Wednesday, June 3, 2020

காலாராம் மந்திர், பஞ்சவடி, நாசிக்.

*ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ... 🙏🙏🙏
      
           தஸாவதாரம் 

          ஸ்ரீராமவதாரம் 

 பகுதி 13 

 காலாராம் மந்திர், பஞ்சவடி, நாசிக்.      

வால்மீகி இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பகவான் இராமசந்திரரின் காலக்கட்டத்தில் நாசிக் பகுதியானது மிகவும் அமைதியாகவும் அற்புதமான வனத்தைக் கொண்டதாகவும் இருந்தது, இங்கு வசித்தவர்களின் அனைத்து தேவைகளையும் அந்த வனம் முற்றிலுமாக பூர்த்தி செய்தது. பகவான் இராமர் அயோத்தியாவிலிருந்து வெளியேறி வனவாசத்தில் இருந்தபோது சீதையுடனும் லக்ஷ்மணருடனும் இங்கே வசித்தார். இன்று நாசிக் நகரமானது பல்வேறு யாத்திரிகர்களுடனும் பல்வேறு கோயில்களுடனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக திகழ்கிறது.

நாசிக் என்னும் பெயரானது நாஸிக என்னும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது, நாஸிக என்றால் “மூக்கு” என்று பொருள். இங்குதான் லக்ஷ்மணர் இராவணனின் தங்கையான சூர்பனகையின் மூக்கை அறுத்தார்.

பகவான் இராமர் இங்கு வருவதற்கு முன்பாக பகவான் கபிலர் தவங்களை நிறைவேற்றிய தபோவனம் என்று அழைக்கப்படும் இடம். இங்கே சீதை, இராமர் மற்றும் லக்ஷ்மணரின் சிலைகள் பார்வையாக வைக்கப்பட்டுள்ளன. 

இ‌ந்த‌க் கோ‌யி‌லி‌ன் கருவறை‌யி‌ல் ‌ஸ்தா‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ராம‌ர் ‌சிலை முழுவது‌ம் கறு‌ப்பு ‌நிற‌‌க் க‌ல்‌லில் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனாலேயே இ‌ந்த‌க் கோ‌யி‌ல் அனைவராலு‌ம் காலாரா‌ம் ம‌ந்‌தி‌ர் (கறு‌ப்பு ராம‌ரி‌ன் கோ‌‌யி‌ல்) எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.

ராமரை‌‌ப் போலவே ‌சீதை, ல‌‌ட்சுமண‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் ‌சிலைகளு‌ம் கறு‌ப்பு ‌நிற‌க் க‌ல்‌லி‌ல் க‌ண்ணை‌ப் ப‌றி‌க்கு‌ம் அ‌‌ணிகல‌ன்களுட‌ன் ப‌க்த‌ர்களு‌க்கு அருளு‌கி‌ன்றன‌ர். கோ‌யி‌‌ல் வளாக‌த்‌தி‌ற்கு‌‌ள் ‌விநாயக‌ர், அனும‌ன் ஆ‌கியோரு‌க்கு‌ம் த‌‌னி‌த்த‌னி கோ‌யி‌ல்க‌ள் உ‌‌ள்ளன.

1790 ‌க்கு‌ம் மு‌ற்ப‌ட்ட கால‌த்‌தி‌ல் பே‌ஷ்வாவை‌ச் சே‌ர்‌ந்த ச‌ர்தா‌ர் ஒதே‌க்க‌ர் இ‌ந்த‌க் கோ‌‌யிலை‌க் க‌ட்டியதுட‌ன், ராமரு‌க்கு அ‌ர்‌ப்ப‌‌ணி‌த்து‌ள்ளா‌ர். இ‌ந்த‌க் கோ‌யிலை‌க் க‌ட்டுவத‌ற்கு‌‌த் தேவை‌‌ப்ப‌ட்ட கரு‌ங்க‌ற்க‌ள் ரா‌ம்சே‌ஜ் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் இரு‌ந்து கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டு‌ள்ளன. அ‌ந்த‌க் கால‌த்‌தி‌ல் 23 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் செல‌வி‌ல் 2,000 பேருடைய 12 ஆ‌ண்டு கால‌ உழை‌ப்‌பி‌ல் இ‌ந்த‌க் கோ‌யி‌ல் உருவா‌‌கியு‌ள்ளது.

