ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -06 10) தாளவாடி ராமர் கோயில்...
★தாளவாடி ராமர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம், தாளவாடி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்த ராமர் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிர்வாகியால் நிர்வகிக்கப் படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கிறது.
11) காளசமுத்திரம் ராமச்சந்திரபெருமாள் திருக்கோயில்...
★ ராமச்சந்திரபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், காளசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் ஶ்ரீ ராமர் சன்னதி உள்ளது. இந்தக் கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை முக்கிய திருவிழா நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
12) நல்லூத்துக்குளி இராமர் கோயில்...
★ இந்த கோயிலானது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், நல்லூத்துக்குளி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் ராமர் ( கண்ணாடிப்படம்) சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
No comments:
Post a Comment