*கர்நாடக சங்கீதம் - சுஜாதா *
(பாகம் - I )
==========================
நுழையும் முன்:
*கட்டுரையின் நீளம் மிக அதிகமென்பதால், Facebook ஒரே பதிவாக அனுமதிப்பதில்லை. தொடரும் என்ற வார்தையைப் பார்த்தாலே வெறுக்கும் திரு. R.C. Natarajan போன்ற அன்பர்கள், இரண்டு பதிவுகளாகப் படிக்கப் பொறுமை இல்லாதவர்கள், பதிவை விட்டு விலகி விடலாம். *
============================
டிசம்பர், சென்னையில் சங்கீத மாதம் ஆறு வாரங்களில் மைலாப்பூர், ஆழ்வார் பேட்டை, திருவல்லிக்கேணி, தி.நகர், நுங்கம்பாக்கம் ராணி சீதை சபாக்களில் சுமார் 700 கச்சேரிகள் நடைபெறும் வித்வான் களுக்குப் பட்டங்கள் கொடுப்பார்கள், ஆந்திர, கேரள கர்நாடக மாநிலங்களிலிருந்தும் வட இந்தியாவிலிருந்தும் அமெரிக்கா விலிருந்தும் நூற்றுக்கணக்கான சிறந்த பாடகர் பாடகிகளும் வாத்தியக் கலைஞர்களும் ரசிகர்களும் வந்து வித்வத்சபைகளில் தம் திறமைகளைத் தொண்டை கட்டும் வரை, கைவலிக்கும் வரை காட்டுவார்கள் அப்துல்கலாம் வருவார், ஜாகிர் உசேன் வருவார், எல். சுப்ரமண்யம் வருவார். ஆராய்ச்சிக் கட்டுரைகளும் விளக்க உரைகளும் பாட்டும் பரதமும் சர்ச்சையும் விமர்சனங்களுமாகப் பட்டுப்புடவை, வைரபேசரி, கைப்பை மாமிகளுமாக ஒரு கோலாகல விழா, கர்நாடக சங்கீதத்தின் தலைசிறந்த விழா நடைபெறும்.
சென்னையின் சீதோஷ்ணமும் அதற்கேற்றவாறு பரிந்து கொடுக்கும், லேசாகக் குளிரும். ஜனவரி பொங்கல் சமயத்தில் திருவையாற்றில் தியாகராஜ உற்சவத்துடன் விழா நிறைவு பெறும். பின்னர் ஏப்ரல் மாதத்தில் பெங்களூர் போன்ற நகரங்களில் ஸ்ரீராமநவமியின் போது தொடரும் அமெரிக்கா கிளீவ்லாண்டில் கூட இப்போது ஆண்டு தோறும் தியாகராஜ உற்சவம் கொண்டாடுகிறார்கள் ஆனால் சென்னையின் டிசம்பா 'சீசன் தான் இந்த சங்கிதத்தில் மெக்கா இதில் தற்போது கொஞ்சம் ஃபயூஷன் கொஞ்சம் வடக்கிந்திய சாதம், மிகக் கொஞ்சம் மேற்கத்திய இசையும் தமிழிசையும், திராவிட, தலித் இசையும், பரதநாட்டியமும் கலக்கத் துவங்கினாலும் பெரும்பாலும் கர்நாடக சங்கிதம் தான முடி சூடா மன்னனாக இதுவரை அரசோச்சுகிறது. அதிலும் தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகள் தான்.
இந்த நேரத்தில் நாம் கண்ணீரில்லாமல் இந்திய சங்கீதத்தின் கூறுகளையும் வட இந்திய மேற்கத்திய கர்நாடக சங்கீதங்களுக்கிடையே உள்ள தேவையான வேறுபாடுகளையும் தேவைப்பட்ட அளவுக்கு அறிந்துகொள்வோம்.
ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன் நான் இதில் எதும் விற்பன்னன் இல்லை, நல்ல சங்கீதத்தை ரசிக்கத் தெரியும். பாடத் தெரியாது. தேர்ந்த சங்கீத விமர்சகர்கள் கேள்வி கேட்டால் சேவித்து ஒதுங்கிவிடுவேன். சுமாராக ராகங்களைக் கண்டுபிடிக்கத் தெரியும். ஐந்து மணிநேரம் கூடப் பொறுமையாக உட்கார்ந்துகொண்டு சங்கீதம் கேட்பேன் இவைதான் என் தகுதிகள் உங்களுடன் சேர்ந்துகொண்டு இந்த அபாரமான சங்கீதத்தைப் புரிந்து கொள்ளச் செய்யும் முயற்சிதான் இக் கட்டுரை. கர்நாடக இசையை ரசிக்கத்தெரிந்தால் வாழ்வு முழுமை பெறுகிறது என்று நம்புகிறவன் நான்
இசையும் தாளமும் கடவுளின் பரிசு என்கிற கருத்து இந்திய நம்பிக்கைகளில் வேரூன்றிய ஒன்று. நாதத்தை உபாசித்து கடவுளை அடையலாம் என்கிற நம்பிக்கை நம்மிடம் உண்டு. நன்றாகப் பாடத் தெரிந்தால் உங்களுக்கு சொர்க்கம் உத்தரவாதம் இசை தெய்வீகமானது. பரதநாட்டியம் இசை, தாளம், நடனம் மூன்றும் சேர்ந்தது. அதற்கு 'கந்தர்வ வேதம்' என்று வேத அந்தஸ்துகூடத் தருகிறார்கள். பொதுவாக இசைக்குத் தெய்வீகத் தன்மை தருவது இந்திய நாட்டில் பழைய வழக்கம், சாம வேதம் இசை வடிவானது. இது கடவுளுக்குப் பிரியம், இதைச் சரியாக இசைத்தால் விளைவுகளைப் பாராது சிவன் போன்றோர் கேட்ட வரங்களைத் தருவர் என்று புராணக் கதைகள் உள்ளன. இராவணன் தன் யாழிசையால் சிவனை வசீகரித்து வரங்கள் பெற்ற சுதை அனைவருக்கும் தெரியும், இராவணன் இமயமலைச் சாரலில் உட்கார்ந்து கொண்டு கையில் அகப்பட்ட தேவர்களையெல்லாம் உப்புச் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் அவன் இசை ஞானத்தால் மனனிக்கப்பட்டிருக்கிறான் தியாக ராஜரின் நாத தனுமனிசம் என்னும் கிருதியில் சொல்லப்பட்டிருக்கும் சரிகமபதநி என்னும் ஏழு ஸவரங்கள சாமவேதத்குரியது என்பார்கள் சோபில்லு சப்தஸவர என்கிற கிருதியிலும் குறிப்பிடுகிறார்.
சங்கீத ஞானமு பக்தி வினா என்ற தன்யாசிராகக் கீர்த்தனையில் சன் மார்க்கத்துக்கு பக்தி கலந்த சாக்த ஞானம் வேண்டும் மனமே என்கிறார்.
இந்த ஸ்வரங்களை tonic solfs என்பார்கள் ஸோல்ஃபா ஸ்வரங் களுக்கான பெயர்களின் தொகுப்பு ஆங்கிலத்தில் எழுத்துகளாக (G A B C D E P) என இருப்பதை
டோ ரே மி ஃபா ஸோ லா டீ
என்று பெயர் வைத்திருக்கிறார்கள்
அதுபோல் நம்
ஸ ரி க ம ப த நி
என்பதற்கும் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம் மத்யமம், தைவதம், நிஷா தம் என்று பெயர்கள்
இதில் - ஆதார ஸ்ருதியான ஸ நடுவே உள்ள ப தவிர மற்றவைகளுக்கு இரண்டு இரண்டு வடிவங்கள் உண்டு
சுந்தர காந்தாரம், ப்ரதிமத்யமம், காகலிநிஷாதம் போன்ற அடைச்சொற்கள் மூலம் அவைகளின் வேறுபாடுகளைக் குறிப்பிடுகிறார்கள்.