கிழ‌க்கு, மே‌ற்கு, வட‌க்கு, தெ‌ற்கு ஆ‌‌‌கிய 4 ‌திசைகளையு‌ம் நோ‌‌க்‌கிய 4 ‌பிரமா‌ண்டமான வா‌யி‌ல்களை‌க் கொ‌ண்டு‌ள்ள இ‌‌ந்த‌க் கோ‌‌யி‌‌ல் முழுவது‌ம் கரு‌ங்க‌ற்களா‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது. கோ‌யி‌ல் கோபுர‌ம் 32 ட‌ன் த‌ங்க‌த்‌தா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இராம‌ர் கோ‌யி‌லை‌ 96 வலுவான தூ‌ண்களுட‌ன் கூடிய உய‌ர்‌ந்த சு‌ற்று‌ச் சுவ‌ர்க‌ள் பாதுகா‌க்‌கி‌‌ன்றன. ப‌க்த‌ர்க‌ள் உ‌ள்ளே நுழைவத‌ற்கு ‌கிழ‌க்கு‌ப்புற‌த்‌தி‌ல் உ‌ள்ள வா‌யி‌ல் ம‌ட்டுமே பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.

கோ‌யி‌லி‌ன் கோ‌புர‌ம் 70 அடி உயரமு‌ள்ளது. அத‌ன் உ‌ச்‌சி‌ப் பகு‌தி முழுவது‌ம் த‌ங்க‌த்தா‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ன் அரு‌கி‌‌ல் அமை‌ந்து‌‌ள்ள ம‌ற்றொரு கருவறை ‌சீதா க‌ம்பா (குகை) எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது. சீதை வனவாச‌த்‌தி‌ன் போது இ‌ந்த‌க் குகை‌யி‌ல்தா‌ன் த‌ங்‌கினா‌ர் எ‌ன்று ந‌ம்ப‌ப்படு‌கிறது. அத‌ன் அரு‌கி‌ல் ‌மிக‌ப் பெ‌ரிய ஆலமர‌ம் ஒ‌ன்று‌ம் வள‌ர்‌ந்து‌ள்ளது. 

    குஷாவர்த்த குளம், இந்த குளமானது குஷ என்று அழைக்கப்படும் தர்பைப் புல்லினால் சூழப்பட்டிருந்ததால், குஷாவர்த்த என்று பெயரிடப்பட்டது. இன்று இக்குளமானது தூண்களால் நிரம்பிய சில கோயில்களால் சூழப்பட்டுள்ளது. இக்குளமானது கோதாவரி நதியின் ஆதிமூலமாக திகழும் பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பிரம்மகிரி மலையின்மீது, கங்கா தேவியின் கோயில், கௌதம முனிவர் தவம் செய்த குகை, இராம லக்ஷ்மணரின் குண்டம் ஆகியவற்றை யாத்திரிகர்கள் தரிசிக்கின்றனர். பகவான் இராமர் தன்னுடைய தந்தை தசரதரின் மறைவின் காரணமாக, இந்த இராம லக்ஷ்மண குண்டத்தில் சடங்குகள் செய்ததாக நம்பப்படுகிறது.

  இங்குள்ள மக்கள் பகவான் இராமர் செய்ததுபோல தங்களது மூதாதையர் களுக்கு பிண்டங்களை வழங்குகின்றனர். இராம குண்டத்திற்குப் பின்னால் கோதாவரி நதிக்கென்று ஒரு சிறிய கோயில் உள்ளது. இக்கோயில் நாசிக்கில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மாபெரும் திருவிழாவான கும்பமேளாவின்போது மட்டுமே திறக்கப்படுகிறது.

