ஸ்ரீதேவி பூமதேவி சமேதா அமர்ந்த சுந்தரராஜ பெருமாள், விண்ணமங்கலம், வேலூர், தமிழ்நாடு,
( ஆம்பூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது.
சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் ஐய்யனூர். இந்த இடத்தின் அருகில் விண்ணமங்கலம், கன்னடிகுப்பபம் கிராமங்களின் அருகில் இத்திருத்தலம் அமைத்துள்ளது. ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அமர்ந்த பெருமால் அழகுறக் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார், பெருமாள்.
ராமாயண காலத்தில் இலங்கையில் இருந்து வான் மார்க்கமாக ராமர், சீதை மற்றும் விபிஷணன் ஆகியோர் அயோத்தி செல்லும் போது, அவர்கள் சென்ற ரதத்தின் நிழல் விழுந்த இடங்களில் ஒன்றுதான், இவ்விடத்தில் பெருமாள் குடிகொண்டுள்ள இடம் என்கிறார்கள். இதன் மகிமையை உணர்ந்த கிருஷ்ண தேவராயர், 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கோயிலை நிர்மாணித்து அறியப்படுகிறது.
மூலிகைக் கற்களைக் கொண்டு, ஸ்ரீதேவி-பூதேவி சமேத ராக ஸ்ரீ அமர்ந்த பெருமாள் அருளாட்சி செய்வது, கண்கொள்ளா காட்சி!
பூஜையின்போது மூலவர் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பதைக் காணலாம் என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொள்ளும் பக்தர்கள், ‘‘தரிசிக்கும் தருணத்தில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களை ஸ்வாமி காட்டும் என்கிறார்கள் பக்தர்கள்.
நீங்களும் ஒருமுறைத் தரிசித்து வாருங்களேன்; உங்கள் வருங்காலம் சிறக்கும், வாழ்க்கைச் செழிக்கும்!
வாழ்க வளமுடன்......
மணியன்.
No comments:
Post a Comment