Wednesday, June 3, 2020

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 7

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 7
Sujatha &Venkatesan 6381369319)


இனி அவள் பார்வையில் …

நைனிடால காட்டிட்டேன்னு சொல்லி இன்னிக்கு இங்க தங்கினா டைம்,பணம் வேஸ்ட்னு சொல்லி ராத்ரியோட ராத்ரியா ட்ராவல் பண்ணி நைமி சாரண்யம் போயிடலாம்னு சொல்லி வழக்கப்படி இந்தியா மேப்ப உத்து உத்து பாத்து மறுபடியும் ஹல்த்வானி போனா ட்ரெயினோ பஸ்ஸோ பிடிக்கலாம்னு சொல்றார். 

ஹல்த்வானியில் பசிக்கு எதையோ வாங்கித்தர்றார். வேண்டாமென்று சொல்லி ஆப்பிள் வாங்கிக்கறேன்(பாத்தியா ஹிமாச்சல் ஆப்பிள் ஹிமாச்சலில்னு வசனம் வேற)..
ராத்திரி மணி 11 .00 லக்னோ போக பஸ் தேடிண்டிருக்கார். அதெல்லாம் வராது அந்த ஜீப்ல பரேலி போங்கன்னு யாரோ சொல்ல ஜீப்ல ஏறினா 20 பேரை ஏத்தி நசுக்கி ஆப்பிள்லாம்  ஜூஸ் ஆயிடுத்து...நடு ராத்திரி ஜீப் பரேலில எங்கயோ எறக்கி விட்டது. பஸ்ஸ்டாண்ட் 2 கிமீ ஆம்.

 ஒரு ரிக்‌ஷாக்காரன் 20/- க்கு கொண்டு விடறேங்கறான். அவன்ட்ட தோனோம் ஆத்மி கோ?னு (ரெண்டு பேருக்கா?)னு ஜாக்ரதையா பேரம் பேசி(என்னவர் சமர்த்துதான் போங்கோ)பஸ் ஸ்டாண்ட் போறோம்.  மறுபடியும் பரேலில சீதாபூர் பஸ் பிடிச்சி நல்ல வேளையா சீட் கெடச்சு கற்பனைய ஓட விடறேன். இது வரைக்கும் வடக்கத்தி கோயில் பார்ததில்லை. கோயில் நம்ம ஶ்ரீரங்கம் மாதிரி இருக்குமா?பெருமாள் ரங்கநாதர் மாதிரி படுத்துண்டு இருப்பாறா?ஶ்ரீனிவாசர் மாதிரி நின்னுண்டா?
கண்ண அசறரேன்..

கனாவுல பிரமாண்ட ஶ்ரீரங்கம் கோயில் மாடல் கோயில உள்ள நைமி சாரண்யம் பெருமாள் நின்னுண்டு இருக்கார் ..கூட்டமான கூட்டம் முண்டி தள்றது..நான் முந்தி நீ முந்தின்னு தகராறு….
வாக்கு வாதம் சத்தம் கேட்டு கண் முழிக்கறோம். யாரோ ஒத்தன் எறங்க வேண்டிய எடத்துல எறக்கி விடலயாம். நீ முழிச்சிண்டு நீதானே எறங்கணும் ?பாவம் கண்டக்டர் என்ன செய்வர் னு நெனச்சுக்கறேன்..பககத்துல சீதாபூர் எப்பன்னு கேட்க அங்க தான இவ்வளவு நேரம் நின்னு வாக்குவாதம்கற மாதிரி எதோ சொல்ல அந்த கண்டக்கடர் கடங்காரன் எங்களையும் எறக்காம உட்டுட்டான்னு புரிஞ்சு தமிழும் இந்தியும் கலந்து எதோ கத்தி அவனும் கத்தி எறக்கி விடறான்…

நல்ல வேளை ரொம்ப தூரம் போகல..இன்னொரு ரிக்‌ஷாக்கு தெண்டம் அழுது சீதாபூர் பஸ் ஸ்டாண்ட் போய் சேரறோம்.இவர் பஸ் ஸடாண்ட்ல சுலப் டாய்லட் பாத்துட்டு இங்கயே முடிஞ்சுண்டு நைமி சாரண்யம்  கோமதி நதில தீர்த்தமாடிட்டோம்னா பெருமாள சேவிச்சுட்டு அயோத்தில போய் (215 கிமீ)ஹால்ட்ங்கறார். பின்ன five hotel க்கா அழைச்சிண்டு போவார்.?

