🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 106 🌹🌹🌹
106 வது திவ்யதேசமான "திருமலை திருப்பதி" திவ்யதேசத்தை பற்றி நாம் அறிந்திடும் முன்! அவரது நாமத்தைப் பாராயணம் செய்யலாமா? ஏனெனில், திருமலையில் குடிகொண்டிருக்கும் திருவேங்கமுடையான் நிகழ்த்திய அற்புதங்கள் ஒன்றா இரண்டா!!!
ஏழைகள், பணக்காரர்கள் என்று எந்த பேதமும் இன்றி அவரது சன்னிதிதானத்திற்குள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தரிசனம் பெறுகிறோம் அல்லவா??
முப்பத்து முக்கோடி தேவர்களும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன், பரந்தாமன், புருஷோத்தமன், மாதவன், மதுசூதனன், புண்டரிகாட்சன், பக்தவச்சலா, கோவிந்தா, ரிசிகேசவா "திருமலை திருப்பதி என்றழைக்கப்படும் திருவேங்கடத்தான்" தரிசனம் வேண்டி காத்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் காத்திருந்தும் கிடைக்கப் பெறாத அற்புதமான தரிசனத்தை நமக்காக காட்டி, நம்முடைய பாவத்தை எல்லாம் போக்கி நமக்கு நல்வழி காட்டுகிறார் அல்லவா?!
கலியுகத்திலே நம்முடைய பாவத்தை எல்லாம் போக்கி, நம்மை நல்வழிபடுத்துவதற்காகவே திருமலையில் குடிகொண்டு நமக்கு வேண்டிய செல்வங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் எம்பெருமான் "கோவிந்தன்".
🌻🌻🌻 கோவிந்தா!:-
திருமலையில் எந்த நேரமும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் "கோவிந்தா" என்ற திருநாமத்தின் சிறப்பை இப்போது நாம் அறிந்து கொள்வோமா!!!
திருவேங்கடமுடையானை "கோவிந்தா" என்று அழைத்தால், அவனுக்குப் "பரம சநேதோஷம்". இந்த நாமம் பகவானின் எல்லா அவதாரங்களையும் குறிக்கும்.
கோ என்றால் "உலகம்" விந்தன் என்றால் "காப்பாற்றுபவன்" . கோவிந்தன் என்றால் "உயிர்களை எல்லாம் காப்பாற்றுபவன்" என்பது பொருள்.
கோ என்றால் "நல்ல நயமான வார்த்தை". விந்தன் என்றால் "உரைப்பவன்" . உலகை நல்வழிப்படுத்த ஐந்தாம் வேதமாகிய "பகவத்கீதையை" உலகிற்கு எடுத்துரைத்தவன்.
கோவிந்தா என்ற சொல்லுக்கு "போனது வராது" என்று அர்த்தம். அதாவது, கோவிந்தா என நாமம் சொல்லச் சொல்ல "போன உயிர் திரும்ப வராது" என்று அர்த்தம். அதாவது, மறுபிறவியில்லாத "பரமபதப் பிராப்தி".
கோ என்றால் "பசு". விந்தன் என்றால் "காப்பவன்". பசுக்களுக்குத் தலைவர்.
கோவிந்தா என்று சொல்லச் சொல்ல "பசுதானம்" செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்றும் சொல்வார்கள்.
கோ என்றால் "துதிக்கும் சொற்கள்". தேவர்களால் துதிக்கப்பட்டவர்.
கோ என்றால் "புலன்கள்". புலன்களை அடக்கி ஆள்பவன் கோவிந்தன்.
🌹🌹🌹 திருப்பாவையில் கோவிந்தா:-
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா
இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!!!"
- ஆண்டாள் நாச்சியார்.
ஆண்டாள் கண்ணனின் புகழ்பாடும் திருப்பாவையில் 27, 28, 29 வது பாடல்களில் மூன்று முறை கோவிந்தனை அழைக்கிறாள்.
🌺🌺🌺 அவதாரத்தில் கோவிந்தா:-
காம் என்றால் "சொல்". சொற்களால் (வேதத்தால்) ஆராதிக்கப்பட்டவன் "பரமாத்மா".
1. மத்ஸ்ய அவதாரம் செய்து வேதத்தை மீட்டான். அதனால் மத்ஸ்ய அவதாரத்திற்கு "கோவிந்தா" என்று பெயர்.
2. கோ என்றால் "பர்வதம்". பர்வதத்தை "கூர்ம அவதாரம்" செய்து தாங்கினான். அதனால் "கோவிந்தன்".
3. கோ என்றால் பூமி. பூமியை "வராஹ அவதாரம்" செய்து தூக்கினான். எனவே, வராக அவதாரத்திற்கு "கோவிந்தன்" என்று பெயர்.
