீர்த்தனை அப்போது தான் இயற்றப் பட்டது என்றும் ஒரு ஐதிகம் உள்ளது.

🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️                                      

நன்றி🙏🙇🏼‍♂️

ஸ்பெஷல் ஸ்பைசி & ஹெல்தி சாதம்

 *எனது சமையல்.* 

உமா

ஸ்பெஷல் ஸ்பைசி & ஹெல்தி சாதம்

தேவையானவை..

குழைத்து வடித்த சாதம் - மூன்று கப்
கடுகு - கால் டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - மூன்று
பெருங்காயம் - இரண்டு பின்ச்
பச்சை மிளகாய் - ஐந்து
கருப்பு திராட்சை - கால் கப்
கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன்
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
தயிர் - இரண்டு கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
கீரை(அல்லது)புதினா - கால் பிடி
உப்பு - தேவையான அளவு.
லெமன் ஜுஸ் - ஒரு டிராப்
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை..

சாதத்தை நன்றாக குழைவாக வடித்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து அழுத்தி பிசைந்து கொள்ளவும்.

ஒரு பச்சை மிளகாய் தவிர மற்ற அனைத்து பச்சை மிளகாயையும் நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.

கடலைப்பருப்பு, பெருங்காயம் போட்டு பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் போட்டு வறுத்து இஞ்சி போட்டு வதக்கவும்.

வதக்கியவற்றையும் திராட்சையையும் கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி கிளறவும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வைத்துள்ள மிளகாயை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆயில் விட்டு காய்ந்ததும் அரைத்தவற்றை போட்டு கிளறி பச்சை வாடை போனதும் எடுத்து கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.

கீரையை நறுக்காமல் அதிக நீர் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

சிறிது உப்பு சேர்த்து கலந்து ஒரு டிராப் லெமன் பிழிந்து மிக்ஸ் பண்ணி கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.

மிளகை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக பொடித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி கலக்கவும்.

ஹெல்த்தி சாதம் தயார்.

திராட்சையை கட் பண்ணக்கூடாது. முழுவதுமாகத்தான் போட வேண்டும். முழு மிளகுக்கு பதில் ரெடிமேட் மிளகு பொடி போடக்கூடாது.

குடைமிளகாய் பன்னீர் மசாலா

 குடைமிளகாய் பன்னீர் மசாலா

பன்னீர் - 1/4 கிகி (சிறிதாக வெட்டியது) குடைமிளகாய் - 1/4 கிகி (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 3 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லி தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் சிறிதாக வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளற வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் வறுத்து வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை போட்டு, ஒரு 3 நிமிடம் கிளறி இறக்கிவிட வேண்டும். இப்போது சுவையான குடை மிளகாய் பன்னீர் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

சமையல் குறிப்புகள்

  சமையல் குறிப்புகள்

வழக்கமா செய்யுற தக்காளி சட்னியை ஒதுக்கி வையுங்க. புதுவிதமா இப்படி தக்காளி சட்னி அரைச்சு பாருங்க இட்லி தோசைக்கு சூப்பரா இருக்கும்.

பொதுவாக தக்காளி சட்னி என்றால், அதில் வரமிளகாய் தான் சேர்த்து நாம் செய்வோம். ஆனால் இந்த தக்காளி சட்னியை கொஞ்சம் வித்தியாசமாக பச்சை மிளகாய் சேர்த்து செய்யப் போகின்றோம். வழக்கம்போல அரைக்கக் கூடிய தக்காளி சட்னி கிடையாது. இது முற்றிலும் வித்தியாசமான சுவையில் ஒரு தக்காளி சட்னி ரெசிபி ஒன்று மற்றும் தக்காளியை வைத்து செய்யக்கூடிய இன்னொரு சட்னி ரெசிபி ஆக மொத்தம் இரண்டு ரெசிபி இதோ உங்களுக்காக.

 சுட சுட இட்லி தோசை கூட இந்த சட்னியை தொட்டு சாப்பிடலாம்.

