பஞ்ச துவாரகா பயணம் 26
இறுதிப்பகுதி
வெங்கடேசன்
மீண்டும் அகமதாபாத் திரும்பி ஸ்டேஷனில் க்ளோக் ரூமில் லக்கேஜை எடுத்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் இரண்டு மூன்று இடம் அலைந்து ஒரு ஓட்டலில் இடம் கிடைக்கிறது
ரெஸ்ட் எடுத்தபின் உள்ளூர் பெருமாள்,காளி கோயில்களை தரிசித்தபின் ரெஸ்ட் எடுக்கிறோம்
மறு நாள் அக்ஷர்தாம் எனப்படும் சுவாமி நாராயண் கோயில் செல்கிறோம்
அது யார் சுவாமி நாராயண்?
இடியும் மின்னலும் மழையுமா இருந்த ஒருநாள் இரவு, அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு சொந்தபந்ததையெல்லாம் உதறித்தள்ளி வீட்டை விட்டு வெளியேறுன கன்ஷ்யாம் பாண்டேவுக்கு வயசு வெறும் 11. வீட்டுக் கதவை மெதுவாச் சாத்திட்டு மழைத் தண்ணியிலே கால் வைக்கும்'சளக்' துல்லியமாக் கேக்குது. பாதம் பட்டுத் தெறிக்கும் தண்ணீர் முத்துக்கள் அப்படியே எழுந்துத்திரும்பவிழுது. 65 அடி உயரம், 85 அடி அகலமுள்ள பெரிய திரையில் படம் பார்த்துக்கிட்டு இருக்கோம்.
அயோத்திக்குப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த இவருக்குப் பெயர் சூட்டும்போதே ஹரி, கிருஷ்ணா, ஹரி கிருஷ்ணா, நீல்கண்ட்ன்னு கூட நாலு பேரையும் சூட்டுனாங்களாம்.
ஏழுவருஷம், ஒரு மாசம், பதினோருநாள் பாரதத்தின் கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்குமா எட்டாயிரம் மைலுக்கு மேலே நடந்தே யாத்திரை செஞ்சிருக்கார். இந்தப் பயணத்தில் இவரை 'நீல்கண்ட்'ன்னே மக்கள் அறிஞ்சிருந்தாங்க.
இதுக்கு முந்தி ஐமேக்ஸ் திரையில் படம் பார்த்த அனுபவத்தைவிட இது முற்றிலும் வேறாய் இருக்கு. 55 நிமிஷம் ஓடும் இந்தப் படத்துலே பனி அப்படியே உறைஞ்சு கிடக்கும் இமயமலை முதல்,பசுமையான கேரளம் வரை நாமும் கூடவே பயணிக்குறோம். எல்லாமே விஸ்தாரமாவும், விவரமாவும் இருக்கு. ரொம்ப நேர்த்தியான படப்பிடிப்பு. தியேட்டரின் சவுண்டு சிஸ்டம் பிரமாதம். 'நம்மூர் சினிமாஅரங்குகளில் நம்ம காதைச் செவிடாக்கிட்டுத்தான் அனுப்புவோமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்களொ'ன்னு இப்ப ஒரு புது சந்தேகம் முளைச்சது.
நாங்கள் அமர்ந்து இருந்தது அகமதாபாத் அக்ஷர்தாம் சுவாமி நாராயணன் கோயில்..கண்காட்சியின் ஒருபகுதி..
தமிழர்களுக்கு அதிகம் அறிமுகம் ஆகாத சுவாமி நாராயண் பற்றி......குஜராத் மாநிலத்தில் உள்ள சாப்பியா என்ற கிராமத்தில் 1781ம் ஆண்டு சுவாமி நாராயணன் அவதரித்தார்.
சுவாமி நாராயண் தன் ஏழு வயதிலேயே நான்கு வேதங்கள், உபநிஷதங்கள், பகவத்கீதை மற்றும் ஆன்மிக நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். தன் பத்தாம் வயதில் வாரணாசி (காசி) சென்ற அவர், விசிஷ்டாத்வைத தத்துவம் குறித்து பண்டிதர்கள் மத்தியில் பேசி கைத்தட்டல் பெற்றார். 11ம் வயதிலேயே தன் வீட்டை விட்டு வெளியேறினார். குடும்பப் பற்றைத் துறந்து தீவிர ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டார்.
இந்தியா முழுவதும் உள்ள புண்ணிய ஷேத்திரங்களுக்கு பயணம் செய்தார். அவரது இடுப்பில் கட்டிய ஒரு துண்டைத் தவிர வேறு எதுவும் அவரிடமில்லை. நடந்தே யாத்திரை சென்றார்.
