Monday, May 17, 2021

ஸ்ரீயோகராமர்தரிசனம்_திருக்கோயில்

 ஸ்ரீயோகராமர்தரிசனம்_திருக்கோயில்.


நெடு்ங்குணம் #நெடுங்குன்றம். 
மூலவர்: ஸ்ரீயோகராமர், சீதா, லக்ஷ்மணன்.
தாயார்: ஸ்ரீசெங்கமலவல்லி தாயார்.
பிற சன்னதிகள்: ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி.
ஊர்: நெடுங்குணம்.
மாவட்டம்: திருவண்ணாமலை.

கோதண்டம் ஏந்தாத அமர்ந்த கோலத்தில்,  தபஸ் நிலையில், தன் அகன்ற மார்பினில் தனது வலது கரத்தினை வைத்து தியானம் செய்தபடி ஸ்ரீராமன்!! அண்ணனுக்கு காவலாக வில்லேந்தியபடி இலக்குவணன்!! சீதாவும் அமர்ந்த கோலத்தில்!! 

மூவரையும் வணங்கி நிற்கும் அனுமனை நம்மால் வணங்க முடியாது!! பிரகாரத்தில் ஒன்றுக்கு இரண்டாய் அனுமனைக் காணலாம்!! மிகப் பழமையான கோயில்! கிருஷ்ணதேவ ராயர் காலத்து கோயில்!! 

#சுகப்பிரம்மத்திற்காக இராமன் இங்கே தபஸ்வியாய் அமர்ந்துள்ளார்

தரிசன நேரம்: வார நாட்களில் காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை

சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8:00 மணி முதல் மத்தியானம் 01:00 மணி வரை 

மாலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை

தொடர்புக்கு: பத்ரி பட்டர் +91 9345528083

🌹அன்புடன்🌹

 சோழ.அர.வானவரம்பன்.

No comments:

Post a Comment