Saturday, April 24, 2021

காமாக்யா 2

 காமாக்யா 2

வேண்டும் பொருள் எதுவாயினும் அதன் மீது ஏற்படும் ஆசை காம்யம்... காமாக்யாவில் விரும்பும் பொருளாக, விரும்பப்படும் நிறைவாக அவள் இருக்கிறாள்.... காமாக்யா தேவி அவள் தேடல்களின் ஆசைகளின் வ்ருத்திகளின் பரம்பொருள்

கவ்ஹாத்தி விமான நிலையத்தை அடைந்தோம்.... சில பல போட்டோக்களை எடுத்தோம்... 

எங்கள் கைகளில் ஒரு பார்ம் கொடுக்கப்பட்டது, அதை நிரப்பினோம், மாவட்டத்தின் பேரை கேட்டார்கள் கூகுளிம் விசாரித்தோம் மாவட்டம் பெயர் “காமரூப்” என்றிருந்தது...வெளியே செல்லலாம் என்றிருந்த போது தடுக்கப்பட்டோம்,

கொரானா டெஸ்ட் எடுக்க எங்களை அனுப்பினர், அதே ப்ளைட்டில் வந்த கவ்ஹாத்தி காரனுங்கள போக விட்டானுங்க.. உள்ள போனா முழுவதும் சினிமா செட் போல ஒரு லேப்...

இந்தியில் மாலும் ஹே செய்த பெங்களூர் மாமா விவரங்களை கேட்டார்... ரிட்டன் டிக்கெட் 24 மணி நேரத்திற்குள் இல்லை, அதனால் உங்களை அனுமதிக்க முடியாது என்றனர், கொரானா டெஸ்ட் எடுக்க வேண்டும், அதன் ரிசல்ட் வரும் வரை இந்த கூடாரத்தில் தான் என்று பயமுறுத்தினர்...

இதென்ன சோதனை...

மொத்த ஐந்து நாள் பயணத்தில் ஏழு நாள் கொராண்டைன் எனில் இந்த ப்ரோக்ராம் கெட்டுவிட்டது என்ற மனபாரம்... ஆனால் அறிவு வேறு ஏதோ சொன்னது... தொடர்ந்து இந்தியல் மாட்லாடி “ரேபிட் டெஸ்ட் எடுத்து உடனே ரிசல்ட் பார்த்து நெகட்டிவ் எனில் வெளியே செல்லலாம் என்று தகவல் வந்தது...

பாசிட்டிவ் வந்தால்!? அடுத்த ப்ளைட்டில் அனுப்பி விடுவர் அல்லது கொரண்ட்டைன்...

உடன் அமர்ந்திருந்தவரிடம் சொன்னேன்... ஒருவருக்கு பாசிட்டிவ் எனில் அனைவரும் திரும்பி விடுவோம் என... காரணம் வந்தோர் அனைவரோடு அவளை தரிசனம் நல்ல முறையில் செய்ய வேண்டும் என சங்கல்ப்பம் செய்திருந்தேன்...

ரேபிட் டெஸ்ட்

ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய், கட்டித்தொலைந்தோம்... நாலஞ்சு பீடா வாயன்கள் தான் டெஸ்ட் ஆபீசர்ஸ், சல்லான் கட்டி காத்திருந்தோம், உடன் வந்த ஒருவருக்கு காலை காச்சல் இருந்தது நினைவு வந்தது...இவ்ளோ தூரம் வந்து ஏமாத்தீடாதே என அவளிடம் திட்டி வைத்தேன்...

டெஸ்ட்டுக்கு கூப்பிட்டனர்...

ஒரு நீள குச்சியை எடுத்து மூக்குக்குள் விட்டு நோன்டினான் அது பின்னந்தலையை தொட்டதை உணர முடிந்தது, கண்களில் இருந்து கண்ணீர் வரும் வரை விட்டு சுற்றினான் அந்த சண்டாளன்.... முடிந்தது அப்பாடா என நினைத்த போது அடுத்த கவுண்ட்டரில் கூப்பிட்டான்... அடுத்த குச்சியை தொண்டையில் விட்டான்.. வாமிட் வரும்போல இருந்தது... சத்தியமாய் இவனுங்க மெடிக்கல் வகையறாக்கள் இல்லை...,ஏதோ துஷ்ட்டர்கள்....

அனைவருக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டு காத்திருந்தோம்....

நான் எதிர்பார்த்தது போலவே ஒருவருக்கு பாசிட்டிவ்...என போன் வந்தது...தொலைந்தோம்...அதே போன் காலில் ரூபாய் கொடுத்தால் நெட்டிவ் போட்டு தருவதாய் சொல்லி முடித்தான்...

அப்பாடா......

அனைவருக்கும் நெகட்டிவ்....

அடேய்களா

இவனுங்க தமிழக திராவிட கட்சிகளை விட மோசமானவனுங்க.....

எது எப்படியோ அம்பாள் அனுக்ரஹம் வெளியே வந்தோம்....

முதலாளி.....இவனுங்க பண்றதுக்கு பாஜக என்ன பண்ணும்னு சங்கியாக மாறியது அல்டிமேட்....

அம்பிகை பூமிக்கு

வண்டி கிளம்பியது....



No comments:

Post a Comment