   தபோவனம் என்றால் தவங்களின் வனம் என்று பொருள், இராம குண்டத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தெற்கில் கோதாவரி நதியும் கபில நதியும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. கபில நதி கோதாவரி நதியை சங்கமிக்கும் இடமானது கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது, இங்கு பகவான் கபிலர் பல்வேறு தவங்களை செய்துள்ளார். ஒரு பெரிய அரச மரத்தின் அடியில் பகவான் லக்ஷ்மணரின் விக்ரஹமும் அவருக்கென்று ஒரு சிறிய கோயிலும் கட்டப்பட்டுள்ளது. அதற்கு அருகில் லக்ஷ்மணர் சூர்பனகையின் மூக்கை அறுத்ததை நினைவூட்டக்கூடிய ஒரு சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. சூர்பனகையின் மூக்கை லக்ஷ்மணர் அறுத்தது இவ்விடத்தில்தான் நடைபெற்றது. நாசிக் போன்ற புனித இடத்தில்கூட நமக்கும் பகவானுக்கும் இடையிலுள்ள உறவைப் பற்றிய ஆன்மீக அறிவானது கலி யுகத்தின் தாக்கத்தினால் அழிந்துவிட்டதுபோல் காணப்படுகிறது.

ராமநவ‌‌மி, தசரா, ‌சி‌த்ரா பெள‌ர்ண‌மி ஆ‌கியவை ஆ‌ண்டுதோறு‌ம் இ‌ங்கு ‌சிற‌ப்பா‌க‌க் கொ‌ண்டாட‌ப்படு‌ம் ‌விழா‌க்க‌ள் ஆகு‌ம். அ‌ந்த நேர‌ங்க‌ளி‌ல் ல‌ட்ச‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் இ‌ங்கு ‌திர‌ண்டு வ‌ந்து ராமரை வண‌ங்‌கி அரு‌ள்பெ‌ற்று‌ச் செ‌ல்வ‌ர்.

    நாசிக்கிலிருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திரம்பகேஷ்வரர் கோயிலுக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தினார். அக்கோயிலானது சிவபெருமானிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். த்ரீ என்றால் “மூன்று” என்றும் அம்பக என்றால் “கண்கள்” என்றும் ஈஷ்வரர் என்றால் “கட்டுப்படுத்துபவர்” என்றும் பொருள்படுகிறது. இந்த அற்புதமான கோயிலானது கருப்பு நிற கற்களினால் மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது, இது சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகும். சிவபெருமான் கௌதம முனியின் தவத்தினால் திருப்தியுற்று இங்கு தோன்றினார். (படிக்க: திரம்பகேஷ்வரர் தோன்றிய வரலாறு) இங்குள்ள ஜோதிர் லிங்கத்தின் மிகவும் விசேஷமானத் தன்மை என்னவெனில், இந்த லிங்கம் மூன்று முகங்களைக் கொண்டுள்ளது. ஜெய்ஸ்ரீராம்... ஜெய்ஸ்ரீராம்... ஜெய்ஸ்ரீராம்....

 எ‌ப்படி‌ச் செ‌ல்வது? 

சாலை மா‌ர்‌க்க‌ம்: இ‌ந்த‌க் கோ‌யி‌ல் மு‌ம்பை‌யி‌ல் இரு‌ந்து 170 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌விலு‌ம், புனே‌வி‌ல் இரு‌ந்து 210 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌விலு‌ம் அமை‌ந்து‌ள்ளது.

 இர‌யி‌ல் மா‌ர்‌க்க‌ம்: ம‌த்‌திய இர‌யி‌ல்வே வ‌ழி‌த்தட‌த்‌தி‌ல் நா‌சி‌க் இர‌யி‌ல் ‌நிலைய‌ம் ‌மிக மு‌க்‌கியமான ஒ‌ன்றாகு‌ம்.

‌ விமான மா‌ர்‌க்க‌ம்: நா‌சி‌க்‌கிலேயே ‌விமான ‌நிலைய‌ம் உ‌ள்ளது. மு‌ம்பை‌யி‌ல் இரு‌ந்து‌ம் அடி‌க்கடி ‌விமான‌ம் உ‌ள்ளது.

 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

 வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீராமாவதாரம்   தொடரும் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம் 🙏*

No comments:

Post a Comment