4. கோ என்றால் "நல்ல வாக்கு". நரஸிம்மர், ஹிரண்யகசிபுவை அழித்த பிறகும் கோபமாக இருந்த போது, தேவதைகள் அவனை "ஸ்தோத்ரம்" பண்ணுகிறார்கள்.
பரமாத்மா அதை அலட்சியம் செய்யவில்லை. அவர் அருகில் சென்று "கோப சமனம்" பண்ணும்படி மகாலட்சுமியைக் கேட்டுக் கொள்கிறார்கள். "இவர் என் பர்த்தாவே இல்லை" என்று சொல்லி விட்டாள் "மகாலட்சுமி". உடனே, பிரகலாதனை அனுப்பினார்கள்.
தேவதைகள் ஸ்தோத்ரம் பண்ணியும் கோபம் தணியாத பரமாத்மாவை சாமான்யனான என்னால் எப்படிக் கோபம் தணிக்க முடியும்?? என்றானாம் பிரகலாதன். "ஸவபோதமிவ கேஸரீ" என்ற பரமாத்மாவிற்கு, சிம்ஹம் மற்ற பிராணிகளைத் தீவிரமாகப் பார்க்கும்.
ஆனால், தன் குட்டிகளை வாத்ஸல்யத்துடன் பார்க்கும். அப்படி, பகவான் சமஸ்த தேவதைகளின் ஸ்தோத்திரத்திற்கான இலக்கான நரசிம்மருக்கும் "கோவிந்தன்" என்று பெயர்.
5. கோ என்றால் "பூமி". திருவடியால் பூமியை அளந்தார் "பரமாத்மா". எனவே, வாமன அவதாரத்திற்கும் "கோவிந்தன்" என்று பெயர்.
6. தன் திருவடிகளால் பூமியில் சஞ்சாரம் பண்ணினான் பரசுராமன். அவனுக்கும் "கோவிந்தன்" என்று பெயர்.
7. கோ என்றால் "அஸ்த்ர சாஸ்திரங்கள்" என்று பொருள். விசுவாமித்திரர் அஸ்திரங்களை எல்லாம் "ராமார்ப்பணம்" செய்தார். விஸ்வாமித்திரரிடம் இருந்து எல்லா அஸ்திர சாஸ்திரங்களையும் ராமன் அடைந்ததால், ராமனுக்கும் "கோவிந்தன்" என்பது பெயர்.
8. பூமியைக் கலப்பையால் உழுததால், பலராமனுக்கும் "கோவிந்தன்" என்பது பெயர்.
9. கோ என்றால் பசு. பசுக்களை மேய்த்தவன் "கிருஷ்ணன்". எனவே, அவனுக்கும் "கோவிந்தன்" என்று பெயர்.
10. கோ என்றால் வஜ்ராயுதம். இந்திரனுக்கு வஜ்ராயுதத்தைப் பெற்றுத் தந்ததால் பகவானுக்குக் "கோவிந்தன்" என்று திருநாமம்.
🌻🌻🌻 மகாபாரத சம்பவம்:-
மகாபாரதத்தில் திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றியவன் இந்த "கோவிந்தன்". அன்று கௌரவர் சபையில் எவராலும் வெல்ல முடியாத பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், விதுரர் போன்ற பெரியோர்கள் இருந்தார்கள்.
பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்ற போது, துரியோதனின் ஆணைக்கிணங்க துச்சாதனன் சபையில் இருந்த அத்துணை பெரியோர்கள் அனைவரின் முன்னும் திரௌபதியின் வஸ்திரத்தை இழுத்து மானபங்கப்படுத்த முயற்சித்த போது, திரௌபதி எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருகரம் தூக்கி "கோவிந்தா! கோவிந்தா!! என்னைக் காப்பாற்று!!!" என்று கோவிந்த நாமத்தை உச்சரித்தாள். கோவிந்தா என்றழைத்தவுடன் அவளது மானத்தைக் காப்பாற்றியது எம்பெருமானின் திருநாமம் தான்.
கோவிந்தா என்ற நாமத்திற்கே இவ்வளவு பெருமை இருக்கிறது என்றால், எம்பெருமானின் திருஉருவத்தைப் பற்றியும், அவனின் மகிமைகள் பற்றியும் நாம் என்ன வென்று சொல்ல முடியும்.
அவரின் மகிமைகளையும், வரலாறுகளையும், தெரிந்து கொள்வதற்கு முன், அவரது நாமங்களை நாம் தெரிந்து கொண்டு, நாமங்களால் அவரைத் துதித்து, அவரின் திருத்தல மகிமைகளைத் தெரிந்து கொள்வோம்.
