Saturday, April 17, 2021

சத்தியமூர்த்திப் பெருமாள் கோவில், திருமயம்

திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது. 

இத்திருக்கோயில் பல்லவர்களால் நிர்மாணிக்கப்பட்ட குடைவரைக் கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.

புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயில் பல்லவர்களின் மேலாண்மைக்கு உட்பட்டு முத்தரையர்களால் நிர்மாணிக்கப்பட்ட குடைவரைக்கோவில்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.

தல வரலாறு :

பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர்.

இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொள்ளலாயினர். பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர்.

பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார்.

பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கையில் அரக்கர்கள் செய்த வனகொடுமையினைத் தடுக்க எடுத்த வீரச்செயல்களை மெச்சிப் புகழ்ந்தார்.

புராண வரலாறு :

திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது.

சைவ வைணவ ஒற்றுமை :

திருமெய்யம் குன்றினுடைய செங்குத்தான தெற்கு நோக்கிய சரிவில் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு திருக்கோயில்களும் அமைந்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமெய்யம் திருமாலையும் , சிவபெருமானையும் ஒரே வாயிலின் வழியாகச் சென்று தரிசிக்கும் வண்ணம் இத்திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளன.

சத்தியமூர்த்திப் பெருமாள் கோவில், திருமயம்


வைணவர்களால் மிகவும் போற்றி வணங்கப்படும் 108 திவ்யதேசங்களுள் 97வது திவ்யதேசக் கோவிலாகும். பாண்டியநாட்டில் அமைந்துள்ள 18 திவ்யதேசங்களுள் இதுவும் ஒன்று. வைணவர்கள் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்து வணங்கும் திருமயம் ஆதி அரங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தைவிடப் பழைமையானது இக்கோவில்.


திருமெய்யம் குன்றின் செங்குத்தான தென்முகச்சரிவில் சத்யகிரீஸ்வரருக்கும் (சிவன்) திருமெய்யருக்கும் (பெருமாள்) குடைவரை குகைகோயில்கள் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று அறுபதுதடி தூரத்தில் அமைந்துளது. இரண்டு குடைவரைகளுள் ஒன்று திருமெய்யர் (பெருமாள்) குடைவரைக் கோவிலாகும். திருமெய்யத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை ஒரு வழியாகவே சத்யகிரீஸ்வரரையும், திருமெய்யரையும் தரிசிக்கும் படியாகத்தான் சன்னதிகள் அமைந்திருந்தன. சத்யகிரீஸ்வரர் கோவிலுக்கும் திருமெய்யர் – சத்தியமூர்த்திக் கோவிலுக்கும் இடையே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட சைவ வைணவப் பூசல் இரு கோவில் வளாகங்களுக்கு இடையில் ஒரு மதிற்சுவர் கட்டிப் பிரிக்கும் அளவிற்கு நீண்டது.


ஐந்து நிலை இராஜகோபுரம்


தெற்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் பாண்டியர்களின் கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டையொட்டிய கலைப்பணியாக இருக்கலாம். இராஜகோபுரவாயிலுக்கும் இரண்டாம் வாயிலுக்கும் இடையில் நீளமான மண்டபம் அமைந்துள்ளது. இது நாயக்கர் காலத்த்தில் (16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டிருக்கலாம். இம்மண்டபத்தின் மேற்குப்புறத்தில் சக்கரத்தாழ்வார், ஆண்டாள், கிருஷ்ணர் ஆகியோருக்குக் கிழக்கு நோக்கிய சன்னதிகள் உள்ளன. மண்டபத் தூண்களில் மதுரைவீரன் பொம்மியைக் கடத்திச் செல்லும் சிற்பத் தொகுப்பு, குறவன், குறத்தி, நாயக்க வீரன், நடனமாடும் மங்கையர் ஆகிய சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன.


உய்யவந்த நாச்சியார் சன்னதி


இரண்டாம் வாயில் வழியாகப் பிரகாரத்துக்குள் நுழைந்ததும் மேற்கில் உய்ய வந்த தாயார் சன்னதியைக் காணலாம். கிழக்கு நோக்கியுள்ள இச்சன்னதி முகமண்டபம், முன்று தளத்துடன் கூடிய விமானத்துடன் கூடியது. கருவறையில் உய்யவந்த நாச்சியார் என்ற உஜ்ஜிவனித் தாயார் பட்டாடை உடுத்தி அர்த்தபத்மாசனத்தில் காட்சி தருகிறார்.


