Saturday, July 30, 2022

வாங்கி பாத்

 வாங்கி பாத்

***************

அசத்தலான சுவையில் இருக்கும் வாங்கிபாத் சாதம் ஒரு முறை ருசித்து விட்டால் மீண்டும் மீண்டும் ருசிக்க தோன்றும்

வாங்கிபாத், கத்திரிக்காய் சாதம் கர்நாடகத்தின் பாரம்பரிய உணவாகும்.  கர்நாடகா மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் தமிழ்நாட்டிலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. வாங்கிபாத் கத்தரிக்காய் பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகையாகும். கத்தரிக்காய் சாதம், மசாலாவுடன் ஊற வைத்த அரிசி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து பிரஷர் குக்கரில் தயாரிக்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் நறுக்கிய கத்தரிக்காயுடன் கடைகளில் கிடைக்கும் வாங்கிபாத் மசாலா சேர்த்து வேகவைத்து, வெள்ளை சாதத்துடன் கலந்து எளிமையான முறையில் வாங்கிபாத் செய்யலாம். கத்தரிக்காய் சாதம் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான சாதம் இதனை தயிர் பச்சடி அல்லது உருளைக்கிழங்கு பொடிமாஸ் உடன் பரிமாறலாம். வாருங்கள் இந்த சுவையான வாங்கிபாத் சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – 4, பாசுமதி அரிசி – 1 கப், எண்ணெய் – ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு குத்து, பெரிய வெங்காயம் – 1, வேர்க்கடலை – 2 ஸ்பூன், கொத்தமல்லி விதைகள் – 2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வெள்ளை எள் – 1 ஸ்பூன், துருவிய தேங்காய் – 2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன், கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1ஸ்பூன், எண்ணெய் – 1ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன்.

செய்முறை:

பாசுமதி அரிசியை கழுவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும் . கத்தரிக்காய்களை கழுவி காம்பை நீக்கிவிட்டு ஏழு அல்லது எட்டு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் வேர்க்கடலை, எள் கொத்தமல்லி விதைகள், சீரகம் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.

பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும் இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு கலவையை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வைக்கவும். பிரஷர் குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வதக்கவும்.

நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும், கத்திரிக்காய் மென்மையானதும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கலக்கவும் இப்பொழுது ஊறவைத்து வடிகட்டிய ஒரு கப் அரிசியை சேர்த்து 1.5 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு சத்தம் வைக்கவும்.

நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும், கத்திரிக்காய் மென்மையானதும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கலக்கவும் இப்பொழுது ஊறவைத்து வடிகட்டிய ஒரு கப் அரிசியை சேர்த்து 1.5 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு சத்தம் வைக்கவும். குக்கரில் பிரஷர் வெளியானதும் குக்கரைத் திறந்து சாதத்தை மென்மையாக கிளறி விடவும். சுவையான கத்தரிக்காய் சாதம் தயாராகிவிடும் .

இராமேஸ்வரம்_தீர்த்தங்கள்

 இராமேஸ்வரம்_தீர்த்தங்கள் 🙏 

              இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ளே  22 தீர்த்தங்களும் அவற்றின் 

மகிமைகளும் .......

          இராவணன் பிராமணன் என்பதால் பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் ஸ்ரீராமரை பிடிக்கவே  அவர் #கந்தமாதனபர்வதம் என்ற இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபட நினைத்தார்.  ஆஞ்சநேயர், சிவ லிங்கத்தைக்  கொண்டு வர தாமதம் ஆனதால், சீதை கடற்கரை மணலில் இலிங்கம்  அமைக்க அதை ஸ்ரீராமபிரான் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார்!   என்பது துளசிதாசரின் ராமாயணம் மற்றும்  இராமேஸ்வரம் தல வரலாறு கூறுவதாகும். ஆனால் வால்மீகி ராமாயணத்தில் இராமேஸ்வரம் பற்றி கிடையாது. 

         இராமர்,  ஈஸ்வரனை வழிபட்ட தலம் என்பதால்  'இராமேஸ்வரம்" என்று  கந்தமாதன பர்வதம் அதுமுதல் அழைக்கப்பட்டது.  அந்த  இடமானது  பூர்வத்திலேயே மிகவும் புண்ணியமான தலமாக விளங்கி வந்தது.  இராமேஸ்வரத்தில்  புனிதமான பல தீர்த்தங்கள் உள்ளன. 

       இங்குள்ள   தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் எனப் பக்தர்கள் நம்புகின்றர்.

 இராமேஸ்வர_தீர்த்தங்களும்_அவற்றின்__மகிமைகளும்.

.அக்னி_தீர்த்தம் :

       இது இராமேஸ்வரத்தில்  கோயிலுக்கு வெளியேயுள்ள முக்கிய தீர்த்தமாகும். இராமேஸ்வரத்திலுள்ள கடல் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.  ஏனென்றால் சீதாதேவி தீக்குளித்ததால், அக்னி பகவானையே சீதாதேவியின் கற்பு சுட்டு விட்டதாம்.  எனவே அந்த  வெம்மையைத்  தீர்த்துக்கொள்ள  அக்னி பகவானே  இந்த சமுத்திரத்தில்  சரணடைந்தாராம்.  சீதாதேவி  தீயினுள் புகுந்ததால்,  அக்னி பகவானே அந்த வெம்மையைத்  தாங்காது இந்தச் சமுத்திரத்தில் அடைக்கலமானதால், 

இத் தீர்த்தம் *அக்னி தீர்த்தம்  எனப் படுகிறது.

         சீதாதேவி தீக்குளித்த அந்த அக்னியே சமுத்திரமாக மாறியது என்றும் கூறுவர்.

அதற்கேற்ப இந்தச் சமுத்திரத்தில் அலைகள் பெருமளவில் எழும்பாது;  சாதாரணமான ஒரு நீரோட்டம்  போலவே  மிக அமைதியாக இந்தக்  கடல் இங்கே காணப்படுகிறது.  நெடுந் தொலைவு வரை நாம் அந்த சமுத்திரத்தில் நடந்து சென்றாலும் சமுத்திர நீரானது,  நமது முழங்கால் அளவே உயரம் உள்ளது. 

        இதில் நீராடினால் நமது பாபங்கள் அனைத்தும்  தீர்வதோடு, நாம் வேண்டியதும் நிறைவேறும்;  நோய் நொடிகளும் அகலும்; முக்கியமாக சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்குகின்றன.   இது அனுபவப்பூர்வமான உண்மை.

1. மகாலட்சுமி_தீர்த்தம்

       இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சந்நிதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது.

இதில். நீராடினால் சகல ஐஸ்வர்யமும்  கிடைக்கும்.

2. சாவித்திரி_தீர்த்தம்,

3. காயத்ரி_தீர்த்தம்,

4. சரஸ்வதி_தீர்த்தம்

இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. 

இம்மூன்று தீர்த்ங்களில் நீராடுவதால்   மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

5.  சேது_மாதவ_தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். 

இதில் ஶ்ரீராமபிரானால்  இலட்சுமி தேவியின்  சகல அருளும், சித்தச் சக்தியும் பெறலாம்.

6. நள_தீர்த்தம்,

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சந்நிதிக்குத் தென்புறம் உள்ளது.

இதில் நீராடுவதால் சூரியபகவானின் அருளைப் பெற்று  சொர்க்கலோக பதவி அடைவர்.( சூரிய பகவானாக வருவதும் மகாவிஷ்ணுவே. எனவேதான் சூரியனை சூரியநாராயணர் எனப் போற்றுவர்)

7. நீலன்_தீர்த்தம்,

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சந்நிதிக்கு வடபுறம் உள்ளது. 

இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்

8. கவாய_தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சந்நிதியின் முன்புறம் உள்ளது. 

இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனை வலிமை,  உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

9. கவாட்ச_தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சந்நிதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. 

     இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்லும் கொடுநிலை வராது. மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

(   *நளன், *நீலன், *கயவாகு, *கவாட்சன் ஆகியோர் சுக்ரீவன் அது படையில் மிக முக்கிய தளபதிகள் ராமர் பாலம் கட்டுவதற்கு முக்கியமாக பணியாற்றியவர்கள்.)

10. கந்நமாதன_தீர்த்தம்,

சேது மாதவர் சந்நிதியின் முன்பகுதியில் கவாய, கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. 

இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்மஹத்தி பாப நீங்கும்.

11.  சங்கு தீர்த்தம்,

ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

12. சக்கர_தீர்த்தம்.

ஶ்ரீராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. 

     இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி ஆரோக்கியம் அடைவர்.

13. பிரம்மாத்திர_விமோசன_தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சந்நிதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தி பாப தோஷங்களும், பாபங்களும் நிவர்த்தியாவதடன், 

பில்லி சூனியம்  போன்ற தீவினைகள் இருந்தாலும் நீங்கும்.

14.  சூர்ய_தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது.

இத்தீர்த்தத்தில் நீராடுவதால் முக்கால ஞானம் உண்டாவதுடன்,  நோய்களும்  தீரும்.

15. சந்திர_தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது.

இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

16.  கங்கா_தீர்த்தம்,

 17. யமுனா_தீர்த்தம்,

 18. காயத்ரி_தீர்த்தம்,

இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளன..

      இவைகளில் நீராடுவதனால் பிணி, 

மூப்பு, சாக்காடு(இளமையில் மரணம்) ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

19. சாத்யாம்ருத_தீர்த்தம்,

திருக்கோவில் அம்பாள் சந்நிதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சந்நிதியின் தெற்கு பக்கம் உள்ளது. 

     இதில் நீராடினால் தேவதைகளின் கோபம்,  பிராம்மணசாபம் ஆகியவைகள் இருந்தால்   நீங்குவதுடன், சூரியபகவானின் அருளும், மோட்ச பிராப்தியும்   கிடைக்கும்.

20.  சிவ_தீர்த்தம்,

இந்த தீர்த்தம் சுவாமி சந்நிதி நுழைவாயில் மற்றும் அம்மன் சந்நிதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. 

     இதில்  நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

21. #சர்வ_தீர்த்தம்,

இத் தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாத சுவாமி சந்நிதியின்   முன்புறம்  உள்ளது. 

இதில் நீராடினால் பிறவிக்குருடு, நோய்கள்,  நரை திரை போன்றவைகள்  நீங்கி ஆரோக்கியமடையலாம்.🙏

22 #கோடி_தீர்த்தம்: இத் தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால்  இராமர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. கோடி தீர்த்தத்தில் நீராடியபின்  இராமேஸ்வரத்திலேயே  இரவு தங்கலாகாது என்றொரு சம்பிரதாயம் அங்கே நிலவுகிறது. 🙏

ஆதி நாக சுப்ரமணியா கோயில்

 ஆதி நாக சுப்ரமணியா கோயில் :-

 கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மேரா என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பொள்ளாச்சி வழியாகத் திருச்சூர் சென்றாலும் நெம்மேராவை அடையலாம்.

கோயில் :-

இந்தக் கோயிலின் முதன்மை நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும் கிழக்குத் திசை நோக்கி கருவறை அமைந்துள்ளது. ஆயிரம் தலையும் இரண்டாயிரம் நாக்குகளும் கொண்ட ஆதிசேஷன், இங்கு ஐந்து தலை நாகமாகக் காட்சியளிக்கிறார்.

 சண்முகக் கடவுள் அழகாக சிறிய உருவில் காட்சியளிக்கிறார். கேரளக் கோயில்கள் பலவற்றில் கருவறையில் மின் விளக்குகள் அமைக்கப்படாதது போலவே இக்கோயிலிலும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. குத்து விளக்குகளின் ஒளி மற்றும் நெய் விளக்கு ஒளியிலேயே தரிசனம் நடக்கிறது.

 தினந்தோறும் காலையில் நடைபெறும் பூசையின்போது குமரனுக்கு பால் அபிஷேகம் நடக்கிறது.

சிறப்பு பூசைகள் :-

அதிகாலை ஐந்து மணியிலிருந்து பதினோரு மணிவரையிலும் மாலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டரை மணிவரையிலும் நடை திறந்திருக்கும். நாக தோசம் உள்ளவர்கள் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தால் தோசம் விலகி நன்மை பெறுவார்கள் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள், ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று விரதம் மேற்கொண்டு பால் அபிஷேகம் செய்கின்றனர்.

திருவிழாக்கள் :-

தமிழகத்தில் கந்த சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படுவதுபோல் கார்த்திகை மாதத்தில் வரும் குமார சஷ்டி இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்தான் பார்வதி தேவி விரதமிருந்து முருகனை மீண்டும் மகனாகக் கண்ட நாள். இது மட்டுமின்றி தைப் பூசம், பார்வதி தேவியிடம் ஞானப் பால் அருந்திய விழாவும் சிறப்பான நாட்கள். 🙏 .

குச்சனூர் - சனீஸ்வர பகவான்

 குச்சனூர் - சனீஸ்வர பகவான்.

*************************************

ஆடி சனிக்கிழமை

**********************

தமிழகப் பெருங்கோவில்களில் சனீஸ்வர பகவானை உபசந்நிதியிலேயே காண முடியும். ஆனால், இங்கே அப்படியல்ல! 

சனீஸ்வர பகவான் தலை நாயகனாக மும் மூர்த்தியாக மற்ற தெய்வங்களோடு இணை இல்லாமல் தனிப்பெருந்தெய்வ மாக நின்று விளங்கும் திருத்தலம் ‘குச்சனூர்’ ஆகும்.  

சனீஸ்வர பகவானே இங்கு மூலவர். ‘குச்சனூரான்’ என்ற திருப்பெயரும் பேச்சு வழக்கில் இங்கே வழங்கி வருகின்றது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்ச னூர் எனுமிடத்தில் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.

🌷தலவிருட்சமும் - மூலஸ்தானமும்

மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுயம்பு வாகத் தோன்றியவர். கருநிறமுடன் லிங்க வடிவில் தோற்றம். உடன் உற்சவ மூர்த்தி யும் உள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை உற்ச வர் பவனி வருவார். 

முப்பெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் சேர்ந்து இருப்ப தால் (ஐக்கியமாகி இருப்பதால்) மூலவரு க்கு ஆறு கண்கள் இருக்கின்றன.

அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சன க் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவிலின் வளாகத்தில் வினாயக பெருமான், முருகன் சந்நிதிகள் உள்ளன. உட்புறமாக லாடசந்நியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணை கருப்பனசாமி கோவில் உள்ளது.  

அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோவிலு ம், நாகர் கோவிலும் உள்ளன. மூல             ஸ்தானத்திற்கு பின்புறம் விடத்தலை மரம் உள்ளது. விடத்தலை மரம் ஸ்தல விருட்சமாகும்.

🌷காகத்திற்கு முதல் மரியாதை

நாள்தோறும் முக்கால பூஜைகளும் தவ றாமல் நடைபெறுகிறது. பூஜை முடிந்த பின் தளிகை காகத்திற்கு வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி மீண்டும் பூசாரிகள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு தளிகையை வைப்பர்.  

தளிகையை காகம் உண்டபின்தான் பக்தர் களுக்கு பரிமாறப்படும். இது மிகவும்        சிறப்பானது. தவிர, சனி பகவானுக்கு உகந்தது என எள் பொங்கலும் வைக்கப்படும்.

🌷சனிப்பெயர்ச்சியும் - ஆடித்திருவிழாவும்

சனிப்பெயர்ச்சி தினம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதம் சனிக்கிழமை தோறும் உற்சவகாலம் சிறப்பாகக் கொண் டாடப்படும். மூன்றாம் சனிக்கிழமை மிகவும் பிரசித்தமாகும். 

