அருள்மிகு ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாள் திருக்கோவில்
அம்பாசமுத்திரம்
மூலவர் : தாயார் ஸ்ரீ அலமேலு மங்கை நாச்சியார்
உற்சவர் : ஸ்ரீனிவாசர்
உற்சவர் தாயார் : ஸ்ரீ தேவி மற்றும் பூமிதேவி
தீர்த்தம் : மூக்குண்ட தீர்த்தம் (பொங்கும் கங்கை)
வழிப்பட்டோர் : இந்திரன், ரூத்ரன்,பிரம்மா,கருடன் மற்றும் அதிவிரன்
என்னும் ராஜா
ஆகமம் : பாஞ்சராத்ர ஆகமம்
திருமந்திரம் : அலமேலு மங்கா சமேத ஸ்ரீபுருஷோத்தமப் பரப்ப்ரம்மனே நமஹ:-
சிறப்பு : தாமிரவருணி நதியின் முதல் விஷ்ணு ஸ்தலம், அஷ்ட புஜ கரங்களுடன் நித்ய கருடசேவையில் ஸப்த நாகங்கள்(கார்கோடக நாகங்கள்) குடைபிடிக்க, பஞ்ச ஆசனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள்
ஸ்தல வரலாறு
இது பழம்பெரும் கோவில்களில் ஒன்றாக சுமார் 1200 வருடங்களுக்கு முன்பு மக்கள் வாழ்ந்து வந்த இடமாக இக்கோவிலையும் கோவில் சுற்றியுள்ள இடங்களையும் அறியலாம். 10 நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு குறுநில மன்னன் ஆண்டு வந்ததாகவும் அவரின் அவைப்புலவர் சொற்படி தாமிரவருணி (பொறுநை) நதி தீரத்தில் ஒரு விஷ்னு ஆலயம் அமைக்க சொன்னதாகவும் அம்மன்னனும் அவ்வாறே அமைத்ததாவும் மேலும் இத்திருக்கோவிலின் இரண்டு பக்கங்களிலும் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு வரை மக்கள் வசித்து வந்ததாகவும் அறியப்படுகின்றது.
1600ல் ராணி மங்கம்மா அம்பாசமுத்திரத்திலுள்ள அனைத்து கோவில்களுக்கும் நில புலங்கள் தானம் கொடுத்துள்ளார் இதைப்பற்றிய ஆவணங்கள் திருவாவடுதுறை செப்பேடுகளில் காணப்படுகின்றன. இன்றும் இதை அறியும்படி கோவிலுக்கு கிழக்கில் நதியின் அருகில் தோணிபச்சேரி என்னும் கிராமம் உள்ளது ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளனர். இன்று இத்திருக்கோவில் நஞ்சை நிலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது
ஸ்தல அமைப்பு
தாமிரவருணியின் வடகரையில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது கோவிலின் கருவறையில் ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாள் அலர்மேல் மங்கை தாயார் ஆகிய தெய்வங்களையும் அதன்பின் அர்த்த மண்டபத்தில் துவாரபாலகர் மற்றும் பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் உடையவர், விஷ்வக்க்ஷேனர்
கோபாலகிருஷ்ணன் ஆகிய தெய்வங்களையும் மகா மண்டபத்தில் ஸ்ரீ ஜோதி ஆஞ்சநேயர், சன்னதி கருடன், துவஜஸ்தம்பம், மகாபலிபீடம் ஆகியனவற்றைக் கொண்டும் கோவில் விளங்குகிறது. மற்றும் திருக்கோவில் பிரகாரத்தில் பக்தர்களின் முயற்சியினால் துளசிமாடம் என்னும் சிறிய கோவிலையும்
கோவிலின் வடகிழக்குப்பகுதியில் பெருமாளுக்கு தினமும் காலை திருமஞ்சனம் செய்ய திருக்கேணியில் இருந்து தினமும் தீர்த்தம் எடுத்து திருமஞ்சனம் செய்யப்படுகிறது மற்றும் கோவிலின் வடகிழக்குப்பகுதியில் ஸ்ரீ மூல கருட பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். முலவரின் சிறப்பு
மூலவர்
ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் கருவறையின் நடுவில் சதுரபீடமும் அவற்றின் மத்தியில் மலர்ந்த கமலமும் அதன்மேல் ஆதிஷேசனும் (கார்கோடகநாகம்) ஆதிஷேசனின் மேல் கருடாழ்வார் ஒருகால் மடித்து மறுகால் ஊன்றி அவரின் ஒரு திருக்கையில் பெருமாளின் வலது திருபாதத்தை ஏந்தியவாரும் மற்றொரு இடது திருக்கையில் உள்ள கமலத்தின் மேல் தாயார் பாதத்தை ஏந்தியவாறும், அவரின் (கருடனின்) தோளின் மேல் உள்ள சிம்ஹாசனத்தில் பெருமாள் இடதுகாலை மடித்து வலதுகாலை கருடாழ்வாரின் கையில் வைத்தவாறும் அலமேலு மங்கை தாயாரை தனது இடது மடியில் அமர்த்தி அஷ்ட கரங்களைக் கொண்டு சப்தரிஷிகளின் அம்சமாக கார்கோடகன் என்னும் 7 நாகங்கள் குடைபிடிக்க வரதஹஸ்தம் கொண்டவாறு கிழக்கு நோக்கி தாமிரவருணி நதியின் முதல் விஷ்ணு ஸ்தலமாக சேவை சாதிக்கிறார்.