 குறிப்பு 1:

 அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் வெட்டிய பச்சை மிளகாய் 4 லிருந்து 5 போட்டு, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, வதக்க வேண்டும். பச்சை மிளகாய் வதங்கி லேசாக மிளகாய் வதங்கிய வாசம் வரும் அல்லவா. அப்போது நறுக்கிய – 1 இன்ச் இஞ்சி, தோல் உரித்த பூண்டு பல் – 8, சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு வதக்க வேண்டும். அடுப்பு சிம்மிலேயே இருக்கட்டும். -

 அதன் பின்பு நறுக்கிய தக்காளி பழம் – 4, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், போட்டு தக்காளி பழத்தை முதலில் ஒரு நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு 1 இன்ச் அளவு புளியை இதில் சேர்க்க வேண்டும். பிறகு ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை கொஞ்சம் காம்புகளோடு நறுக்கி இதில் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் திக்காக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னி திக்காக இருந்தால் தான் நன்றாக இருக்கும். அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், வரமிளகாய், போட்டு தாளித்து இந்த சட்னியில் கொட்டி கலந்து பரிமாறி பாருங்கள். அம்புட்டு ருசி கிடைக்கும். -

 குறிப்பு 2:

 அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 1 ஸ்பூன், ஊற்றி தோலுரித்த சின்ன வெங்காயம் – 5 பல், தோலுரித்த பூண்டு – 5 பல், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு வதக்க வேண்டும். பெரியதாக இருக்கும் 4 தக்காளி பழங்களை வெட்டி போட்டு, 2 அல்லது 3 வர மிளகாய்களை போட்டு, தேவையான அளவு உப்பு தூள் தூவி, ஒரு மூடி போட்டு இதை அப்படியே வேக வையுங்கள். தக்காளியின் பச்சை வாடை போக சூப்பராக வெந்து நமக்கு கிடைக்கும். இந்த விழுதை ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் புளிப்பு சுவை அதிகமாக இருந்தால், இதில் ஒரு சின்ன துண்டு வெல்லம் வைத்து அரைத்துக் கொள்ளலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து அரைத்து வைத்திருக்கும் இந்த சட்னியை கடாயில் ஊற்றி 30 செகண்ட் வரை கலந்து விட்டு, அடுப்பை அணைத்து விட்டால் இந்த தக்காளி சட்னி ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட முயற்சி செய்து பாருங்கள்.

சிறுபருப்புக்கு பதிலாக வேகவைத்த ஒரு உருளை கிழங்கை மசித்து கடைந்தால் அதுவும் சுவையாக இருக்கும்.

பாம்பே சாம்பார்

பாம்பே சாம்பார்

சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது) * தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) * இஞ்சி - 1 இன்ச் * பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)

கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன் * வெல்லம் - 3/4 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப * தண்ணீர் - 1 1/2 கப் * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் * மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் * கொத்தமல்லி - சிறிது தாளிப்பதற்கு... * எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் * கடுகு - 1 டீஸ்பூன் * உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் * சீரகம் - 1 டீஸ்பூன் * வெந்தயம் - 1/4 டீஸ்பூன் * வரமிளகாய் - 1 * கறிவேப்பிலை - சிறிது செய்முறை: * முதலில் கடலை மாவை நீரில் சேர்த்து கட்டிகள் சேராதவாறு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். * பின்பு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். * பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும். ஒருவேளை தக்காளி முற்றிலும் வற்றியதாக தோன்றினால், அதில் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம். * தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், கடலை மாவை சேர்த்து கிளறி 4-5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பாம்பே சாம்பார் தயார்.

எம்ட்டி சால்னா

 *சமையல் குறிப்புகள்*

🌹🌹🌹🌺

*ஸ்டார் ஹோட்டல்களில் பிரியாணிகளுக்கு கொடுக்கப்படும் இந்த எம்ட்டி சால்னாவை*

 ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, இனி வீட்டில் பிரியாணி மட்டுமல்ல சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை எது செஞ்சாலும் சைடிஷா இந்த சால்னா தான் கேட்பாங்க.