🌻🌻🌻 ஸ்ரீநிவாச நாமம்:-
ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மலா கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷ கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தனா கோவிந்தா
நந்த நந்தனா கோவிந்தா
நவநீதசோர கோவிந்தா
பசு பாலக ஸ்ரீ கோவிந்தா
பாப விமோசன கோவிந்தா
துஷ்ட சம்ஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
வஜ்ர மகுடதர கோவிந்தா
வராக மூர்த்திவி கோவிந்தா
கோபி ஜனலோல கோவிந்தா
கோவர்த்தனோத்தார கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்தன கோவிந்தா
பட்சி வாகன கோவிந்தா
பாண்டவ ப்ரியா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
மத்ஸ்ய கூர்மா கோவிந்தா
மதுசூதனஹரி கோவிந்தா
வராக நரசிம்ம கோவிந்தா
வாமன ப்ருகுராம கோவிந்தா
பலராமாநுஜ கோவிந்தா
பௌத்த கல்கிதர கோவிந்தா
வேணுகான ப்ரிய கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
சீதா நாயக கோவிந்தா
ச்ரித பரிபாலக கோவிந்தா
தரித்ர ஜனபோஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா
அனாத ரட்சக கோவிந்தா
ஆபத் பாந்தவ கோவிந்தா
சரணாகத வதஸ்த கோவிந்தா
கருணா சாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
கமல தளாக்க்ஷ கோவிந்தா
காமித பலதா கோவிந்தா
பாப விநாசக கோவிந்தா
பாஹி முராரே கோவிந்தா
ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்சாங்கித கோவிந்தா
தரணீ நாயக கோவிந்தா
தினகர தேஜா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
பத்மாவதி ப்ரிய கோவிந்தா
ப்ரசன்னமர்த்தி கோவிந்தா
அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா
மர்த்யாவதாரா கோவிந்தா
சங்கு சக்கரதர கோவிந்தா
சார்ங்க கதாதர கோவிந்தா
விரஜா தீரஸ்ய கோவிந்தா
விரோதி மர்தன கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
சாளகிராமதர கோவிந்தா
சகஸ்ரநாமா கோவிந்தா
லக்ஷ்மீ வல்லப கோவிந்தா
லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா
கஸ்தூரி திலக கோவிந்தா
காஞ்சனாம்பரதர கோவிந்தா
கருடவாகன கோவிந்தா
கஜராஜ ரக்ஷக கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
வானர சேவித கோவிந்தா
வாரதி பந்தன கோவிந்தா
ஏழுமலைவாசா கோவிந்தா
ஏக ஸ்வரூபா கோவிந்தா
ஸ்ரீ ராமகிருஷ்ண கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
பிரத்யக்ஷ தேவா கோவிந்தா
பரமதயாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
வஜ்ரகவசதர கோவிந்தா
வைஜயந்தி மாலா கோவிந்தா
வட்டிகாசுப்ரிய கோவிந்தா
வசுதேவ தனயா கோவிந்தா
வில்வ பத்ரார்ச்சித கோவிந்தா
பிட்சுக சம்ஸ்துத கோவிந்தா
ஸ்திரீபும் ரூபா கோவிந்தா
சிவகேசவ மூர்த்தி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
பிரம்மாண்ட ரூபா கோவிந்தா
பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா
நீரஜநாப கோவிந்தா
ஹதீராம ப்ரியா கோவிந்தா
ஹரி சர்வோத்தம கோவிந்தா
ஜனார்த்தனமூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷி ரூபா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
அபிஷேகப்ரியா கோவிந்தா
ஆபன் நிவாரண கோவிந்தா
ரத்ன கிரீடா கோவிந்தா
ராமாநுஜநுத கோவிந்தா
சுயம் ப்ரகாச கோவிந்தா
ஆஸ்ரிதபக்ஷ கோவிந்தா
நித்யசுப ப்ரத கோவிந்தா
நிகில லோகேசா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
ஆனந்த ரூபா கோவிந்தா
ஆத்யந்த ரஹித கோவிந்தா
இகபர தாயக கோவிந்தா
இபராஜ ரக்ஷக கோவிந்தா
பரம தயாளோ கோவிந்தா
பத்மநாப ஹரி கோவிந்தா
திருமலவாசா கோவிந்தா
துளசி வனமால கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
சேஷாத்ரி நிலய கோவிந்தா
சேஷ சாயினி கோவிந்தா
ஸ்ரீ ஸ்ரீநிவாச கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா!!!.
கோவிந்தா என்னும் நாமத்தின் பெருமையை நாம் அறிந்து கொள்வதற்கு இப்பதிவு பதியப்பட்டுள்ளது. நாமத்தை நாம் அறிந்து கொண்டால் எம்பெருமானை நாமத்தின் மூலம் எளிதில் அடைந்து விடலாம் அல்லவா?? 😃😃.
🌹🌹 நாளைய பதிவில்:-
இன்றைய பதிவில் திருமலையில் ஒலிக்கும் "கோவிந்தா" நாமத்தின் பெருமையைப் பார்த்தோம். நாளை முதல் திருத்தலத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்
No comments:
Post a Comment