இதனால் மொத்தம் இருப்பது பன்னிரண்டு ஸ்வரங்கள் (ஏழு சுத்த ஸ்வரங்களும் ஐந்து அனுஸ்வரங்களும்) half tones ஆங்கிலத்திலும் பன்னிரண்டு ஸ்வரங்களை, டையடோனிக் ஸ்கேல் (Diatonic Scale) என்பர். 'ஷார்ப்,' (Sharp) 'பேஸ்' (Base) என்கிறார்கள் எஃப் ஷார்ப் என்பது எஃப்க்கும் ஜிக்கும் இடையே உள்ள சுறுப்புக் கட்டை பாதி நோட் இதையே ஜி பேஸ் என்றும் சொல்வார்கள். இவைகள் தான் சங்கீதமா என்றால், இல்லை இவைகள்தான் காதுக்கு இனிமையான ஸ்வரங்கள்
சீனத்து ஜப்பானிய சங்கீதம் முழுவதும் மோகன ராகம் போல் Pentatonic.ஆக இருக்கும். தமிழிலும் ஸ்வரங்களுக்குப் பெயர்கள் உண்டு
இந்திய இசைக்கும் மேற்கத்திய இசைக்கும் ஆதாரமாக வேறுபாடு உண்டு. நம் சங்கீதத்தை monophonic என்பார்கள், ஒற்றை நாதம்
மேற்கத்திய சங்கீதம் polyphonic பல நாதங்கள் கொண்டது. நாம் ஒரு இராகத்தில் பாடும்போது அதன் தீர்மானித்த ஸ்வரங்களையும் அவைகளைப் பாடவேண்டிய முறையையும் வரிசையையும் மாற்றாமல் ராகத்தின் ஏற்ற இறக்க (ஆரோகண அவரோகண) விதிகளின்படி பாடுகிறோம். ஒரு ராகத்துக்கு ஏழு ஸ்வரங்களில் ஐந்தாவது வேண்டும். ஏழும் பழகலாம். மேலே போகும்போது ஏழு, கீழே இறங்கும்போது ஆறு. இப்படி வேறுபாடுகள் செய்தாலும் ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டால் அதில்தான் விளையாடவேண்டும் (ராகமாலிகை தவிர).
மேற்கத்திய சங்கீதத்தில் ராகத்துக்கு ஈடாக ஸ்கேல் என்று பார்த்தால் இரண்டுதான் இருக்கிறது - மேஜர், மைனர் என்று.
நம் ராகங்களில் ஒரு கச்சேரியில் ஆதார ஸ்ருதியைவிட்டு நகர முடியாது அவர்கள் ஸ்ருதியை மாற்றி மேஜர், மைனர் ஸ்கேல்களை அமைக்கலாம். உதாரணமாக ஜி மேஜர் என்பதும் எஃப் ஷார்ப் மேஜர் என்பதும் வேறு வேறாக ஒலிக்கும் (ஜி மேஜர் ஜி என்னும் வெளுப்புக் கட்டையில் ஆரம்பிக்கும் சங்கராபரணம் ; எஃப் ஷார்ப் மேஜர் அதன் முன் உள்ள சறுப்புக்கட்டையில் ஆரம்பித்து அமைக்கப் படும் சங்கராபரணம்) அவர்களுக்கு ஸ்கேல் என்பது ஸ்வரங்களுக்கு இடையே உள்ள உறவுமுறை உறவை மாற்றாமல் ஸ்வரங்களை மாற்றலாம். வித விதமாக இசைக்கலாம். ஒரே சமயத்தில் இரண்டு, ஏன் பல வாத்யங்கள், இசைக்கலாம் பல கதிகளில், காதுக்கு இனிமையாக இருக்கவேண்டும். அவ்வளவு தான்
Euphony harmony என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியம். நவீன ஜாஸ் இசையில் ad libbing தவிர கற்பனை பண்ணிப் பாடுவதற்கு அங்கே அதிக சந்தர்ப்பம் இல்லை பீத்தோவன், மொஸார்ட் போன்ற மேதைகள் அத்தனையும் எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டார்கள்
ஓரளவுக்குத் திறமை பெற்றால் அப்படியே எழுதி வைத்ததை இசைக்க முடியும் மேற்கத்திய சங்கீதத்தைப் பற்றி விரிவாக, தனிப்பட்ட கட்டுரை எழுதவிருக்கிறேன் 12 ஸ்வரங்களுக்கு இரண்டிரண்டு ஸ்கேல்களாக 24 'ராகங்கள்' சாத்தியம்.