4/- ரூபாய்க்கு டீ வாங்கித்தரார்..நைமி சாரண்யம் பஸ் 19/- டிக்கட் அரை மணில போறோம். ஒரு மீன் பாடி வண்டி பையன் கோமதில குளிச்சுட்டு கோயில்ல கொண்டு விட 50 கேழ்க்கறான். 40 க்கு பேரம் பேசி கோமதி ஆத்தங்கரை போறோம். ஃபிஷ் கார்ட்டில் ஏறினது புது அனுபவம் இல்லை. இது எல்லாருக்கும் கெடைக்குமா?வழியெல்லாம் இயற்கைய பார்னு டயலாக் விட்டுண்டு வரார்.  கோமதின்ன ஒடனே கங்கைய கற்பனை பண்ண வேண்டாம். எதோ தண்ணி ஓடிண்டிருக்கு.  

ரெண்டு பேரும் தீர்த்தமாடி முடிச்ச உடனே ஒரு பிராமண தம்பதி தானம் கேக்கறா...தாராளமா பர்ஸைத்தெறந்து 15/- தானம் பண்றார். திரும்ப கோயில் எவ்ளோ தூரம்..கோபுரமே கண்ணுக்குத்தெரியலயே னு கேக்கறேன்.  அட பைத்தியமே இந்த ஷேத்ரத்துல கோவிலே கெடையாது,,,போற வழி காடுதான் பெருமாள்..ங்கறார். ...


மேலும் சொல்றார்….கேளுங்கோ….

இந்த ஊர்  காட்டில் பகவான் இப்பொழுதும் நித்திய சொரூபியாக இருப்பதால் இந்த காட்டையே வணங்கி வருகிறார்கள்.   கோமுகி நதியில் ஸ்நானம் செய்துவிட்டு சக்கர தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற நியதி இருக்கிறது.  இந்த தீர்த்தக்கரையில் சக்கரத்தாழ்வார்;  விநாயகர்,   இராமர்,  லட்சுமணன் சீதை ஆகியோரின் ஆலயங்கள் இருக்கின்றன.

   கோமுகி நதிக்கு  போகும் வழியில்  வியாசகட்டி என்னும் இடம் உண்டு.  இங்கு வேத வியாசருக்கு ஆலயம் இருக்கிறது.  இந்த இடத்தில்தான் வியாச பகவான் சுகப் பிரம்மமும் ப்ரவசனங்கள்  செய்து,  மகாபாரதம் பாகவதம் போன்ற இதிகாச புராணங்கள் இயற்றிய இடம்.

 இந்த ஊரின் இன்னொரு புறத்தில் புராண  மந்திர் என்னும் கோயில் உண்டு.  கிளி முக்குடன் சுகப்பிரம்மம் வெண்கல சிலை இருக்கிறது.  இதற்குப் பக்கத்தில் ஒரு குன்றின் மீது அனுமான் ஸ்ரீ இராம லட்சுமணர்களை தன் இரு தோள்களில் தாங்கி கொண்டு நின்ற திருக்கோலத்தில் தரிசனம் கொடுக்கிறார்.  இந்தக் கோயிலுக்குப் பெயர் அனுமான் கட்டி என்று சொல்லப்படுகிறது.

இப்படி சொல்லிண்டே அஹோபில மடம் சார்பில் கட்டின சன்னதிக்கு கூட்டிண்டு போறார்.  பஸ்ல கண்ட கனா கனாவாவே போனாலும் போற வழில இருக்கற காட்டுல ஒவ்வொரு மரத்திலயும் பெருமாள் 
தெரியறார்…

நைமிசாரணிய  ரயில் நிலையம்  வர்ரது...இங்கேர்ந்து நடைபாதை ஆகவே கோவிலுக்கு போகலாம். .  இங்க வேண்டிய வசதிகளை செய்துதர அகோபில மடம் இருக்கிறது.  மூலவர் தேவராஜன்,  நின்ற திருக்கோலம்,  தாயார் ஸ்ரீ ஹரி லட்சுமி. (புண்டரீக வல்லி)  தீர்த்தம் சக்கர தீர்த்தம்.  கோமுகி நதி  நேமி திவ்விய விச்ராந்த தீர்த்தங்கள்.  ஸ்தலவிருட்சம் தபோவனம்.  விமானம் ஸ்ரீஹரி விமானம். இங்கேயே பரமபதிச்ச ஒரு 
ஜீயரோட பிருந்தாவனம் சேவிக்கலாம். 

     ……..,,,தொடரும்

No comments:

Post a Comment