Thursday, April 29, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −45

 (தெரிந்து கொள்ளலாமா?..)

தர்ம சாஸ்திரம் பகுதி −45

(ஆசிரியர் − திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)

656. சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகம் இரண்டிலும், கணவனுக்கு இடப்புறமாகத்தான் மனைவி அமரவேண்டும்.

657. சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டே திருமணச் சடங்குகள் நடைபெறவேண்டும். "காலத்துக்கேற்ற கோலம்" என்று மனம் போனபடி சடங்குகளை மாற்றிவிடக்கூடாது.

658.கல்யாண மண்டபங்களில் இருக்கின்ற, அடுத்தவர்களால் அவர்களது திருமணம், உபநயனம், சீமந்தம் ஆகியவற்றுக்கு உபயோகிக்கப்பட்ட ஹோமகுண்டங்களைக் கொண்டு, நம் வீட்டு வைபவங்களை நடத்தக்கூடாது. புதிய ஹோமகுண்டத்தை வாங்கி, அதையே பயன்படுத்த வேண்டும்.

659. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை, திருமணம் முடிந்த பிறகே செய்ய வேண்டும். திருமணம் முடியாமலேயே, தம்பதிபோல் நின்று மற்றவரை வரவேற்பது கூடாது.

660. மஹாளய பக்ஷத்தில் திருமணம், சீமந்தம், உபநயனம், க்ரஹப்ரவேசம் போன்ற எந்த சுபகாரியங்களையும் செய்யக்கூடாது. ஒரு வேளை யாராவது செய்தாலும், நாம் அதில் கலந்து கொள்ளக்கூடாது.

661. திருமணமேடையில் காலணி அணிந்து செல்லக்கூடாது.  அவ்வாறு செல்வது மிகவும் தவறான செயலாகும்.

662. நவராத்திரியில் செய்யப்படுகின்ற "கன்யா பூஜை"யில், ஜாதியைக் காரணம்காட்டியோ, அங்கஹீனத்தைக் காரணம் காட்டியோ எந்தப் பெண் குழந்தையையும் ஒதுக்கி வைக்கக்கூடாது.

அத்தனைப் பெண்குழந்நைகளுமே,"பாலா த்ரிபுரசுந்தரி"யின் வடிவம் என்பதை உணர வேண்டும்.

663. ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படுகின்ற பொரியில்,  கல், நெல், உமி ஆகியவை இல்லாமல், சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

664. திருமணங்களில் தம்பதிகளை ஸம்ஸ்க்ருத சொற்களைக் கொண்டு வாழ்த்தும்போது, அவற்றைப் பிழையில்லாமல் அறிந்துகொண்டு சொல்ல வேண்டும்.  கேள்வி ஞானத்தால் அறிந்ததை வைத்து, தவறாக வாழ்த்துவது கூடாது.

665. பூஜைகளில் ஹோமகுண்டங்களை ப்ரதக்ஷிணம்  செய்யும்போது வயதில் மூத்தவர் முதலிலும், இளையவர்கள் வயதுக்கேற்றபடி ஒருவர்பின் ஒருவராகவும் செய்ய வேண்டும்.

666. திருமணங்களில் மாங்கல்யதாரணமும், பாணிக்ரஹணமும் ஆனபிறகே மணமக்களைக் கைகுலுக்கச் செல்ல வேண்டும்.

667. சஷ்டியப்த பூர்த்தியிலும், சதாபிஷேகத்திலும், மந்திர உச்சாடனத்தினால் சேகரிக்கப்பட்ட கும்பஜலத்தை, மந்திரம் ஜபித்த அந்தணர்களே தம்பதிகளின் சிரசில் சேர்க்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் குடும்ப அங்கத்தினர்கள் இந்தக் காரியத்தைச் செய்யக்கூடாது.

668. எந்தக் காரணத்துக்காகவும் சமித்து, தர்ப்பை, நெய், ஜலபாத்திரம், மண், சமைக்கப்பட்ட உணவு ஆகியவற்றை வைத்திருப்பவர்களை நமஸ்கரிக்கக் கூடாது.

669. சீமந்தம், உபநயனம் போன்றவற்றில் உதயசாந்தி அன்று ஜபிக்கின்ற மந்திரங்கள், அவரவர்கள் எந்த வேத சாகையைச் சேர்ந்தவரோ, அவற்றுக்குரிய மந்திரங்களாகவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

அதாவது க்ருஷ்ணயஜுர், சுக்லயஜுர், ரிக், சாம வேதங்களைச் சார்ந்தவர்கள், அவரவர்கள் சார்ந்திருக்கின்ற வேதத்துக்கான மந்திரங்களையே ஜபிக்க வேண்டும்.

670. குழந்தைக்கு ஒரு ஆண்டு பூர்த்தியாகும்வரை, அதனிடம் முகம் பார்க்கும் கண்ணாடியைக் காண்பிக்கக் கூடாது.

(வளரும்..)

No comments:

Post a Comment