வனமாலி இரண்டு முறை காஞ்சி பெரியவரை அருகில் சென்று தரிசித்த பாக்யவான். இன்னும் பல முறை சென்று சேவிக்காமல் போனேனே என்ற வருத்தம் இப்போது தினம் தினம் வாட்டுகிறது
காஞ்சி பெரியவாளுக்கு அகலாத ஒரு குணம். கர்வம் கொண்டவரின் கர்வ பங்கம் செய்வது. அது நேரடி தாக்குதலாக இராது. அந்த கர்வி மனம் திருந்துவாரேயன்றி மனம் புண்படாது. அப்படி ஒரு சம்பவம் நான் கேள்வி பட்டது.
ஒரு பௌராணிகர் புராண உபன்யாசம் செய்பவர் மிக ப்ரபலம் ஆனார். பல இடங்களில் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவருக்கு தலை கனக்க ஆரம்பித்தது. அவர் நல்ல நேரம் காஞ்சி மஹானை தரிசிக்க தோன்றியது. உத்தம பாகவதருக்கு அந்த கெட்ட குணம் நீக்க இறைவன் திருஉளம் கொண்டான் போலும்
பெரியவாள் அவரை சிலாகித்து பேசியபோது அவர் சொன்னார். இப்போது ராமாயணத்தில் நான் தான் அதாரிடி. ராமாயணம் ப்ரவசனத்தில் எனக்கு ஸமமாக தற்போது யாரும் இல்லை. அவரது அஹங்காரத்தை ஸ்வாமிகள் சற்றும் பொறுக்கவில்லை.
ஆஹா. சந்தோஷம். எனக்கும் கூட ராமாயணத்தில் ஒரு சந்தேகம் இருக்கு. நல்ல வேளை நீங்கள் வந்தீர்கள் என்றார். பாகவதருக்கு தலைகால் புரியவில்லை. பெரியவாளுக்கே நாம் பதில் சொல்ல போகிறோம். இதை ப்ரவசனம் செய்யும் இடமெல்லாம் போய் சொன்னால்....?.... அவர் இந்த உலகிலேயே இல்லை.
மஹான் கேட்டார்~ ஶ்ரீராமருடைய வெண்கொற்ற குடையை வால்மீகி பல இடத்தில் வர்ணிக்கிறாரே. அந்த குடையில் எத்தனை கம்பிகள் இருக்கும் என
பாகவதர் உள்ளம் கருத்தது. முகம் புன்னகைத்தது அந்த விவரம் எல்லாம் வால்மீகி கூறவில்லையே என்றார்
ஸ்வாமிகள் கூறினார்~~~
தன்னை காடு செல்லுமாறு தந்தை இட்ட கட்டளையை ஸீதைக்கு தெரிவிக்க ஶ்ரீராமர் வருகிறார். அப்போது ஸீதம்மா இவர் என்ன சோகமாக வருகிறாரே. கூட ராஜ பரிவாரம் காணவில்லை. எங்கே அந்த நூறு கம்பிகளோடு கூடிய குடையை காணோம் என எண்ணுகிறாள்
அந்த ஸ்லோகம்
ஆவ்ருதம் வதனம் வல்கு சத்ரேணாபி விராஜதே
ஃ~|~~
பொருள்
ஹே நாதா ! பேரழகு படைத்த தங்கள் முகம் நீர் நுரை போல் வெண்மையானதும் நூறு கம்பிகளை உடையதும் ஆன கொற்றக்குடையால் மறைக்கப் படவில்லையே
~~~
ஸதம் என்றால் நூற்றுக்கணக்கான எனவும் பொருளுடையது என்றாலும் இந்த ஸ்லோகம் அந்த பாகவதருக்கு நினைவுக்கு வராததால் தலை குனிந்தார். கர்வ பங்கம் ஆனது
~~ வனமாலி
No comments:
Post a Comment