ஸ்ரீ ரமண தரிசனம்....
எதிர்பாராத விருந்து....
ஒருநாள் இரண்டு வறிய பிராம்மணர்கள் ஹாலுக்குள் நுழைந்தனர். அவர்கள் பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் தொழில் செய்பவர்கள்.... சுடுகாட்டில் இருந்து நேராக அவர்கள் ஆசிரமத்துக்கு வந்தனர்... இருவரும் மிகுந்த பசியோடு இருந்தனர்... சுடுகாட்டுக்குச் சென்றுவிட்டு குளிக்காமல் ஆசிரமத்துக்குள் சென்று சாப்பிடுவது சரியா, தவறா என்று அவர்களுக்குள் வாதிட்டனர்...
ஒருவர் பகவானைக் கேட்டார்:
"ஸ்வாமி! குளித்துவிட்டுத் தான் சாப்பிட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
அதுதானே நியாயமும் முறையும்?
பகவான், "நீ சொல்வதை யாரும் நியாயமற்றது என்று சொல்ல முடியாது." என்றார்...
உடனே அடுத்தவர் "பசிக்கொடுமையில் குடலே விழுங்கப் படும்போது சாப்பிடுவது தவறா"என்று ஆவேசமாகக் கேட்டார்....
பகவான் அமைதியாகச் சொன்னார்...
"யார் தவறு என்று சொன்னது?
ஒருபோதும் தவறில்லை."
"சரி.அப்போது யார் உண்மையில் தவறு செய்தார்கள்?".
இரண்டு பேரும் ஒரே குரலில் கேட்டார்கள்.
பகவான் பதில் சொன்னார்:
"நீங்கள் மட்டும் தான் பிணம் தூக்கிகள் என்று எண்ணாதீர்கள்... நாம் எல்லோரும் ஜடமான இந்தப் பிண உடலைச் சுமப்பவர்கள் தாம். இந்த உடல் உண்மையில் பிணம் தான்... எல்லோரும் இதை 'நான் நான்' என்று தூக்கிச் செல்கிறார்கள். நான் இந்த உடல் என்று எண்ணுபவர்கள் எல்லோருமே பிணம் தூக்கிகள் தான்... இந்த எண்ணத்தைத் தாண்டாத வரை ஒருவர் தீட்டில் தான் இருக்கிறார்... அவர் பிணம் தூக்கும் தீட்டிலிருந்து விலக்கப் படவில்லை.
இந்தத் தீட்டு தீரவேண்டுமென்றால் எந்தக் குளத்திலும் குளிப்பது சரியல்ல...
புனித ஆத்ம நீரில் குளிப்பதன் மூலம் தான் இந்தத் தீட்டு விலகும்"என்றார்....
இப்போது அங்கே இருந்தவர்கள் அத்தனை பேரும் தீட்டு.... இரண்டு பிராம்மணர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.... அவர்கள் சாப்பாட்டு அறைக்குச் சென்றனரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது....
ஆனால் அவர்களது ஆன்மப் பசிக்கு பகவானின் வார்த்தைகள் எதிர் பாராத விருந்தாக அமைந்தது...
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!!🙏🙏
திருமதி..T.R.கனகம்மாள்...
No comments:
Post a Comment