கர்நாடக சங்கீதம் - சுஜாதா
பாகம் - II
=====================
Link to Part I -
https://www.facebook.com/photo?fbid=10223172988047611&set=gm.3821784821204310
=====================
தியாகராஜர் தன் பாடல்களை நேரடியாக சங்கீதத்துக்காக ராகத்தின் ஸ்வரங்களுக்கு ஏற்ப அமைத்துப் பாடினாரா, இல்லை அவருக்குப் பின் அந்தப் பாடல்கள் இசை அமைக்கப்பட்டதா தெரியவில்லை.
பாடல்களின் வரிகளைக் கவளிக்கும்போது, குறிப்பாக பஞ்சரத்னக் கீர்த்தனைகளின் அமைப்பைக் கவனிக்கும் போது ஆழ்ந்த சங்கீத ஞானமுள்ளவரால்தான் அவைகளைப் பாடியிருக்க முடியும் என்பது தெரிகிறது. அவைகளுக்கான ஸ்வரஜதிகள் தியாகராஜர் மட்டும் அமைத்ததாகத் தெரியவில்லை அவை பிற்பாடு அமைக்கப்பட்டன போல தெரிகிறது
தமிழின் கவிதை வடிவத்தையும் தியாகராஜரின் பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒற்றுமைகளும் பேற்றுமைகளும் தெரிகின்றன தியாகராஜரின் அத்தனை பாடல்களிலும் எதுகை அமைப்பு உள்ளது - ஆதிப்ராசம் என்கிறாார்கள்
வரியின் முதல் சீரில் இரண்டாவது மெய் அல்லது உயிர்மெய் எழுத்து ஒத்துப்போகும் சந்தம் (உதாரனம் நிதி-ததி). குறைந்த அளவில் மோனையும் உள்ளது. 'நன்னு பாலிமப நடரி வச்சிதியோ நா ப்ராணநாதா'.
இப்படி இருந்தும் செய்யுள் போல நான்கு வரிகளில் இல்லை ஒரு பல்லவி,அனுபல்லவி, சில சரணங்கள் என்கிற வடிவம் கோபால கிருஷ்ண பாரதியின் பாடல்களுடன் நேரடியாக தியாகராஜர் பாடல்களை ஒப்பிட முடிகிறது. "தாயே யசோதா" உதாரணம் ;
தற்போது பாடப்படும் திரை இசை முழுவதும் இந்த 'பல்லவி, அனுபல்லவி, சரணங்கள்' வடிவில்தான் உள்ளன. சிலசமயம் அனுபல்லவி நீக்கப்பட்டு, பல்லவி இரண்டு மூன்று சரணங்கள் வடிவில் உள்ளன.
இவ்வகையில் ஜாஸ், ராக், போன்ற இசையையும் மேற்கத்திய சிம்ஃபனி இசையையும் பார்க்கையில் பொதுவாக refrain என்று திரும்ப திரும்ப ஒரு இசைத் துணுக்கு phrase பல்லவிபோல எல்லா இசையிலும் உள்ளதைப் பார்க்க முடிகிறது.
இசையின் ஆதார நோக்கம் திரும்பத் திரும்பப் பாடுவது. மனதில் பதிகிற வரை பாடுவது. ஒவ்வொரு முறையும் சற்று மாற்றிப் பாடுவது.
கர்நாடக இசையின் கச்சேரிப் பாணியில் இது முக்கியம் கச்சேரி களில் பாடியது போல தியாகராஜர் பாடியிருப்பாரோ என்பதும் ஆராய்ச்சிக்குரியது. கர்நாடக சங்கீதத்தைப் பற்றிய சில எளிய விஷயங்களை அறிந்து கொண்டால் அதை ரசிப்பதற்கு எளிதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.
எல்லா இசையும் காதுக்கும் மனசுக்கும் இனிமையான ஸ்வரங்களை சார்ந்தது. வடக்கத்திய இசையிலும் கர்நாடக இசையிலும் ஆதார ஸ்ருதி ஒன்று உள்ளது. அதைத் தம்பூராவிலோ எலக்ட்ரானிக்காகவோ வைத்துக்கொள்கிறார்கள் அந்த ஆதார ஸ்ருதியை மீறக்கூடாது.
