மனதை உலுக்கியது இந்த பதிவு,அதுவும் இன்று அனுஷம்
.ஸ்ரீ பெரியவா திருப்பணியே தினப்பணி.
"அவர் பெயர் அனுஷம்"
.ஒரு அட்ரஸ் தெரியாமல், முழித்துக் கொண்டு, நின்றபோது, அவர் அறிமுகம் ஆனார். நடுத்தர வயதை தாண்டிய, சற்றே பெருத்த, உடல்வாகு, மாநிறம், 55 வயது இருக்கலாம். பொதுவாக பேசாமல், என்னைப்பற்றிய விவரங்களை எல்லாம், துருவித்துருவி கேட்டுக் கொண்டே வந்தார்.
.நானும், வரிந்துக் கட்டினேன்.
.மாமா, உங்க பெயர் என்ன ? என்றேன்.
.என்னை, உற்றுப்பார்த்தார்... அனுஷம் என்றார் !.
.இல்லை, இல்லை, உங்க பெயர் கேட்டேன், மாமா, என்றேன்.
.என் பெயர் தான்ப்பா, அனுஷம் என்றார்.
.நடந்து கொண்டிருந்த நான், அப்படியே சிலை போல் நின்று விட்டேன்.
.அவரிடத்தில் எந்த சலனமும் இல்லை.
.என்ன மாமா, தமாஷ் பண்ணறீங்களா? என்றேன்.
.நான் பிறந்தேன், எனக்கு ஓர் பெயர் பெற்றோர் வைத்தனர்., கொஞ்ச காலத்தில் நான் இறந்து விட்டேன், அப்போ, அந்த பெயரும் செத்துப்போயிடும் இல்லையாப்பா ......?
பிறகு, மீண்டும் பிறந்தேன், இப்போ அம்மா/ அப்பா இல்லை, எனக்கு உயிர் கொடுத்தவரின் அடையாளத்தை, என் பெயராக வைத்துக் கொண்டேன், என்றார்.
.மாமா, என்னை மன்னிச்சிடுங்க, நான் ஏதேனும் தப்பா பேசிட்டேனா? நீங்க இப்படி எல்லாம் பேசறேளே? .....
அவர் என் கைகளை பிடித்துக் கொண்டார்.
.இல்லை, சங்கர் திரிவேதி, நீங்கள் கேட்டது சரிதான். விவரமாக சொல்கிறேன் என ஆரம்பித்தார்.
."தினமும் போகிற மாதிரிதான், அன்றைக்கும், வெளியே கிளம்பினேன். அவ்வளவு தான் தெரியும் . ஒரு பெரிய விபத்து.
என்மனைவி கதறுகிறாள்...
எல்லாம், முடிந்து விட்டதம்மா ; கடவுள் கூட காப்பாற்ற முடியாது ; யாருக்காவது தகவல் சொல்லனும்னா, சொல்லிடுங்க - என டாக்டர் பேசப்பேச, என் மனைவி அவர் காலில் விழுந்து கதறுகிறாள். என்னுள், அசைவு இல்லை.
.கண்கள் திறக்கவில்லை, மூடியபடியே இருக்கிறது....
ஆனால், நடப்பதெல்லாம் தெரிகிறது,... பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
மஹாப்பெரியவா, என் எதிரில் நின்று கொண்டு, " நீ சும்மா இரு, அவாள்ளாம் பேசட்டும் " என்று சைகை காட்டுகிறார்.
.நான், பேசுவது யார் காதிலும் விழவில்லை,
மனைவி இன்னமும், கதறிக் கொண்டே இருக்கிறாள்...
மகாப்பெரியவா, தன் கையில் உள்ள தண்டத்தால், எனது தலை முதல் கால் வரை தடவிக் கொடுத்து விட்டு, உடன் மறைந்து விட்டார்.
.என்னுள் சிலிர்ப்பு, உரக்க கத்துகிறேன், டாக்டர் காலில் விழாதே, நான் உயிரோடு தான் இருக்கிறேன், நான் சவம் இல்லை.
பெரியவா சிவம், என்னை காப்பாற்றிவிட்டார் என்று கதறுகிறேன். அவர்களை பொறுத்த வரையில், நான் கடைசி மூச்சில் உள்ளேன்.