பெரிய பெரிய ஹோட்டல்களில் எல்லாம் இந்த பிரிஞ்சி, வெள்ளை குஸ்கா, இது போன்ற காரம் குறைவான பிரியாணி வகைகளை ஆர்டர் செய்யும் போது அதற்கு சைட் டிஷ் ஆக ஒரு சால்னா கொடுப்பார்கள். அந்த சால்னாவின் சுவைக்கு இந்த சாதங்கள் சைலன்டாக உள்ளே சென்று விடும். அப்படி ஒரு சுவை மிகுந்த சால்னாவை மிகவும் எளிமையாக வீட்டிலும் செய்து விடக் கூடிய வகையில் செய்வதை பற்றிய பதிவு தான் இது.

*தேவையான பொருட்கள்*

வெங்காயம் – 2, தக்காளி -3, இஞ்சி பூண்டு விழுது -1டீஸ்பூன், தேங்காய் துருவியது – 3 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை -2 டேபிள் ஸ்பூன், உடைத்த கடலை – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பச்சை மிளகாய் -1, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், தனியாத் தூள் -1/12 டீஸ்பூன், சோம்பு -1 டீஸ்பூன், பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலைகள்- 2, கருவேப்பிலை -1 கொத்து, மஞ்சள் தூள் -1 டீஸ்பூன், உப்பு – டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.

 இந்த சால்னா செய்வதற்கு முதலில் மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு அடுப்பைப் பற்றி வைத்து ஒரு பேனை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் சோம்பு சேர்த்து பிறகு வேர்க்கடலை, காய்ந்த மிளகாய்,தேங்காய் துருவல்,உடைத்த கடலை என அனைத்தையும் சேர்த்து நல்ல பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். வறுத்த இதை ஆற வைத்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சால்னா செய்ய தொடங்கி விடலாம். அடுப்பில் பேனை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கொஞ்சம் சோம்பு சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு எடுத்து வைத்த மசாலாகளை பட்டை, கிராம்பு, லவங்கம் இவற்றையெல்லாம் சேர்த்து வதக்கிய பிறகு வெங்காயத்தை நல்ல பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வெங்காயம் நல்ல பொன்னிறமாக வரும் வரை வதங்க வேண்டும். இவையெல்லாம் வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதுவும் நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் சேர்த்த பிறகு தக்காளி வதங்க கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு முறை கலந்து வதக்கி விடுங்கள். ஒரு பச்சை மிளகாய் நீட்டாக கீரி சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மிளகாய் தூள், தனியா தூள், உப்பு அனைத்தையும் சேர்த்த பிறகு எண்ணெயில் லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். அப்போது அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து விடுங்கள். இந்த மசாலாக்கள் எண்ணெயில் வதங்கிய பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த மசாலாக்களை வேக வையுங்கள். இப்பொழுது அடுப்பை மீடியம் ப்ளேமுக்கு மாற்றிக் கொள்ளலாம். இது ஒரு கொதி வந்த பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவை இத்துடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து கொத்தமல்லி இலைகளை மேலே தூவி மூடி போட்டு பத்து நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள். இது நன்றாக கொதித்தால் தான் வேர்கடலையின் பச்சை வாசனை போகும். பத்து நிமிடம் கொதித்த பிறகு மறுபடியும் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவு தான் சுவையான பிரியாணி சால்னா தயார். இதையும் படிக்கலாமே: அட இந்த மாவில் கூடவா முறுக்கு சுடுவாங்க? சப்பாத்தி மாவு போல இந்த மாவை பிசைந்தால், சத்து நிறைந்த மொறு மொறு முறுக்கு 10 நிமிடத்தில் தயார். இந்த சால்னா செய்வது மிக மிக சுலபம் மசாலாவை வறுத்து அரைக்கும் நேரம் மட்டுமே இதில் மற்றபடி இதில் செய்யப் பெரிய வேலை ஒன்றுமில்லை. ஆனால் சுவை பிரமாதமாக இருக்கும் பிரியாணிக்கு மட்டுமல்ல பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றிக்கு கூட இதை இன்னும் கொஞ்சம் திக்காக வைத்து சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சால்னாவை ட்ரை பண்ணி பாருங்க👍🌺🌺🌺

ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய்

 ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய்  

தேவையான பொருட்கள்

மசாலா தூள் அரைக்க

எண்ணெய் - 1 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 2 பற்கள் நீளவாக்கில் நறுக்கியது
எள்ளு - 1 தேக்கரண்டி
கொப்பரை தேங்காய் - 1/4 கப் துருவியது 

ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய் செய்ய

கத்திரிக்காய் - 1/2 கிலோ
உப்பு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
அரைத்த மசாலா பொடி
கறிவேப்பிலை

செய்முறை

1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் தனியா, சீரகம், கடலை பருப்பு, வேர்க்கடலை, மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

2. மசாலா பொன்னிறமாக மாறியதும் அதில் நீளவாக்கில் நறுக்கிய பூண்டு மற்றும் எள்ளு சேர்த்து வறுக்கவும்.

3. பிறகு கொப்பரை தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, நன்கு ஆறவிடவும்.

4. ஆறியதும் தூளாக அரைத்து கொள்ளவும்.

5. கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்த கலவையை தடவவும்.

6. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கத்திரிக்காயை போட்டு வதக்கவும்.

7. பாதி வதங்கியதும் நன்கு ஆறவிடவும். ஆறியதும் கத்தரிக்காயை மெதுவாக பிரித்து அதனுள் அரைத்த மசாலா தூளை வைத்து மூடவும்.

8. பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பிறகு கத்தரிக்காவை போட்டு வதக்கவும்.

9. அடுத்து ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.

10. பிறகு கத்தரிக்காயை திருப்பி விட்டு மூடி 5 நிமிடம் வேகவிடவும்.

11. 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கினால் ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய் தயார்.

எலுமிச்சை சாறு (சாதத்துக்கு)

 *என் சமையல்.* 

உமா

எலுமிச்சை சாறு (சாதத்துக்கு)

தேவையானவை..

1. எலுமிச்சை சாறு - 1/2 கப்
2. தண்ணீர் - 1 கப்
3. உப்பு - தேவைக்கு
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
1. கடுகு - 1/4 தேக்கரண்டி
2. சீரகம் - 1/4 தேக்கரண்டி
3. உளுந்து - 1/2 தேக்கர்ண்டி
4. கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
5. கறிவேப்பிலை
6. பச்சை மிளகாய் (அ) மிளகாய் வற்றல் - 2
7. எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை..

மிளகாயை இரண்டாக ஒடித்து வைக்கவும். எலுமிச்சை சாறு மற்றும் நீர், உப்பு, மஞ்சள் தூள் ஒன்றாக கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.

பருப்பு சிவந்ததும் எலுமிச்சை சாறு கலவையை சேர்த்து மஞ்சள் வாசம் போய் சாறு பாதியாகும் வரை கொதிக்க விடவும்.

இதை செய்து வைத்து கொண்டு எப்போது வேண்டுமானாலும் சூடான சாதத்தில் கலந்து எலுமிச்சை சாதம் செய்யலாம். விரும்பினால் எண்ணெயில் வறுத்த முந்திரி, வேர்கடலை கூட சாதம் கிளரும் போது சேர்க்கலாம்.

Monday, November 21, 2022

சமையல் குறிப்புகள்

 சமையல் குறிப்புகள்

*ஹோட்டலுக்கு போனா கூட இப்படி ஒரு ரவை உப்புமா கிடைக்காது.*

 ரசித்து ருசித்து சாப்பிடும் படியான ரவை உப்புமா செய்ய இந்த ஐடியா போதும். 

 பின் சொல்லக்கூடிய குறிப்புகளை அப்படியே பின்பற்றி ரவை உப்புமா செய்தால் அந்த ரவை உப்புமா சூப்பரா இருக்கும்.

உங்கள் வீட்டில் இருக்கும் ரவையை வைத்து, உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரவை உப்புமாவை சூப்பராக செய்வது எப்படி.