அன்று கம்பளத்தார் மேல்ப்பூலாநந்தபுரம் ஊரைச் சேர்ந்தவர்கள் ஆட்டம் ஆடி கோவி லில் சிறப்பு பூஜை செய்வார்கள். இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் ஆளுகைக்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

🌷தலவரலாறு

செண்பகநல்லூர் என்ற பகுதியைசேர்ந்த அரசன் தினகரன் குழந்தைப் பேறின்மை யால் அவதிப்பட்டான். குழந்தைக்காக இறைவனிடம் வேண்டிவந்தான். கோயிலி ல் அவனுக்கு அசரீரி ஒன்று கேட்டது. 

அந்த அசரீரியில் அவனது வீட்டிற்குப் பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு அரசனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. 

அசரீரியில் சொன்னபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் அவனிடம் வந்து சேர்ந்தான். அந்த மன்னனும் அந்தச் சிறுவனுக்குச் சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான்.  

அதன் பின்பு, அசரீரியில் சொல்லியபடியே அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அரசனும், அரசியும் அந்தக் குழந்தைக்குச் சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். 

இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரிய வர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். சதாகன் அப்படி இருக்கவில்லை.  

இதனால், அரசன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனையே அரச னாக்குவது என்று முடிவு செய்து அவனுக் கே முடிசூட்டினான். 

🌷அரசனுக்கு சனி

இந்நிலையில் அரசன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. இதனால் தினகரன் பெரும் துன்பத்திற்கு ஆளானான். தந்தை யின் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென் று இரும்பால் சனியின் உருவத்தை                 படை த்து வழிபடத் தொடங்கினான். 

அவனது வழிபாட்டால் மன மிறங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றி, “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்க ளின் முற்பிறவிப் பாவ வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது.  

பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால்       அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. 

இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு, நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும்” என்று கூறினார். 

🌷தந்தையின் தோஷம் ஏற்ற மகன்

சந்திரவதனன் தனது தந்தையின் துன்பத் தைக் குறைக்கும்படி வேண்டினான். சனீ ஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகை காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும்.  

அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக் க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவ தனனும் சம்மதித்தான். 

சனீஸ்வர பகவான் அளித்த துன்பங்களை யெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதன னின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான், இந்த ஏழரை நாழிகைக் கால சனி தோஷம்கூட சந்திரவதனனின் முற் பிறவியின் வினைகளுக்கேற்பதான் வந்த தாகவும் இனி யாருக்கும் எக்குறையும் இருக்காது என்றும் உறுதியளித்தார். 

உடனே சந்திரவதனன் சனீஸ்வர பகவானி டம், சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்க ளை அத்துன் பத்திலிருந்து மீட்க அங்கே யே எழுந்தருள வேண்டினான். சனீஸ்வர னும் அக்கோரிக்கையை ஒப்புக்கொண்டு, அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றினார். 

சந்திரவதனன், சுயம்பு வடிவிலான சனீஸ் வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற் குக் குச்சுப்புல்லால் கூரை அமைத்தான்.  

அதன் பிறகு செண்பகநல்லூர் என்றிருந்த ஊர் குச்சனூர் என்று பெயர் மாற்ற         மடை ந்து விட்டது. அதன் பிறகு, சனி தோஷம் பிடித்துத் துன்பப்படும் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுத் துன்பம் நீங்கிச் செல்கின்றனர்

சங்கடம் தீர்க்கும் சனி பகவான் திருவடி போற்றி போற்றி...🙏🙏🙏

சைதாப்பேட்டை வடகறி

 சைதாப்பேட்டை வடகறி

*****************************

 வடகறி என்றாலே சென்னையில் பிரபலமான ஒரு உணவாகும். இதனை இப்படி செய்தால் என்னும் அசத்தலாக இருக்கும்

வடைகறி சென்னையில் குறிப்பாக சைதாப்பேட்டையில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இது ஹோட்டல்களை காட்டிலும் தெருவோர தள்ளுவண்டி கடைகளில் மிகவும் பிரபலம். வடைகறி இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது கடலைப்பருப்பு மற்றும் இதர மசாலா வகைகளை கொண்டு செய்யப்படுகிறது. சுவையான சைதாப்பேட்டை வடகறியை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1  கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டுப்பல் – 1, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய்  – கால் லிட்டர், சமையல் எண்ணெய் – 2  ஸ்பூன், சோம்பு – 1/2  ஸ்பூன், லவங்கம் – 5, பட்டை – 1 துண்டு, பிரிஞ்சி இலை – 1, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, புதினா –  சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, தக்காளி – 1, மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் –  1 ஸ்பூன், மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா –  1/2 ஸ்பூன், உப்பு –  1/2 ஸ்பூன், தேங்காய் – 3 ஸ்பூன், முந்திரிப் பருப்பு – 3, கசகசா – 1/2 ஸ்பூன்.

செய்முறை:

வடை கறி செய்வதற்கு ஒரு கப் கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் 1 சின்ன வெங்காயம், 1 பல் பூண்டு,  2 காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஊறவைத்து வைத்துள்ள கடலை பருப்பை தண்ணீரை முற்றிலுமாக வடித்து விட்டு சேர்த்துக் கொள்ளவும். அதனை மசால் வடை பதத்திற்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு கொள்ளவும்.

நன்றாக வெந்து ஓரளவு பொன்னிறமாக ஆனதும் எண்ணையை வடித்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 ஸ்பூன் சோம்பு, 5 லவங்கம், 1 துண்டு பட்டை, 1 பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்பின்னர் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கிய பின்னர் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய், சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். அதனுடன் 1 பழுத்த தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2  ஸ்பூன் மல்லித்தூள், மற்றும் 1/2 ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கி கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள வடைகளை சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் துருவிய தேங்காய் 3 முந்திரி பருப்பு மற்றும் 1/2 ஸ்பூன் கசகசா சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் விழுதை கறியுடன் சேர்க்கவும். ஒரு நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை அனைத்து விடவும். சுவையான வடைகறி தயாராகி விடும்.

மொறுமொறு தோசை

 மொறு மொறு தோசை

****************************

உளுந்து வேண்டாம்… ரேஷன் அரிசியில் மொறு மொறு தோசை இப்படி செய்து பாருங்க!

சாதாரண ரேஷன் அரிசியில் மொறுமொறு தோசையா? என்கிற உங்களுக்கு கேள்வி எழலாம். அந்த கேள்விக்கு விடையளிக்கும் விதமாக இந்த ரெசிபியை வழங்கியுள்ளோம்.

தென்னிந்தியாவின் பிரபலமான காலை உணவுகளாக இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை உள்ளன. இட்லி பிரியர்கள் அவை சூடாக இருக்க வேண்டும் என நினைப்பர். அதே வேளையில் தோசை பிரியர்கள் நன்றாக மொறு மொறுவென்று இருக்க வேண்டும் என நினைப்பர். நாம் என்னதான் ஹோட்டலில் சென்று மொறு மொறுவென்று கொடுக்கப்படும் தோசையை சில சட்னிகளுடன் சேர்த்து ருசித்தாலும், அவற்றை நாமே வீட்டில் செய்யும் போது தனி ருசி தான். மேலும் அவற்றோடு வீட்டில் இருக்கும் குழம்பு மற்றும் சட்னி வகைகைகளுடன் சேர்த்து சுவைத்தால் அதன் டேஸ்ட் வேற லெவல் தான்.

இருப்பினும், நம்முடைய வீடுகளில் நாம் சுடும் தோசை சில சமயங்களில் முறுகலாக வராது. அதற்காக நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. மேலும் அப்படியான மொறுமொறு தோசைக்கு அரிசியை மாற்றவும் தேவையில்லை. அதற்கு சாதாரண ரேஷன் அரிசியே போதுமானது. சாதாரண ரேஷன் அரிசியில் மொறுமொறு தோசையா? என்று உங்களுக்கு கேள்வி எழலாம். அந்த கேள்விக்கு விடையளிக்கும் விதமாக இந்த ரெசிபியை வழங்கியுள்ளோம்.

இப்போது, ரேஷன் அரிசியில் மொறுமொறு தோசை எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.

முதலில் ரேஷனில் கிடைக்கும் ரேஷன் அரிசியில் புழுங்கல் அரிசியை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அவற்றில் உள்ள தூசி மற்றும் தும்புகளை சுத்தமாக நீக்கி விட்டு, சிறிதளவு கல் உப்பு சேர்த்து நன்கு அலசிக் கொள்ளவும்.

இதன்பிறகு, அந்த அரிசியை சுமார் 6 மணி நேரத்திற்கு, சுத்தமான தண்ணீர் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.

தொடர்ந்து உளுந்துக்கு பதிலாக ஒரு கப் ரேஷன் அரிசிக்கு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு ஊற வைக்கவும்.

வெந்தயம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும், அதிகம் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை.

6 மணி நேரத்திற்கு பிறகு, தண்ணீருடன் வெந்தயத்தை சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் அதனுடன் முன்பு ஊற வைத்துள்ள அரிசியையும் தண்ணீரை வடிகட்டி விட்டு சேர்த்து அரைக்கவும்.

தேவைப்பட்டால் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம்.

இவை ஓரளவுக்கு தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்த பிறகு, அவற்றை எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

பிறகு இந்த மாவுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து சுமார் 8 மணி நேரம் தனியாக வைத்துவிட வேண்டும்.

இதன்பின்னர் பார்த்தால் மாவு புளித்து நிறம் மாறி இருக்கும். உளுந்து மாவு போல பொங்கி இருக்காது.

பிறகு அந்த மாவை எடுத்து, தோசை கல் சூடானதும் அவற்றில் ஊற்றவும்.

பின்னர் மாவை சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்கு வேக வைத்து எடுத்தால், நீங்கள் எதிர்பார்த்த மொறுமொறு தோசை.

இந்த மொறுமொறு தோசைகளுடன் உங்களுக்கு பிடித்த சட்னிகளுடன் ருசிக்கலாம்.

புதீனா பொடி

 புதீனா பொடி ‌-------------------------                          ‌கம கமன்னு வாசனையா ஆளையே தூக்கும் புதினா கார பொடி எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.

வாசனையோட நாம் அரைக்கக் கூடிய இந்த புதினா பொடியை சுட சுட சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டாலும் நன்றாகத்தான் இருக்கும். இட்லி தோசைக்கு நல்லெண்ணெய் விட்டு தொட்டு சாப்பிட்டாலும் நன்றாக தான் இருக்கும். ஆளையை தூக்கும் அளவிற்கு அசத்தலான வாசனை கொடுக்கும் இந்த புதினா பொடி எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள். ஆனால் இப்படி புதினா பொடியை அரைத்து வெளியில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள முடியாது. இரண்டு நாட்கள் மட்டும் தான் நன்றாக இருக்கும். தேவை என்றால் பிரிட்ஜில் வைத்து ஸாடோர் செய்து கொள்ளலாம். தேவைப்படும்போது அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா அரைச்சுக்கோங்க.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வர மல்லி – 2 டேபிள் ஸ்பூன் போட்டு, அதை மணக்க மணக்க வாசம் வரும் அளவிற்கு வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், சேர்த்து இந்த இரண்டு பொருட்களையும் பொன்னிறமாக வறுத்து இதையும் வறுத்த மல்லியோடு கொட்டி வைத்து விடுங்கள்.

மீண்டும் அதே கடாயில் மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், சேர்த்து வறுத்து இதையும் தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக 10 – வர மிளகாய்களைப் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் ஒரு கைப்பிடி அளவு புதினா தழைகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டால் புதினா சுருங்கி வந்துவிடும். இதை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற பொருட்களோடு சேர்க்க வேண்டாம்.

மிக்ஸி ஜாரில் இப்போது நாம் வறுத்து வைத்திருக்கும் எல்லா பொருட்களையும் போட வேண்டும். வரமல்லி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், மிளகாய், தேவையான அளவு உப்பு போட்டு, இதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக வதக்கி வைத்திருக்கும் புதினா, பூண்டு பல் – 5, இந்த இரண்டு பொருட்களை போட்டு ஒரு ஓட்டு ஓட்டி மிக்ஸியை திறந்தால் மணக்க மணக்க காரசாரமான புதினா பொடி தயார்.

அவ்வளவு தாங்க. இந்த வாசத்திற்கு நம்ம வீட்ல இருக்கிறவங்க எல்லோரும் அடிமையாகி விடுவாங்க. இந்த ஸ்பெஷலான பொடி ரெசிபியை யாருமே மிஸ் பண்ணாதீங்க. ட்ரை பண்ணி பாருங்க.

சுட சுட சாதத்தை வடித்து வைத்துவிட்டு ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வர மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு, போட்டு வறுத்து இந்த பொடியை அந்த எண்ணெயில் போட்டு உடனடியாக வடித்து வைத்த வெள்ளை சாதத்தை போட்டு அப்படியே கலந்து லஞ்ச் பாக்ஸில் கொடுத்து விட்டாலும் அம்புட்டு சுவையாக தான் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

சதுரங்க வல்லபநாதர் கோயில்

 பிரதமர் மோதி கொண்டாடிய செஸ் சாம்பியன்

=====================================

இன்று செஸ் ஒலிப்பியாட் போட்டிகளைத் துவக்கி வைத்த பிரதமர் மோதி தனது உரையில் திருப்பூவனூர் சதுரங்கவல்லப நாதர் திருக்கோயில் பற்றிக் குறிப்பிட்டார். பூவனூர் எங்கே இருக்கிறது? சதுரங்கம் ஆடிய ஈஸ்வரன் யார்? இங்கே பார்ப்போம். 

பார்வதி தேவி வசுசேனன் என்ற மன்னனுக்கு மகளாக இப்புவியில் அவதரித்தார். சகல கலையிலும் பாண்டித்யம் மிக்கவளாகத் திகழ்ந்த அம்பிகை சதுரங்க விளையாட்டில் யாராலும் வெல்லமுடியாதவளாக இருந்தாள். உடனே மன்னன் சதுரங்கப் போட்டியில் வெல்பவனுக்கு தனது மகளை மணமுடித்துத் தருவதாக அறிவித்தான். எவராலும் அம்பிகையை வெல்ல முடியவில்லை.

சிவபெருமான் சித்தர் வேடம் பூண்டு அங்கு வந்தார். அம்பிகையுடன் சதுரங்கம் ஆடி ஜெயித்தார். சித்தருக்கு எப்படி தனது மகளை மணம் முடித்துக் கொடுப்பது என்று மன்னன் சிந்தனையில் ஆழ்ந்த போது சிவபெருமான் தனது சொரூபத்தைக் காட்டியருள, அவருக்கே தனது பெண்ணாகப் பிறந்த அம்பிகையைத் திருக்கல்யாணம் செய்துவைக்கிறான். 

இந்தத் தலம் மன்னார்குடி-நீடாமங்கலம் சாலையில்,  மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. ஹரித்ராநதியில் சைக்கிளில் ஏறி மேலப்பாலம் தாண்டியதும் நாலு மிதியில் பூவனூர் வந்துவிடலாம். இருபுறமும் புளிய மரங்கள் நிழல் தர ரோடோரத்தில் பாமணி சலசலக்க ஓடி வரும். ஆற்றுப் பாலத்தைக் கடந்தால் ராஜகோபுர தரிசனம் கிட்டும். சுற்றிலும் பச்சை வயல்கள் சூழ்ந்த ரம்மியமானப் பிரதேசம்.  இறைவன் சதுரங்கவல்லபநாதர் சுயம்பு மூர்த்தி. மைசூருக்குப் பிறகு இறைவி இங்குதான் சாமூண்டீஸ்வரியாக தனி சன்னிதியில் கோயில் கொண்டிருக்கிறாள். 

