அப்பளாய குண்டா
(Appalaya gunta)
இது சென்னை To திருப்பதி நெடுஞ்சாலையில் புத்தூர் நகரி அருகே சுமார் 15 Km தொலைவில் உள்ளது. திருப்பதியில் இருந்து வந்தால் சுமார் 12 Km.
இவர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள். திருப்பதி பெருமாளின் ரெப்ளிகா. அதே உயரம் அதே தேஜஸ். இது உருவான காலம் 1232 AD. கார்வெட்டி நகர ராஜா என்ற ராஜா இந்த கோவிலை நிர்மாணம் செய்து கட்டியுள்ளார். பிறகு ஸ்ரீ குமார வெங்கட திருமலை ராஜா இந்த கோவிலை புதிப்பித்து கட்டியுள்ளார்.
இந்த கோவில் அபூர்வமானது. ரொம்ப ரொம்ப சிறப்பு பெற்றது. பெருமாள் இங்கே வலது கையில் "அபய ஹஸ்த்த முத்திரை" யோடு நின்று கொண்டிருக்கிறார். இப்படி வலது கையில் அபயஹஸ்த்தம் இருக்கும் பெருமாள் மிக மிக அரிது.
அப்படி வலது கையில் "அபயஹஸ்த்த முத்திரை" யோடு இருப்பதால் இவர் உடம்பு, மனசு, வியாபாரம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு உடனே வழங்கக்கூடியவர். அதிலும் மனசு சம்பந்தப்பட்ட வியாதி (Mental Depression) இருந்து அதற்காக பிரார்த்தனை செய்து கொண்டால் கண்டிப்பாக நிவர்த்தி ஆகும்.
இது வாயு பகவான் வழிப்பட்ட ஸ்தலம். பத்மாவதி தாயாரின் திருமணத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் "நாராயண வனத்திற்கு" வந்தபோது சித்தேஸ்வர மகாமுனி இங்கே "அப்பளாயகுண்டா"வில் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பெருமாளையும் தாயாரையும் திருமணம் முடிந்து பார்க்க விரும்பியதால் இங்கே பத்மாவதி தாயாரோடு பிரசன்ன வெங்கடேசப் பெருமாளாக எழுந்தருளி மகாமுனிக்கு காட்சி தருகிறார்.
இங்கேயுள்ள பத்மாவதி தாயாரும் ஆண்டாளும் அவ்வளவு அழகு. ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கு. மிக மிக அழகான சுத்தமான புஷ்க்கரம் இருக்கு.
இங்கும் போன் எடுத்து போக அனுமதியில்லை. எனவே ஒரு போட்டோகூட எடுக்க இயலவில்லை.
திருப்பதி போகும்போதோ இல்லை வரும்போதோ கண்டிப்பா பார்க்கவேண்டிய பெருமாள். இங்கே இந்த கோவில் இருப்பது அதிகம் பேருக்கு தெரியாததால் கூட்டமும் அதிகம் இல்லை.
கோவிலைச் சுற்றி பெரிய சுற்றுச் சுவர் அதைசுற்றி கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் விஸ்தாரமாக இருக்கு.
கோவிலில் இருந்து சற்று தொலைவில் மலை மேலே "சந்திரமௌலீஸ்வரர்" என்கிற சிவன் வீற்றிருக்கிறார். கொஞ்ச தூரம்தான் என்றாலும் மலைமீது ஏறனும் எனவே நான் போகலை.
கோவிலைச்சுற்றி மலைகளும் மரங்களும் சூழ்ந்து கோவில் மிக மிக ரம்யமாக காட்சி அளிக்கிறது.
நாளை ஸீனிவாசமங்கா புரம்.
"ஒருவரிடம் நமக்கு உரிமைகள் அதிகமாகும் போதுதான் அவர்களைவிட்டு பிரியும் சந்தர்பங்களும் அதிகமாகும்"
இவையே வாழ்வில் நம்மை உயர்த்தும் உன்னதங்கள்"
அன்புடன்
கமலா
No comments:
Post a Comment