Wednesday, May 12, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 103 திருகோகுலம் (ஆயர்பாடி).

🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 103 🌹🌹🌹

பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த புண்ணிய பூமியை நாம் இன்று தரிசிக்க இருக்கிறோம்.

அருள்மிகு நவமோகன கிருஷ்ணன் திருக்கோவில் :-

திருகோகுலம் (ஆயர்பாடி).

மூலவர்: நவமோகன கிருஷ்ணன், மனமோகன கிருஷ்ணன்
தாயார்: ருக்மணி, சத்யபாமா
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: ஹேமகூட விமானம்
தீர்த்தம்: யமுனை நதி
மங்களாசாசனம்: பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ ருக்மணீ ஸத்யபாமா நாயிகா ஸமேத ஸ்ரீ நவமோகனக்ருஷ்ணாய நமஹ
ஊர்: கோகுலம்

🌺🌺 தலவரலாறு:-

மண்ணுயிரைக் காக்கும் மாயவன், பரந்தாமன், புருஷோத்தமன், ஸ்ரீமந்நாராயணன், பகவான் கிருஷ்ணன் யசோதா அன்னையின் அரவணைப்பில் வளர்ந்து, லீலைகளும் மகிமைகளும் பலவாக புரிந்த பூமி "கோகுலம்". இதற்கு அக்காலத்தில் "ஆயர்பாடி" என்பது பெயர்.

ஆயர்கள் அதிகமாக வாழ்ந்த காரணத்தால் இவ்விடம் "ஆயர்பாடி" என்றாதாகக் கூறப்படுகிறது. இவ்விடத்தின் வரலாறானது அனைவரும் அறிந்த ஒன்றே.

கிருஷ்ண அவதாரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது இந்த ஆயர்பாடியினைப் பற்றி. "சீர் மல்கும் ஆயர்பாடி" என்று ஆண்டாள் நாச்சியார் அனுபவித்து பாடியுள்ளார்.

பகவான் கண்ணன் பிள்ளைப்பருவ லீலைகள் அனைத்தும் நிகழ்த்தியது இத்தலத்தில் தான் என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

🌷 வெண்ணெய் திருடியது.

🌷 உரலில் கட்டுண்டது.

🌷 பூதனையை மாய்த்தது.

🌷 சகடாசூரனை வதைத்தது

🌷 திருநாவத்தனை வதைத்தது.

ஆகிய அனைத்து லீலைகளும் நிகழ்ந்தது ஆயர்பாடியில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்வார்களால் பாடல்பெற்ற "கோகுலம் திருத்தலம்" கால சூழ்நிலையால் அழிந்து போனதாகவும், தற்போது உள்ள இத்திருக்கோவில் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இத்திருக்கோவில் வாசலிலேயே புனிதமான "யமுனை நதி" ஓடுகிறது.

🌺🌺 சிறப்புகள் :-

யமுனையாற்றின் கரையில் அமைந்துள்ள திவ்யதேசம்.

ஆயர்பாடி கண்ணன் லீலைகள் செய்த திருத்தலம்.

திருமகள் பிராட்டி ஸ்ரீதேவி நாச்சியார் என்ற திருநாமத்தில் அருளும் திவ்யதேசம்.

🌺🌺 மங்களாசாசனம் :-

இத்திருக்கோவிலில் பெரியாழ்வார் 10 பாசுரங்கள், ஆண்டாள் - 5 பாசுரங்கள், திருமங்கையாழ்வார் - 7 பாசுரங்கள் என மொத்தம் 22 பாசுரங்களால் மங்களாசாசனம் பாடியருளியுள்ளார்கள்.

🌺🌺 வழித்தடம் :-

டில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் இரயில் பாதையில், சுமார் 120 கி.மீ தொலைவில் மதுரா இரயில் நிலையம் அமைந்துள்ளது.

மதுராவிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. யமுனை ஆற்றைக் கடந்து தான் இத்திருக்கோவிலுக்குச் செல்ல முடியும். மதுராவிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

அருள்மிகு மனமோகன கிருஷ்ணன் திருவடிகளே சரணம்.
அருள்மிகு ஸ்ரீதேவி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-

அருள்மிகு கல்யாண நாராயணர் திருக்கோவில் - திருத்துவாரகை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment