(தெரிந்து கொள்ளலாமா?..)
தர்ம சாஸ்திரம் பகுதி −40
(ஆசிரியர் −திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)
581. இறை விக்ரஹங்கள், காராம்பசு, பெற்றோர், குருமார்கள் ஆகியோரின் நிழலின் குறுக்கே நடந்து செல்லக்கூடாது.
582. குழந்தைக்கு முதல் முறை முடிஇறக்காமல், குழந்தையின் முடியை நேர்செய்வதற்குச் சீப்பை உபயோகிக்கக் கூடாது.
583. விருந்தினர்களுக்கு சர்க்கரை, சந்தனம், வெற்றிலை ஆகியவற்றைக் கொடுக்கும் போது தெற்கு, மேற்கு திசைகளில் முடிவடையக்கூடாது.
584. விளக்கில் இருக்கின்ற எண்ணெய்/நெய் ஆகியவற்றை விரல்களால் தீண்டி, பின்னர் தலையில் தேய்த்துக் கொள்ளக்கூடாது.
585. சமைப்பதற்காகச் சூடு செய்யப்பட்ட எண்ணெயை, விளக்கேற்றப் பயன்படுத்தக்கூடாது.
586. எரிகின்ற விளக்கு, கற்பூரம் ஆகியவற்றை வாயினால் ஊதி அணைக்கக்கூடாது.
587. உட்கார்ந்திருக்கும்போது, கால்களையும் தொடைகளையும் ஆட்டக்கூடாது. அவ்வாறு செய்வது பெற்றோர்களுக்குக் கெடுதலைச் செய்யும்.
588. மூன்று முறை களையாமல் அரிசியை உபயோகிக்கக்கூடாது.
589. இடதுகை பழக்கமுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் எதையும் யாருக்கும் இடது கையால் கொடுக்கவும் கூடாது. வாங்கவும் கூடாது.
இடதுகை பழக்கமுள்ளவர்களும், வலது கையால் கொடுத்து வாங்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
590. அன்னப்ராசனம் செய்யாமலும், ஐந்து மாதங்கள் முடியாமலும், குழந்தைக்கு சாதம் கொடுக்கக்கூடாது.
591. துக்க வீட்டிற்குச் செல்லும்போது ஸ்படிக, ருத்ராக்ஷ மாலைகளை அணிந்து செல்லக்கூடாது.
592. துக்க வீட்டிற்குப் பனிரெண்டு நாட்களுக்குள் சென்று வந்தால், அவசியம் பூணூல் மாற்ற வேண்டும்.
593. ப்ரதான நுழைவாயிலுக்கு நேரே கால்களோ, தலையோ இருக்கும்படி படுக்கக்கூடாது.
594.நெருப்பும், தண்ணீரும் ஒன்றுக்கொன்று பகை என்பதால், அவை சமையலறையில் அருகருகே இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
595. நுழைவாயிலுக்கு முதுகுப்புறத்தைக் காட்டிக்கொண்டும், வெற்றுச்சுவரைப் பார்த்துக்கொண்டும் அமரக்கூடாது.
(வளரும்..)
No comments:
Post a Comment