Friday, October 8, 2021

அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 10

 🌴🌳🐿 🦔🐉  🐗🐝🦂🌲🌵

நல்ல மலா காட்டின் நடுவில் 😲(நவ நர) சிங்கங்களை தரிசிக்க அகோபிலம். பகுதி10 (V.V) 

அறைக்கு வந்து (சுமார் 4.30 மணி), கொஞ்ச நேரத்தில், ஒரு ஜீப் பிடித்து 500 ரூ (காரில் போவது கடினம்) பார்கவ நரசிம்மரைப் (எண்: 7) பார்க்கக் கிளம்பினோம். சுமார் 3.5 கி.மீ தூரம். பரசுராமருக்குக் காட்சி தந்த நரசிம்மர். 130 படிகள் ஏற வேண்டும். 

வேதாத்ரி மலையில் கீழ் அஹோபிலத்திலிருந்து சுமார் 2 கி.மீ.தொலைவில் இக்கோயில ஒரு சிறுகுன்றின்மேல் அமைந்துள்ள உயரமானஆனால்,  படிகளில் ஏறிச் சென்று பார்கவ நரசிம்மரை தரிசிக்கலாம். படி ஏறுமுன்பக்கவாட்டில் சதுர வடிவில் ஒரு திருக்குளம் நம் கண்ணில் படுகிறது. 

இதனை பார்கவ தீர்த்தம் என்கிறார்கள். இது என்றைக்குமே வற்றியதில்லைஎன்பதால் இதனை ஆகாய தீர்த்தம் என்றும் அழைக்கிறார்கள். பார்கவ ரிஷி இத்தலத்துக்கு,பரந்தாமனை தரிசிக்க வந்ததாகவும் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி நாராயணன்தன் தசாவதாரத் தோற்றங்கள் அனைத்தையும் ஒருசேரக் காட்டி அவரை இன்பத்தால்திகைக்க வைத்ததாகவும் கூறுகிறார்கள். 

அதனாலேயே இக்கோயிலுக்கு பார்கவ நரசிம்மர்கோயில் என்று பெயர் வந்ததாம். இந்த க்ஷேத்திரத்தின் உற்சவ மூர்த்திதான் வடநாட்டில்ஆஜ்மீரை அடுத்த புஷ்கரரில் உள்ளார். பார்கவன்என்று சுக்கிரனுக்கு இன்னொரு பெயர் உண்டு என்றும், அதனால் அசுர குருவான சுக்கிராச்சார்யாருக்குபிரத்யட்சமான தெய்வம் இந்த நரசிம்மர் என்றும் சொல்கிறார்கள். சந்நதிக்கதவுகள் திறந்தே உள்ளன. பொதுவாக மூடுவதில்லை என்று தகவல் கிடைத்தது. சந்நதிக்குள் நரசிம்மரைஹிரண்ய வதை கோலத்தில் தரிசிக்கலாம்.  

பின்னர், , சத்ரவத (எண்: 8), யோகானந்த (எண்:9) நரசிம்மர்களைப் பார்க்கக் கிளம்பினோம். (5.30 மணி). சத்ரவத நரசிம்மர், மஜா ஆசாமி. சிங்கம் சிரித்துப் பார்க்க வேண்டுமா? சத்ரவதரைப் பாருங்கள். அத்துடன், தொடையில் தாளம் வேறு. உண்மையாகவே, மனசுக்கு சந்தோஷத்தை அள்ளித் தரும் பகவான். ஆஹா, ஊஹூ என்ற கந்தர்வ தம்பதிகளின் பாட்டைக் கேட்டுத் தான், அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியாம்.

செய்த பாவத்தைத் (பிறப்பால் பிராமணன் ஆன ஹிரண்யனைக் கொன்றதால்) தொலைப்பதற்காக, யோகத்தில் ஆழ்ந்தவர் யோக நரசிம்மர். பாவ, புண்யம் என்றால் என்ன என்று தீர்மானம் செய்தவனே, தன் சொந்த வார்த்தைக்காகத் தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் விநோதக் காட்சி. ராமனாக வந்து, அருமை மனையாளைத் தொலைத்துத் தேடி அலைந்து வருத்திக் கொண்டவன் தானே!

யோகானந்த நரசிம்மர் விக்ரஹம், கொஞ்சம் பின்னப் பட்டு விட்ட படியால், ஜீயர் அவர்கள், புதிய விக்ரஹம் செய்து வைத்திருக்கிறார். அருளும், அழகும் கொஞ்சமும் குறையவில்லை. இந்த சன்னதிக்குப் பக்கத்திலேயே, ஒரு ஆஸ்ரமம் நடத்துபவரும், வேறொரு யோக நரசிம்மர் சன்னதி கட்டியிருப்பதாகச் சொன்னார்கள்.

இப்படியாக நவ நரசிம்மரின் அற்புதக்கோலங்களை தரிசித்து இரவு கடப்பா சென்று (100 கிமீ)தங்கினோம்.உள்ளூரில் வரதராஜ பெருமாள் தரிசனம்.காலை உணவு முடித்து திருப்பதி செல்லும் வழியில் 28 கிமீல் 800 ஆண்டு பழமையான தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒன்டிமிட்டா என்னும் ஊரில் உள்ள அற்புத கோதண்ட ராமரை தரிசித்தோம்..இரவு திருப்பதி தரிசனம் முடித்து மறுநாள் சென்னை வந்தோம்..

( அகோபிலம் செல்ல தமிழ்நாட்டிலிருந்து கடப்பா வரை ட்ரெய்னில் டிக்கட் ரிசர்வ் செய்து அங்கிருந்து 100 கிமீ பஸ்ஸில் செல்லலாம்.தங்குவதற்கு  அகோபிலமடம்  திரு பத்ரி நாராயணன் no 09490515284 .. தவிர TTD ,AP guest house உண்டு..  தனியே செல்பவர்கள் மேல் விவரம் தேவையெனில் என்னை 6381369319 தொடர்பு கொள்ளலாம்..தனியாக செல்ல இயலாதவர்களுக்காக நிறைய டிராவல்ஸ் காரர்கள் 5000/ ரூபாய்க்கு இரண்டு நாட்கள் டூரில் அழைத்துச்செல்கிறார்கள் 

               மீண்டும் சந்திப்போம்





No comments:

Post a Comment