காமாக்யா 3
ஏர்போர்ட்டில் இருந்து வெளியேறிய நாங்கள் நேரமாகி விட்டதால் ஒரு லாட்ஜி்ல் தங்கினோம்!! அங்கு சாப்பாட்டு விலை பெட்ரோல் விலை போன்று மிக அதிகம், எனினும்” நானும் ரொட்டியும்”என சாப்பாட்டை ஒரு கை பார்த்தோம்,மறாநாள் காலை வாட்சப்பில் டொய்ங் என சத்தம் கேட்டு நான் எழுந்த போது மணி 8 !!அதற்குள்ளாக வெளியே போய் டீ டிபன் என ரணகளம் செய்து வாட்சப்பில் பகிர்ந்தனர் நம் அதிரடி குழுவினர்...
எழுந்து ஸ்நாநஞ்செய்து தயாராகி வெளியே சென்றோம், முந்தைய தினம் போல் அல்லாமல் ரோட்டுக்கடையில் பசியாற முடிவெடுக்கப்பட்டது...
அங்கே மிக சொற்ப விலையில் சாப்பாடு...நன்றாய் சாப்பிட்டோம்... டீ குடித்தோம்.. பில் 30 ரூபாய் ... அடடே ப்ரமாதம்..
அருகில் ஒரு சிறு சிவாலயம்,
அதனை திறந்து ஒரு ஆவர்த்தி ருத்ர ஜபம் செய்து அந்த லிங்கத்தை வழிபட்டோம்...
இறைவனின் திருநாமத்தை சொல்லி பாடிப்பரவினோம்...
வெள்ளி அன்று காலை பரமேஸ்வரனை வழிபட்டு ஆரம்பித்தது எங்கள் காமாக்யா தரிசண பயணம்...லிங்கத்தின் மேல் இருந்த தாரா பாத்திரமும் திரு ரூபமும் எங்கள் அபிஷேக தீர்த்தம் அதை ஏற்றது எங்கள் பாக்யம்...
கவ்ஹாத்தி அறையை காலி செய்து காளி அவளின் காமாக்யா மலைக்கு பயணமானோம்...
ஜன்னலில் அகன்று பரந்த ப்ரம்மபுத்ரா நதி எங்களை ஆச்சர்ய படுத்தியது... கடல் போன்ற தோற்றம் ப்ரம்மிப்பை தந்தது...
ஏற்ற இறக்கமான சாலைகளை கடந்து வண்டி பயணமானது!
காமாக்யா மலையை வந்தடைந்தோம்...
வீடுகளின் மாடிகள் கெஸ்ட் ரூம் என்ற பெயரில் ஹோட்டல்களாக இருந்தது!
ஒரு அறையை தேர்ந்தெடுத்து தங்கினோம்!!
வெள்ளி மாலை அவளை தரிசனம் செய்ய கொடுப்பினை இருக்குமா என மனம் ஏங்கியது!
நாங்கள் தங்கிய அந்த மஹாமேரு மலை எங்களுக்கு புதியதோர் அனுபவம் தர இருக்கிறது...
குளித்து தயாராகி அவள் ஆலயம் நோக்கி நடக்க எத்தனித்தோம்....
அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தது...
அவளை காண வந்தோம், அவளை அழைத்து வாருங்கள்....
No comments:
Post a Comment