ஒரு ஆக்டேவ் என்பதற்கு இடைப்பட்ட சரிகமபதநி என்ற ஏழு ஸ்வரங்கள் இருக்கின்றன அதன்பின் மறுபடி ச அதன் ஆக்டேவாக (இரு மடங்கு துடிப்பெண் உள்ளதாக) வந்துவிடும் சாதாரணமாக வாய்ப்பாட்டில் இரண்டு அல்லது மூன்று ஆக்டேவ்கள் போகலாம். வயலின், பியானோ, கீ போர்டு போன்ற வாத்தியங்களில் ஐந்து ஆகடேவ் சுலபமாகப் போகலாம்.
இந்த ஏழு ஸ்வரங்களுக்கு இடையே உள்ள
ரி க ம த நி
போன்றவைகள் சற்றே மாறி ஓவ்வொன்றுக்கு இரண்டு ரி, இரண்டு க. இரண்டு காந்தாரம், மத்யமம், தைவதம், நிஷாதம் இவைகளைப் பயன்படுத்தி பலவிதமான தேர்ந்தெடுப்புகள் தான் ராகம்.
தியாகராஜரின் பாடல்களில் மிக எளிய கருத்துகள் உள்ளவை. அவருடைய இராமன் நம்மிடையே நம்மைப் போல புழங்கும் தெய்வம். இம்மாதிரியான தெய்வத்தின் அருகாமையும் எளிமையும் தான தியாகராஜரின் கீர்த்தனைகளின் உண்மையான கவர்ச்சி.
தற்போது கச்சேரிகளில் முதல் பலி, இந்த எளிமையும் அருகாமையும் தான் கீர்த்தனைகளின் 'பாவம்' என்பதைப் பற்றியே கவலைப்படாமல் ஒருவிதமான சங்கீத சாமாத்தியத்தின் எடுத்துக்காட்டாகத்தான் அவை உள்ளன.
தியாகராஜரின் அர்த்தங்களை உணர்ந்து, அவைகளைச் சிதைக்காமல் பாடிய ஒரே ஒரு பாடகர் பாலமுரளி கிருஷ்ணாதான்.
டிசம்பர் கச்சேரிகளை தியாகராஜர் கேட்டால் சம்மதித்திருப்பாரோ என்பது சந்தேகம்தான். 'ப்ரோவ பாரம்மா' என்பதை ஒரு வித்வான் ....ரம்மா என்று ஆரம்பித்து, .....பாரம்மா என்று கேட்டுவிட்டு, .....ப்ரோவ பாரம்மா என்று முழு வரியைப் பாடுகிறார். அர்த்தம் 'காப்பாற்ற வாராயோ' என்று மிக எளியது
தியாகராஜ கீர்த்தனைகளின் அர்த்தம் மறைந்து போய் அதன் வித்தை மட்டும்தான் மிச்சமிருக்கிறது.
இதனால் சில பாடல்களின் பொருளும் அவைகள் பாடப்படும் விதமும் பொருத்தமில்லாமல் இருப்பது எனக்கு முதல் ஆச்சரியம் அதன் பின் எதுகை மோனை.
