Friday, April 16, 2021

காவி சூரணம்

 கேள்வி எண் 125 : பெண்களுக்கு உதிரப்போக்கு நான்கு நாட்களையும் தாண்டி , 8 நாள்,  10 நாள்,  20 நாள் என்று தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அதை நிறுத்துவதற்கு இயற்கை வைத்தியம் என்ன? 

பதில் : ஒரு சாதாரண களிமண்ணில் செய்யப்பட்ட செங்கல்லை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஹாலோ பிளாக் செங்கல்லை எடுக்கக்கூடாது. ASH செங்கல் எனப்படும் சாம்பல் செங்கல் எடுக்கக்கூடாது.

களிமண்ணில் , செங்கல் சூளையில் தயாரிக்கப்பட்ட சாதாரண செங்கல் தான் இதற்கு உகந்தது.

அதை காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நேரடியாக வெயிலில் படுமாறு வைக்க வேண்டும்.

பிறகு சுத்தியல் அல்லது கல்லைக் கொண்டு நன்றாக உடைத்து மண் போல தூள் செய்ய வேண்டும்.

அதன் பிறகு,  ஒரு பருத்தித் துணியில் அந்த செங்கல் பொடியை போட்டு லேசாக குழுக்க வேண்டும்.

பருத்தி துணியில் இருந்து வெளியே வரும் பொடியை எடுத்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வெள்ளை நிற கல்கண்டை  நன்றாக பொடியாக செய்யது அதை ஒரு பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும்.

செங்கல் பொடியையும் கல்கண்டு பொடியையும் சம அளவில் கலந்து, காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு லேசான சுடுதண்ணி குடித்தால் உதிரப்போக்கு நிற்கும்.

இதற்கு காவி சூரணம் என்று பெயர்.

இதுபோல நீங்களே தயாரிக்க முடியவில்லை என்றால் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைக்குச் சென்று காவி சூரணம் என்று கேட்டு வாங்கி சாப்பிடலாம்.

இந்த சிகிச்சை ஒரு முறை செய்தாலே உதிரபோக்கு நின்று விடும்.ஒருவேளை ஒருமுறை செய்து குணமாகவில்லை என்றால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் முயற்சி செய்யலாம்.

மூன்று நாட்களுக்கு மேல் இந்த சிகிச்சையை செய்யக்கூடாது.

ஒரு முறை மூன்று நாள் முயற்சி செய்தால் , மீண்டும் 30 நாட்களுக்குப் பிறகு தான் செய்ய வேண்டும்.

மூன்று நாள் இந்த சிகிச்சை செய்து குணமாகவில்லை என்றால் உடனடியாக ஏதாவது நல்ல மருத்துவரை பாருங்கள்.

இந்த சிகிச்சை நிரந்தர தீர்வல்ல

இந்த சிகிச்சை தற்காலிக தீர்வே

இந்த சிகிச்சையின் மூலம் உதிரப்போக்கு நின்றுவிட்டால் உடனே குணமாகிவிட்டது என்று நினைக்க வேண்டாம்.

இப்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது என்று புரிந்துகொண்டு , அடுத்த மாதம் முதல் இது போல் வராமல் இருப்பதற்கு எனது ஐந்து நாள் வகுப்பில் கூறிய வழிமுறைகளை உடனடியாக பாலோ செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

இப்படிக்கு.

ஹீலர் பாஸ்கர்.


No comments:

Post a Comment