சர்க்கரை நோய் குணமாக சில எளிய வைத்திய குறிப்புகள்
பயம் வேண்டாம்
சளி காய்ச்சலை போல சர்க்கரை நோயும் ஒரு சாதாரண நோய் தான்
வெள்ளை கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கும் நித்தியகல்யாணி இலையும் இதனுடைய பூவும் சமமாக கலந்து இதில் ஒரு பங்கும் எடுத்து
இவைகளை இடித்து சலித்து ஒன்றாக கலந்து இந்த பொடியில் மூன்று கிராம் எடுத்து இதை வெந்நீருடன் கலந்து காலை மாலை இரு வேளையும் உணவு உண்பதற்கு முன் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தொடர்ந்து இதை பருகி வர
கொடிய நோய் என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோயானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு மாத காலத்திற்குள் சர்க்கரையின் அளவு நமது உடலில் சமநிலைக்கு வந்துவிடும்
அதிமூத்திரம் அதிதாகம் மற்றும் அதிக பசி இவைகள் குறைந்து உடல் எரிச்சலும் நீங்கும்
சர்க்கரை நோயால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு முழுவதுமாக குணமாகும்
பசியின்றி இருப்பவருக்கு பசியை உண்டாக்கும் சக்தியும் அதிக பசியை குணப்படுத்தும் ஆற்றலும் நித்தியகல்யாணி மூலிகைக்கு இருப்பதால் இந்த மூலிகையை ஏதாவது ஒரு வகையில் உண்டு வருபவருக்கு வயிறு சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும் அஜீரணத்தால் ஏற்படும் அனைத்து நோய்களும் நீங்கும்
அஜீரண நோய் குணப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைக்கு இருப்பதால்அஜீரண கோளாறால் ஏற்படும் சர்க்கரை நோயை இது சர்வ சாதாரணமாக சம நிலைக்கு கொண்டு வந்துவிடும் இதில் சந்தேகம் வேண்டாம்
கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வெள்ளை கரிசலாங்கண்ணிக்கு உண்டு
எனவே கரிசலாங்கண்ணி மூலிகையுடன் நித்திய கல்யாணி மூலிகையை சேர்த்து சாப்பிட்டால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் முழுவதுமாக நீங்கும் சர்க்கரை நோயும் குணமாகும்
முற்றிய சர்க்கரை நோயை முழுமையாக நீக்கும் மூலிகை சூரணம்
தேவையான பொருட்கள்
ஆவாரம் பூ
நெல்லிக்காய்
சிறுகுறிஞ்சான்
மருதம்பட்டை
நாவல் கொட்டை
இவைகளை தனித்தனியாக இடித்து பொடி செய்து சம அளவாக சேர்த்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர அடங்காத சர்க்கரை நோயும் இந்த வைத்திய முறைக்கு அடங்கி விடும்
ஆவாரம் பூவின் பொடியை ஐந்து கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் கலந்து இதை பாதியாக சுண்டக் காய்ச்சி இதில் சீந்தில் தண்டு பொடியை மூன்று கிராம் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் படிப்படியாகக குறையும்
கல்லீரல் பாதிப்பு முழுவதும் நீங்கும் அது மட்டுமல்ல உடலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்க இது உதவும்
சர்க்கரை நோய்க்கு மட்டும் மருந்து அல்ல இது மற்ற எந்த நோயும் உடலில் வராமல் வைத்திருக்க ஒரு எளிய வைத்திய முறை இது
=========================================================================
சர்க்கரை நோய்க்கு சவாலான பச்சிலை வைத்தியம்
ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு காலை மாலை இரு வேளையும் மூன்று கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோயானது கட்டுப்பாட்டில் எப்பொழுதும் இருக்கும்
இரத்தத்தில் உள்ள பித்தம் தணியும் இரத்த சர்க்கரையின் அளவானது கண்டிப்பாக குறைந்துவிடும்
முக்குற்றங்களில் மாறுபாட்டால் பித்தம் அதிகரித்து அதன் விளைவாக ஏற்படும் உடல் உஷ்ணம் மற்றும் பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் சர்க்கரை நோயின் பாதிப்பு இவைகள் மிக எளிதாக சம நிலைக்கு வந்து விடும்
ஆரைக்கீரையை சமைத்து உண்டு வருவதால் மன அழுத்தம் பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும் மேலும் வலிப்பு நோய் வராமல் இது நம்மை பாதுகாக்கும்
ஆரைக்கீரையின் பொடியை பத்து கிராம் எடுத்து கால் லிட்டர் நீரிலிட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி இதனோடு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இதை காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவர அடங்காத சர்க்கரை நோய் அடங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்
மேலும் சர்க்கரை நோயால் வரும் அதிதாகம் பாத எரிச்சல் சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்
கால் லிட்டர் பசும்பாலுடன் இதே அளவு தண்ணீர் சேர்த்து அதை பாதியாக சுண்டக் காய்ச்சி இதில் ஐந்துகிராம் ஆரைக்கீரை பொடியை கலந்து காலை வேளையில் தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகி வர நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் உடலுக்கு புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் ஏற்படும்
ஆரைக்கீரையை பொடியாக செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது ஆரைக்கீரையை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலோ இதனால் உடல் சோர்வு குணமாகும்
மேலும் கை கால் நடுக்கம் மற்றும் கைகால் எரிச்சல் இவை அனைத்தும் நீங்கும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பிரச்சனை வெகு எளிதாக தீரும்
மலச்சிக்கல் விலகும் வயிற்றில் உள்ள பூச்சி மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும்
கண் பார்வை நரம்புகள் பலம் பெற்று பார்வைத் திறன் அதிகரிக்கும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் சர்க்கரை நோய் வராமல் இருக்கவும் வந்த சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ஆரைக்கீரை நல்ல அருமருந்தாக அமையும்
No comments:
Post a Comment