பாடல்கள் அனைத்திலும் ஓசை, நயம், சந்தம் இருக்கின்றன எதுகைகள் எல்லாவற்றிலும் உள்ளன. மோனை களும் சிலவற்றில் உள்ளன
நிதிசால சுகமா ராமுனி சந்
நிதிசால சுகமா
இதில் பொதிந்துள்ள எதுகையைக் கவனியுங்கள்
அனுபல்லவி:
ரதி த்யானபஜன சுதாரசமு ருசியோ
சரணம்:
கர்தம துர்விஷய குபஸ்னானமு சுகமா
மமத பந்தனயுத நரஸ்ருதி சுகமா
சமதித்யாராஜனுதுனி கீர்த்தன சுகமா
இவ்வாறு பல்லவி, அனுபலலவி அனைத்திலும் எதுகை, மோனைகளும் ஓசைநயமும் சந்தமும் இருப்பதால் எளிதாக இசையமைக்க முடிந்திருக்கிறது
சந்திதி சேவை சுகமா உண்மை சொல் மனமே
தயிரும் வெண்ணையும் ருசியா
தசரதன் மகன் நினைவு ருசியா
கங்கையில் குளிப்பது சுகமா
கெட்ட கிணற்றிலகுளிப்பது சுகமா
கர்வமிக்க மனிதர்களைப் பாடுவது சுகமா
தியாகராஜனின் ராமனைப் பாடுவது சுகமா
சங்கீத ஞானமு பக்தி வினா
என்கிற தந்யாசி ராகப்பாடலாகவும் பிரசித்தம்.
========================
இசை ஞானமும் பக்தியும் சேர்ந்த
பாதைக்கு மேலான பாதை உண்டோ மனமே
ப்ருங்கி. நடராசன், அனுமன்
அகத்தியன் மாதங்கன் நாதன் உபாசித்தனர்
உலகின் நியாய, அநியாயங்கள் தெரியும்
உலகம் மாயை என்பது தெரியும் கர்வமும் பொறாமையும்
வெற்றி காண வேண்டும் தெரியும்
காருண்யங்கள் தெரியும்
இருந்தும் இசைஞானம்தான்
மேலான பாதை
தியாக ராஜனுக்கு
================
நன்னு பாலிமப நடசி வச்சிதிவோ
நா ப்ராணநாதா
================
நடந்து வந்தாயோ
என் உயிரே
வாழ்வின் சாரம் என்னும்
என் ரகசியத்தை அறிந்து
என்னைக் காப்பாற்ற நடந்து வந்தாயோ
இந்திர நீலம் போல் உடல் மின்ன
மார்பில் முத்துமாலை துவள
கையில் ஒளிரும் வில்லும் அம்பும் ஏந்தி
அருகில் பூமிக்குப் பிறந்தவளுடன்
உன்னை வணங்கும் தியாகராஜனை
என்னை காப்பாற்ற
நடந்து வந்தாயோ
இவ்வாறான எளிய சாத்தங்கள் தான் தியாகராஜரின் பாடல்களில் விரவியிருக்கும்.
நல்ல சங்கீதம் ஞானம் பெற்ற ஒருவர் எரிய வார்த்தைகளில் பெரும்பாலும் இராமனைப் பாடியவை. இவை பெரிய தத்துவ வேதாந்தமெல்லாம யாராவது இருப்பதாக சொன்னால் அது பிறபாடு கற்பிக்கப்பட்டது என்று கொள்ளலாம்,
தியாகராஜரின் கிருதிகளின் எளிமைதான் நம்மைக் கவரவேண்டும் நாளடைவில் இந்த எளிமை மெல்ல விலகி ஒரு சங்கீத செப்பிடு வித்தையாகப் போய்விட்டது துாதிர்ஷ்டமே இதனால்தான் தியாகராஜரின் சிருதிகளை சங்கீதத்தின் சித்தாந்தங்கள் அறிந்த ஒரு சிலரால்தான் முழுமையாக ரசிக்க முடிகிறது.
ராகம் எப்படிக் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய வித்தையில்லை ராகத்தின் ஆரோகண அவரோகணங்களைக் கொண்டு கண்டுபிடிக்கக் கூடிய ஒரே ராகம் மோகனம். ஸரிக பதஸா என்று ஐந்து ஸ்வரங்கள். இது ஒரு ஆச்சரியமான ராகம். இந்த ராகத்தில் ஐந்தே ஐந்து ஸ்வரங்களை வைத்துக் கொண்டு வித்வான்கள் விளையாடுவது பிரமிப்பாக இருக்கும்.
