இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் அருள்மிகு சௌந்தரியவல்லி உடனுறை சாட்சி நாதர். திருஅவளிவநல்லூர்
*******************
அருள்மிகு சௌந்தரியவல்லி உடனுறை சாட்சி நாதர்.
திருஅவளிவநல்லூர்.கும்பகோணம் வட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம்
காவிரி தென்கரை ஸ்தலங்கள்
********************
அருள்மிகு சௌந்தரியவல்லி உடனுறை சாட்சி நாதர்.
.திருவடிகள் போற்றி போற்றி.....
**** திருச்சிற்றம்பலம்**********
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவஸ்தலம் பெயர்:- திருஅவளிவநல்லூர்
இறைவன் பெயர் :-சாட்சி நாதர்
இறைவி பெயர் :- சௌந்தர நாயகி, செளந்தர்யவல்லி
மரம்: பாதிரி
குளம்: சந்திரபுட்கரணி
பதிகம:- திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
கும்பகோணந்நில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.
திரு அவளிவநல்லூர்
அரித்துவார மங்கலம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612802
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால் 1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது. 2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது. 3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது. 4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது. 5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
தல வரலாறு: -
அவள் + இவள் + நல்லூர் = அவளிவணல்லூர்.
பழங்காலத்திலே இப்பதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பூசித்த ஆதிசைவ அந்தணர் ஒருவர்க்கு இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களில் மூத்த பெண்ணை மணந்தவர் காசியாத்திரைக்குச் சென்றிருந்தனர்.
சென்றபின் அம்மூத்தபெண் அம்மைவார்க்கப்பெற்று உருவின் நிறம் மாறிக் கண் இழந்திருந்தனர். தந்தையார் இளைய பெண்ணை வேறு ஒருவர்க்கு மணஞ்செய்து கொடுத்திருந்தனர்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் காசியாத்திரை சென்றவர் திரும்பிவந்தார். அக்காலம் இளைய பெண்ணும் கணவன் வீட்டிலிருந்து வந்திருந்தனர். மூத்த பெண்ணின் நிற வேறுபாட்டைக் கண்டு `இளையவளே தம் மனைவி. மூத்தவளைத் தம் மனைவி என்று சொல்லி ஆதி சைவ அந்தணர் ஏமாற்றுகின்றனர்`. எனக் கூறி மூத்த பெண்ணை மணந்தவர் வழக்கிட்டனர்.
இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.
இறைவனது பின்பக்கத்தில் இவ் வரலாற்றை உணர்த்தும் பிரதிமைகள் உள்ளன. இவ் வரலாற்றுக்கு ஆதாரமாக அவற்றைக் காட்டுவர்.
1. தம்பரிசுடையார். இப்பெயர் இவ்வூர்க்குரிய திருஞானசம்பந்தர் பதிகத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. சேக்கிழாரும் இப்பெயரைத் ``தம் பரிசுடையார் என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி`` எனக் குறித்துள்ளனர்.
2. சாட்சிநாதர். (திருப்புறம்பயத்துப் பெருமானக்குச் சாட்சிநாதர் என்ற பெயர் உண்டு.)இறைவன் ஆதிசைவ அந்தணரின் மூத்த மகளின் பொருட்டுச் சான்று பகர்ந்தமையின் இப்பெயர் பெற்றார். இறைவியின் திருப்பெயர் சௌந்தரிய வல்லி.
வராகமூர்த்தியும் காசிப முனிவரும் இறைவனை வணங்கிப் பேறு பெற்றனர். அம்மையால் வருந்தி உடல் நிறம் மாறிக் கண் இழக்கப்பெற்ற ஆதிசைவ அந்தணரது மூத்த மகள் இவ்வூர்த் தீர்த்தத்தில் மூழ்கப் பெற்றதன் காரணமாக உடல் வனப்பும், கண்ணும் பெற்றுள்ளனர். இவ் ஊர்க்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.
இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.
உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.
பதிகங்கள்:2.
1. கொம்பிரிய -3 -82 திருஞானசம்பந்தர்
2.தோற்றினான் -4 -59 திருநாவுக்கரசர்
1. கொம்பிரிய -3 -82 திருஞானசம்பந்தர்.
திருஅவளிவணல்லூர்
பண் :சாதாரி
பாடல் எண் : 1
தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
பொழிப்புரை :
இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை அணிந்தவர் . முப்புரிநூல் அணிந்த திருமார்பினர் . திருவெண்ணீறு பூசியவர் . இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர் . ஆகாயத்தில் திரிந்த பொன் , வெள்ளி , இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை , மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்து எரித்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருஅவளிவணல்லூர் ஆகும் .
2.தோற்றினான் -4 -59 திருநாவுக்கரசர்.
திருஅவளிவணல்லூர்.
பண் :
பாடல் எண் : 1
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி வெடுவெடுத் தெழுந்த வன்றன்
ஆற்றலை யழிக்க வல்லா ரவளிவ ணல்லூ ராரே.
பொழிப்புரை :
தீத்தொழிலை உடைய இராவணன் கோபத்தால் தன் பற்கள் உதட்டைக் கவ்வ வெகுட்சியடைந்த போது அவன் கோபத்தைத் தணிக்க வேண்டித் தேரோட்டி உறுதியாகக் கோபத்தை விடுக்குமாறு சொல்ல , தற்பெருமை உடையவனாகிக் கயிலையைப் பெயர்க்க விரைந்து எழுந்த அவனுடைய ஆற்றலை அழித்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .
திருச்சிற்றம்பலம்
********************
அருள்மிகு சௌந்தரியவல்லி உடனுறை சாட்சி நாதர்.
.திருவடிகள் போற்றி போற்றி.....
**** திருச்சிற்றம்பலம்**********
No comments:
Post a Comment