Monday, May 17, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 106 (IV)

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 106 (IV)🌹🌹🌹

திருமலையின் தீர்த்தங்களையும், பல தகவல்களையும் இன்று நாம் அறிந்திடலாம்.

🌻🌻 பூலோக வைகுண்டம்:-

"வேங்கடாத்ரி சமஸ்தானம் பிரம்மாண்டே
நாஸ்திகிஞ்சன
வேங்கடேஸ சமோதேவோ நபூதோந
பவிஷ்யதி!!!".

திருமலை திருப்பதி என்ற இந்த ஷேத்திரத்திற்கு இணையான வேறு ஷேத்திரம் இல்லை. திருமலை வேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை.

உண்மைதான்!! ஏனெனில், ஏழுமலையானைக் கண்கண்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட அவன் அடியார்களுக்கு, அவனுடைய திருநாமமே "உயிர் உந்தும் மந்திரம்".

அவன் கோவில் கொண்டிருக்கும் திருமலையே உலகம். எங்களைப் போன்ற அடியார்களுக்கு அந்த பரந்தாமனே அனைத்தும், அவன் நாமமே போதும் நம்மை நல்வழிப்படுத்துவதற்கு.

இன்றைக்கும் "லட்சோபலட்சம்" பக்தர்கள் திருமலையில் குவிகிறார்கள் என்றால், திருவேங்கடவனின் அருட்கருணையே அதற்குக் காரணம்!!.

வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன், கலியுக வரதன், திருமலை திருப்பதிக்கு அன்றி வேறு எந்த தெய்வத்திற்கும் நடைபெறுவதில்லை. இதனால் தான் என்னவோ திருப்பதியை, "பூலோக வைகுண்டம்" என்று சிறப்பித்திருக்கிறார்கள்.

பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்துக் கொண்டாடுவது இரண்டு தலங்களை. ஒன்று "திருவரங்கம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம்", மற்றொன்று "திருமலை திருப்பதி".

🌹🌹 பக்தர்கள் மனதில் :-

ஒவ்வொரு அடியார்களின் மனதிலும் எம்பெருமான் நிலைத்திருக்கிறான். தன்னையே நம்புவோர்க்கு அபயம் அளித்து காத்து வருகிறார்.

ஏழுமலைவாசா உனையே நினைத்தேன்
எனது சங்கடம் தீர்ப்பாய் வேங்கடநாதனே!!!
ஏழையின் துணை நீயே!
எங்கெங்கும் நீயே!

என் சொந்தம் என் பந்தம்
எல்லாமே நீதானே!
கோவிந்தா என்றாலே
குறைதீரும் எந்நாளும்!
ராமரே கிருஷ்ணரே சேஷாத்ரி நாதரே!!


திருவருள் புரிவாய் திருமலை வாசனே
உடலும் உணர்வும் உயிரும் என்றும் நீயே!!!

என்று திருவேங்கடவனைக் கொண்டாடுகிறார்கள்.

🌻🌻 திருமலை தீர்த்தங்கள்:-

திருமலை ஒரு பக்தி ஷேத்திரம் மட்டுமல்ல, ஒரு முக்தி ஷேத்திரம். இதையெல்லாம் விட இது ஒரு மிகப்பெரிய "தீர்த்த ஷேத்திரம்". இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

அரூபமாக - பிரத்யட்சமாகாமல் இருக்கக்கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வந்து கூடுகின்றன என்கின்றன ஞானநூல்கள்.

திருப்பதியில் திகழும் முக்கிய தீர்த்தங்கள் :-

1. குமார தீர்த்தம்

2. தும்புரு தீர்த்தம்

3. ராமகிருஷ்ண தீர்த்தம் (picture)

4. ஆகாச கங்கை

5. பாண்டு தீர்த்தம்

6. பாபவிநாச தீர்த்தம்

7. சுவாமி புஷ்கரணி

🌻🌻 சுவாமி புஷ்கரணி:-

திருக்கோவிலுக்கு அருகே உள்ள இந்த திருக்குளம் மிகவும் புனிதமானது. கோவிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள் இந்த திருக்குளத்தில் நீராடுதல் நலம் பயக்கும். இதனால், பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையடைவதாக ஐதீகம். சுவாமி புஷ்கரணி தீர்த்தம் பவித்ரமானது.

🌹🌹 ஆகாசகங்கை:-

திருக்கோவிலுக்கு வடக்கே 3 கி.மீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்ங்கிருந்து தான் திருவேங்கடமுடையானுக்கு ஆராதனைக்காக தினமும் தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது.

🌸🌸 பாவவிநாசனம்:-

திருக்கோவிலுக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுவாமி புஷ்கரணி தீர்த்தத்திற்கு அப்பால் "பாவ விநாசன தீர்த்தம்" இருக்கிறது.

🌻🌻 வைகுண்ட தீர்த்தம்:-

திருக்கோவிலுக்கு வடகிழக்கே 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

🌷🌷 தும்புரு தீர்த்தம் :-

திருக்கோவிலுக்கு வடக்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தீர்த்தம். இங்கு நாரதர், தும்புரர் என்று தேவரிஷிகள் வந்து கானம் செய்வார்கள் என்றும், இந்த தீர்த்தத்தில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சித்தர்கள், ரிஷிகள், யோகிகள் வந்து நீராடி சுவாமியை தரிசிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

🌴🌴 குமார தீர்த்தம்:-

குமார தீர்த்தத்தில் சுப்ரமணிய சுவாமி முருகன், நிரந்தரமாக தவத்தில் இருப்பார் என்றும், தினமும் கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவர் திருவேங்கடத்தானை தரிசிப்பார் என்றும் ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

🌻🌻 பாண்டவ தீர்த்தம்:-

கோகர்ப தீர்த்தம் "பாண்டவ தீர்த்தம்" என்று அழைக்கப்படுகிறது.

🌺🌺 நாளைய பதிவில்:-

நாளைய பதிவில் வேங்கடவனின் திருத்தலத்தைப் பற்றிய மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment