🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 95 🌹🌹🌹
நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தியாகவும், கிடந்த கோலத்தில் திருமெய்யர் ஆகவும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் காட்சி கொடுக்கும் அற்புதத் திவ்யதேசம். அந்த திருக்கோலத்தை நாம் இன்று தரிசிக்க இருக்கிறோம்.
அருள்மிகு சத்திய மூர்த்தி திருக்கோவில் :-
மூலவர்: சத்தியகிரிநாதன்
தாயார்: உய்யவந்த நாச்சியார், உஜ்ஜீவன தாயார்
உற்சவர்: மெய்யப்பன், ராஜகோபாலன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சத்தியகிரி விமானம்
தீர்த்தம்: கதம்ப புஷ்கரணி, சத்திய தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ உய்யவந்தாள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ சத்யகிரிநாதாய நமஹ
ஊர்: திருமெய்யம்.
🌺🌺 திருமெய்யம்:-
நற்றமிழால் பாமாலை நாலாயிரமாக பாட ஆழ்வார் பெருமக்களுக்கு ஞானத்தை தந்தருளிய இறைவன் நாராயணன் "மெய்யம்" மலையருகே குடிகொண்டு அருளும் அற்புதத் திருத்தலம். திவ்ய நாதனாகிய திருமால் மெய்யம் என்ற சிறிய மலைப்பகுதியில் கோவில் கொண்டுள்ளதால் "திருமெய்யம்" என்பது பெயராகும்.
🌺🌺 தலவரலாறு :-
இந்த திருத்தலத்தில் பெருமாள் நின்ற கோலம், கிடந்த கோலம் என இரண்டு திருக்கோலங்களில் காட்சி தந்து அருள்கிறார். இருவரும் தோன்றிய விதம் பற்றி இரண்டு விதமான ஐதீகங்கள் பேசப்படுகின்றன.
புராண காலத்தில் இமயமலையின் வடபுறத்தில் ஓடிக்கொண்டிருந்த "புஷ்ப பத்திரை" என்ற நதிக்கரையில் சத்திய முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் இறைவனின் அருளால் பல தலங்களுக்குச் சென்று தரிசனம் பெற்று வந்தார். இறுதில் இறைவனை நேரில் காண வேண்டி இத்தலத்தில் தவமியற்றியதாகவும், அவரது தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் நின்ற கோலத்தில் காட்சி தந்து அருளியதாகச் சொல்லப்படுகிறது. சத்திய முனிவருக்காக காட்சி தந்த மூர்த்தி என்பதால் "சத்திய மூர்த்தி" என்ற திருநாமம் பெற்றார்.
ஒருமுறை ஆதிஷேசன் என்னும் நாகம், சாபவிமோசனம் பெற பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனை நோக்கி இத்தலத்தில் தவமியற்றியதாகவும் அதற்கு மனமிறங்கிய இறைவன் காட்சி தந்து தனது படுக்கையாக மாற்றிக் கொண்டதாக ஐதீகம். கிடந்த மூர்த்திக்கு "திருமெய்யர்" என்பது திருநாமம்.
🌺🌺 ஆதிஷேசன் தலையை சுருக்குதல் :-
ஒருசமயம் மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் பெருமாள் பாம்பணையில் படுத்து நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர். அதுகண்டு அஞ்சி பூதேவி பெருமாளின் திருவடிக்கு அருகிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்து கொள்கின்றனர்.
பெருமாளின் நித்திரையைக் கலைக்க மனமில்லாது ஐந்து தலை நாகமான ஆதிஷேசன் தன் வாயிலிருந்து விஜ ஜ்வாலையை கக்கி அவர்களை விரட்டி விடுகிறான். பெருமாளின் அனுமதியின்றி இவ்வாறு செய்ததற்காக பயந்து இருக்கும் போது, பெருமாள் என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய். பாராட்டுக்குரிய செயல் என்று கூறியதாக வரலாறு.
இதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தலத்தில் ஆதிஷேசன் தன் தலையை அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.
🌺🌺 கோவில் பற்றி :-
இது ஒரு குடைவரைக் கோவிலாகும். இத்தலத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். இந்த பாம்பணை மேல் பள்ளி கொள்ளும் திருஉருவம் இந்தியாவிலேயே மிகப் பெரியது. பெருமாளின் கண்கள் அரைக்கண்ணாக மூடியிருக்க இதழ்களில் மென்நகையுடன் பாம்பணை மேல் பள்ளி கொண்ட நிலையில் வலக்கரம் ஆதிஷேசனை அணைத்துக் கொண்டு காட்சி தருகிறார்.
சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும், மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் மாமல்லச் சிற்பங்கள் போல் மலையைக் குடைந்து பாறைகளில் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள் தெய்வீக உணர்வையும், கலையுணர்வையும் ஏற்படுத்துகின்றன. இத்திருக்கோவில் ஏழாம் நூற்றாண்டுக் குடைவரைக் கோவில்.
🌺🌺 மங்களாசாசனம் :-
திருமங்கையாழ்வார் 9 பாசுரங்களால் இத்தல இறைவனை மங்களாசாசனம் பாடியுள்ளார்.
போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானை
கைதொழாக் கையல்ல கண்டோமே!!!"
- திருமங்கையாழ்வார்.
🌺🌺 வழித்தடம்:-
புதுக்கோட்டைக்கும், காரைக்குடிக்கும் இடையில் இத்தலம் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருமெய்யம் பேருந்து மற்றும் இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.
அருள்மிகு உய்யவந்த நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
இன்றைய பதிவுடன் பாண்டிய நாட்டின் 18 திருத்தலங்கள் நிறைவு பெறுகின்றன. நாளை முதல் வடநாட்டின் 11 திருக்கோவில்களில் முதல் தலமான அருள்மிகு ரகுநாயகன் திருக்கோவில் - திருஅயோத்தி திவ்ய தேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment