சிரார்த்தத்தின் முக்கியத்துவம்
மிகவும் பிரபலமான வக்கீல் ஓருவர்
மிகவும் எளிமையாக வந்து சிரார்த்தம் செய்து வைத்த நிகழ்ச்சி மற்றும் ஓரு நீதிபதி சிரார்த்தம் சாப்பிட்ட நிகழ்ச்சி
ஒருவருடைய தந்தையாருக்கு ஓரிரு நாட்களில் ஸ்ரார்த்தம். ஏதோ ஒரு காரணத்தினால் ஸ்ரார்த்தம் பண்ணி வைக்க வாத்யார் கிடைக்கவில்லை. என்ன பண்ணுவது என்று கவலையுடன் சென்றுகொண்டிருந்தவர் கண்களில் ஆற்றங்கரையில் வெள்ளை வெளேரென்று தனது வேஷ்டியை துவைத்துக் கொண்டிருந்த ஒரு புரோகிதர் கண்ணில் படுகிறார்.
உடனே அவரிடம் ஓடோடி சென்று தனது தந்தையின் ஸ்ரார்த்த நாளைக் கூறி அவரால் அதை நடத்தித்தரமுடியுமா என்று கேட்கிறார். அந்த புரோகிதரும் "பேஷா நடத்தி தருகிறேன் ஆனால் ஒரு கண்டிஷன்" என்று கூறுகிறார்.
என்னவென்று இவர் வினவ அதற்கு அந்த புரோகிதர் "அன்று சரியாக 11 மணிக்கு நான் உங்கள் வீட்டை விட்டு கிளம்பவேண்டும் அதற்கு தகுந்தாற்போல் உங்களால் தயாராக இருக்கமுடியுமா" என்று கேட்க இவரும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
ஸ்ரார்த்த நாளன்று நேரத்தில் வந்த அந்த புரோகிதர் ஸ்ரார்த்த காரியங்களை சிறப்பாக நடத்திக்கொடுத்து சரியாக 11 மணிக்கு அவர் வீட்டைவிட்டு கிளம்பவும் வீட்டின்முன் அந்த காலத்தில் பிரபுக்கள் பயணம் செய்யும் குதிரை பூட்டிய கோச் வண்டி வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது. அந்த வண்டியில் ஏறி புரோகிதர் சிட்டாக பறந்து விடுகிறார்.
க்ருஹஸ்தருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும். "யார் இவர்? மிகவும் முக்கியஸ்தவராக இருப்பார் போலிருக்கிறதே. அவரை புரோகிதராக கூப்பிட்டு தவறிழைத்து விட்டோமோ?" என்று பயம் அதிகரிக்க அவரைப்பற்றி விசாரித்ததில் தெரிந்து கொள்கிறார் புரோஹிதராக வந்தவர் பிரபல வக்கீல் திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்று.
அந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கில் பீஸ் வாங்கும் பிரபல வக்கீலாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகவும் எளிமையான தோற்றத்துடன் புரோகிதராக வந்து ஸ்ரார்தத்தை நடத்திக்கொடுத்தவர் திரு. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள்
ஓரு சமயம் ஓருவர் வீட்டிற்கு சிரார்த்தம் சாப்பிட ஓத்துக்கொண்ட ஓரு பிராமணர் வர முடியாத சூழ்நிலையில் அவர் வேறு பிராமணரைத்தேடிக்கொண்டு வரும்போது குளக்கரையில் ஓருவர் ஸந்தியாவந்தனம் செய்வதைப்பார்த்து அவரிடம் போய் நாளை எங்காத்துக்கு வந்து சிரார்த்தம் சாப்பிட முடியுமா என்று கேட்க அவரும் விலாசம் கேட்டு வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
மறுநாள் அவர் வந்தார் சிரார்த்தம் சாப்பிட்டு விட்டு கிளம்பிவிட்டார்
பிறகு தான் தெரிந்தது வந்தவர் பிரபல வக்கீல் மற்றும் நீதிபதிஜட்ஜ் முத்துசாமி ஐயர் என்று.
ஆக எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் மிகவும் எளிமையாக வந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் சிரார்த்தத்தை எந்த அளவுக்கு உயர்ந்ததாக நினைத்திருக்கிறார்கள் பாருங்கள்
இதை தயவுசெய்து அனைவருக்கும் பகிரவும்
மதுரகாளிதாசன்
No comments:
Post a Comment