இக்கோவிலில் பெருமாளின் திருக்கோலம் வேறு எங்கும் காணப்படாத ஒன்று. ஆதலால் இவரை அஷ்டபுயகர பெருமாள், நித்தியகருடசேவை பெருமாள், கருடாரூட பெருமாள் என திருநாமம் கொண்டும் ,பெருமாள் தன் திருக்கரங்கலில் ஸஸங்கம் (சங்கு) சக்கரம், வில், அம்பு, கேடயம், வால், ஒரு திருக்கரம் அலமேலு மங்கை தாயாரை அணைத்தவாறும் மற்றொரு திருக்கரம் என்னை சரணடைந்தாருக்கு இவ்வுலகில் எந்த இடரும் இல்லை எனக்கூறும் படியாக வரதஹஸ்தம் கொண்டு சேவை சாதிக்கிறார்.
இத்திருக்கோவிலின் கருவறையில் உள்ள பெருமாளின் திருக்கோலம் ஒரே விக்ரஹத்தால் ஆனது மிகவும் சிறப்பு. மேலும் பெருமாள் பஞ்ச ஆசனம் எனும் பீடம்,கமலம்,ஆதிசேஷன் எனும் கார்கோடக நாகம், கருடாழ்வார், மற்றும் கருடாழ்வாரின் மேலுள்ள சிம்ஹாசனம் எனும் பஞ்ச ஆசனத்தில் அமர்ந்து சேவை சாதிக்கிறார்.
பெருமாளின் பிராட்டியார் ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் பெருமாளின் இடது மடியில் அமர்ந்து தன்னுடைய இடது கையில் தாமரை மலர் ஏந்தி கருடாழ்வாரின் கரத்தில் உள்ள தாமரை மலர் மீது தன்னுடைய திருப்பாதங்கள் அமைய சேவை சாதிக்கிறார்.
தீர்த்தம்
கோவிலின் மதிலின் அருகிலுள்ள கிணற்றிலிருந்து தீர்த்தம் எடுக்கப்படுகிறது, மற்றோன்று கோவிலின் மேற்கு பகுதியில் நஞ்சை நிலங்களுக்கு நடுவில் முக்குண்ட தீர்த்தம் என அமைந்துள்ளது, இது பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு ராஜாவால் (முதலில் ராஜவாகவும் பின் சித்தராகவும் மாறியவர் என அறியப்படுகிறது,) ஏற்ப்படுத்தப்பட்டது, இவர்
தன்னுடைய தவோ பலத்தின் காரணமாக வடநாட்டு கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் செய்ய ஒரு நாள் பெருமாள் பிரத்யட்சமாகி நாளை முதல் தன்னுடைய விமான நிழல் பட்டு ஒரு தீர்த்தம் உருவாகும் என வரம் தர அதுவே தற்போது முக்குண்ட தீர்த்தம் எனப்படுகிறது.
இன்றும் உத்ராயண காலத்தில் அத்தீர்த்தத்தின் மீதும், கோவிலின் சன்னதியிலும் சூரிய கதிர்கள் படுகின்றன, சரியான பாதை இல்லா காரணத்தினால் கோவிலில் உள்ள கிணற்றிலிருந்தே திருமஞ்சனத்திறக்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. இப்பெருமாளை இந்திரன், ரூத்ரன்,பிரம்மா,கருடன் மற்றும் அதிவிரன் என்னும் ராஜா ஆகியோர் வழிப்பட்டு உள்ளனர் மிகவும் சிறப்பு பெருமாளை நித்ய கருட சேவை திருக்கோலத்தின் காண்பது மிக அரிது.
தங்கை நிறையப் பொருள்வாரிப் பொழியும் தரத்தா லலர்நேய
மங்கை யகத்து மணிமார்பன் வரதன் புருடோத்தம மாலோன்
அங்கங் குளிர வனுதினமும் அபிடேகங்கள் சிறந்தனவே
இவ்வாறு தாமிரவருணியின் மாகாத்மியம் புத்தகத்தில் கோவிலை பற்றிய சிறப்புகளையும் பெருமாளைப் பற்றிய சிறப்புகளையும் அறியலாம்.
உருவினில் கருணையாகி ஊழ்கலி வரதனாகி
உலகினை உவந்து காக்கும் புருஷோத்தம பெருமா
உந்தன் பொன்னடி போற்றி போற்றி
இங்குள்ள பெருமாளை இதே கோலத்துடன் வேறு எங்கும் காண்பது அரிது. கலியுக வரதனாக இடர்காப்பவனாக சேவை சாதிக்கும் ஸ்ரீ புருஷோத்தமபெருமாளை ஒரு முறை சேவித்தால் மறுமுறையும் சேவிக்க வேண்டும் போல் இருக்கும்.
தொடர்புக்கு
பாலாஜி புருஷோத்தமன் & அர்ச்சகர்
செல்: 94488473477, போன்:
இணைப்பு: புரட்டாசி கடைசி சனிக்கிழமை யின் பெருமாளின் திவ்ய சேவை திருப்படம்
No comments:
Post a Comment