எலிக்கடி மற்றும் விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்து புண்ணிய தீர்த்தத்தில் வேர் கட்டி நீராடி நலம் பெறுகிறார்கள். 

“பூவனூர் புகுவார் வினை போகுமே..” என்று அப்பர் பெருமானால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். 

வினை தீர பூவனூர் சென்று சதுரங்கவல்லபநாதர் - சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்து புண்ணியம் அடையலாம். 

படம்: இணையத் தேடலில் கிடைத்தது!

ஐயங்கார் பேக்கரி

 1562

இது ஒரு பகிர்வு. 

ஐயங்கார் பேக்கரி எப்படி உருவானது?

பெங்களூரில் உள்ள பெரும்பாலான ஐயங்கார் பேக்கரிகளில் இதுதான் காட்சி. இந்த பேக்கரிகள் ஒரு சின்னச் சின்ன சங்கிலி மற்றும் கிட்டத்தட்ட பழம்பெரும் பிராண்ட் என்று சொன்னால் அது மிகையாகாது. 

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக காலத்தின் சோதனையாக நின்று, இந்த சிறிய விற்பனை நிலையங்கள் இன்னும் விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தை அனுபவித்து வருகின்றன மற்றும் சமகால உணவு மூட்டுகளுக்கு எதிராக தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. 

பாரம்பரியமான அதே சமயம் மிகச்சிறந்த, இந்த பேக்கரிகள் பெங்களூரின் உணவுக் காட்சி மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

எச்.என்.திருமலாச்சார் என்பவர் 1890ல் ஹாசன் என்ற கர்நாடக ஊரில் இருந்து பெங்களூரு வந்து அவருடைய சகோதரருடன் சேர்ந்து ஒரு டீக்கடை ஆரம்பித்தார்.

அந்தக் கடையில் ஆங்கிலேயர்கள் வந்து தேநீர் அருந்துவது வழக்கம். அந்தக் கடையை தேநீர் ஒரு ஆங்கிலேயருக்கு பிடித்துப் போனது. அவர் தான் 1897ல் இவர்களுக்கு பேக்கரி பற்றி சொல்லித் தர இலண்டன் நகரத்திற்க்கு அழைத்து சென்று இந்த தொழில் பற்றி கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.

1898ம் ஆண்டு இவர்கள் பி. பி பேக்கிரீஸ் (Bangalore Brothers Bakeries) என்று இந்த தொழிலை தொடங்கினர். 

இந்த வெற்றியானது புலம் பெயர்ந்த இயக்கத்திற்கு வித்திட்டது, ஹாசனில் உள்ள ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்த பலர் பெங்களூருக்குச் சென்று, கைவினைக் கற்றுத் தங்கள் சொந்த பேக்கரிகளை நிறுவினர். 

பெங்களூரு காந்தி பஜாரில் 62 வயது பழமையான ஸ்ரீனிவாச பிராமின்ஸ் பேக்கரியை (SBB) நடத்தி வரும் எச்.ஆர்.ராமபிரசாத் கூறுகையில், “நாங்கள் ஹாசனில் உள்ள அஷ்டகிராம கிராமங்களைச் சேர்ந்தவர்கள். 1950 மற்றும் 1960 களில் ஹாசன் மாவட்டத்தை தாக்கிய கடுமையான வறட்சி, விவசாயத்தை தொடர முடியாது என்று கருதி பலர் இடம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் நம்பப்படுகிறது.

 “அரசு வேலைகள் மட்டுப்படுத்தப்பட்டன. அதனால்தான் என் தந்தை இந்தத் துறையில் குடியேறினார், ”என்கிறார் மைசூர் சரஸ்வதிபுரத்தில் உள்ள ஐயங்கார் விபி பேக்கரியைச் சேர்ந்த அருண், 30 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை பேக்கரியைத் தொடங்கினார்.

ஒரு நேரத்தில் இந்த கடையில் பன் விலை ஐந்து ரூபாய். மற்ற இடங்களில் விலை அதிகமான பேக்கரி தயாரிப்புகள் இங்கு மலிவாக கிடைக்க செய்து புகழடைந்தது.

பிறகு இவர்கள் பிள்ளைகள் இந்த பெயரை பெங்களூர் ஐயங்கார் பேக்கரிஸ் என்று மாற்றி வைத்தனார்.

பெங்களூரு பிறப்பிடமாக இருந்தாலும், ஐயங்கார் பேக்கரிகள் மைசூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் புனே ஆகிய தென் நகரங்களில் பரவியுள்ளன. பெங்களூருவில் சுமார் 2,000 பேக்கரிகள் உள்ளன.

ஆனால் அவை அனைத்தும் உண்மையான ஐயங்கார் பேக்கரிகள் அல்ல. ஒரிஜினல் பேக்கரிகளில் பணிபுரிந்து பலர் சமையல் குறிப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்” என்கிறார் ராமபிரசாத். முன்பு ஐயங்கார்களின் நெற்றியில் இட்ட வர்த்தக முத்திரையான நாமம் வித்தியாசமான காரணியாக இருந்தது, ஆனால் இப்போது இளைய ஐயங்கார்கள் விளையாட்டை விரும்புவதில்லை என்றும் அவர் நகைச்சுவையாகச் சேர்க்கிறார்.

120 ஆண்டுகளாக வணிகத்தில் இருப்பதால், ஐயங்கார் பேக்கரிகளின்  தயாரிப்பு எளிமையானது: புதிய மற்றும் உயர்தர தயாரிப்புகள். அவர்களின் பெரும்பாலான தயாரிப்புகள் மதியம் தினசரி அடிப்படையில் தயாரிக்கப்பட்டு அடுத்த நாள் அதே நேரம் வரை விற்கப்படுகின்றன.

நாளைடைவில் இவர்கள் தொழில் முன்னேறி பல கிளைகளாக வளர்ந்தது. இப்போது தமிழ் நாட்டிலும் நிறைய கிளைகள் உள்ளன.(ஆனால் அவைகள் அனைத்தும் ஒரிஜினல் என்று தெரியவில்லை.).

தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 7

 ஆடி அமாவாசை ஸ்பெஷல்

எளிய தர்ப்பண பூஜை முறைகள், பகுதி - 7  

தர்ப்பணம் - விதிமுறைகள். 

1. முதலில் நன்றாக நீராடி, உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் அவரவர் குல வழக்கத்திற்கேற்ப இறைச் சின்னங்களைத் தரித்தபின் கிழக்கு / வடக்கு நோக்கி தர்ப்பைப் பாய் / துணி விரிப்பின்மேல் பத்மாசனமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.

2. வலது கை மோதிர விரலில் தர்ப்பையில் செய்த பவித்திரத்தை கீழே உள்ள பாடலைச் சொல்லி அணிய வேண்டும்.

மந்திரங்கள் ஏற்கும் தந்திரக் கருவே! யந்திரம் பலன் அளிப்பதுபோல் என் மோதிரக் கையினுள் அமர்ந்து மந்திரம் உருச் சக்தி பெற்றிடவே தந்திரமாய் நான் அணிந்து கொண்டேனே!

3. மந்திரங்களைத் தெளிவாக உச்சரித்தபடியே வலதுகை உள்ளங்கையில் எள்ளை வைத்து, மூதாதையரின் பெயர் மற்றும் கோத்திரத்தைக் கூறிய பின்னர் "தர்ப்பயாமி தர்ப்பயாமி தர்ப்பயாமி" என மூன்று முறை நீர் வார்த்து, எள் கலந்த நீரானது வலது கை கட்டை விரல், ஆள்காட்டி விரலுக்கிடையே உள்ள பகுதி வழியே தர்ப்பை நுனிகளில் வந்து விழும்படி கையைச் சற்றே சாய்க்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மூதாதையருக்கும் செய்ய வேண்டும்.

4. மேற்கூறிய முறையில் தர்ப்பணம் அளித்த பின்னர் பவித்திரத்தை மெதுவாகப் பிரித்து அதனுடன் மற்ற தர்ப்பைகள், எள், நீர் போன்றவற்றைக் கீழே சிந்தாமல் கவனமாக ஆற்று நீரிலோ, குளம் அல்லது கிணற்று நீரிலோ சேர்த்து விடவேண்டும். இதனை உடனடியாக நிறைவேற்றும் வாய்ப்பு இல்லாதோர் ஒரு பாத்திரத்தில் கவனமாகச் சேர்த்து வைத்திருந்து பின்னர் கொண்டு போய்ச் சேர்க்கலாம்.

(எள் தானிய மணிகளைக் கீழே மண்தரையில் போட்டு விட்டால் அவை மீண்டும் முளைத்து செடிகளாகி விடும். அதற்கு வாய்ப்பு இல்லாதபடி நீர் அதிகம் உள்ள நதிகள், கிணறுகளில் சேர்ப்பது நல்லது. )

போகர் : 'தர்ப்பணம் இடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் ஏதேனும் உண்டா? குருதேவா!''

ஸ்ரீஅகஸ்தியர் : "நிறையவே உண்டு, எனதருமை போகா! சற்குருவை முறையாக நாடி வேண்டுவோருக்கே அவை அருளப் பெறும். இருப்பினும், அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டிய எளிமையானதோர் மந்திரத்தை அளிக்கின்றேன்.''

எள் கலந்த நீரை தர்ப்பை நுனியில் ஊற்றும் போது ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ரூதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

(அல்லது)

மெய்யில் விளங்கும் சோதி, மெய்யுணர்ந்த மேல் நீத்தார் மனம் குளிர வார்த்த எள்நீர் ஏற்று மனம் குளிர்வீர்! மனம் குளிர்வீர்! மனம் குளிர்வீரே!

(அகஸ்தியர் நீத்தார் சுடன் படலம்]

என்று சொல்லி வலது கையை விரித்துக் கட்டை விரல், ஆள்காட்டி விரல்களுக்கிடையே தீர்த்தத்தை எள்ளுடன் சேர்த்து தர்ப்பை நுனியின்மேல் இட வேண்டும். இது தர்ப்பண மந்திரத்தின் முக்கியப் பகுதி.

போகர் : * 'குருதேவா! தர்ப்பண மந்திரங்கள் தேவமொழியில் (சமஸ்கிருதம்) உள்ளனவே என்று அம்மொழியை அறியாத சிலர் கருதுகின்றனரே!"

ஸ்ரீஅகஸ்தியர்: "அறியாமை காரணமாக மக்கள் மனதில் உண்டாகும் குழப்பமே இது! உண்மையில் மந்திரங்கள் எவையும் எந்த மொழியிலும் உருவாக்கப்படவில்லை. வேதங்கள் அனைத்தும் இறைவனின் படைப்பே! மஹரிஷிகள் தெய்வீக சப்த ஒலி அணுக்களை, சக்தி மிக்க பீஜாட்சரங்களை சங்கேதக் குறியில் வடிவமைத்து மந்திரங்களாகத் தந்துள்ளனர் ."

வேத மந்திரங்கள் இறைவனின் வாக்கு என்பதால் அவற்றை அப்படியே எடுத்துரைத்தால் அதன் சக்தி பல்கிப் பெருகும். எனவே பொருள் புரியாவிட்டாலும் மந்திரங்களை அப்படியே உச்சரித்தால் அதில் பொதிந்துள்ள பீஜாட்சரங்களின் முழு தெய்வீக சக்தியைப் பரிபூரணமாகப் பெறலாம்.

தேவமொழியில் (சமஸ்கிருதத்தில்) அமைந்துள்ள தர்ப்பண மந்திரங்கள் மட்டுமல்லாமல் அனைத்து மந்திரங்களுக்கும் இணையான தமிழ் மறைப் பாடல்கள் (தேவாரம், திருவாசகம் முதலியன) உண்டு. தக்க சற்குருவை நாடுவார்க்கே அவை அருளப் பெறும்.

புலிப்பாணி : 'குருதேவா! இறந்த பெரியோர்களின் பெயர் தெரியாதோர் எவ்வாறு தர்ப்பணம் இடவேண்டும் என்பதை தயை கூர்ந்து விளக்க வேண்டுகிறோம்."

ஸ்ரீஅகஸ்தியர் : ''ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பப் பெரியோர்களிடம் விசாரித்து முதலில் 12 மூதாதையர்களின் பெயரைத் தெரிந்து கொள்வது அவசியம். அவ்வாறு பெயர் தெரியாவிடில் அவர்களின் நினைவு அவசியமாகும். உருவத்தைப் பார்த்திராமல். பெயரும் தெரியாவிடில் முப்பாட்டனார், கொள்ளுப் பாட்டி என உறவையாவது நினைவு கூர்தல் வேண்டும்.'

பித்ரு தர்ப்பணம் என்பது மறையோர் பார்பான்ளுக்கு  இன்றியமையாத ஒன்றாகும். பௌத்ததில் சில பிறிவுகளும் 

பித்ரு தர்ப்பணம் செய்வதை கடை பிடிக்கின்றனர். பித்ரு தர்ப்பணம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்  பற்றிய சில தகவல்கள்

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து தர்ப்பணங்களை எப்போதும் காலை 7 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

எள்ளுடன் தண்ணீரும் கலந்து  தர்ப்பணம் அளிக்கப்பவேண்டும்

பித்ரு காரியத்துக்குள் தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது. தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம்.

நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி, தர்ப்பைப்புல் மூலம்தான் பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம்.

தர்ப்பணங்கள்  எப்போதுமே நதிகளின் கரைகளில் செய்யப்படவேண்டும் .

 நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம், திதியை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களை தரும்.

தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை வழியில் 6 தலைமுறைக்கு முன்பு மறைந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய் வேண்டும்.

 அமாவாசை, சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு மிக அதிக சக்தி உண்டு.

மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள். இதை புரிந்து கொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது நமது பொறுப்பாகும்.

பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது பல யாகங்களுக்கு சமமானது.

 கன்யா ராசியில் சூரியன் இருக்கும்போது செய்யப்படும் சிரார்த்தம் பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும்.

ஒரு ஆண்டில் ஒருவர் 96 தடவை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

                             ★*******★

பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு ஆன்மீக பூர்வமாக விளக்கங்கள் தந்துள்ளேன் என்பது ஒருபுறம் இருந்தாலும் பித்ரு தர்ப்பணம் செய்வதால் நமது பூர்வீக வரலாறு காப்பாற்றபடுகிறது என்பது யதார்த்த உண்மையாகும்.  

ஆதாவது நாம் தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை  குலம் கோத்திரத்தின் பெயரை சொல்லி தர்பனம் செய்வதோடு தாய் மற்றும் தந்தை வழி வழியில் 6 தலைமுறை முன்னோர்களின் பெயர்களை  சொல்லி  தர்பனம் செய்கிறோம். இப்படி நாமும் நமது வாரீசுகளும் தொடர்ந்து செய்வதால் நமது மூதாதையர்களின் பெயர் வரலாறு மறக்கபடாமல் காப்பாற்றபட்டு அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லபடுகிறது. பிதுர் தர்பனம் தொடர்ந்து செய்யடுவதால் எத்தனை நூற்றாண்டுகள்  ஆனாலும் நம் வரலாறு  அழிவதுமில்லை

   மறைந்த முன்னோர்களுக்கு நாம் வருடா வருடம் திதி கொடுப்பது வழக்கம் மேலும் ஆடி அமாவாசை காலங்களில் திதி கொடுப்பது வழக்கம். ஆனால் இறைவனே கருணையோடு இறங்கி வந்து மனிதர்களுக்காக திதி கொடுக்கும் அற்புத தலம் உள்ளது.

