Saturday, April 17, 2021

ஊறுகாய்களை உபயோகப்படுத்தும் முறை

 ஊறுகாய்களை உபயோகப்படுத்தும் முறை: 

(இந்த குறிப்புகள் அனைத்தும் ஊறுகாய் பயன்படுத்தும் முறை தெரியாதவர்களுக்காக)

🌹. ஊறுகாயை எடுக்க மர ஸ்பூனை பயன்படுத்தவும்.

🌹. குளித்த பின் தான் ஊறுகாயை தொட வேண்டும். அன்னிக்கு எவ்ளோ தேவைப்படுமோ அந்த அளவு ஊறுகாயை ஒரு மாக்கல் கின்னத்திலோ அல்லது எவர்சில்வர் கின்னத்திலோ அல்லது பீங்கான் கின்னத்திலோ எடுத்து வைத்துக் கொள்ளவும். மீண்டும் மறுநாள் குளித்த பின் தான் தொட வேண்டும்.

🌹. பத்து இல்லாமல் வைத்துக் கொள்ளவும்.

🌹.  ஊறுகாயில் இருக்கும் விழுதை மட்டுமே எடுத்து பயன்படுத்தவும். அதில் இருக்கும் எண்ணெய்யை எடுக்காமல் இருந்தால் ஊறுகாய் கெடாமல் நன்றாக இருக்கும். எப்பவுமே ஊறுகாய் மேல் எண்ணெய் படலம் இருக்க வேண்டும்

🌹.  ஊறுகாய் கெட்டு விடுமோ என்ற பயம் இருந்தால் விட்டிலேயே அடுப்பில் வைத்து சிரிது கிளறியோ அல்லது வெய்யிலில் வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

ஊறுகாய் போட்டு வைக்கப் பயன்படும் மாக்கல் கின்னம்.



No comments:

Post a Comment