மறுநாள், டாக்டர் வந்தார், எப்படி இருக்கீங்க டாக்டர் ? என்றேன், அவர் வியந்து போய், நர்ஸ், மனைவி என எல்லோரையும் உள்ளே, வரவழைத்து விட்டார்.
Oh, GOD, WHAT IS THIS ??? என்றபடி, ஸ்டெதாஸ்கோப்பை மார்பில் வைத்து பலதடவை சோதித்தார்.
.பின்னர், வீட்டில் ஒரு மாதம் ரெஸ்ட்டில் இருந்தேன். எனது முழு சொத்தையும், மனைவியிடம் ஒப்படைத்துவிட்டேன்.
ஒவ்வொரு மாதமும் அனுஷ பூஜை நடத்த ஆரம்பித்தேன்.
. என் உயிரை மீட்டுக் கொடுத்த, மகாப் பெரியவாளுக்காக ...... வாழ ஆரம்பித்தேன். மகாப் பெரியவாளின் ஓரிக்கை மணிமண்டபத்திற்கு, என்னால் முடிந்ததை செய்கிறேன்.
.இரண்டு மாதம் கழிந்தது. திருமதி M.S. அம்மா அவர்கள் நடத்திய டிரஸ்ட் மூலம் கும்பகோணம் மகாமக விழாவில், ஸ்ரீ பெரியவாளின் ஓரிக்கை மணிமண்டப திருப்பணிக்காக நிதி திரட்டும் பணியில், பலரில் உங்களையும் அனுப்ப முடிவாகி இருக்கிறது, போகிறீர்களா ?? என கேட்டார், அனுஷம் மாமா.
.கும்பகோண மகாமக உற்சவத்தில், அந்த மக்கள் வெள்ளத்தில், எங்களையும் இணைத்துக் கொண்டு, ஜயஜய சங்கர ஹரஹர சங்கர என்று உண்டி குலுக்கினோம். உண்டியும் நிறைந்தது, எங்கள் மனதும் நிறைந்த்து.
.சென்னை வந்த பிறகும், என்னுடைய நேரத்தை அதிகபட்சம், இதற்காகவே அர்ப்பணித்தேன்".
.அவர் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். நானோ, மரம் போல் நின்றிருந்தேன் !.
.இன்று, ஓரிக்கை மணிமண்டபத்தை சுற்றிப் பார்க்கும் போது, எத்தனை ஜாம்பவான்கள் இதற்காக தங்களை கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் ; எத்தனை எத்தனை பேர், அணில் போன்று ஓடி ஓடி உழைத்திருக்கிறார்கள் ;பணம் கொடுத்தவர்கள், உடல் உழைப்பை கொடுத்தவர்கள், காலம்,நேரம் பார்க்காமல், இதற்கு ப் பின்னால் தங்களை, கரைத்துக் கொண்டவர்கள்... என இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே உருவான அந்த சிற்பங்களும், ப்ரும்மாண்ட தூண்களும், இந்த கதையை எல்லாம், மகாப் பெரியவாளிடத்தில், ஒவ்வொரு இரவும் அமானுஷ்யமான அமைதியில் அவரிடம் விலாவாரியாக தினம் தினம், கதை கதையாக சொல்லிக் கொண்டே தான் இருக்கும்.
.ஸ்ரீ பெரியவாளும், இதை எல்லாம் ரசித்து கேட்டுக் கொண்டுதான் இருப்பார்.
.அந்த சிற்பங்கள் சொல்லும் பக்தர்களின் அத்துணை வரலாற்று சம்பவங்களும், ஓரிக்கை ஸ்ரீ மகா பெரியவா மணி மண்டபத்தின் பக்தர்களின் எழுதப்படாத காவியமாகும்.
.அதில் இந்த மாமாவின் பெயரும் கண்டிப்பாக இருக்கும்.
.ஆம், அவர் பெயர் அனுஷம்.*
மோட்ஷத்தின் நுழைவு வாயில் ஓரிக்கை மணிமண்டபம்.
பெரியவா சரணம்🙏🏻😊பெரியவா போற்றி 🙏🏻😊
No comments:
Post a Comment