அந்த தலத்தில பெற்றோர்களை ் இழந்த மகன்,வாரிசு இல்லாத தம்பதிகள், விபத்து மற்றும் தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் எவர் வந்தாலும் இறைவன் நாராயணனே அவர்கள் சார்பில் திதி கொடுக்கின்றார்.

திதி காரியங்கள்'அபர காரியங்கள்' என்பார்கள்.ஆதாவது சுபமற்ற காரியங்கள்.ஆனால் இந்த கோவிலில் இது'சுப சிராத்தம்' பிற்பகல் 12 மணிமுதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளை பெருமாள் இங்கு செய்கின்றார்.

குழந்தைகளை இழந்த பெற்றோர், தனக்கு பின் வாரிசுகள் இல்லாத தம்பதிகள், இந்த தலத்தில் வந்து திதி கொடுப்பது சிறப்பு.

இந்த தலத்தின் பெயர் நேன்மேலி

இறைவன்  சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள்

இடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு-  திருக்கழுக்குன்றம் சாலையில் அமைந்துள்ளது.

ஓம் நமோ நாராயணாய!                         

தர்ப்பண மகிமை தொடரும்..

ஓம் குருவேசமணம்

புத்தூர் அக்ரஹாரம்.

 புத்தூர் அக்ரஹாரம்...

திருச்சி புத்தூர் ஸ்ரீனிவாசன் எனது தம்பி விஜயராகவனின் பள்ளித்தோழன் (நேஷனல் ஹை ஸ்கூல்).. பாதி நேரம் என் தம்பி அவன்  வீட்டிலோ அல்லது  அவனுடன் பக்கத்தில் இருக்கும் அருணா தியேட்டரில் இருப்பான்.

புத்தூர் போஸ்ட் ஆபிசை ஒட்டி இடதுபுறம் வாழை இலை, வா.தண்டு, கொடிக்கா வெத்திலை விற்பவர்களுக்கு நடுவே  குறுகலான ரோட்டில் நுழைந்தால் சிறிது தூரத்தில் இருபுறம் சுமார் 50 குடித்தனங்களே கொண்ட சின்ன அக்ரஹாரத்தில் 17ஆம் நெம்பர் வீட்டில் ஶ்ரீனிக்கு ஜாகை. எல்லாமே அகண்ட பட்டாசாலை கொண்ட வீடுகள். ஈரமான வாசலை அடுத்து கருங்கல்லால் கட்டப்பட்ட விசாலமான தின்னை, தூண்கள், ரேழி மற்றும் பெரிய கதவுகள் கொண்ட வீடு. கீற்றுப்பந்தல் அல்லது ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி காரை பூசப்பட்டு சீராக வேயப்பட்ட மண் ஓடுகள் கொண்ட கூரைகள். 

70 களில் என நினைக்கிறேன்...  காலை 6 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு போனால் வாசலில் அங்கங்கே ராலே, ஹெல்குலிஸ் சைக்கிள்கள். வேட்டி, கைலி சகிதம் கையில் காகிதங்களுடன் பத்து பதினைந்து பேர் காத்திருப்பர். 

டானென்று மணி 7 அடிக்க, உதவியாளர் வாசலிலிருக்கும் கருப்பு பெஞ்சை துடைத்து வீட்டினுள்ளே பார்வையை செலுத்த...

"கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்

கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்....".    

ஓங்கிய குரலில் பாடியபடி நெற்றியில் பெரிய திருமண்ணுடன் ஶ்ரீனிவாசனின் தாத்தா வெளியே வருவார். கிராம முன்சீப்பு அல்லது கர்ணம் என்று ஞாபகம். அப்போதெல்லாம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) போன்ற பதவிகள் இல்லை.

சிறுகாலைப்பொழுதில் ஸ்நானஞ்செய்து பூசை முடித்து வரும் அவரின் மாலியக் கோலமும், மனத்தைப் புத்துணர்வு ஏற்படுத்திப் பொலிவுறச் செய்து அவர் தினம் பாடும் ஆழ்வார்தம் பாசுரங்களும் கேட்க இனிமை. பாசுரங்களை பாடிப் பரப்பும் பசனைக் குழுக்களிலிலும்  அவர் இருப்பதால் கீர்த்தி பெற்ற குரல் அவருடையது.

உதவியாளர் நம்மை ஒவ்வொருவராக அழைத்து நாம் கேட்கும் ஜாதி சான்றிதழ் மற்றும் முகவரி சான்றிதழ்களை வித்தியாசமான தமிழில்  எழுதுவார். பெருவாரியாக ஹ, ஶ்ரீ,க்ஷ ௺, ௲ போன்ற எழுத்துக்கள்.. 'ஹ'வை சர்ரென இடது பக்கம் இழுப்பார். 'ட'னாவை சர்ரென வலது பக்கம் நீட்டி இழுத்து அதன் முனையில் சுழி போட்டு 'டி' ஆக்குவார். 

மேற்படி சான்றிதழ்களில் ஶ்ரீனியின் தாத்தா நீண்ட தங்க நிப் கொண்ட பேனாவை மைப்புட்டியில் தொட்டு அவரும் சர்ர்ரென ரெண்டிழுப்பு இழுத்து கையொப்பமிடுவார். அதற்கு நாம் கொடுக்கும் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய்க்கு அவரே ரெவன்யூ ஸ்டாம்ப் கொடுத்து விடுவார். எக்ஸ்ட்ரா எதுவும் வெட்டவேண்டியதில்லை. 

கூட்டம் கலைந்ததும் உள்ளே போய் உடை மாற்றிக்கொண்டு குதிரை வண்டி அல்லது கன்றுக்குட்டிக்கு சற்றே மூத்த இளம் மாடு பூட்டிய ரேக்ளா வண்டியில் வெளியே கிளம்பி போய் விடுவார். வண்டி சென்ற சில நிமிடங்கள் கழித்து கூட சாணமும் புல்லும் கலந்த இனிய மணம் காற்றில் வீசும். 

அமைதியான, சாணம் தெளித்து கோலமிட்ட, பனி விழும் மார்கழி மாத காலை வேளை. ரம்மியமான சூழல். மனசே லேசாகுங்க!  ஆனால் தலை நிமிர்ந்து சுவர்களை மட்டும் பார்க்கக்கூடாது. காரணம்.. அந்த தெருவின் இரு புற சுவர்களிலும் எப்போதும் கரிய வண்ணத்தில் கிறுக்கல்கள். 'கடவுள் இல்லை.. இல்லவே இல்லை... கடவுளை நம்புகிறவன் முட்டாள்' போன்ற வாசகங்கள். 

'பக்கத்துல உறையூர் பாண்ட மங்கலத்துக்கு அந்தப்பக்கமிருந்து  இருந்து  7, 8 பேரோட ஒருத்தன் வருவான். எப்ப வருவானுங்கன்னே தெரியாது. ராத்திரி 12 மணிக்கு மேல நாம அசந்து தூங்கரச்சே, இல்லன்னா வெள்ளன 4 மணிக்கு முன்ன  வந்து கண்டத எழுதிட்டு ஒடீடுவானுங்க. நாம போய் தட்டி கேட்டா அடிக்க வருவான். ஆயி அம்மாவ திட்டுவான்'. ஶ்ரீனிவாசன் சலித்துக்கொண்டான்.

'அவனுங்களுக்கு ஒரு நாள் வச்சிருக்கம்!' சொல்லும்போதே ஸ்ரீநிவாசன் முகத்தில் கோபம். அந்த 'ஒரு நாளும்' வந்தது. திடகார்த்தமான அக்ராஹாரத்து இளைஞர்கள் 7, 8 பேர் மொட்டை மாடியில் முதல் நாள் இரவு மறைந்து கொண்டார்கள். சிலர் திண்ணையை ஒட்டியுள்ள சந்தில் ஒளிந்து கொள்ள, எதிர்பார்த்தபடியே அன்று இரவு 2 மணிக்கு அந்த கூட்டம் வந்து  மீண்டும்  சுவர்களில்  எழுத  ஆரம்பித்தார்கள்.  அடுத்த நிமிடம் மாடியில் இருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. கூட்டம் நிலை குலைந்தது. சந்தில்  ஒளிந்திருந்த இளைஞர்கள் வெளியே ஓடி வந்து அவர்களை நையப்புடைத்தார்கள். கல்லடி பட்டு அடி வாங்கிய கூட்டம் அலறிக்கொண்டு ஓடியது. 

அதற்குப்பின் அந்த சுவர்களில் எந்த இழிவு வாசகங்களும் இல்லாமல் வெறும்  'நாமிருவர்.. நமக்கிருவர்' மற்றும் 'அளவான குடும்பம்..வளமான வாழ்வு' மட்டும் தான்.  

'இந்த அக்ரஹாரத்துல  இருக்கறவாள்ளாம் நெறைய நிலம் வச்சிருக்கறவங்க. இந்த எளம் வயசுப்பசங்க வயலு வரப்புல எறங்குனா கிட்டத்தட்ட 12 மணி நேரம் அலுக்காமெ வேல செய்வானுங்க. அடிதடின்னு எறங்குனா ஆளையே அலாக்கா தூக்கி வீசீடுவானுங்க. நாங்க பயந்துக்கிட்டு இருந்ததெல்லாம் அந்தக்காலம்..' சொல்லும்போதே ஸ்ரீனிவாசனின் முகத்தில் பெருமிதம்.   

நேஷனல் கல்லூரியில் தம்பி விஜய ராகவனுடன் B.com முடித்தவுடன் ஸ்ரீனிவாசன் சிறிதுகாலம் வேலை தேடிக்கொண்டிருந்தான். தம்பி MBA முடித்து டாட்டா குழுமத்தில் சில வருடங்கள் இருந்து பின் மஸ்கட்டில் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கிறான். அவ்வப்போது ஸ்ரீனிவாசனைப்பற்றி நிறைய பேசுவோம். வருடமொருமுறை திருச்சி போகும்போது ஸ்ரீனிவாசனை தம்பி பார்க்கத் தவறுவதில்லை. 

2 வருடங்கள் முன்பு நானும் ஸ்ரீனிவாசனை திருச்சியில் பார்த்தேன். எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து கிடைத்த மத்திய அரசுப்பணி.  கண்டோன்மென்ட் அருகில் அகில இந்திய வானொலியில் 25 வருடங்களாக இருக்கிறான். மழிக்கப்படாத 2 நாள் தாடி, சிகப்புக்கரை ஜரிகை வேட்டியுடன் அதே மலர்ந்த முகம். முன் வழுக்கை லேசாக ஆரம்பம். A.I.R  கான்டீன் கூட்டிப்போனான். 

காபியை ஓரம் வைத்துவிட்டு பட்னம் பக்கடாவை புட்டு வாயில் போட்டுக்கொண்டு.. 'மாசம் அம்பத்தஞ்சாயிரம் பக்கம் சம்பளம் வர்றது. வயலூர் போற வழீல சீனிவாசா நகர் தாண்டி இருந்த ஒன்ற க்ரவுண்டு நெலத்தில  பெருசா வீடு கட்டிண்டேன். அல்லித்துரை நெலத்துலர்ந்து அரிசி, பருப்பு, வருஷ சாமான் போக்குவரத்து எல்லாம் வந்துடறது. பொண்ணையும் கட்டிக்குடுத்தாச்சு. நாங்க ரெண்டு பேர் தான். இப்பசத்திக்கி இந்த ஸ்கூட்டில தான் சுத்தறேன்.'  குடுமியை அவிழ்த்து பின் தலையை லேசாக சொறிந்துகொண்டு, கீழ்த்தாடையை முன்னுக்கிழுத்து ஆ(ற்)றிய காப்பியை வாயில் கவிழ்த்தான். 

மத்தியக்கிழக்கு நாட்டில் அல்லாடிக் கொண்டிருக்கும் நமக்கு ஸ்ரீனிவாசனை பார்க்க  கொஞ்சம் பொறாமை தான். நமக்கு மிகவும் வேண்டிய நண்பன் என்பதால் சந்தோசம் கூட. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போகுமுன் ஸ்ரீநிவாசனுக்கு ஒரு போன் செய்து விட்டு போனால் போதும். அவனது சகோதரர் ரமேஷ் குருக்கள் நம்மை பெருமாள் கிட்டக்க தரிசனம் கிடைக்க வைப்பார். சாமிக்கு சார்த்திய பெரிய மாலை மற்றும் பிரசாதம் எல்லாம் கொடுத்து கூட இருந்து வழியனுப்பி வைப்பார்.     

விஷயத்துக்கு வருகிறேன்.. சென்ற வருடம் இறந்து போன என் அப்பாவின் பேரிலிருந்து BSNL டெலிபோன் லைனை அம்மா பேருக்கு மாற்ற முயற்சி செய்தேன். ஹெட் போஸ்டாபிஸ் பின்னால் BSNL  அலுவலகத்தில் பெண் மேலாளர் ஒருவரை பார்த்தேன். கூட என் 81 வயது அம்மா. Legal heir certificate அது இது என்று ஒரு லிஸ்ட்டே கேட்டார். அப்பாவின் death certificate , ரேஷன் கார்டு எல்லாம் காண்பித்தும் அதன் நகல்களை உடனே அட்டெஸ்ட் செய்து கொண்டுவரும்படி சொன்னார். மணி மாலை நாலு அப்போதே. ஆபிஸ் மூடுமுன் உடனே எங்கே அட்டெஸ்ட் செய்வது?

சட்டென ஸ்ரீனிவாசன் நினைவுக்கு வந்தான். அடுத்த 15 நிமிடங்களில் நான் அம்மாவுடன் ஆட்டோவில் கன்டோன்மென்ட் அகில இந்திய வானொலி வளாகம் போய் சேர்ந்தேன். அதே மலர்ந்த முகத்துடன் ஸ்ரீனிவாசன் வரவேற்றான். 'மாடில ஸ்டேஷன் டைரக்டர்ட்ட போலாம். அவர் அட்டஸ்ட் பண்ணிடுவார்' என கூட்டிப்போனான். 

நிலைய இயக்குனர் பனிவான மனிதர்.  எங்களை வரவேற்று இருக்கையில் அமரச்சொல்லி, நாம் கொண்டு வந்த தஸ்தாவேஜுக்களை பார்க்க குனிந்தார். தலை முடியும் மீசையும் கடந்த வாரம் பெற்ற  கருப்பு வர்ணத்தை லேசாக இழக்க ஆரம்பித்திருந்தன.

'சார்... நான் சொன்னேனில்ல.. பஹ்ரைன்.. என் ப்ரெண்டு.. ' என்ற ஸ்ரீனிவாசனை பார்த்து சின்ன புன்முறுவல்.. தொடர்ந்து எல்லா பேப்பர்களிலும் கையொப்பமிட்ட நி.இ. மரியாதையுடன் வணக்கம் செலுத்தி பேனா மூடியை தேட, நாங்கள் எழந்துகொண்டோம். ஸ்ரீநிவாசனுக்கு அங்கே நல்ல மரியாதை என்பது தெரிந்தது. வந்த வேலை சுருக்க முடிந்த திருப்தி எனக்கு. 

மிகவும் நெருங்கிய நண்பர்களுடன் பேசும்போது லேசாக எமோஷனல் ஆகி விடும் நான் அதன் வெளிப்பாடாக அவர்கள் தோளில் கை வைத்தோ, கைகளை பிடித்துக்கொண்டோ பேசுவது வழக்கம். 