சின்ன சின்ன ரகசிய குறிப்புகளுடன் சூப்பரான ரவை உப்புமா ரெசிபி இதோ

 உங்களுக்காக.

200 கிராம் அளவுள்ள ரவைக்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியாக இருக்கும்.

ஒரு ஆழாக்கு ரவையை அளந்து எடுத்துக் கொண்டால் அதிலேயே தண்ணீரையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். 1 கப் ரவைக்கு, 2½ கப் அளவு தண்ணீர் நமக்கு தேவைப்படும். இதுதான் தண்ணீரின் அளவு. பிறகு ரவா உப்புமா எப்படி தாளிப்பது என்று பார்ப்போம். -

அடுப்பில் ஒரு அடி கனமான கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். முதல் வேலை இதுதான். அடுப்பு சிம்மிலேயே தான் இருக்க வேண்டும். கடுகு – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு சீரகம் – 1/2 ஸ்பூன் பெருங்காயம் – 2 சிட்டிகை, மிக பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, மிகப் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை – 1 கொத்து, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு வதக்கி விடுங்கள். இஞ்சி துருவல் லேசாக வதங்கி வந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/2 கைப்பிடி அளவு போட்டு வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் மிகப் பொடியாக நறுக்கிய கேரட் – 4 டேபிள் ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய பீன்ஸ் – 4 டேபிள் ஸ்பூன், இந்த காய்கறிக்கு தேவையான இரண்டு சிட்டிகை உப்பை தூவி, ஒரு நிமிடம் போல வதக்குங்கள். இப்போது எடுத்து வைத்திருக்கும் ரவையை இதில் போட்டு வறுக்க வேண்டும். அடுப்பு சிம்மில் தான் இருக்கிறது. அடுப்பை தீயை அதிகரிக்கக் கூடாது. ரவை 4 நிமிடம் வறுபட வேண்டும். பொல பொலன்னு ரவை வந்தவுடன், லேசாக ரவையின் நிறம் மாறி வந்ததும் தண்ணீரை ஊற்ற வேண்டும்.

ரவையை கடாயில் கொட்டி விட்டு இந்த பக்கம் அடுப்பில் சுடு தண்ணீரை கொதிக்க வைத்து விடுங்கள். 1 கப் அளவுக்கு, 2 1/2 கப் அளவு தண்ணீர் கொதிக்கட்டும். நான்கு நிமிடம் ரவை வறுபடுவதற்குள் தண்ணீர் கொதித்து விடும். ரவை வறுபட்டவுடன் ரவைக்கு தேவையான அளவு உப்பு தூளை தூவி, கொதிக்கின்ற தண்ணீரை இந்த ரவையில் ஊற்றி, மிகப் பொடியாக நறுக்கிய சின்ன தக்காளி பழம் – 1 இதோடு போட்டு, கலக்க வேண்டும். அடுப்பு சிம்மில் தான் இருக்கிறது. ஒரு மூடி போட்டு கலந்து விட்ட ரவையை நான்கு நிமிடங்கள் வேக வையுங்கள். அதன் பின்பு மூடியை திறந்து பார்த்தால் 90% ரவை உப்புமா நமக்கு தயாராக வந்திருக்கும். ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து விட்டு இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் உங்கள் தேவைக்கு ஏற்ப தேங்காய் பூ தூவி, கொத்தமல்லி தழை மிகப் பொடியாக நறுக்கி தூவி, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து இறுதியாக ஒரு ஸ்பூன் எலுமிச்ச பழச்சாறு இதன் மேலே பிழுந்து விட்டு கலந்து மூடி போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த கடாய் சூட்டிலேயே உப்புமா மலர்ந்து விடும். ஐந்து நிமிடம் கழித்து எடுத்து பார்த்தால் உப்மாவை கிளறி பாருங்க. உதிரி உதிரியா சூப்பரான உப்மா உங்களுக்கு கிடைத்திருக்கும். உங்க இஷ்டம் போல இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது சாம்பார் பரிமாறலாம். வேற என்னங்க வேணும் சுடச்சுட இந்த உப்புமாவை மழைக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமா இருக்கும்.