Saturday, April 17, 2021

திருப்புல்லாணி திவ்விய தேசம்/மாயக்கூத்தர் திருக்கோவில் பெருங்குளம்

 காலை வணக்கம் நண்பர்களே.

திருப்புல்லாணி திவ்விய தேசம்

திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது. ராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர். தலவரலாறு புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம். இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு ராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார். சீதையை மீட்க இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்க சமுத்திர ராஜனை அழைக்க மீன்களுக்கு இடையேயான வழக்கை தீர்த்து வைக்கச் சென்றதால் அழைப்பிற்கு உடனே வராமல் சமுத்திர ராஜன் தாமதிக்கவே கரையில் மூன்று நாட்கள் ராமபிரான் தங்கியிருந்த திருத்தலம். தாமதமாக வந்த சமுத்திர ராஜன் காரணம் கூறி மன்னிப்பு வேண்டினார்.இந்த சமுத்திரராஜன் சமுத்திரராணியுடன் சயனராமர் சன்னதியின் முன்மண்டபத்தில் அமைந்துள்ளனர்.

அமைவிடம்

திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயில் ஊர்: திருப்புல்லாணி மாவட்டம்: ராமநாதபுரம் 
தாயார் : ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார்
மூலவர் : ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் 
உட்சவர்: --
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : ராமநாதபுரம்
கடவுளர்கள்: தர்பசயன ராமர்,பத்மாசினி

 பாசுரம் 1 திருமங்கை ஆழ்வார்.

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும்எழு,
பொன்னை நைவிக்கும் அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,
என்னை நைவித்து  எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,
புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து  அழகுஆய புல்லாணியே.

விளக்கவுரை .

கொடிய பாவத்தை உடையேனான நான்
என்னை அழித்துக் கொள்ள இயலாதவனா
யுள்ளேன். ஓ நெஞ்சமே, பொன்னைக் காட்டி
லும் சிறந்த புர புன்னை மலர்களின் மண
முள்ள நிழலிலே என்னை ஈடுபத்தி எனது
மேனி நிறத்தை கவர்ந்து கொண்டு பிரிந்து
போன பெருமானின்இருப்பிடமானபுன்னை
மரசோலைகளால் சூழப்பட்ட புல்லாணியை
வணங்குவோம்.

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.

=========================================================================

இன்றைய கோபுர தரிசனம் 🙏

 அருள்மிகு வேங்கடவாணன், மாயக்கூத்தர் திருக்கோவில்

பெருங்குளம்

தூத்துக்குடி மாவட்டம்

இத்தலம் நவதிருப்பதிகளின் ஏழாவது தலமான சனி பகவானுக்குரிய தலமாகும்.

வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்து தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்ட தாக ஸ்தல வரலாறு. பாலிகை (குழந்தை) தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அவனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் சொல்வார்கள். தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தர் என்ற திருநாமம் பெற்றார்

இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்ச்சவராக பக்கத்தில் எழுந்தருளியுள்ளார்.

No comments:

Post a Comment