திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி தரிசனத்துக்குப் போனார்கள் பெரியவா.
புத்தி சரியில்லாத ஒரு பையனை சங்கிலியால் கட்டிப் போட்டு, ஓர் ஆளுடன் சேர்த்து வெளிப் பிரகாரப் பிரதட்சிணம் செய்ய அனுப்பி வைத்தார்கள்.
பையன் முரண்டு பண்ணியதால், துணைக்கு வந்த ஆள் கழியால் அடித்து இம்சித்தான்.
பைத்தியக்காரப் பையன் படும் கஷ்டத்தைப் பார்த்துப் பெரியவாளுக்கு இரக்கம் உண்டாயிற்று.
"கட்டுகளை அவிழ்த்து விடு. பையன் ஒண்ணும் செய்யமாட்டான்." என்றார்கள்.
கட்டை அவிழ்த்து விட்டதும் பையன் நேரே பெரியவாளிடம் வந்து நமஸ்காரம் செய்தான்.
"அவன் என்னுடன் வரட்டும்" என்றார்கள், பெரியவாள்.
பையன் ஸ்ரீ மடத்திலேயே இருந்து வந்தான். சேஷ்டைகள், தொல்லைகள் செய்வதில்லை. சில நாட்களில் அவனுடைய பைத்தியம் தெளிந்து. ஸ்ரீமடத்தில் சின்னச்சின்ன வேலைகளை செய்து வந்தான்.
பிறகு, அவன் பெற்றோரைக் கூப்பிட்டு அனுப்பி, "இவனைப் பள்ளிக்கூடத்திலே சேர்த்து, படிக்க வை"
என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்கள், பெரியவா.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
No comments:
Post a Comment