 'ரொம்ப சந்தோஷம் ஸ்ரீனி... உங்க வேலை, அலுவலகம், உங்க பாஸ், உள்ளூர் செல்வாக்கு எல்லாம் பார்க்க சந்தோஷமா இருக்கு... இன்னம் அப்பிடியே இருக்கீங்க.. தலைல கூட ஜாஸ்தி நரை இல்ல' என்றேன்.. மிக அடக்கத்துடன் ஸ்ரீனிவாசன் வெட்கம் கலந்து முறுவலித்தான்.

 விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது 'ஞாபகம் இருக்கா.. ஸ்ரீனி.? புத்தூர்ல உங்க அக்ரஹாரம் சுவத்தில கிறுக்கினவங்கள கல்லால் அடிச்சி விரட்டுனது இன்னம் நா மறக்கல..' சத்தமாக சிரித்தபடியே அவன் தோளை தட்டிவிட்டு நடக்க எத்தனித்த என்னை இழுத்து நிறுத்திய ஸ்ரீனிவாசன்....

முகத்துக்கு மிக அருகில் வந்து... 'சத்தம் போட்டு சொல்லாதீங்க ஸ்ரீதர்..கல்லடி வாங்கிட்டு ஒடுனவர்(ன்) தான் அந்த ஸ்டேஷன் டைரக்டர் செங்'கல்'வராயன்..!'   குறும்புடன் கண்ணடித்தபடி நகர்ந்தான் ஶ்ரீனிவாசன். 

கலர் பென்சில் ஓவியத்துடன்..

(சீதாபதி ஶ்ரீதர்)

வாகனப் பாதுகாப்பிற்கு

 வாகனப் பாதுகாப்பிற்குப் பரிகாரம்..!!!

வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுதல்,அதிக மெயின்டனன்ஸ் செலவுகள் ஏற்படுவது,ப்ரேக் டவுன் ஆகுதல் போன்ற துன்பங்கள் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட பரிகாரம் செய்ய நிவர்த்தியாகும்.

1 பாக்கு,1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு,1 ஸ்பூன் கருப்பு எள்,கொஞ்சம் சிகப்பு குங்குமம் இவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு சுத்தமான கறுப்புத்துணியில் வைத்து முடிச்சுப் போட்டு அதை வாகனத்தின் பம்பரில் அல்லது முன்பகுதியில் எங்காவது கட்டி வைத்துவிடவும்.

இதை எந்த நல்ல நாளிலும் செய்யலாம்.

அமாவாசை அன்று செய்வது மிகச்சிறப்பு.

ஏற்கனவே கட்டிவைத்தது கிழிந்தோ,தொலைந்தோ போய்விட்டால் மீண்டும் ஒன்றை மேலே கூறியுள்ளபடி அமாவாசை அன்று தயார் செய்து கட்டி வைத்துக் கொள்ளவும்.

Friday, July 29, 2022

ஸ்ரீகோதண்டராமர் கோவில்,அதம்பர்

 *ஸ்ரீகோதண்டராமர் கோவில்,அதம்பர்.*

      அதம்பர் என்னும் ஊர் திருவாரூர் மாவட்ட த்தில்,நன்னிலம் தாலுக்காவில், அச்சுதமங்கலம் அருகில் உள்ளது.இந்த இடம் ராமாயணம் சம்பந்தப்பட்டது.பஞ்ச ராமர் க்ஷேத்திரங்களில் ஒன்றாகும்.

     பஞ்ச கோதண்ட ராமர் க்ஷேத்திரங்கள்:

1. அதம்பர்

2.பருத்தியூர்

 3.தில்லைவிளாகம்

4.வடுவூர்

5.முடிகொண்டான்.

        

           சீதை மாய மானை பார்த்து அதிசயப்படுகிறாள்.லட்சுமணன் அது மாயமான் என்று சொல்லியும்  அது வேண்டுமென அடம் பிடிக்கிறாள். ராமனை அதை பிடித்துத்தரும்படி கூறுகிறாள். மாயமான் அகப்படாமல் ஓடுவதைப்பார்த்து ராமர் " நிச்சய ஹதம்பர்" என்று இந்த இடத்தில் கூறினார் என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.ஹதம்பர் என்ற வார்த்தையிலிருந்து வந்தது அதம்பர்.

         இங்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. ஒன்றில் இராமர்,சீதா,லக்ஷ்மணன்,அனுமன் விக்ரகங்களுடன் மாரீசன் மானின் உருவமும் உள்ளது.இந்த இடத்தில் ராமர் மாரீசன் மானை நோக்கி அம்பை வீசினார் எனப்படுகிறது.

       இங்கு ராமர் தன் இடது கால்முட்டியை சற்று தூக்கி மடித்து ( கோபத்தில் நாண் எடுப்பதால்) இருப்பது தெரியும்.இது அரிய காட்சி.

        இன்னொரு சன்னதியில் ஸ்ரீரெங்கநாதர்  இரு தேவிகளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.அவர்களுடன் ஸ்ரீ ராஜ கோபால ஸ்வாமி தன் உபய நாச்சியார்,கருடருடன் காட்சி தருகிறார் . அவ்வளவு அழகு..!!! காலிங்க நர்த்தனராக கிருஷ்ணர் காட்சி தருகிறார்.

     சிறிய ஆஞ்சனேயர் சன்னதி உள்ளது.கருடாழ்வார் சன்னதி வெளிப்புறம் ரஙகநாதரை தரிசிப்பதைப் போல் உள்ளது.

       இந்த பகுதியில் இருக்கும் சில இடங்கள் ராமாயணத்துடன் சம்பந்தப்பட்டது என சொல்லப்படுகின்றது. அவை கொல்லு மாங்குடி,  நல்லமாங்குடி, வலங்கைமான், மாந்தை முதலியனவாகும்.

பாகற்காய் ஜூஸ்

❇️♍தினந்தோறும் பாகற்காய் ஜூஸ் பருகுவதால் என்ன நன்மைகள்...?🌐⛔*

* பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

* ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் தினந்தோறும் பருகி வந்தால் ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

* பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

* பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நீக்கபடுகிறது. இது செரிமான பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கள் இருந்து விடுவிக்கும்.

* நீரழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன் படுகிறது. பாகற்காயை ஜுஸ் போட்டு அருந்தலாம். மேலும் பாகற்காய் பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.

* பாகற்காயை சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சைச் சாறை மிக்ஸ் செய்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் பருகி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் போன்றவை எளிதில் நீங்குகிறது.

* பாகற்காய் ஜூஸ் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவந்தால் கல்லீரல் பிரச்னைகள் பறந்து போகும்🔵🟣

      *💥ENTERTAINMENT💥*

திண்டுக்கல் பூட்டு

 திண்டுக்கல் பூட்டின் வரலாறு.உ. எண் 98.

பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு.இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாள்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார்.

வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆள்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழகிய கற்பனைத்திறனோடும், நீண்ட நாள்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையுடன் பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.

நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.

பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சி யடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது.

இதனை ஒழுங்குபடுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது, 1972-ல் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம். திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.

ஓர் இரும்பு தகட்டின்மேல் ஒர் அடையாளம் செய்து முதலில் துளைசெய்கின்றார்கள். அதன்பின்னர் பேஸ் ராட், லீவர் போன்றவைகளைத் தனித்தனியாக தயாரித்து, ஆர்க் வெல்டிங் மூலம் பேஸ்ராட், லீவர் இரண்டையும் இரும்பு தகட்டின் மீது இணைக்கின்றனர். பூட்டு தயார். தயாரான பூட்டுக்கு நிக்கல் பாலிஷ் போட்டு பூட்டை பளபளப்பாக்கின்றனர். புது பூட்டு ரெடி. கையால் மட்டுமே செய்யப்படுகின்றன பூட்டுகள்.

டிலோ பூட்டு..

திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கின்ற இந்தப் பூட்டு உலகப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்தப் பூட்டுக்கு ஒரே ஒரு சாவிதான். அது தொலைந்துவிட்டால் பூட்டை உடைப்பது ஒன்றுதான் சிறந்த வழி. வேறு வழியே கிடையாது. ஏனென்றால் கள்ள சாவியோ, வேறு சாவியோ போட்டு இந்த பூட்டைத் திறக்க முடியாது.

பெல் லாக்..

இந்தப் பூட்டு சற்று வித்தியாசமானது. பூட்டும்போதும், திறக்கும்போதும் மணி அடிப்பதால் இதற்கு ‘பெல் லாக்’ என்று பெயர்.

லண்டன் லாக்..

ஆங்கிலேயர் காலத்தில் லண்டனிலிருந்து வந்த பழுது பார்ப்பதற்கு வந்த பூட்டைப் பார்த்து தயார் செய்யப்பட்டது. பூட்டினுள் ஷட்டர் போன்ற மெல்லிய காகிதம் இருக்கும். வேறு சாவி போட்டு பூட்டைத் திறக்க முயன்றால் அந்த காகிதம் கிழிந்துவிடும். அப்புறம் பூட்டைத் திறக்கவே முடியாது.

இதனை மாடலாகக் கொண்டு திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பவர்களும் இதேபோன்ற பூட்டினைத் தயார் செய்தனர். இந்தப் பூட்டுகளை பெரிய பெரிய நிறுவனங்கள் விரும்பி வாங்கினார்கள். ஒரு நிறுவனத்திற்கு 25 பூட்டுகள் தேவைப் பட்டால் 25 பூட்டுக்கும் தனித்தனி சாவிகள் கொடுக்கப்படும். அத்துடன் மாஸ்டர் கீ ஒன்றும் கொடுப்பார்கள். மாஸ்டர் கீயைக் கொண்டு 25 பூட்டுகளையும் திறக்கவும் பூட்டவும் முடியும்.

பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை 5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை 22 கிலோ!!!!!

Thursday, July 28, 2022

குமரிஅம்மன்_வரலாறு

குமரிஅம்மன்_வரலாறு. 🙏

#ஶ்ரீராமர்_முதலில்_சேது_அமைத்த_தலம்
             கன்னியாகுமரி அருள்மிகு பகவதி யம்மன் திருக்கோயில் இந்தியாவின் தென்கோடியில் முக்கடல் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ள தீர்த்த ஸ்தலமாகும்.  "பகவதி" என்பது கேரளப்பகுதிகளில்    பெண் தெய்வங்களைக் குறிப்பிடும் முறையாகும் ; இறைவனைப் "பகவான்" என்பதைப் போல, பெண் தெய்வங்களைப் " பகவதி" என்பர். குமரி மாவட்டம்   முன்பு கேரளாவோடு இணைந்திருந்தது அனைவரும் அறிந்ததே.  குமரிப் பருவப் பெண்ணாக அம்மன் இங்கே தவம் செய்வதால், இவள்  " கன்னியாகுமரி" எனப்பட்டாள். இத்திருக்கோயில்   #பரசுராமரால் நிறுவப்பட்டு , பின்னர் பாண்டிய மன்னரால் புதுப்பிக்கப் பட்டதாகும். இங்கு பகவதி (சக்தி) குமரியாக (கன்னியாக) நின்று நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளில் (விஜய தசமி நாளில்) பாணாசுரன் என்ற அரக்கனை அழித்ததாகப் புராணம் கூறுகிறது.
             சிவபெருமானை அடைய வேண்டுமென்பதற்காகக்   கன்னியான பார்வதிதேவி    குமரி முனையிலே நின்று தவம் செய்தமையால் #கன்னியாகுமரி  என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னொரு காலத்திலே, அசுரர்கள், தேவர்களை அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது.    அசுர குலத்தலைவனாக விளங்கிய #பாணாசுரன் மூவுலகையும் தனக்குக் கீழே கொண்டுவர எண்ணினான். விண்ணவருக்கும், முனிவர்களுக்கும் பூவுலக மாந்தருக்கும் பல்வேறு வழிகளில் தொல்லைகளைக்  கொடுத்தான்.
          பாணாசுரனின்   கொடுமைகளைத்    தாங்க முடியாத பூமாதேவி,   திருமாலை வேண்டி நின்றாள். அவளது வேண்டுகோளுக்குச்  செவிசாய்த்த திருமாலோ, பராசக்தியை அணுகும்படி கூறினார்.  அதன்படி தேவர்கள்,   பராசக்தியை வேண்டி, பெரிய யாகமொன்றை மேற்கொண்டனர்;   யாகத்தின் முடிவில் வெளிப்பட்ட பராசக்திதேவி, பாணாசுரனின் கொடுமைகளை  அடக்கி,  உலகில் அறமும்,  ஒழுங்கும் நிலைபெற வழிசெய்வதாக உறுதியளித்தாள்.   அதற்காகத்   தேவி,   கன்னிப் பெண்ணாக மாறி பாரதத்தின் தென் கோடிக்கு வந்து தவம் செய்யலானாள்  சக்தி.       #கன்னிதேவி மணப்பருவத்தை அடைந்ததும், சுசீந்திரத்திலிருக்கும் இறைவானாகிய சிவபெருமானுக்குத்    தேவியைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
         பிரம்மதேவனோ, அசுரர்களின் தலைவனாகிய பாணாசுரனின் மரணம் ஒரு கன்னியாலேயே நிகழ வேண்டுமென விதித்திருந்தார். . இந்தத் திருமணம் நிகழ்ந்தால், பாணாசுரனின் மரணம் சம்பவிக்காமலே போய்விடுமென உணர்ந்த நாரதரோ, திருமணத்தை எப்படி நிறுத்தலாமெனச் சிந்திக்கத் தொடங்கினார்.    கலகங்கள் விளைவிப்பதில் நாரதரைவிடச் சிறந்தவர் எவருமில்லை என்பது யாவரும் அறிந்ததே.   ஆனால் நாரதர் கலகம் எப்போதும் நன்மையிலேயே முடியும்.
         #பகவதிதேவி_சிவபெருமான் திருமணத்தை நிறுத்த முயன்ற நாரதர் அவர்கள் இருவரையும் அணுகி, குறித்த  நாளில் , நள்ளிரவிலான நல்வேளை யொன்றில் திருமணம் நிகழ வேண்டுமெனவும், அதற்கு ஆயத்தமாக இருக்கும்படியும் கூறினார். அதன்படி குறித்த நாளன்றிரவு   #சிவபெருமான் #சுசீந்திரத்திலிருந்து தேவியின் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்.  பொழுது விடிவதற்குள் திருமணத்தை முடிப்பேன்! எனச் சிவபெருமான், தேவிக்கு வாக்களித்திருந்தாராம்.  நல்ல நேரம் தவறிவிடக் கூடாதென   தேவர்கள் புடைசூழ வந்த வேளையில்,  வழுக்கம்பாறையென்ற   இடத்தில் #நாரதர் ஒரு சேவலாக உருக்கொண்டு உரக்கக் கூவினாராம்.(  இன்றும்  அதன் காலடித்தடம் #வழுக்கம்பாறையில் உள்ளது. )
          சேவலின் கூவலைக் கேட்ட சிவபெருமானுக்கு, இது நாரதரின் விளையாட்டு!  எனப் புரிந்தது; ஆயினும் உலக நன்மைக்காக,  அரக்கனை அழிக்கத் தேவியானவள் கன்னியாகக் கோபத்தோடு இருத்தல் அவசியம்! என உணர்ந்தப் பரமன், பொழுந்து புலர்ந்து விட்டது. நல்ல நேரம் தவறிவிட்டது என எண்ணி மிகுந்த வருத்தத்துடன்  செல்வதைப்போல,  சுசீந்திரத்திற்குத் திரும்பிச்  சென்றாராம்.    ஆனால்,  பொழுது விடிந்தும் சிவபெருமான்  வராததால்,  ஈசனுக்காகக் காத்திருந்த தேவியின்   அன்பு வழியும் கண்கள், கோபத்தில் சுட்டெரிக்கும் சூரியனைப் போல் தகதகக்கத் தொடங்கியன.
              திருமணத்திற்காகச் சமைத்த அனைத்துச் சாதங்களையும், அரிசி, பருப்பு போன்றவற்றையும்   கடற்கரையை நோக்கி   வீசியெறிந்தாள்; தேவியின் கோபத்தால்   அவை பல நிறங்களை உடைய   மணலாக ஆயினவாம்.  இன்றளவும்  வேறெங்கும் காணமுடியாதவாறு  பலநிற மணல்களை குமரிக்கடலோரம், முக்கல் சங்கமப் பகுதியில் காணலாம்.   பின்னர் கோபம் அடங்காமல், தவத்தை மேற்கொள்ள எண்ணினார். தேவி. அந்த நேரம் பார்த்து அங்கு வந்த #பாணாசுரன், தேவியின் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினான். 
          தேவியோ கடும் கோபத்துடன்  பாணாசுரனை   எச்சரித்தாள்;   ஆனால்  தன் உடல் வலிமையால் அவளைக் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான் பாணாசூரன்.  இந்தத் தருணத்தை எதிர்பார்த்திருந்த தேவியும் தன் போர் வாளை வீசிப்பல நாட்கள் போர் புரிந்தாள். இறுதியில் தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றாள். தேவர்களும் மனிதர்களும் தேவிக்கு நன்றி செலுத்தினர்.
இந்தப்  போரை நவராத்திரி விழாவின் போது சிறப்புற நடத்திக் காட்டுகின்றனர் “பரிவேட்டை” என்று அழைக்கப்படும் இத்திருவிழா காண்போருக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு நிகழ்ச்சியாகும்.  குமரியம்மன் வாளைக் கொண்டு போராடும் காட்சி இக்கோவில் கருவறையின் கிழக்குச்சுவரில்  படைப்புச்  சிற்பமாகச் செதுக்கப்பட்டு உள்ளது.
          தேவர்களின் வேண்டுதலால் சினம் தணிந்து, தனது கோப சக்தியை எல்லாம் ஒரு ஒற்றைக்கல் மூக்குத்தியில் இறக்கி அன்னை பகவதி சாந்தமானாள். அவள் குமரியாகவே அங்கு வீற்றிருந்ததால்  #கன்னியாகுமரி என்றே பெயர் பெற்றாள். குமரி அம்மனின்   #மாணிக்க_மூக்குத்தி  தனிச்சிறப்புடையது;  மிகவும்  அரிதானது.  இதைப் போன்ற செந்நிற ஒளிய ஒளிவீசும் மூக்குத்தியை வேறெங்குமே காணமுடியாது.   இந்த மூக்குத்தியின் செந்நிற   தீபம் போன்ற  ஒளியை கலங்கரை விளக்கத்தின்  ஒளி என்றெண்ணி வந்த கப்பல்கள் கரையில் மோதி விபத்துக்குள்ளானதாம். இன்றும் குமரி கடலில் கப்பலின் உடைந்தப் பகுதிகளைக் காணலாம்.
           அதனாலேயே ஆலயத்தின் கடற்கரை நோக்கிய முன் கோபுரவாசல் மூடப்பட்டு வடக்குப்புறமாக வாசல் வைக்கப்பட்டுள்து என்கிறார்கள். ஒளிமிக்க அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் பகவதி தாய் நின்று நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள்.
    
"நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை" என்று  #மகாகவி_பாரதி போற்றியவாறு, குமரித் தெய்வத்தின் கோவில் கடலோரமாக. அமைந்து காட்சி தருகின்றது. பெரிய நிலப்பரப்பில் நான்குபுறமும் மதில் சுவர்கள் சூழ அந்த கோவில் அமைந்துள்ளது.
             பகவதி அம்மனின் கருவறை உள்மண்டபத்திலே அமைந்திருக்கின்றது. இளங்காலைக் கதிரவனுக்கு ஆசி கூறி அருள்வது போன்று குமரித் தெய்வம் கிழக்கு திசை நோக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றாள். அவளது மணிமுடியிலே பிறைமதி காட்சி தருகின்றது.    அவள் அணிந்திருக்கும்   #மாணிக்க_மூக்குத்தி கண்களைப் பறிக்கும் பிரகாசமுடையதாகத் திகழ்கிறது.  அதன்  செந்நிற  தீபம் போன்ற ஒளியானது  அன்னையின் உதட்டில் பிரதிபலிப்பதைக் காண கண்கள் கோடி வேண்டும்.( ஆனால் வைரமூக்குத்தி எனத் தவறுதலாகச்   சிலர்  கூறுகின்றனர்) பகவதி  அன்னை  தனது ஒரு கரத்திலே  #இலுப்பைப்பூ மாலையைத் தரித்து, மற்றொரு கரத்தைத் தொடைமீது அமர்த்தி தவக்கோலத்திலே காட்சியளிக்கிறாள்.
           பகவதி  அன்னையின்   மூக்குத்தியில் மின்னும் முகப்பொலிவும், கருணை பொழிந்திடும் இரு கண்களும், புருவங்களும், பரந்த நெற்றியும், அதில் ஒளி வீசித் திகழும் மாணிக்கத் திலகமும், இதழ்களின் கோடியில் தெரிந்திடும் புன்முறுவலும், நிமிர்ந்த தோற்றப் பொலிவும் காண்போர்க்கு ஒரு பேரின்ப விருந்தாக அமையும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.
              இக்கோவிலின் உள் பிரகாரத்துத் தென்மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களைக் கொண்டதாகும். இம்மண்டபத்தின் முன்பாக சபா மண்டபம் அமைந்துள்ளது.உள்பிரகாரத்தைவிட அகன்ற இடைவெளியுடன் கூடியதாக வெளிப்பிரகாரம் அமைந்துள்ளது. நாள்தோறும் அன்னை பகவதி இப்பிரகாரத்தில் பவனி வருகிறாள்.     கன்னியாகுமரி பகவதி அம்மனை கன்னிகா பூஜை அல்லது சுயம்வர பூஜை செய்து மனம் உருக வழிபட்டால் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் விலகி உடனே திருமணம் கை கூடிவிடும். காசிக்கு செல்பவர்கள் இங்கு வந்து சென்றால் கூடுதல் பலன்களை பெற முடியும்.
           இக்கோவில்  பாரதத்தின் தென் கோடியில் அமைந்துள்ள மிகப்புகழ்வாய்ந்த பகவதி ஆலயம் ஆகும். இங்கு, தமிழகத்தின் பாரம்பரிய உடையான பாவாடை, தாவணியுடன்  ஜெபமாலையை கையில் ஏந்தி தவம் செய்யும் நிலையில் பகவதியம்மன் காட்சி தருகிறார். குமரி அம்மன் கன்னியாக நின்று  தவம் செய்த தலம் ஆதலால் இம்மாவட்டம் அம்மனின் பெயராலேயே கன்னியாகுமரி குமரி மாவட்டம் என வழங்கப்படுகிறது.
         குமரியை அடுத்த பக்கத்து ஊரான கடற்கரையை அடுத்த வாவத்துறை என்ற ஊரை சேர்ந்த மீனவ தாயார் ஒருவருக்கு   பகவதி  அன்னை  சிறுமியாக காட்சி கொடுத்தாளாம்.
தேவி அந்த அம்மாளைப்  பார்த்து அம்மா! என்னை உன் பெட்டியில் எடுத்துக் கொண்டு கரையில் விடுவாயா? என்று கேட்டாள். அதற்கு அந்த தாயாரும் சம்மதித்தாள்.   சிறுமியைக்  கூடையில் வைத்து எடுத்து செல்றாள்.
              இப்போது ஆலயம் இருக்கும் இடமானது அப்போது பருத்தி விளையும் இடமாக இருந்ததாம். அந்த இடத்தில் கோயில் கொள்ள   விரும்பிய  தேவி, தீடீரென மிகவும் பாரமாக ஆனாள்.  சுமையைத் தாங்க இயலாதப் பெண்ணோ, தான் சுமந்து வந்த கூடையை அந்த இடத்தில் இறக்கி வைத்தாள்.   குழந்தையோ, அம்மனாகக்  காட்சியளித்தாள்.  தான் சுமந்து வந்தது குழந்தையல்ல, தேவி என்பதை புரிந்து கொண்ட பெரியவள் அன்னையை வணங்கி நின்றாளாம்.
அன்னை அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டாள்.   அப்பெண் கூறிய தகவலைக் கேட்டு பின்னர்   அவ்விடத்தில்  கோயில் அமைத்தனராம்.
           இன்றளவும் குமரி அம்மனின் தேர்த்திருவிழாவின் போது முதன்முதலில்   தேரை இழுக்க அம்மனுக்குக் கயிறை( வடம்) அளிப்பது இப்பெண்ணின் வம்சத்தவரே; இப்போது அவர்கள் கிருஸ்தவர்களாகி விட்டாலும், இன்றளவும் பயபக்தியோடு அம்மீனவ மக்கள் , அம்மனுக்குத் தேர்வடத்தைப் பரிசளிக்கின்றனர் என்பது சிறப்பு;  இது  தன்னை முதன் முதலில்  வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தியப் பெண்ணிற்கு   குமரி_அம்மன்  வழங்கும் முதல் மரியாதையாகும்.
             ஶ்ரீராமபிரான் ஆழ்க்கடல் கடந்து இலங்கை செல்வதற்கேற்ற இடம் தேடிக் குமரிமுனை வந்து இங்கிருந்தே    பாலம் அமைக்க நினைத்தாராம் ஆனால் அம்மனின் அறிவுறுத்தலினாலேயே அன்னை பகவதியின்  அருளைப்  பெற்று  கந்தமானதம்  (பின்னர்  இராமேஸ்வரம்)  சென்றதாகவும்,  வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
       அதுமுதல் குமரித்துறை  ஆதிசேது எனப்பெயர் பெற்றதாகவும்,  கோவில் தலப்புராணம் கூறுகின்றது.

குமரியின் முக்கடல் சங்கம தீர்த்தத்தில் நீராடுவோர்__
/ஆதிசேதோ: கன்னியாகுமரி  க்ஷேத்ரே மாதுர் பிதுர் தீர்த்தே//
     
__எனச்  சங்கல்பம் செய்து கொள்வர்.

“குரங்கு செய் கடல் குமரியம்  பெருந்துறை” என்ற மணிமேகலை ( 6:37) யின் அடிகளை ஆதாரமாக வைத்து வானரப் படைகள்  முதன் முதலில் அணைக்கட்டிய இடம் இக்குமரிமுனைதான் என்பது உறுதியாகிறது. 
        குமரி  மாவட்டத்தில்   "இராமன்துறை" , "இராமன்புதூர்",  "இராமன்புத்தன்துறை"  என்ற பெயர்களில்  ஊர்கள் பல இருப்பதே இதை உறுதிப்படுத்துகிறது.
 
இக்கோயிலின்  தீர்த்தம் __பாபநாச தீர்த்தம்__ முக்கடலும் கூடும் இடம் குமரிமுனை.
          காசி சென்று வழிபட்டோர், கன்னியாகுமரி  வந்து குமரி பகவதியை வணங்க வேண்டும் என்பதே முறையாகும்.   குமரி முனையில்  அதிகாலை சூரிய உதயம், மாலை நேரம் சூரிய அஸ்தமனம் காணுதல் தனிப்பெரும் சிறப்பு.  கன்னியாகுமரி மிகச்சிறந்த சுற்றுலா மையம் ஆகும்.

    விவேகானந்தர்_நினைவு_மண்டபம் :    
        குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய  பாறைகள் உள்ளன.  அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்தில் இருந்து 55 அடி  உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது.  அதை  தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.  1892-ல் சுவாமி விவேகானந்தர் தனது வெளிநாட்டு யாத்திரைக்கு முன்பு  குமரிமுனை வந்து அம்மனை வழிபட்ட பின்பு, அம்மனின் வழிகாட்டுதலின்படியே  இப்பாறையில் உட்கார்ந்து  தியானம் செய்தார். அதன் பிறகே அம்மனின் அனுமதியைப் பெற்றே  அவர் வெளிநாடு சென்றார்.   அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  சில பௌர்ணமி  நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி  கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேர நாம் காணலாம்
           கன்னியா குமரியின்    முக்கடலானது,  புராணங்கள்  மற்றும்  இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதத்திலும் கூட,  புனிதத் தீர்த்த  யாத்திரைக்கு உரிய  தலமாகக் கூறப்பட்டுள்ளது.    
        மகாபாரதத்தில் #அர்ஜுனன்  குமரியின் முக்கடல் தீர்த்தத்தில் நீராடியதாகத்   அர்ஜுனன் தீர்த்த யாத்திரைக்குச் சென்ற பகுதி விளக்குகிறது.
         குமரி_அம்மன் கோயில்  அமைவதற்கு முன்பிருந்தே   அம்மன் இங்கே தவமிருக்கிறாள். குமரி மாவட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும்  #பகவதி    எனப் பெயரைச் சூட்டிக் கொள்வதுண்டு.  *புனிதத் தலமான    முக்கடல் சங்கமத்தில், இயற்கை எழில் மிகுந்தக்  குமரி மாவட்டத்தில்  நித்தம் தவம் செய்யும் குமரி அன்னையைத் தரிசிக்கப் புண்ணியங்கள் பல செய்திருக்க வேண்டும்; அம்மண்ணில் பிறக்கவும், வாழவும் பெரும் பாக்கியம் செய்திருக்கவேண்டும். 🙏
     #எம்_குமரிஅன்னையே_போற்றி_போற்றி___போற்றி! 🙏

பெரியவர் பாதுகை

 சங்கராம்ருதம் - 227

ஒரு நாள் காஞ்சி மடத்தில் ஏகமான கூட்டம் பெரியவரைத் தரிசிக்க காத்திருந்தது. வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களின் மத்தியில் ராமலிங்க பட் என்பவரும் இருந்தார். அவரது கையில் பட்டுத்துணி போர்த்திய தட்டு இருந்தது. அருகில் வேதமூர்த்தி என்பவர் நின்று கொண்டிருந்தார்.

அவர் ராமலிங்க பட்டிடம்,""தட்டில் என்ன வைத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

""ஓரிக்கையில்(காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமம்) மகாபெரியவருக்கு மணிமண்டபம் கட்டுகிறார்கள் இல்லையா! அங்கே பிரதிஷ்டை செய்வதற்கு ஒரு ஜோடி பாதுகையும், என் வீட்டு பூஜையறையில் வைக்க ஒரு ஜோடி பாதுகையும் தயார் செய்து கொண்டு வந்துள்ளேன். அது மட்டுமல்ல! என் தாயார் சுமங்கலியாக காலமாகி விட்டார். அவர் காலமெல்லாம் அணிந்திருந்த எட்டுபவுன் தங்கச் சங்கிலியையும் மணிமண்டப கட்டுமானப் பணிக்கு கொடுப்பதற்காக வைத்துள்ளேன்,'' என்றார்.

வேதமூர்த்தி அவரிடம்,""அதெல்லாம் சரி! பாதுகைகளைச் செய்வதாக இருந்தால், மணிமண்டபம் டிரஸ்டிகளிடம் அனுமதி பெற்றிருந்தீர்களா?'' என்றதும், "பட்'டுக்கு தூக்கி வாரிப் போட்டது.

""இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா! இது எனக்கு தெரியாதே! மைமூரிலே(மைசூர்) நல்ல சந்தனக்கட்டை வாங்கி, சுத்த பத்தமாக இருந்து சிறந்த தச்சரைக் கொண்டு செய்து வந்துள்ளேன்.

இப்போது என்ன செய்வது?'' என்று கலங்கிய நிலையில் வரிசையில் நின்றார் பட்.