முதலில் இமயமலையிலுள்ள பனிச்சிகரங்களில் உள்ள புண்ணியப்பகுதிகளை தரிசித்தார். பின்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கன்னியாகுமரி வரை அவரது பயணம் நீடித்தது. மதுரை, ராமேஸ்வரம் முதலான புண்ணிய ÷க்ஷத்திரங்களும் இதில் அடக்கம். மீண்டும் குஜராத்தை அடையும் போது அவருக்கு வயது 18 ஆகியிருந்தது. இந்த ஏழு ஆண்டு காலத்துக்குள் அவர் நடந்தே பயணித்த தூரம் 12 ஆயிரம் கி.மீட்டர்.
ராமானந்த சுவாமி என்பவர் இளமையிலேயே இவருக்கு இருந்த ஆன்மிக ஆர்வத்தைப் பார்த்து, தனது சீடர்களிடம், "இவரே இனி உங்கள் குரு' என அறிவித்தார். அவருக்கு "சகஜானந்தா' எனப் பெயர் சூட்டினார். சகஜானந்தரின் சிறப்பை அறிந்த பல்துறை வல்லுநர்கள் அவரது பக்தர்கள் ஆயினர். இவர்களில் 3ஆயிரம் சாதுக்களும் அடக்கம். அவர்கள் சுவாமி நாராயணனை தங்கள் தெய்வமாகவே கருதினர்.
ஏழை மக்களிடமும், பாவம் செய்து துன்பப்படும் மக்களிடமும் அவர் மிகுந்த அன்பு செலுத்தினார். மூடநம்பிக்கை, இன்பம் தரும் பொருட்களிடம் அடிமையாகி கிடத்தல் ஆகியவற்றில் சிக்கியிருந்த மக்களை சந்தித்து அவர் உபதேசம் செய்தார். இதன் காரணமாக குஜராத் மக்களில் பெரும்பாலோனோர் ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்து மனஅமைதி பெற்றனர். அந்த மகானின் நினைவாக இக்கோயில் எழுப்பப்பட்டது.
தங்கமயமான சிலையுடன் பிரம்மாண்டத்தின் வடிவமான கோயிலையும் மூன்றுமணிநேர கண்காட்சியையும் கண்டு வியக்காதோர் இல்லை.
2002 ல்நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப்பின் மிகவும் கெடுபிடியான பாதுகாப்பு சோதனையில் பெல்ட உட்பட நீக்கப்பட்டு உள்ளே செல்ல வேண்டும். ஆமதாபாத் தவிர்த்து டில்லி அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் இக்கோயில் இருந்தாலும் தென்னகத்தில் இல்லாமையால் தமிழகத்தில் நிறைய பேருக்கு இவரது புகழ் சென்று சேரவில்லை.
மிக அருமையான கண்டிப்பாக பார்க்க வேண்டிய அக்ஷர்தாம் உலகெங்கிலும் கட்டப்பட்டுள்ளது. (தமிழகம் தவிர)
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பஞ்ச துவாரகா குறித்த ட்ராவல்ஸ் விளம்பரம் பார்த்து ஆவல் கொண்டாலும் ஒருவருக்கு 20000+ என்று போக இயலாதோர் ஓரளவு இந்தி தெரிந்த ஒருவருடன் சிறிய குழுக்களாக ரயிலில் மட்டும் ரிசர்வ் செய்து தைரியமாக செல்வது எளிது. அனைத்தையும் பயண நாடகளுடன் கவர் செய்ய 10 முதல் 12 நாட்கள் போதும்.இந்தி தெரியாவிடினும் ஓரளவு சமாளிக்கலாம். ஒருவருக்கு 6000 முதல் பெரிய ஓட்டலில் தங்கினால் கூட அதிகபட்சம் 10000 க்கு மேல் ஆகாது.
ஆனால் மூன்று வேளையும் நம் உணவுதான் வேண்டும் என்போருக்கு இது சரிவராது.
1)முதலில் சென்னை ஆகமதாபாத் க்கு ரிசர்வ் செய்யுங்கள்
2)முன்னதாக ஆனந்த் ஸ்டேஷனில் இறங்கி டாகோர் த்வாரகா (50)கிமீ தரிசிக்கவும்
3)மறுநாள்அகமதாபாத் ஓகா (400)கிமீ ரிசர்வ் செய்க
4)ஓகா அருகில் த்வாரகை,பேட் த்வாரகை தரிசியுங்கள்
5)மீண்டும் அகமதா பாத் வந்து உதய்பூர் பஸ்ஸில் செல்க 300 கிமீ
6)உதய்பூர் அருகில் ஶ்ரீநாத்,கங்ரோலி 50 கிமீ
சோமநாத் போன்ற மற்ற ஊர்கள் உங்கள் சௌகரியப்படி கார்,வேன்,அல்லது பஸ்ஸில் சுற்ற பொறுமை இருந்தால்….
🙏🏻🙏🏻
கொரானா குறைந்து வருவதாலும் மனைவி அமெரிக்காவில் உள்ளதாலும் தனியே பயணம் செல்ல உள்ளேன். அடுத்த பயணத்தில் சந்திக்கிறேன் வெங்கடேசன்6381369319
No comments:
Post a Comment