Thursday, April 29, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −44

 (தெரிந்து கொள்ளலாமா?..)

தர்ம சாஸ்திரம் பகுதி −44

(ஆசிரியர் − திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)

641. ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஸ்ரார்த்தம் செய்யும் போது, அதற்கான சமையல் தனித்தனியே செய்யப்பட வேண்டும்.

ஒரு இடத்தில் சமையல் செய்து அதை, அத்தனைப்பேரும் பங்கிட்டுக் கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும் பிண்டம் வைக்கின்ற இடங்களும்,  தனித்தனியாகவே இருக்க வேண்டும்.

642. ஸ்ரார்த்த தினத்தன்று வாசலில் கோலம் இடக்கூடாது.

643. விரதமிருந்து சபரிமலை செல்பவர்களாக இருந்தாலும், விரத காலங்களில் வருகின்ற தர்ப்பணம், ஸ்ரார்த்தம் ஆகியவற்றைச் செய்யாமல் இருக்கக்கூடாது.

644. வருஷாப்திகத்திற்கு அடுத்த நாள் சுபஸ்வீகரணத்தை மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த ஹோமங்களையும் அன்றைய தினம் செய்யக்கூடாது.

645. ஸ்ரார்த்த உணவில் மாதுளம்பழம், வெள்ளைப்பூசணி, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கக்கூடாது.

646. ப்ராமணார்த்தத்திற்கு அமருகின்றவர் அருகிலோ அவர்களுக்கு முன்னால் இருக்கின்ற இலைகளிலோ, "பலி"யை வைக்கக்கூடாது.

647. ப்ராமணார்த்தத்திற்கு அமருபவர்கள் சாப்பிட்ட பின்னர், "பித்ரு" இலையில் இருப்பவரே, முதலில் கை கழுவ வேண்டும்.

648. கரை இல்லாத வேஷ்டி, துண்டுகள், தைத்த துணிமணிகள் ஆகியவற்றை ப்ராமணார்த்தத்திற்கு வருபவர்களுக்கு அளிக்கக்கூடாது.

649. ப்ராமணார்த்தத்திற்கு அமர இருப்பவர்கள், அவர்கள் முதலிலேயே நீராடிவிட்டு வந்தாலும், ஸ்ரார்த்தம் நடக்கின்ற இடத்தில் மறுமுறை நீராடிவிட்டே அமர வேண்டும்.

650. ஸ்ரார்த்தங்களில் உபயோகிக்க இருக்கின்ற கிண்ணங்கள் புதியதான வாழை இலைகளில் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். கடைகளில் விற்கப்படுகின்ற உலர்ந்த சருகுகளால் ஆன கிண்ணங்களைப் பயன்படுத்தக்கூடாது.

651. ஸ்ரார்த்தம் நடக்க இருக்கின்ற தமிழ் மாதத்தில், ஒரு பக்ஷத்திற்கு (15 நாட்கள் − அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை அல்லது பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை) எண்ணெய் குளியலும், முகச்சவரமும் செய்யக்கூடாது.

652. ச்ரார்த்த உணவில் நெய், நல்லெண்ணெய் தவிர வேறு எண்ணெய்களைப் பயன்படுத்தக்கூடாது.

653. இறப்பு வீட்டில் செய்யப்படுகின்ற காரியங்களைத் துவங்குவதற்குமுன், தலையில் குட்டிக்கொண்டு சொல்லுகின்ற "சுக்லாம்பரதரம் விஷ்ணும்" சொல்லக் கூடாது.

654. இறந்துவிட்டவர் கயைக்கு சென்று சில காய்கனிகளை விட்டுவிட்டார் என்பதைக் காரணம் காட்டி, ஸ்ரார்த்த உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான காய்கனிகளைச் சேர்க்காமல் இருக்கக்கூடாது.

655. ஸ்ரார்த்தத்திற்குப் பதிலாக ஏழைகளுக்கு உணவிடுவது ஸ்ரார்த்தம் செய்வதால் வருகின்ற பலனை நிச்சயம் பெற்றுத் தராது

விருப்பப்பட்டால், ஸ்ரார்த்தம் முடிந்த பிறகு அந்த அன்னதானத்தைச் செய்யலாம்.

(வளரும்..)

No comments:

Post a Comment