🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு-106 (II)🌹🌹🌹
நேற்றைய பதிவில் கோவிந்தா நாமத்தின் பெருமையைப் பார்த்தோம். இன்றைய பதிவில் திருத்தலத்தைப் பற்றி அறிந்திடலாம்.
திருமலை என்கிற "திருவேங்கடம் திவ்யதேசம்", மூன்று திருத்தலங்களைக் கொண்டது. கீழ் திருப்பதியில் கிடந்த கோலத்தில் காட்சி தரும் கோவிந்தராஜர், மலை மீது நின்ற கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீநிவாசர். திருச்சானூர் என்கிற அலர்மேல்மங்காபுரத்தில் குடி கொண்டுள்ள பத்மாவதி என்கிற அலர்மேலுத் தாயார். இம்மூன்று தலங்களையும் சேர்த்து தான் ஒரு திவ்யதேசமாகக் கருதுகிறார்கள்.
🌹🌹 கீழ் திருப்பதி:-
தாயார் : புண்டரீக வல்லி
கோலம் : சயனத் திருக்கோலம்
🌻🌻 திருமலை:-
தாயார்: அலர்மேல் மங்கை
உற்சவர்: மலையப்பசுவாமி,, கல்யாண வேங்கடவர், போக ஸ்ரீநிவாசர், கொலு ஸ்ரீநிவாசர்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: ஆனந்த நிலைய விமானம்
தீர்த்தம்: ஸ்வாமி புஷ்கரணி, சேஷாச்சலச் சுவாமி புஷ்கரணி
மங்களாசாசனம்: மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களும் பாடியுள்ளார்கள்.
நாமாவளி : ஸ்ரீ அலர்மேல்மங்கைத் தாயார் ஸமேத ஸ்ரீ திருவேங்கட ஸ்வாமிநே நமஹ
ஊர் : திருமலை திருப்பதி
🌺🌺 திருச்சானூர்:-
மூலவர் (தாயார்): அலர்மேல் மங்கை, பத்மாவதி
தீர்த்தம்: பத்மசரோவரம்
🌻🌻 திருவேங்கடம்:-
வந்தாரை வாழவைக்கும் வடவேங்கடம், திருமாலே வந்திறங்கிய திருவேங்கடம், ஏழுமலை மீது ஏற்றமாய் வீற்றிருக்கும் திருவேங்கடமுடையான் என்னும் மலையப்ப சுவாமி குடி கொண்டுள்ள அற்புதத் திருத்தலம்.
108 திவ்யதேசங்களில் திருவரங்கம் முதல் திருவேங்கடம் வரை உள்ள 106 மட்டுமே எடுத்த இப்பிறவியில் தரிசிக்க இயன்ற காட்சியாகும்.
மற்ற இரண்டும் முக்திக்குப் பிறகே சேவிக்க இயலும். எண்ணிலடங்கா பெருமைகள் கொண்ட "திருமலை, திருப்பதி, திருச்சானுர்"ஆகிய மூன்றும் உலகப்புகழ் பெற்ற திவ்யதேசமாகும்.
🌹🌹 பூமியில் வைகுண்டர்:-
கிருஷ்ண அவதாரத்தை முடித்து, இறைவன் வைகுண்டத்தில் தங்கியிருந்த சமயத்திலே பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் பல முனிவர்கள் யாகம் செய்ய தொடங்கினர்.
யாகத்தைக் காண வந்த நாரதர், யாகத்தின் பலனை யாருக்குத் தருவது என்று கேட்க அதற்கு முனிவர்கள் சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று தருவதென்று முடிவு செய்தனர்.
அது எவ்வாறு அறிவீர்கள்? என்று நாரதர் பிருகு முனிவரிடம் கேட்ட போது, முனிவர்கள் பிருகு முனிவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்கள். பிருகு முனிவர் மும்மூர்த்திகளில் சாந்தமானவரைத்தேடி புறப்பட்டார்.
சிவபெருமானைச் சந்தித்த போது சிவபெருமான் பார்வதிதேவியுடன் தனித்திருந்ததால் பிருகுவை கண்டு கொள்ளவில்லை. கோபம் கொண்ட பிருகு சிவபெருமானைச் சபித்தார்.
பிரம்மாவைச் சந்திக்க சென்ற போது, பிரம்மாவும் சரஸ்வதியுடன் இருந்தார். பிருகு முனிவரைக் கண்டு கொள்ளவில்லை. பிரம்மாவையும் சபித்தார் பிருகு முனிவர்.
ஸ்ரீமந்நாராயணரைத் தேடி வைகுண்டம் சென்றார். திருமால் கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு முனிவர்.
அப்போது திருமால் கோபம் கொள்ளாமல், உதைத்த பாதத்தை தடவிக் கொடுத்தார். பிருகு முனிவர் திருமாலிடம் விடை பெற்று பூலோகம் வந்தார்.
பொறுமையும் அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகத்தின் பலனைத் தருவதென பிருகு முனிவர் மற்றும் மற்ற முனிவர்கள் முடிவெடுத்தனர்.
திருமகளாம் லட்சுமி பிராட்டி குடி கொண்டுள்ள நெஞ்சத்திலே உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும் படி லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார். லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள்.
திருமாலும் திருமகளைத் தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார்.
🌹🌹 அடிபட்ட பரந்தாமன்:-
பசியால் வாடிய பரந்தாமனுக்கு சிவபெருமான், பிரம்மா உதவி செய்ய மகாலட்சுமியைச் சந்திதத்து, பசுவையும், கன்றையும் மன்னனிடம் விற்றது. பசு பால் சுரந்து பெருமாளின் பசியைத் தீர்த்தது, இடையன் பசுவைக் கோடாரியால் அடிக்க முயன்றது, ஸ்ரீநிவாசன் அதைத் தடுக்க முற்பட்ட போது பெருமாளின் தலையில் அடிபட்டது, காயத்திற்கு மூலிகை தேடிச் செல்லும் போது, வராஹ ஆசிரமத்தைக் கண்டது, வகுளாதேவியைச் சந்தித்தது, ஸ்ரீநிவாசனுக்கு காயம் தீர மருந்திட்டது, அங்கேயே வளர்ப்பு மகனாக வளர்த்தது, வனத்திற்கு ஸ்ரீநிவாசன் வேட்டையாடச் செல்லும் போது "பத்மாவதி" தாயாரைச் சந்தித்தது, பின் அவர்களுக்குத் திருமணம் நடந்தது, பிரம்மன் பிரம்மோற்சவத்தை நடத்தி வைத்தது, பெருமாள் சிலாரூபமாய் இருந்து கலியுகத்தில் நமக்கெல்லாம் அருள் வாரி வழங்குவது வரை "ஸ்ரீ வெங்கடேச மகாத்மியம்" என்றழைக்கப்படும்.
ஸ்ரீ வெங்கடேச மகாத்மியத்தை இந்த லிங்கில் சுட்டி விரிவாக அறிந்து கொள்ளுங்கள்: https://www.facebook.com/media/set/...
🌾🌾 நாளைய பதிவில்:-
நாளைய பதிவு எதைப் பற்றி இருக்கும் என்பதைப் பற்றி 🤔 யோசித்துக் கொண்டிருங்கள். நாளைய பதிவில் உங்களைச் சந்திக்கிறேன்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment