Sunday topic..
ரயில் பயணங்களில்...
1989 ஆம் ஆண்டு நிறை மாத கர்ப்பிணியாக கடலூரில் அம்மா வீட்டில் இருந்தேன். சீமந்தம் செய்ய என் மாமியார் வீடான வேலூர் செல்ல வேண்டும்.. fluids அதிகமாக இருந்ததால் எந்த நேரத்திலும் குழந்தை expel ஆகும் என டாக்டர் சொல்லியிருந்தார் .
கடலூரில் இருந்து வேலூருக்கு காரில் அப்பா அம்மாவுடன் கிளம்பினோம்.. ஒன்பது மணி நேரம் எடுத்து கொண்டு அத்தனை மெதுவாக காரை நகர்த்தினார் அப்பா... சீமந்தம் சிறப்பாக முடிந்தது...திரும்பி வரும்போது அப்பா ரிஸ்க் எடுக்க விரும்பாததால் அம்மாவையும் என்னையும் காட்பாடியில் இருந்து ரயிலில் ஏற்றி விட்டு அப்பா காரில் பயணமானார்.. பூ தைத்த சீமந்த ஜடையுடனும் கை நிறைய கண்ணாடி வளையல்களுடனும் ரயிலில் ஏறியதும் அந்த பெட்டியில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து என்னிடம்" நன்றாக கால் நீட்டி உட்கார் மா" என்று சொல்லி அக்கறையாக கவனித்து கொண்டார்கள்.அம்மா அங்கிருந்த அனைவருக்கும் சீமந்த பலகாரங்கள் கொடுத்தார்.. அம்மாவின் கைகள் என் வயிற்றின் அடியிலேயே இருந்தது பயணம் முழுவதும்.ரயிலில் ஒரு சின்ன ஜெர்க் வந்தாலும் அம்மா என் முகத்தை பார்த்து "என்ன செய்யுது" என்று கேட்டுக்கொண்டே வந்தார்கள்..அம்மாவுடன் தனியாக முதல் ரயில்பயணம் அதுவும் நிறைமாதத்தில். பக் பக் பயணம்...
2012 ஆம் ஆண்டு எங்கள் முதல் பெண்ணின் மாமியார் வீட்டில் அவள் சீமந்தம். என் உடல் நிலையை போலவே அவளுக்கும்..சீமந்தம் முடித்து நானும் என் சீமந்த புத்திரியான முதல் பெண்ணும் ரயிலில் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு கிளம்பினோம்..என் அம்மாவுக்கு பதில் நான்..என் நிலைமையில் என் பெண்.என் கைகள் என் மகள் வயிற்றின் அடியில்...என் அப்பாவுக்கு பதில் என் கணவர் காரில் பயணம் சென்னை நோக்கி..அதே பக் பக் பயணம்.
முதல் ரயில் பயணத்தில் என் வயிற்றில் இருந்த பெண் அடுத்த ரயில் பயணத்தில் அவள் வயிற்றில் ஒரு குழந்தையுடன்....மறக்க முடியாத பயணங்கள்..
படத்தில் நானும் என் சீமந்த புத்திரியும்...
படித்ததற்கு நன்றி🙏🙏
மணிமொழி ஜெகதீசன் 🙏🙏🙏
No comments:
Post a Comment