அவரிடம் ""கவலைப்படாதீர்கள்,'' என்று ஆறுதல் சொன்ன வேதமூர்த்தி, பெரியவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஒருவரை அழைத்தார். அவருக்கு வெண்கலக்குரல். மெதுவாகவே பேச வராது. அவரிடம் விஷயத்தைச் சொன்னதும், அவரும் பெரியவரிடம் போய் சொல்லி விட்டார்.

பிறகு வெளியே வந்தவர், தனக்கே உரித்தான உரத்த குரலில், ""எல்லோரும் அமைதியாக இருங்கோ! ஒரு அறிவிப்பு வெளியிடப் போறேன்! மணிமண்டபத்தில் பிரதிஷ்டை செய்ய ஒரு ஜோடி பாதுகையை ராமலிங்க பட் என்பவர் கொண்டு வந்துள்ளார். அத்துடன் அவரது தாயாரின் நகையும் எடுத்து வந்துள்ளார். இது எல்லாத்தையும் பெரியவரின் சந்நிதியில் சமர்ப்பிக்கிறேன்,'' என்றவாறே, அவற்றை வாங்கி பெரியவரிடம் ஒப்படைத்தார். 

பெரியவர் ராமலிங்க பட்டை முன்னால் வருமாறு அழைத்தார். அன்று உண்மையிலேயே பெரியவருக்கு உடல் நலமில்லை. ஆனால், திடீர் உற்சாகத்துடன் அந்த செயினை எடுத்து தன் வயிற்றின் மேல் வைத்து குழந்தை போல பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு ஜோடி பாதுகைகளை தன் பாதங்களில் அணிந்து கொண்டார். பிறகு இடது காலை தூக்கி வலது தொடை மேலாகவும், வலது காலைத் தூக்கி இடது தொடை மேலாகவும் போட்டு நடராஜரின் திருநடனம் போல காட்சி கொடுத்தார். இப்படியே நான்கு முறை கால்களை மாற்றிக் கொண்டார். பிறகு இன்னொரு ஜோடி பாதுகையைப் போட்டுக் கொண்டு கழற்றிக் கொடுத்து விட்டார்.

பெரியவர் நான்குமுறை அணிந்து கொண்ட அந்த பாதுகை தான், இப்போது ஓரிக்கை மணிமண்டபத்தில் நமக்கு காட்சி தந்து கொண்டிருக்கிறது!

க்ஷணப்பித்தம்

 *க்ஷணப்பித்தம்* 

 *கதையாசிரியர்: உடுவை எஸ்.தில்லைநடராசா* 

(1973 வெளியான சிறுகதை)

மக்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸில் மக்கள் ஓடிச் சென்று ஏறிக்கொள்கின்றனர். வெள்ளவத்தை பஸ் நிறுத்துமிடத்தில் ஏறிய ஒரு கிழவன். ஒரு பெண், ஒரு வாலிபன் ஆகியோருக்கு இருக்க இடமில்லை. ஆடிச்சென்று கொண்டிருக்கும் பஸ் அதிலிருந்தவர்களையும் ஆடவைத்துக் கொண்டு இருக்கிறது.

கிழவனுக்கு பின்னால் நிற்கும் வாலிபனின் வசீகரம் பெண்ணின் மனதைக் கவர்கிறது. அது காதல் அல்ல. ஒரு வகையான கவர்ச்சி. சுமார் ஆறடி உயரம், சிரிக்கும் அழகான முகம், சிவந்த நிறம், எவரையும் கவரும் எழிலான தோற்றம் இவற்றோடு அவன் ஒயிலாக நிற்பது, பஸ்ஸின் ஆட்டத்திற்கேற்ப மெதுவாக ஆடுவது எல்லாமே பெண்ணின் மனதை கவர்கின்றது.

அவள் ஏங்குகின்றாள் “ திரும்பி ஒரு முறை என்னைப் பார்க்க மாட்டரா?”

அவனும் எண்ணுகிறான் “திரும்பிப் பார்;த்தால் எங்கே என்னைத் தவறாகப் புரிந்து விடுவாளோ?”

“எவ்வளவு வடிவானவர்!”

“என்ன ஸ்டைலாக நிற்கிறாள்”

“அவர் சிரிப்பதே தனி அழகு!”

இப்படியெல்லாம் ஒருவரைப் பற்றி ஒருவர் இனிமையாகச் சிந்திக்கின்றனர்.

பஸ் நிற்கிறது. இருவர் இறங்குகின்றனர். பெண்ணுக்கு இருக்க இடம் கிடைக்கிறது. அவள் இருக்கும் சீற்றுக்கு முன்னாலுள்ள இருக்கையிலும் ஓரிடம் காலி.

அந்த இடத்துக்காக கிழவனும் வாலிபனும் போட்டி போட்டபேர்து வாலிபனுக்கு வெற்றி.

“பாவம்! அவருக்கு ஒரு மாதிரி இடம் கிடைத்தது” அவனுக்காகப் பரிதாபப் பட்டவள் கிழவனைப் பார்க்கிறாள்.

“ஐயோ! பார்க்கவே சகிக்கவில்லை. நடக்கவே முடியாது. இந்தக் கிழடுகள் எல்லாம் ஏன் பஸ்ஸிலை வருவான்? வீட்டிலை பேசாமல் இருக்கலாமே!”

மூக்குச் சளியும் சிந்திக்கொண்டு. சீ….வாயாலை வீணியும் வடியுது.”

“கை காலிலையிருக்கிற புண்ணுக்கு மருந்தும் கட்டாமல்..”

எல்லாம் வெறுப்பான எண்ணங்கள்.

வாலிபன் பஸ் கண்ணாடிக்கூடாக வெளியே பார்ப்பதுபோல அவளைப் பார்க்கிறான். அவளும் அவனைப் பார்;க்கிறான். அவளும் அவனைப் பார்க்கிறாள். கண்கள் ஏதோவெல்லாம் பேசுகின்றன.

பஸ் பம்பலப்பிட்டியில் நிற்கிறது.

அவளுக்குப் பக்கத்தில் இருந்தவர் இறங்க, அந்த இடத்தைக் கிழவன் பிடித்துக் கொள்கின்றான்.

அவளின் அவருவருப்பு- “ஐயே…சீ…’

பஸ் வேகமாகச் செல்வதாலும் திடீர் பிரேக்குள் பிடிப்பதாலும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்கின்றனர். வாலிபன் பக்கத்தில் இருந்தவருடன் மோத, கிழவன் அந்தப் பெண்ணுடன் முட்டிக் கொள்கின்றான்.

திரும்பி முறைத்துப் பார்க்கிறாள். “நான் சென்ஸ்.”

நாலைந்து மாதங்களாக, சவரக் கத்தியே பட்டறியாத முகம். அழுக்குச் சட்டை. பரட்டைத் தலை. ஒரு வகையான வெடில் வேறு வீசியது.

வாந்தி வருவது போன்ற அருக்குவிப்பு. நகர்ந்து இருந்தாள். வெறுப்பு வெடித்தது. “இந்த இடத்திலை அவர் மட்டும் இருந்திருந்தால்” மனக்குரங்கு கிளைக்குக் கிளை தாவியது.

“கொஞ்ச நேரம் என்னுடன் பேச மாட்டாரா, இவர்?”- வடிவான சட்டை, அந்தச் சிரிக்கும் பார்வையொன்றே போதுமே, எப்பவும் பார்த்துக் கொண்டேயிருப்பதற்கு!”

“ஹம்!” என்று ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியிட்டாள், அவள்.

பஸ் நிற்கிறது.

ஒருவரையும் இறக்கிக் கொள்ளாத பஸ் கர்ப்பிணி ஒருத்தியை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றது. இளமை குலுங்கும் அவள் பெருத்த வயிறுடன் கம்பியை பிடித்துத் தொங்கிய வண்ணம் வாலிபனுக்குப் பக்கத்தில் வந்து நிற்கிறாள்.

அவனுக்கும் அது தெரிகிறது. திரும்பிப் பார்த்தால் எழும்பி இடங்கொடுக்க வேண்டி வருமோ என்ற அச்சம் அதனால் வீதியைப் பார்க்கிறான். முன்னாலே இருக்கும் பெண்ணைக் கடைக்கண்ணால் நோக்குகிறான்.

“வாலிபன் எழும்பி இடம் கொடுக்கப் போகிறான்” என்ற நினைப்பு மனசில் சுழியிட இருந்தவளுக்கு “நீ இங்கே வந்திரு, தங்கச்சி” என்ற கிழவனின் குரல் திகைப்பை அளிக்கிறது.

கிழவன் எழும்ப இவளுக்குப் பக்கத்தில் அமர்கின்றாள்.

பக்கத்தில் அவள் வந்து இருந்ததுமே, இவளது கனவுகள் சிதைந்தன. “சீ” இவனும் ஒரு மனிசனா?

முன்னர் எனக்கிவன் எப்படிக் கவர்ச்சியாக தென்பட்டான்? என்று இப்போது இவள் அதிசயப்பட்டாள்.

“கவர்ச்சி ஒரு கண நேர மயக்கம். உயர் நடத்தை தான் சிறந்த ஆண்மை!” என்று இவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

கிழவனை நிமிர்ந்து பார்த்தாள். இப்பொழுது கிழவன் மேல் வெறுப்பில்லை. துவேசமில்லை. அசூசையில்லை. மாறாக, மனதிற்குள் பரிவுணர்ச்சி குடிகொண்டது. பஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. இவள் தற்செயலாகக் கூட அந்த நவநாகரீக ரோமியோவின் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை.

 *- மல்லிகை 1973*

பரிசு - சுஜாதா

 பரிசு  - சுஜாதா சிறுகதை       

(மத்யமர் சிறுகதைத் தொகுப்பில் இருந்து ஒரு கதை)

இங்கேயும் இல்லாமல் அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. ஏறக்குறைய நல்லவர்கள். மத்யமர்............

அவர்களை பற்றிய கதை இது. – சுஜாதா.

====================

சந்துக்குள் ஒரு கார் செல்வதற்கு மட்டும்தான் இடம் இருந்தது. சைக்கிள்காரர்கள் சாக்கடையோரமாக ஒதுங்கிக் கொண்டார்கள். அந்தப் பிரதேசத்தில் கார் நுழைவது அசந்தர்ப்பமாக இருந்தது. வெள்ளை உடை அணிந்து, தொப்பி போட்ட டிரைவர் வேறு! பின் ஸீட்டில் இருந்த இளைஞன் டை கட்டியிருந்தான். நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு ஓர் இடத்தில் நிறுத்தச் சொல்லி சன்னல் கண்ணாடியை இறக்கி,

“36 பார் 48 எந்த வீடுங்க ?”

“அதோ அரை கேட் போட்டிருக்கே, தபால் பெட்டி தொங்குதே அதுக்கு அடுத்த வீடு. அங்கே எட்டுப் பேர் குடியிருக்காங்க. உங்களுக்கு யாரைப் பார்க்கணும் ?”

“கிருஷ்ணசாமின்னு ஸ்டேட் வேர்ஹௌசிங் கார்ப்பரேஷன்ல…”

“அங்கதான். போங்க.!”

குறிப்பிட்ட வீட்டு வாசல் தாத்தா, “நேரே உள்ளே போங்க. கடைசி போர்ஷன், அதுக்கப்புறம் பாத்ரூம்தான்!”

மெல்ல நடையைத் தாண்ட, இருபுறமும் சின்னச் சின்ன அறைகளிலிருந்து பனியன் அணிந்த சீனிவாசன்களும் ராமசாமிகளும் எட்டிப் பார்த்தார்கள். பம்ப் அடிக்கும் குழாய் அருகில் அவர்கள் மனைவிமார் குழந்தைகளை அலம்பிக் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டில் தையல் இயந்திரமும் மற்றொரு வீட்டில் ட்ரான்சிஸ்டரும் ஒலித்துக் கொண்டிருந்தன. வயது வந்த பெண்கள் கையகலக் கண்ணாடிகளின் எதிரில் நெற்றிக்குப் போட்டு ஒட்டிக் கொண்டே நேற்றைய இளையராஜாவை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். குறுக்கே சிறுவர்களின் அட்டை கிரிக்கெட் நடந்து கொண்டிருந்தது.

கிருஷ்ணசுவாமி தன் வாசலில் மோடா போட்டு உட்கார்ந்துகொண்டு செய்தித் தாளில் லாட்டரி ரிசல்ட் பார்த்துக் கொண்டிருந்தான்.

“மிஸ்டர் கிருஷ்ணஸ்வாமி?”

“ஆமா, நீங்க ?”

“என் பேர் அனில்குமார். லிண்டாஸ் கம்பெனிலேருந்து வர்றேன்.”

“என்ன விஷயம்?” என்றான் சாமி நெற்றியைச் சுருக்கிக் கொண்டு, ஏதாவது விற்பதற்கு வந்திருக்கிறான் போலும்.

“நீங்க எங்க வின்னி சோப் விளம்பர வாக்கியப் போட்டிக்கு எழுதிப் போட்டிருந்தீங்களா?”

“ஆ… ஆமாம். ஞாபகம் வருது.”

“சொர்க்கத்தை எண்ணி செய்தது வின்னி…” இதுதானே நீங்க எழுதி அனுப்பின வாக்கியம்?”

“ஆமாம். அது வந்து ஏதோ கிறுக்கினது…” என்றான் அசட்டுத்தனமாக மன்னிப்பு விரும்பி…

“கங்க்ராஜுலேஷன்ஸ்! வாழ்த்துக்கள்! உங்களுக்கு முதல் பரிசு கொடுத்திருக்காங்க. நடுவர்ங்க.”

“முதல் பரிசுன்னா?”

“உங்களுக்கும் உங்க மனைவிக்கும்… கல்யாணம் ஆனவர் தானே? அஞ்சு நாள் டில்லி ஆக்ரா சுற்றுப் பயணம். அஞ்சு நட்சத்திர ஓட்டலிலே தங்குவீங்க. எல்லாச் செலவும் லிண்டாஸ் நிறுவனத்தின் பொறுப்பு.””

“அப்படியா! பூர்ணிமா! பூர்ணிமா, எங்கே போய்ட்டா, டேய் பாச்சு?”

“உங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான்!”

சுவாமியின் முகம் மலர்ந்தது. உட்கார்ந்து, ‘ஸார், என்ன சாப்பிடறேள். பாச்சு, பூர்ணிமாவைக் கூப்பிடு. முன் கட்டில முதலியார் வீட்டில் டீ.வி. பார்த்துண்டு இருப்பா.”

இளைஞன் மோடா மேல் கர்ச்சீப் போட்டு உட்கார்ந்து, “இந்தாங்க, எங்க மார்க்கெட்டிங் டைரக்டர் கிட்டேயிருந்து லெட்டர். இதில் கையெழுத்துப் போட்டுடுங்க, வெள்ளிக் கிழமை எல்லாப் பேப்பர்லேயும் உங்க பேர் வரும். ஒரு போட்டோ வேணும், இருக்கா ? அசோக் ஹோட்டல் வவுச்சர், ஏர் டிக்கெட் எல்லாமே அதே தேதிக்கு அனுப்பிச்சிடுவோம்…”

“இவங்க…?”

“பார்த்தசாரதி. என் பிரதர்.”

அவனிடம் தன் கார்டைக் கொடுத்தான் அந்த டை இளைஞன். பாச்சா, “நான் கோ-ஆப்பரேடிவ் கிரெடிட் பாங்கில – டெம்பரரி அசிஸ்டென்ட் – செலெக் ஷன் கிரேடு.”

“ஐ’ ம் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், லிண்டாஸ்.”

