🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 104 🌹🌹🌹
அருள்மிகு கல்யாண நாராயணர் திருக்கோவில்:-
திருத்துவாரகை.
தாயார்: கல்யாண நாச்சியார், ருக்மணி
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: ஹேமகூட விமானம்
தீர்த்தம்: கோமதி ஆறு, சமுத்ர சங்கமம்
மங்களாசாசனம்: பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ கல்யாண நாச்சியார் ஸமேத ஸ்ரீ கல்யாணநாராயணாய நமஹ
ஊர்: துவாரகை
🌺🌺 தலவரலாறு:-
மண்ணுலகில் அவதரித்து மாயங்கள் பல செய்த மாலவனாம் இறைவன் நாராயணன் அரசாட்சி புரிந்த அற்புத பூமி "துவாரகை". ஜராசந்தன் என்பவனால் உருவாக்கப்பட்டதே "துவாரகை" ஆகும்.
இவ்வூர் உருவானதற்கான வரலாறு மகாபாரதத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மகத நாட்டை ஆண்ட "பிருகத்ரதன்" என்பவன் பிள்ளைப்பேறு வேண்டி கௌசிக முனிவரை நாடினான். அவர் தனது தவத்தின் வலிமையினால் "மாங்கனி" ஒன்றை உருவாக்கி பிரகத்ரதனுக்குக் கொடுத்தார்.
அதை பிரகத்ரதன் தனது இரு மனைவிகளுக்கும் இரண்டாகப் பங்கிட்டு கொடுத்தான். இதன் காரணமாக இதன் காரணமாக இரு மனைவியர்களுக்கும் பாதி பாதி உருவத்தில் குழந்தை பிறந்தது.
இதனால் மனம் வருந்திய அரசன் வனத்தில் எடுத்துச் சென்று இரு பாதி உடல்களையும் வீசி எறிந்துவிட்டு வந்தான். அந்த வழியில் வந்த "ஜரா" என்ற ஒரு அரக்கி அவ்வுடலை ஒன்றாக இணைத்த போது, இரண்டு உடலும் இணைந்து ஒன்றானது.
இரண்டு உடல்களையும் சேர்த்து இணைத்த பிள்ளையை அரசனிடம் ஒப்படைத்தாள். ஜராவால் தனக்கு சந்ததி வந்ததால் "ஜராசந்தன்" என்ற பெயர் பெற்றான்.
அவனும் அசுரத்தன்மையுடன் விளங்கியதால் பின்னாளில் "பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன்" இரு கூறுகளாக ஜராசந்திரனை பிளந்து அவனை அழித்தான். பின்னாளில் துவாரகையில் பகவான் கிருஷ்ணர் அரசாட்சி செய்தார்.
புராணத்தில் குறிப்பிடப்படும் துவாரகைத் திருத்தலம் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அத்திருக்கோவில் காலத்தால் அழிந்து போனது. தற்போது உள்ள தலமே 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகக் கருதுகின்றனர்.
இருப்பினும் தற்போது உள்ள இந்த திருத்தலமே ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் ஆகும்.
🌺🌺 சிறப்புகள்:-
கருப்பு நிறம் கொண்ட பகவான் கிருஷ்ணர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. இவ்வூர் ஒரு காலத்தில் "சுதாமபுரி" எனப்பட்டது. இங்கு தான் "சுதாமர்" எனப்படும் குசேலர் பிறந்தார். இங்கு குசேலருக்குத் தனிக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலை "சுதாமர் கோவில்" என்றழைக்கிறார்கள். இந்தத் திருக்கோவில் ஐந்து மாடிகளைக் கொண்டது.
60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. இங்குள்ள சிற்பங்களே சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோவிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. இந்தக் கோவிலைச் சுற்றி இன்னுய் பல சிறிய கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம். துளசிக்குச் சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
மேலும், பகவான் கிருஷ்ணன் ஆட்சி செய்த திருத்தலம்.
கோமுகி நதிக்கரையில் அமைந்துள்ள திவ்யதேசம்.
திருமகள் பிராட்டி "கல்யாண நாச்சியார்" என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
ஐந்து ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்யதேசம்.
🌺🌺 மங்களாசாசனம்:-
திருமழிசை ஆழ்வார் - 1 பாசுரம், நம்மாழ்வார் - 1 பாசுரம், பெரியாழ்வார் - 5 பாசுரம், ஆண்டாள் - 4 பாசுரம், திருமங்கையாழ்வார் - 2 பாசுரம் என மொத்தம் 13 பாசுரங்கள் இத்திருத்தலத்தை பாடியருளியுள்ளார்கள்.
🌺🌺 வழித்தடம் :-
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள திவ்யதேசம். குஜராத்தின் தலைநகரான அகமதாபாத்திலிருந்து ராஜ்கோட், ஜாம்நகர் வழியாக ஒகா செல்லும் இரயில் பாதையில் துவாரகை இரயில் நிலையம் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் கோமுகி கடலோடு கலக்கும் இடத்தில் துவாரகை அமைந்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து துவாரகைக்குப் பேருந்துகள் செல்கின்றன.
அருள்மிகு கல்யாண நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
அருள்மிகு பிரகலாத வரதர் திருக்கோவில் - திருச்சிங்கவேள் குன்றம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!"
No comments:
Post a Comment