Thursday, April 15, 2021

கொண்டக்கடலை குருமா / பூண்டு ரசம்

 கொண்டக்கடலை குருமா

தேவையான பொருட்கள்

கொண்டக்கடலை 1 கப் வேக வைத்தது

வெங்காயம் 2
தக்காளி 2
மல்லி இலை
இஞ்சி பூண்டு விழுது 1 மேஜை கரண்டி
பட்டை , கிராம்பு , சோம்பு ,
தேங்காய் , சோம்பு விழுது 2 மேஜை கரண்டி
உப்பு , மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி
எண்ணெய்

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , சோம்பு போடவும்

வெங்காயம் போடவும்

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது

பின் தக்காளி

நன்கு வதங்கியதும் உப்பு , மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி

பின் வேகவைத்த கடலை

தண்ணீர் ஊற்றவும்

தண்ணீர் கொதிக்கும் போது அரைத்த தேங்காய் சோம்பு விழுது போடவும்

ஓரு கொதி வந்ததும் மல்லி தூவி இறக்கவும்

========================================================================

பூண்டு ரசம்

தேவையான பொருட்கள்

புளி நெல்லிக்காய் சைஸ்

உப்பு தேவைக்கேற்ப
மஞ்சப்பொடி சிறிது
மிளகாய் வற்றல்1
பூண்டு 12 பல்
மிளகு பொடி 1 டீ ஸ்பூன்
துருவின தேங்காய் 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1 டேபிள் ஸ் பூன்

செய்முறை

புளி கரைத்து உப்பு, மஞ்ச பொடி, மிளகாய் வற்றல்,மிளகு பொடி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்

பூண்டு ,சீரகம், தேங்கா கரகரப்பா அரைத்து வதக்கி ரசத்தில் போட்டு சூடு பண்ணவும்

பூண்டு வேக வைத்து போடவும்

நெய்யில் கடுகு ,பெருங்காயம்,சீரகம் தாளித்து கறிவேப்பிலை போடவும்


No comments:

Post a Comment