கர்நாடக சங்கீதத்தில் மேளர்த்தா ராகங்களே 72 சாத்தியம் நூற்றுக்கணக்கான ஜன்ய ராகங்களும் உள்ளன
ஒரு சிம்ஃபனி ஆர்கெஸ்ட்ராவின் குறியீட்டு வடிவைப் பார்த்தால் ஒவ்வொரு வாத்தியத்திற்கும் தனிப்பட்ட பகுதிகளாக எழுதியிருக்கும்
இந்திய கர்நாடக இசையில் பாடகரும் பக்க வாத்தியக்காரர்களும் ஒரே ராகம், ஒரே தாளம், ஸ்வர ஜதிகள் தான். ராகங்களின் தனித் தன்மையை எழுதிவைக்க முடியாது, கேட்டுத்தான் அறியவேண்டும் ஒரு ராகத்தின் ஆரோகண அவரோகணத்தை மேளம் என்கிறார்கள். அதை ஒரு பியானோவிலோ ஆர்மோனியத்திலோ வாசித்துப் பார்க்க இயலும். ஆனால் அந்த ராகம் போல இருக்காது. சில சிறப்பம்சங்களைப் பாடாந்தரங்களைக் கேட்டுத்தான் அறிய முடியும் உதாரணம் தோடி ராகத்தின் ஆரோகண அவரோகணங்களை பியானோவில் வாசித்தால் தோடி போல இருக்காது. அதன் முத்திரையை தனித்தன்மையை, ஒரு phrase-ஐ 'ந அ அ' என்று இழைக்கும் போது உடனே தோடி தெரிந்துவிடும்.
இந்திய சங்கீதம் மிகப் பழமையானது என்று சொல்கிறார்கள் வடக்கிந்திய சங்கீதம், கர்நாடக சங்கீதம் என்று பிரிந்தது கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்கதேவரின் 'சங்கீத ரத்னாகர' என்ற நூலிலிருந்து தெரிகிறது
தென்னிந்திய சங்கீதத்தின் பழமையான ராகம் கரஹரப்ரியா என்றும், அவர்கள் சங்கீதத்தில் காப்பி ராகம் என்றும் சொல்கிறார்கள் நம்மிடமும் காப்பி இருக்கிறது (என்ன தவம் செய்தனை யசோதா)
வடக்கத்திய சங்கீதம் முகலாயர்களின் சந்தூர், சிதார், சரோட் கஜல் சார்ந்த கலாச்சாரப் படையெடுப்பின் பின் ராகங்களை அமைக்கும் விதத்திலும் பாடும் விதத்திலும் மாறிவிட்டது.
ஔரங்கசீப் சங்கீதத்தை வெறுத்ததால் சற்றுப் பின் தங்கிவிட்டது. அதன் பின் கரானா என்கிற ராஜாக்கள நகர் சார்ந்த அல்லது சங்கீதக் குடும்பம் சார்ந்த பாணிகளுக்கு அங்கே முக்கியத்துவம் ஏற்பட்டது.
இங்கே பாணிகள் வித்வான்களை ச் சார்ந்தவை. அரியக்குடி பாணி ஜிஎன்பி பாணி, மகாராஜபுரம் பாணி, மதுரைமணி பாணி செம்மங்குடி பாணி என்று.
