. கோவில்கள் வரலாறு
🔥சர்வம் சிவமயம்🔥
அருள்மிகு பேராத்துச்செல்வி திருக்கோயில், வண்ணார்பேட்டை, திருநெல்வேலி
விநாயகர் அருகில் நந்தி. இக்கோயிலில் அம்பாள் 8 கைகளில் ஆயுதங்களுடன், வடக்கு நோக்கி அருளுகிறாள். வரப்பிரசாதியான இவள் சாந்தமானவள் என்பதால், சாந்தசொரூப காளி என்றும் அழைக்கிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள சன்னதியில் இரட்டை விநாயகர் இருக்கின்றனர். இவருக்கு இடது புறத்தில் இரண்டு நந்தியும் இருக்கிறது. இந்த நந்திகள் சிவஅம்சமாக இங்கு இருப்பதாக சொல்கிறார்கள்.
தீர்த்த சிறப்பு :
காசியை ஆட்சி செய்த மன்னன் ஒருவன், இந்த தீர்த்தத்தில் நீராடி, குஷ்டநோய் நீங்கப்பெற்றான். எனவே இத்தீர்த்தத்திற்கு, குட்டகுறை தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இவ்விடத்தில் தாமிரபரணி நதிக்கு, உத்திரவாகினி என்று பெயர். பொதுவாக வடக்கு நோக்கி செல்லும் நதிகள் புண்ணியமானதாக கருதப்படும். இவ்விடத்தில் இந்நதி வடக்கு நோக்கியே செல்கிறது. எனவே, இங்கு தீர்த்தநீராடி அம்பாளை வழிபடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது.
🔥🔥🔥🔥🔥🔥🕉️🙏
அருள்மிகு பேராத்துச்செல்வி திருக்கோயில்
திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து புது பேருந்து நிலையம் செல்லும் வழியில் வண்ணார்பேட்டையில் இறங்கி கோயிலுக்கு செல்ல வேண்டும்.
🔥🔥🔥🔥🔥🔥🕉️🙏
No comments:
Post a Comment