சண்முகப்பிரியா, காபி போன்ற ராகங்களையும் சுலபத்தில் கண்டுபிடிக்கலாம். ஆரம்பத்தில் சில சினிமாப் பாட்டுகளை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
உதாரணம்
• கல்யாணிக்கு 'மன்னவன் வந்தானடி'.
• சண்முகப்ரியாவுக்கு 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'
• மோகனம் 'நின்னு கோரி',
• சாருகேஸி 'மன்மதலீலையை'
(மம்மதராசா அல்ல, அது எந்த ராகத்திலும் சேராத தனிக்காட்டு ராசா)
குறிப்பாக திருவிளையாடல் படத்தில் பாலமுரளிகிருஷணா பாடிய 'ஒரு நாள் போதுமா' என்னும் பாட்டை அவசியம் கேளுங்கள். பாட்டின் வரிகளிலேயே ராகமும் சொல்வார். கானடா தோடி என்று அதிலிருந்து பிடித்துக் கொள்ளலாம்.
ராகம் கண்டுபிடிக்க முதலில் கவனம் வேண்டும். பந்துவராளி காமவர்தினி போன்றவைகள் எல்லாம் கிட்டே இருக்கும். மேலும் வினோதமான பெயர்கள் கொண்ட ராகங்கள் பல இருக்கின்றன (வனஸ்பதி)
• கரஹரப்ரியா, (அறியாப் பருவமடா)
• கல்யாணி,
• மோகனம்
• சங்கராபரணம்,
• தோடி,
• பைரவி,
• காம்போதி,
• ஹரிகாம்போதி,
• நாட்டை
இவைகள் எல்லாம் distinct என்று சொல்லலாம்.
உன்னிப்பாக கவனித்தால் பொதக்கென்று விழுந்துவிடும். மேளகர்த்தா, ஜன்ய ராகங்கள் என்று இரண்டு வகை உள்ளன. ஜன்யராகங்கள் ஆரோகணத்திலோ அவரோகணத்திலோ (ஏற்றத்திலோ இறக்கத்திலோ) ஒரு ஸ்வரம் கம்மியாக இருப்பது. அல்லது ஏறும்போது ஒரு ஸ்வரம் இறங்கும் போது வேறு ஸ்வரம், கல்யாணியின் நிஷாதம் அப்படி ரஞ்சனிக்கு மேலே போகும்போது நிஷாதம் கிடையாது கீழே இறங்கும்போது நி வரும் சரிகச என்று ஒரு மீறலுடன் இறங்கும்.
ராகம் கண்டு பிடிக்க முதலில் ஏதாவது ஒருபாட்டையும் கிருதியை யும் அதற்கேற்ற ராகத்தையும் நினைவு வைத்துக் கொளவதுதான் உத்தமமானது.
தியாகராஜரின் பஞ்ச ரத்ன காத்தனை என்பவை ஐந்து நீண்ட இவைகளின் ஐந்து ராகங்களை - நாடடை. ஆரபி, தாபார், வராளி, ஸ்ரீ போன்றவைகளை - கண்டுபிடித்துச் சொல்ல முடிந்தால் நீங்கள் ரானையில் இளங்கலைக்கு வந்துவிட்டீர்கள்.
கர்நாடக சங்கீதம் என்பது ஒரு பாரம்பரியம் துரதிருஷ்டவசமாக இதை பிராமணர்கள் சமாச்சாரம் என்று தவறாகப் புரிந்துகொண்டுகேலி செய்பவர்களும் சரியாகக் கேட்காதவர்களும் இருக்கிறார்கள்
அவர்கள் அனைவரும் வாழலில் ஒரு மிகப் பெரிய இன்பத்தைத் தவறவிடுகிறார்கள்.
========நிறைவு பெற்றது =========
உயிர்மை இதழில் 'கண்ணீரில்லாமல்' என்ற தலைப்பின் கீழ் சுஜாதா சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.
அவற்றில் இது டிசம்பர் 2003 - உயிர்மை இதழில் வந்த கட்டுரை.
No comments:
Post a Comment