வடக்கத்திய சங்கீதத்திலும் ராகங்கள் உண்டு அவாகள ராகங்கள் பல வேறு பெயர்களில் நம் சங்கீதத்திலும் உள்ளன தமிழில் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன சங்க இலக்கியங்களில் பலவிதமான பறைகளையும் பண்களையும் அறிகிறோம். சைவத் திருமறைகளைப் பணனோடு பாடக்கூடிய ஓதுவார்களின் மரபு தமிழ்நாட்டில நூற்றாண்டுகளாக உள்ளது.
இன்று பண்ணையும் கர்நாடக சங்கீத ராகங்கனையும் பொருத்தத் தெரிந்தவர்கள சிலரே இதை வலையில் வைக்க வேண்டிய தேவை உள்ளது. தோடி போன்ற ராகங்கள் தமிழ்நாட்டில் பழங்காலத்திருந்தே உள்ளன என்பார்கள் நம் நாட்டுப்புறப்பாடல்களின் சிந்து வடிவம் பெரும்பாலும் நாதநாமக்கிரயாவில் இருப்பதிலிருந்தே அது பழைய ராகம் என்பது தெரிகிறது.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இயற்பாவைத் தவிர மற்றவை யாவும் பாடக்கூடியவை. பக்தி இலக்கியங்கள் அனைத்தும் செவி வழியாகப் பரவியதற்கு இசையின் பங்கு கணிசமானது. பாசுரங்களை சந்தை சொல்வது என்னும் பழக்கத்தில் நெட்டுருப் போடுவதைக்கூட ஒருவிதமான ராகம் போட்டுத்தான் சொல்லிக் கொடுப்பார்கள்.
தெற்கில் சங்கீதம் மெல்ல வளர்ந்தது. கர்நாடக சங்கீதத்தின் பிதாமகன் 'புரந்தர தாஸர் 'தான்(1484-1564). எளிய கன்னடத்தில் கிருஷ்ணன் பேரில் நிறைய எளிமையான சாகித்தியங்கள் செய்தார் 15-ஆம் நூற்றாண்டில்தான் தல்லப் பாக்கம் சின்னய்யா என்பவர் பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்ற பிரிவுகளைக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள்.
சங்கீத ரத்னாகரம் என்னும் நூலிலும் பல்லவி என்கிற சொல் வருகிறது. 14, 15ஆம் நூற்றாண்டுகளில் இந்த சங்கீதத்தைப் பற்றிய பல நூல்கள் தோன்றின. இப்ராஹிம் அடில் ஷா என்கிற முஸ்லிம் வடநாட்டு மன்னன் (மிக அதிசயமாக) கர்நாடக சங்கீதத் தைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறான் (1580-1627),
மேளகர்த்தா அமைப்பு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே இருந்ததாகச் சொல்கிறார்கள் வேங்கடமயியின் சதுர்தந்தி பிராகசிகை (1615) பிரசித்திபெற்ற 72 மேளகர்த்தா ராகங்ளைப் பட்டியலிடுகிறது. 'மேள கர்த்தா' என்பது ஏழு ஸ்வரங்களையும் ஆரோகணத்திலோ அவரோகணத்திலோ பயன்படுத்தும் ராகம். சங்கீத சார சமக்ரஹ என்பது தெலுங்கில் அவைகளைப் பிரபலப்படுத்தியது.
அடுத்த நூற்றாண்டுகளில் துலுஜ மகாராஜா, கோவிந்தாச்சார் போன்றவர்கள் ராகங்களை நெறிப்படுத்தி நூல்களை வெளியிட்டார்கள்
18-ஆம் நூற்றாண்டுதான் கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம். மூன்று மேதைகள் தோன்றினர்
• சியாமா சாஸ்திரிகள் (1762 - 1827),
• தியாகராஜர் (1767 - 1847),
• முத்துசாமி தீக்ஷிதர் (1776 - 1835)
இவர்கள் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன.
