Thursday, April 29, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −43

(தெரிந்து கொள்ளலாமா?..)

தர்ம சாஸ்திரம் பகுதி −43

(ஆசிரியர் −திரு.V.ராஜகோபால கனபாடிகள்..)

626. கோலங்கள் தினமும் வாசலில் அரிசிமாவைக் கொண்டு அன்றன்று இடவேண்டும்.பெயிண்டால் வரைந்தோ, ஸ்டிக்கர் கோலமோ வீட்டிற்கு சுபிட்சத்தை அளிக்காது.

627. வீட்டில் பூஜையறையிலும், வாசல் நிலைப்படி அருகிலும், சூரிய உதயத்தின்போதும், அஸ்தமனத்தின் போதும், பெண்களாலேயே திருவளக்குகள் ஏற்றப்பட வேண்டும். கணவரோ, வேலைக்காரரோ ஏற்றுவது சரியல்ல.

628. கர்ப்பிணிப் பெண்கள் மரம், செடி வெட்டுவதைப் பார்க்கவும் கூடாது. அந்த மாதிரி இடங்களில் இருப்பதும் கூடாது.

629. கர்ப்பிணிப் பெண்கள் எந்த கெட்டவார்த்தைகளையும் கேட்கக் கூடாது. தொலைக்காட்சி, திரையரங்கு இவற்றிலிருந்து வருகின்ற ஒலிகளும் குழந்தையின் புத்திசாலித்தனத்தைக் குறைக்கும் என்பதால், இவற்றை அறவே விலக்க வேண்டும்.

630. குழந்தை பிறந்து நாற்பது நாட்கள் வரையிலும், குழந்தையையும், தாயையும் வேறு வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது.

631. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகளைத் தாய்வீட்டிலிருந்தும், மருமகளைக் கணவன் வீட்டிலிருந்தும் அனுப்பி வைக்கக்கூடாது. அதுபோன்றே அவர்கள் இருக்கும் இடங்களிலிருந்தும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தாய்வீட்டிற்கோ, கணவன் வீட்டிற்கோ அனுப்பி வைக்கக் கூடாது.

632. குழந்தைக்குப் புண்யாவசனம் செய்கின்ற நாளில், தாய் சிறிது பஞ்சகவ்யம் சாப்பிடாமலும், தாலிச்சரட்டை மாற்றிக்கொள்ளாமலும் இருக்கக்கூடாது.

633. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாக இருந்தாலும்கூட, பெண்கள் தாலிச்சரட்டைக் கழற்றி வைக்கக்கூடாது.

634. உபநயனங்களிலும், திருமணங்களிலும் பாலிகை தெளிக்கும் சுமங்கலிப் பெண்கள் விதையைத் தூவக்கூடாது.. தண்ணீரை மட்டுமே தெளிக்க வேண்டும்.

635. ஆரத்தி எடுத்து முடித்தபிறகு, வடக்குத்திசையில் நிற்கின்றவரே தட்டை எடுத்துச் செல்ல வேண்டும். தெற்குத்திசையில் நிற்பவரிடம் ஆரத்தி தட்டைக் கொடுக்கக்கூடாது.

636. வெளியில் கிளம்பிச் செல்பவரை, பின்னாலிருந்து கூப்பிடக்கூடாது.

637. தீபாவளி அன்று தர்ப்பணம் செய்ய வேண்டியிருந்தால், அன்றையதினத்தில் முதல்நாள் செய்த பலகாரங்களையும், லேகியத்தையும் சாப்பிடக்கூடாது. 

638. ச்ரார்த்தம், தர்ப்பணம் போன்றவை செய்து முடிக்கும் வரையில் தொலைகாட்சி பார்ப்பதும், தொலைபேசியில் பேசுவதும் கூடாது.

639. தர்ப்பணம் செய்பவர், அன்று இரவு பட்டினி இருக்கக்கூடாது.

640. ச்ரார்த்தமன்று அக்னியையும், புரோகிதரையும் வலம் வரும்போது, கர்த்தா, தனது தம்பிகளையும், மனைவியையும் முன்னால் செல்லவிட்டு, தான் பின்னே வரவேண்டும்.

(வளரும்..)

No comments:

Post a Comment