ஓம் நமோ நாராயணா. கோவிந்தா கோவிந்தா கோவிந்தா, திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் 58வது திருத்தலம்.திருநின்றவூரில் அமைந்துள்ளது. சமுத்திர ராஜனுடன் கோபித்துக்கொண்ட திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் ’திருநின்றவூர்’ எனப் பெயர் பெற்றது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருத்தலம்.
அமைவிடம்ஊர்:திருநின்றவூர்மாவட்டம்:திருவள்ளூர்மாநிலம்:தமிழ்நாடுநாடு:இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்:பக்தவத்சல பெருமாள். பத்தராவிப்பெருமாள்தாயார்:என்னைப் பெற்ற தாயார் (தெலுங்கில் நன்னு கன்ன தல்லி)தீர்த்தம்:வருண புஷ்கரணிமங்களாசாசனம்பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்மங்களாசாசனம் செய்தவர்கள்: திருமங்கையாழ்வார்கட்டிடக்கலையும் பண்பாடும்விமானம்:உத்பல விமானம்கல்வெட்டுகள்:உண்டு
சமுத்திர ராஜனுடன் கோபம் கொண்ட திருமகள் தாயார் வந்து நின்ற இத்தலத்தில், சமுத்திர ராஜன் வந்து தாயாரை திரும்பி வர வேண்டியபோது, ’என்னைப் பெற்ற தாயே’ என்று பலவாறு சமாதானம் செய்ய முயன்றார். இக்காரணத்தால் தாயார் திருநாமம் ’என்னைப் பெற்ற தாயார்’ என்றானது. எவ்வாறு வேண்டியும் தாயார் சமாதானம் அடையாததால், சமுத்திர ராஜன் மீண்டு சென்று பெருமாளிடம் உதவி வேண்ட, அவரும் பக்தனுக்காக இங்கு வந்து திருமகளிடம் சமாதானம் கூறி வைகுந்தம் வர சம்மதிக்க வைத்த திருத்தலம்.
இக்கோயிலில் உள்ள மூலவர் பக்தவத்சல பெருமாள் (பத்தராவிப்பெருமாள்) ஆவார். தாயார், பெருமாள் சன்னதிகளுடன் ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்ஸேனர் (சேனை முதல்வன்), பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்குத் தனித்தனியாகச் சன்னதிகள் அமைந்துள்ளன.
மங்களாசாசனம் பெற்றது.திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தைப் பாடாது சென்று விடவே, தாயார் பெருமாளைப் பாடல் பெற்று வர அனுப்பி வைத்தார். பக்தவத்சல பெருமாள் வருவதற்குள் திருமங்கையாழ்வார் திருவிடந்தை திருத்தலத்தையும் தாண்டி, திருக்கடல்மல்லையும் (மாமல்லபுரம்) வந்துவிட்டார். அங்கே திருநின்றவூர் பெருமாளுக்காக ஒரு பாடல் பாட, பாடலுடன் திரும்பி வந்த பக்தவத்சல பெருமாள் ஒரு பாடல் மட்டும் பெற்றுவந்தது கண்ட தாயார், மற்ற திருத்தலங்களுக்கு அதிகம் பாடல் இருக்க நமக்கு ஒன்றுதானா என்று திரும்பவும் அனுப்ப, அதற்குள் திருக்கண்ணமங்கை வந்து விட்ட திருமங்கையாழ்வார் திருநின்றவூர் பெருமாள் (பக்தவத்சல பெருமாள்) திரும்பவும் வந்ததை ஓரக்கண்ணில் கண்டு அவரையும் மங்களாசாசனம் செய்தார்.
ஓம் நமோ நாராயணா.
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ,
பெருமாள் அடியவன்
ஓம் நமோ நாராயணாய🙏
ஓம் நமோ நாராயணாய🙏
ஓம் நமோ நாராயணாய🙏
No comments:
Post a Comment