காமாக்யா - 5
கோவிலின் ப்ரம்மாண்ட நுழைவாயிலை கடந்து உள்ளே சென்றோம், உடனே போட்டோ எடுக்க ஆரம்பித்தனர் நம் குழுவினர்! அனைவரையும் திரட்டி கோவில் முன் பக்கத்தை அடைந்தோம், கோவில் சுவர்கள் இரண்டு வகையான கட்டட வேலைகளை கொண்டிருந்தது,
கீழ் சுவர்கள் பழையதாகவும்,மேற் சுவர்கள் சற்று புதியதாகவும் இருந்தது, ஆம் மிலேச்ச துளுக்கர்களால் அக்கோவில் இடிக்கப்பட்டதாக பலவேச குமார் சொல்லி இருந்தார், நினைவலைகள் எங்கோ சென்றது! உங்கள் மூர்க்கத்தனத்தை என் தலைமுறை வரை காண்கிறதே!? மனித ஜென்மங்களே அல்ல நீங்கள் என நினைத்துக்கொண்டேன்...
மேற்கொண்டு நடந்தோம் இடது புறம் ஓரிடத்தில் தீபம் ஏற்றி பத்தி ஏற்றி வழிபட ஒரு இடம் உள்ளது அதை கடந்து கோவிலின் முன்பக்கம் உள்ளே சென்றோம் அங்கே கதவு பூட்டு போடப்பட்டு இருந்தது, உள்ளே ஒரு பீடம் அமைக்கப்பட்டிருந்தது, முதலில் இது தான் மூலாலயமோ என்று ஐயம் கொண்டேன், பின்னர் விசாரித்ததில் பின்புறம் உள்ள தீர்த்தமே மூலாலயம் என அறிந்தோம்...
சுலப எண்ட்ரி டிக்கெட் 500 ரூபாய் என்றனர், மனதில் ஏதோ தோன்ற க்யூவில் செல்வதாய் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தோம், முதலாளியை சிரம்ப்படுத்தக்கூடாது என்று நினைத்தேன், நல்ல வேளையாக க்யூ நெடுகிலும் இரு புறமும் அமரும் வகையில் திண்டு செய்துள்ளனர்,க்யூ நகருவதற்கு வெகு நேரம் ஆவதை உணர்ந்தேன்...
க்யூவில் நுழைந்து உள்ளே போன உடன் வாங்க சாமி என என்னை வரவேற்றார் ஒருவர்! வணக்கம் என்றேன், எங்க இருந்து வறீங்க!? திருநெல்வேலி என்றேன்... அம்பாள் அடுத்த இரண்டு நாட்களுக்கான தூதனை அனுப்பி இருந்தாள்...போய் அமர்ந்த உடன் சஹஸ்ரநாமத்தை ஆரம்பித்தோம்.. ஶ்ரீ மாதா ஶ்ரீ மஹாராஞ்ஞீ என ஆரம்பித்த கனமே தேவ லோகத்திற்குள் செல்ல ஆரம்பித்தோம்...