இவர்கள் மூவரும் தோன்றிய அதே காலகட்டத்தில் மேற்கத்திய சங்கீதத்தில்
• பீத்தோவன் (Beethoven) ,
• பாஹ் (Bach) ,
• மொஸாஸார்ட் (Mozart)
மூவரும் தோன்றியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த synchronicity ஐ ஆராய்ந்திருக்கிறார்கள்
தியாகராஜா திருவையாற்றில் பிறந்தது மே மாதம் நாலாம் தேதி 1767. பெரும்பாலும் திருவாரூரிலேயே வாழந்தவர். சிறு வயதிலிருந்தே இராமனை வாங்கியவர் என்பது தெரிகிறது. இராமன் தான் அவருடைய அபிமான தெய்வம்.
தியாகராஜரின் முதல் மனைவி. இளம் வயதில் இறந்து போய்விட, மனைவியின் தங்கையையே மணம் புரிந்தார். அவருக்கு ஒரே ஒரு மகள் மகளுக்கு ஒரு மகன்.
தியாகராஜரின் பேரனுக்குப் பின் வாரிசு.இல்லை. இதனால் தியாகராஜரின் நேர்வாரிசு என்று இன்று யாரும் சொலலிக் கொள்ள முடியாது
எண்ணற்ற கலை வாரிசுகள் அவர் எழுதிய சுமார் 720 கீர்த்தனைகளை உலகெங்கும் பாடுகிறார்கள்.
மனைவி அவருக்கு முன் இறந்துவிட்டாள்.
தினம் தினம் தியாகராஜர் தெருக்களில் பாடி கொண்ட செல்வாராம் உஞ்சிவிருத்தியில் அவருக்குக் கிடைக்கும் தானியங்களைச் சமைத்து உண்பாராம். இதெல்லாம் கொஞ்சம் கதைதான். தியாகராஜர் ஒரு மிகத் தேர்ந்த சாகித்யக்காரர். நிதானமாக உட்கார்ந்து சுரப்படுத்தி பிரமிக்கச் செய்த கிருதிகள் போலத்தான் இருக்கின்றன. தெருவில் பஜனைக்கு ஒன்று இரண்டு ஜிஞ்சக்க ராகங்கள் போதும். தியாகராஜரை வயிறொட்டிப் பாட வைப்பதிலும் அவருக்கு ஒருவேளை சாப்பாடுதான் தருவதிலும் ஒரு ரொமான்ஸ் இருக்கிறது போலும்,
அவர் வாழ்க்கையில் உறவினர்களுடன் சொத்துக்குச் சண்டை யெல்லாம் போட்டிருக்கிறார். இதெல்லாம் அவரது mendicant உருவத்துக்குப் பொருந்தவில்லை என்பதால் பலர் மழுப்பிவிடுகிறார்கள்.
தியாகராஜர் சுமார் 800 பாடல்கள் பாடியிருப்பதாகச் சொல் கிறார்கள் பெரும்பாலும் அவரது தாய் மொழியான தெலுங்கிலும் சில சமஸ்கிருதத்திலும் உள்ள பாடல்கள், தமிழ்நாட்டில் வசித்திருக் கிறார். ஒரு பாட்டுக்கூட தமிழில் பாடியதாகத் தெரியவில்லை அவர் தெருவில் பாடிச் செல்லும் போது மக்களுக்குப் புரிந்திருக்குமா தெரியவில்லை
அவைகள் எளிய தெலுங்கிலதான் இருக்கின்றன அன்றாட வார்த்தைகள் பல பயன்பட்டிருக்கின்றன. கொஞ்சம் முனைந்தால் புரியும் அளவுக்கு எளிமையானவை. சீதம்மா மாயம்மா ஸ்ரீராமுடு நாதல்லி (சீதை என் அம்மா, ராமன் என் அப்பா) என்பது தெலுங்கு தெரியாதவர்களுக்கே புரிந்துவிடும்
=============
*பாகம் - II தொடரும் *
No comments:
Post a Comment