“ஏர் டிக்கெட்னா, ஏரோப்ளேனா?”

“ஆமாம்.”

“ஹய்யா, பாச்சா, கூப்பிடுறா பூர்ணிமாவை.”

“வெள்ளிக்கிழமை சாயங்காலம் அழைச்சிட்டுப் போவோம். டில்லி போன உடனே விமான நிலையத்தில் என் கலீக் வேணுமாதவன் வருவார்.”

இப்போது பூர்ணிமா அவசரமாக ஓடி வந்து, “என்ன?” என்றாள் கவலையோடு.

“பூர்ணிமா, நான் எழுதி அனுப்பிச்சேனோல்லியோ? அதுக்கு ப்ரைஸ் விழுந்திருக்கு.”

“அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் கூப்பன் தந்துடுவோம்.”

“என்ன ப்ரைஸ் ? என்ன எழுதி அனுப்பிச்சீங்க?”

“உங்க ஹஸ்பண்டு ரொம்ப லக்கி மிஸஸ் கிருஷ்ணசாமி. பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட வாக்கியப் போட்டியில முதல் பரிசு! நாலே நாலு வார்த்தை…”

“சொர்க்கத்தை எண்ணி செய்தது வின்னி! சிம்பிள்!”

“என்ன பரிசு?”

“ஒரு வாரம் நாம இரண்டு பேரும் டில்லி, ஆக்ரா எல்லாம் சுத்திப் பார்க்கறாப்பல, ஏரோப்ளேன்! அஞ்சு நட்சத்திர ஓட்டல், இன்னும் என்ன சார்?”

“அப்படியா!” என்றாள் நெஞ்சை இரு கைகளாலும் அழுத்திக்கொண்டு.

“நாம அன்னிக்கு வின்னி சோப் வாங்கினமா? அதில் ஒரு போட்டி வெச்சிருந்தது. நாலஞ்சு சினிமாக்காரனை அடையாளம் கண்டுபிடிக்கறா மாதிரி சுலபமா இருந்தது. அப்புறம் நாலு வார்த்தைல ஒரு வாக்கியம் எழுதும்படி கேட்டிருந்தா. ஏதோ தோணினதை எழுதி அனுப்பிச்சேன். கிடைச்சுடுத்து!”

“நம்பவே முடியலை. நாம் ஏதாவது பணம் போடணுமா?” என்றாள்.

“அப்படியெல்லாம் இல்லை. இங்கே புறப்பட்டதிலிருந்து திரும்ப வீடு வந்து சேர்ற வரைக்கும் எல்லாம் விண்டாஸ் செலவு!”

“மன்னி, இந்த வாரம் வாரப்பலன்ல ‘வடக்கேயிருந்து தனலாபம்’னு போட்டிருந்தது. அப்படியே பலிச்சுப் போச்சுது!” என்றான் பாச்சா.

“எங்க கம்பெனி மேற்கு சார்! பாம்பே!”

“எப்படியோ கொஞ்சம் வடக்கும் இருக்கு இல்லையா?”

“என்னவோ பட்சி சொல்லித்து. கிடைச்சாலும் கிடைக்கும்னு, சாருக்குக் காபி கொடு.”

“இல்லை சார், வேண்டாம். எனக்கு செகண்ட் ப்ரைஸ் ஆசாமியைச் சந்திக்க போகணும். இதுல ஒரு கையெழுத்துப் போட்டுட்டீங்கன்னா ஒரு ஃபார்மாலிட்டிக்கு!”

அந்த இளைஞன் சென்றதும் பல பேர் சாமியைச் சூழ்ந்து கொண்டார்கள். “எப்படி சார் தோணித்து?”

“இந்த ஸ்டோர்லயே முதல் தடவையா ப்ரைஸ் விழுந்திருக்கு.”

“நாணாவுக்கு ஒரு முறை பூட்டான் லாட்டரியில கிடைச்சுதே!”

“நூறு ரூபாய்!”

எதிர் போர்ஷன் பட்டம்மாள், “என்ன பூர்ணிமா, ப்ரைஸ் கிடைச்சிருக்காமே! டில்லி போகப் போறியா?”

“இன்னும் சரியாத் தெரியலை மாமி.”

“பூர்ணிமா ஆண்ட்டி, கங்க்ராசுலேஷன்ஸ். எப்ப ட்ரீட்?”

“எனக்கு ரெண்டு மோடாவும், சப்பாத்திக் கல்லும் வாங்கிண்டு வந்துடு. காசு கொடுத்துடறேன்.”

“அதுக்கென்ன…!”

“டில்லியிலே அல்பகோராப் பழம் சீப்பு இல்லை?” என்று கேட்டார் ஆதிநாராயணன்.

“இப்ப சீசன் இல்லை” என்றான் பாச்சா.

“நம்பவே முடியலை பூர்ணிமா?”

“ஏதாவது ட்ரிக்கு இருக்கப் போறது. எல்லாமே ப்ளேனா?”

“ஆமாம்.” அந்தக் கடிதத்தைப் பிரித்தான் பாச்சா.

“அண்ணா! மன்னி! இதிலே எல்லாம் புட்டுப் புட்டு வெச்சிருக்கான்!”

‘ அன்புள்ள திரு. கிருஷ்ணசுவாமி,

லிண்டாஸ் நிறுவன சார்பில் வரவேற்புகள். நவம்பர் மாதம் நாங்கள் நடத்திய போட்டியில் நீங்கள் முதல் பரிசு பெற்றிருக்கிறீர்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துக்கள். இந்தப் பரிசுத் திட்டத்தின்படி உங்களுக்கும் உங்கள் மனைவி அல்லது நண்பர் – இருவருக்கு விமான டிக்கெட் போக வர சென்னை – டில்லி – ஆக்ரா – ஜெய்ப்பூர் – டில்லி – சென்னை தரப்படும்.

ஐடிசி நிறுவனத்தைச் சார்ந்த ஓட்டல்களில் டீலக்ஸ் அறையும் டூரிஸ்ட் பஸ்ஸுக்கான சுற்றுலாக் கட்டணங்களும் காலை உணவு, மாலை உணவு, மாலை தேநீர், இரவு உணவு அனைத்தையும் எங்கள் நிறுவனம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும்.

உங்கள் வழிச் செலவுக்காகத் தினம் தலா ரூ. 300 அளிக்கப்படும்.

உங்கள் உல்லாசப் பயணம் இனிதே ஈடேற வாழ்த்துக்கள்.

இவண்,

அருண் ஷிவதஸானி’

பாச்சா கடிதத்தை மடித்து நிமிர்ந்து,

“அண்ணா, உனக்கு நிஜமாகவே மச்சம்! நாலே நாலு வார்த்தைகளுக்கு இத்தனை மவுசா? மன்னி, நீ போய்த்தான் ஆகணுமா? இல்லை, நான் போகட்டுமா?”

“அ! ஆசையைப் பாரு! முதல் முதலா உங்கண்ணாவோட இந்த எலி வளையை விட்டுக் கிளம்பற சான்ஸ் வந்திருக்கு!”

“சும்மா சொன்னேன். சந்தோஷமாப் போயிட்டு வாங்கோ!”

“பாச்சா, முதல்ல மேப்பைப் பாரு. ஆக்ரா எங்கே இருக்குன்னு. ஐ.சி.ஃஎப்.க்கு வடக்கே போனதில்லை நான்” என்றான் சுவாமி.

“நான் தெருக்கோடி தாண்டியதில்லை” என்றாள் பூர்ணிமா.

“பொய்! ஐதராபாத் போயிருக்கே இல்லை?”

“சின்ன வயசில்.”

“குளிரா இருக்குமா?”

“டில்லிலயா? எல்லாம் லெட்டர்ல போட்டிருக்கான் பாரு.” பாச்சா கடிதத்துடன் இணைத்திருந்த குறிப்புகளைப் படித்தான். ‘பருவ நிலை சீராக இருக்கும். ஒரு லேசான ஸ்வெட்டர் அல்லது சால்வை போதும்…’ “மன்னி உங்கிட்ட சால்வை இருக்கா?”

“சால்வைன்னா?”

“ஷால்! புஸுபுஸுன்னு போத்திக்க!”

“என்ன விளையாடறியா, கிழிஞ்சு போன பவானி பெட் ஷீட்டைப் போத்திண்டு இருக்கேன்!”

“அது எங்கே கிழிஞ்சிருக்கு? சும்மா சொல்லாதே” என்றான் சுவாமி.

“பூர்ணிமா, அந்த ஒல்டால் என்ன ஆச்சு?”

“அது எப்பவோ கிழிஞ்சு போயி தரை துடைக்க எடுத்துண்டாச்சே!”

“என்னோட பச்சை ஸ்வெட்டர்?”

“அது அந்துப் பூச்சி பாதி சாப்பிட்டாச்சு…”

“அண்ணா! டில்லிக்குப் போகணும்னா மினிமம் ஒரு ஸ்வெட்டர், நல்ல செருப்பு, டீசண்டா ஒரு ஷூ, மன்னிக்கு மைசூர் சில்க்கில் ஒரு புடவை கட்டாயம் வாங்கித்தான் ஆகணும்!”

“சின்னதா ஒரு லிஸ்ட்டு போட்டுடலாம்.”

புதன்கிழமை அந்தப் பட்டியல் பெரிதாகியிருந்தது. டார்ச் லைட், உலன் ஸாக்ஸ், பருப்புப்பொடி போன்ற உபரிச் சமாச்சாரங்களும் சேர்ந்து கொண்டன. பூர்ணிமா மூன்று நாட்களாக ‘பேக்’ பண்ண ஆரம்பித்தாள். ஒண்டுக் குடித்தனக்காரர்களின் பட்டியலும் நீண்டு கொண்டு வந்தது. கம்பளி நூல், தாஜ் மஹால் மாக்கல் பொம்மை, மயிலறகு விசிறி, மோடா, சப்பாத்திக்கல், மடக்கு நாற்காலி, போட்டோ ஆல்பம், அரை ஸ்வெட்டர்…

“உற்சாகத்தில் எல்லோருக்கும் தலையாட்டாதே மன்னி. நீங்க ரெண்டு பேரும் போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்கோ.” வியாழன் இரவு பூர்ணிமாவும் பாச்சாவும் பேக்கிங் முடித்து விட்டார்கள்.

“கல்யாணம் ஆனதிலிருந்து நாங்க ஹனிமூன்கூடப் போனதில்லை பாச்சா! நேரா இங்க வந்தவதான். விவித்பாரதி, முதலியார் வீட்டு டி.வி., இதை விட்டால் வேற என்டர்டெய்ன்மெண்ட் கிடையாது. உங்கண்ணா ஓவர் டைம், ஓவர் டைம்னு பணம் சம்பாதிக்கிறதிலேயே இருக்கார்.”

“என்ன பண்றது மன்னி? ரங்குடு படிப்பு முடிச்சாகணும். ரேவதி கல்யாணம் பாக்கியிருக்கு. அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணணும். எனக்கு வேலை ஸ்திரமாகணும்…”

“நான் ஒண்ணும் குறையாச் சொல்லலை. டில்லிக்குப் போறது, தாஜ்மகால் பார்க்கிறது என்கிறதெல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாத இந்தச் சமயத்தில் சட்டுன்னு பெருமாள் பார்த்து ஒரு பரிசு கொடுத்திருக்கார் பாரு! அதைச் சொன்னேன். இல்லாட்டா என்னைப் போல அசமஞ்சத்துக்கு ஆக்ரா தட்டுக்கிடறதா!”

“ஏன் மன்னி அப்படிச் சொல்றே? அண்ணா பாரு, இனிமே ரெண்டு வருஷம் பல்லைக் கடிச்சுண்டு இருந்துட்டா! எனக்கும் ஸ்திரமா வேலை கிடைச்சு உங்களுக்கும் எல்லாப் பொறுப்புகளும் முடிஞ்சு போயி…! சொந்தப் பணத்திலேயே எட்டூருக்கு அழைச்சுண்டு போவார் பாரு!”

“யார் கண்டா? அப்ப ஏதாவது தங்கை பிரசவம் வருமோ என்னவோ! இதெல்லாம் அதிக ஆசை வெச்சுக்கக் கூடாது! அதிகமா எதிர்பார்க்கவும் கூடாது!”

வெள்ளிக்கிழமை டிக்கெட் முதலான சமாச்சாரங்களைக் கொடுக்க அந்த விண்டாஸ் ஆசாமி வருவதன் முன் பூர்ணிமா எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்து விட்டாள். பக்கத்துப் போர்ஷனில் நித்யாவிடம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து விட்டு, வேலைக்காரி காலை ஒரு வேளை மட்டும் வந்து துணி தோய்த்து விட்டு, அறையைப் பெருக்கி, வாசற்படியருகில் கோலம் போட்டுவிட்டுப் போகும்படி ஏற்பாடு செய்தாள். பாச்சாவின் சாப்பாடு, பஸ் செலவுக்கு என்று நூறு ரூபாயும் சனிக் கிழமை தேய்த்துக் கொள்ள நல்லெண்ணையும் அரை லிட்டர் பால் சப்ளை, காப்பிப் பொடி என்று சகல ஏற்பாடும் செய்திருந்தாள்.

சாயங்காலம் கிருஷ்ணஸ்வாமி திரும்பி வந்தபோது களைத்திருந்தான். அவனுக்குக் காப்பி கொடுத்துவிட்டு, அறையைச் சுற்றி வரப் பார்த்தாள். ஒல்டால், பெட்டி, பிளாஸ்டிக் பை, கூஜா, பாட்டிலில் தண்ணீர் எல்லாம் காத்திருந்தன.

“எல்லாத்தையும் தயாரா எடுத்து வெச்சுண்டாச்சா?”

“ஒரு வாரமாத் தயாரா இருக்கேன். பாச்சாவுக்குத் தேச்சுக்க எண்ணெய்கூட பாத்ரூம்ல எடுத்து வெச்சாச்சு!”

“எல்லாம் வேஸ்ட்டு!” என்றான் விரக்தியுடன்.

“ஏன் என்ன ஆச்சு, அவன் வரலையா? ஏமாத்தலா?” என்றாள் அதிர்ந்து போய்.

“இல்லை. நான்தான் டில்லி – ஆக்ரா ட்ரிப் வேணாம்னுட்டேன். அவங்களுக்கு ஃபோன் பண்ணி அதுக்குப் பதிலாப் பணமாக் கொடுப்பாங்களான்னு கேட்டேன். பத்தாயிரம் ரூபாய் தர்றதாச் சொல்லிட்டா! வாங்கிண்டுட்டேன்!”

“அப்ப டில்லி கிடையாதா?” அவள் முகம் சின்னதாகி வாடி விட்டது.

“இல்லை.”

“எதுக்கு இப்பப் பணம்?”

“பாச்சாவுக்கு ஸ்டோர்ல காஷியர் வேலை ஆகும் போல இருக்கு. அதுக்கு காஷன் டெபாசிட் கட்டணும். அப்புறம் அம்மாவுக்கு ஆபரேஷனை வெச்சுண்டுரலாம்னுட்டார் டாக்டர்!”

பூர்ணிமா சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எல்லாம் வேஸ்ட் இல்லை?” கண்களில் அவசரப்பட்ட கண்ணீரை உதிரவிடாமல் தடுத்தாள்.

சுவாமி அவளருகில் வந்து பரிவுடன் கன்னத்தைத் தடவி, “உனக்குத்தான் கொஞ்சம் ஏமாத்தம், அப்படித்தானே?”

“பரவாயில்லை. இன்னொரு தடவை ப்ரைஸ் விழுந்தால் ஆக்ரா பார்த்துக்கலாம்” என்றாள்.