ஐவர் சேர்ந்து சொன்னோம், உடன் வந்த நம்மவர்கள் மிகுந்த கன்னியத்தோடு அருகில் அமர்ந்து கேட்கலுற்றனர், அருகில் மலர் விற்றவர்களிடம் இருந்து பூக்களை வாங்கினார் முதலாளி, என் கைகளில் ஒரு தாமரை வந்தது, வாய் சஹஸ்ரநாமத்தை சொல்லிக்கொண்டே மனம் அம்பிகையின் வீடான.. சிந்தாமணி க்ருஹத்தை சிந்திக்கிறது,
அடர்ந்த கதம்ப வனம் ஒன்று இருக்கிறது,மஹா பத்மாடவீ குளம் ஒன்று இருக்கிறது, ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்கள் ஆயிரம் நிரம்பிய குளம் அது, அந்த தாமரைகளின் நடுத்தாமரையில் சிந்தாமணி க்ருஹம்(வீடு) அமைந்திருக்கிறது, அந்த வீட்டின் உள் நுழைந்தால் சூர்யர்களும் சந்த்ரனும் அவளை ஆராதித்து நிற்கின்றனர், தேவாசுரர்,சனாகாதியர் ஏனைய ரிஷகள்,அனிமாதிகள் தபஸ் கொண்டுள்ளனர்,அடுத்த பத்தியில் ப்ரம்ம விஷ்ணு மஹேஶ்வராள் இருக்கின்றனர், நடுவே மஹாமேரு இருக்கிறது, அறுபத்து நான்கு (கோடி)யோகினிகள் அறுபத்து நான்கு மேரு முகடுகளில் அவளை நோக்கி தபஸ் செய்கின்றனர், மஹா மேருவின் மத்தியில் பஞ்சப்ரம்மங்களால் ஆசனம் ஒன்று உள்ளது, தச மஹா வித்யாக்கள் உள்ளனர், நடுவில் கண்களால் காணக்கிடைக்காத, கோடி சூர்ய ப்ரகாசமாய் அம்பிகை ஜ்யோதி ரூபமாக இருக்கிறாள்...
என் கைகளில் வந்த தாமரை அந்த பத்மாடவி குளத்தில் உதித்த ஒரு சிறு பூவாக இருத்தல் வேண்டும்! அரளிப்பூக்களால் அவளை அர்ச்சித்து பழகிய எனக்கு இந்த தாமரை கொண்டு அர்ச்சிக்க இது வரை ப்ராப்தி இல்லை, இன்றே அந்த ப்ராப்தி வந்திருக்கிறது, முதலாளி வாங்கித்தந்த புஷ்பம்
சதீஷ் அண்ணா,செவல் அண்ணா,என் மாமா,பூபதி மாமா,அடியேன் ஒரே த்வணியில் சொல்லிக்கொண்டிருந்தோம், வரிசை மெல்ல நகர்கிறது, வலது புறம் அந்தக்கோவில் பண்டாக்கள் ஹோமங்கள் செய்கிறார்கள், இடது புறம் ஒரு எருது பல ஆடுகளை கட்டி வைத்துள்ளனர், அது பலிசாலையாக இருத்தல் வேண்டும்!
சஹஸ்ரநாம ஜபம் முடிந்தது மனதில் ஒரு பூரிப்பு, எப்போது நான் சஹஸ்ர நாமம் சொன்னாலும் பட்டாம்பூச்சி ஒன்றை காண்பேன், அன்றும் வந்தது, அவள் இருக்கும் இடம் வசந்தமாகும், வசந்த காந்தி வந்தால் அதை அறிந்து அந்த பட்டாம்பூச்சி வரும் போலும்...
அருகில் ஒரு மாதரசி தேவி மஹாத்மியம் வாசிக்கிறாள்... ஆச்சரியம் இல்லை, வந்திருக்கும் இடம் மஹா மேரு....
கேடு கெட்ட மனித ஜென்மமாய் பிறந்துவிட்டோம் மனம் ஒன்றரை நாழிகைக்கு மேல் லயிக்க ஶ்ரம்ப்படுகிறது...
மற்ற பேச்சுகள் வருகிறது... அதை சிந்தித்த மருகணம், பெண்கள் சிலர் அவளை துதித்து பஜனை செய்ய ஆரம்பித்தனர்....
மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்....
காமாக்யா அம்பிகை தரிசனத்தை அடுத்த பதிவில் காண இருக்கிறோம்... உடன் அழைத்துப்போகாதவர்களுக்கு இச்சிறுவனின் கிறுக்கள்களில் தரிசனம் செய்யுங்கள்....
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சேவிக்கும் அவள் திருவடி தரிசனம் மனக்கண்களில் விரியட்டும்.... அதை விடவா ஒரு பயன் என் நட்பால் உங்களுக்கு கிடைத்திடும்
No comments:
Post a Comment