சுந்தரபாண்டியன் குறடு


பிரகாரத்தின் தென்கிழக்கில் நீளமான மேடையில் ஆழ்வார்களும் மதுரகவி மற்றும் இராமானுஜர் போன்ற ஆச்சார்யார்களும் கட்சி தருகிறார்கள். எதிரில் உள்ள தூண்களில் தசாவதார சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அடுத்து மடைப்பள்ளி உள்ளது. இரண்டாம் வாயிலில் நுழைந்தவுடன் எதிரில் பலிபீடத்தையும் கொடிமரத்தையும் காணலாம். இவற்றின் பின்புறம் காணும் பெரிய மண்டபத்திற்குச் சுந்தரபாண்டியன் குறடு என்று பெயர்.


சுந்தரபாண்டியன் குறட்டினை அணைத்துள்ள பிரகாரத்தின் மேற்குப் பகுதியில், இக்கோவில் வளாகத்தைச் சத்தியகிரீஸ்வரர் கோவிலிலிருந்து பிரிக்கும் மதில்சுவரைக் காணலாம். இந்த மேற்குப் பிரகாரத்தின் முடிவில் பள்ளி கொண்ட பெருமாளின் குடைவரைக் கோவில் அமைந்துள்ளது. பிரகாரத்தையொட்டி ஒரு மூன்றிலைத்தாண்டியதும் ஒரு சிறு மண்டபம் உள்ளது. இந்தச் சிறுமண்டபத்தியொட்டி பள்ளிகொண்ட பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது.


பள்ளி கொண்ட பெருமாள் சன்னதி


இங்குப் பள்ளி கொண்ட பெருமாள் என்ற யோகசயன மூர்த்தி அனந்தசயனநிலையில் காட்சி தருகிறார். ஆதிசேஷன் என்ற பாம்பணையில் மேற்கில்தலைவைத்துக் கிழக்கில் காலை நீட்டியபடி தெற்கு நோக்கி அரிதுயில் கொள்ளும் பெருமாளின் உருவம் சுமார் 30 அடி அல்லது 9 மீட்டர் நீளத்தில் குகை முழுதும் வியாபித்துள்ளது.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.
– தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றுகிறார். மார்பினில் லட்சுமியும் காலருகே பூதேவியும் வீற்றிருக்கிறார்கள். பிரம்மாவின் அருகில் சப்தரிஷிகளும் தேவர்களும் காட்சிதருகிறார்கள். ஆதிசேஷன் பின்னால் கருடன் நிற்கிறார். இவர்கள் அருகே தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு ஆகியோர் காணப்படுகின்றனர்.மது கைடபர்கள் பெருமாளை தாக்குவதற்காக இவரின் காலருகே நிற்கிறார்கள். பெருமாளின் ஐந்து ஆயுதங்களில் நான்கு ஆயுதங்களான சுதர்ஷன சக்கரமும், பாஞ்சஜன்யம் என்னும் சங்கையும், நந்தகம் என்னும் வாளினையும், கௌமோதகி என்னும் கதையையும் காட்டப்பட்டுள்ளது. படமெடுத்தாடும் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளிலிருந்து மது கைடபர்களை நோக்கி நெருப்பை உமிழ்கிறார். மது கைடபர்களை நோக்கி தீ ஜுவாலைகள் பரவுகின்றன. இவை தவிர, கானப்பறை, பேரிகை, சல்லிகை, தக்கை, தண்ணுமை தடாகமும், தடாரி, உடுக்கை, கிடக்கை, கரடிக்கை முதலான பண்டைக்காலக் கருவிகளும் மலையில் வடிக்கப்பட்டுள்ளன. பிற வைணவ தலங்களில் காணப்படும் அனந்தசயனகோலங்களைவிடத் திருமயம் அனந்தசயனக்கோலம் மிகவும் அழகானது என்பது என் கருத்து.


சத்தியமூர்த்தி சன்னதி


சுந்தரபாண்டியன் குறட்டுட்டைத் தாண்டி அமைந்துள்ள ஒரு இடைநாழிகையைத் தாண்டினால் சத்தியமூர்த்தியின் சன்னதியை அடையலாம். இந்தச் சன்னதி ஒருதள விமானம், முகமண்டபம், பிரகாரம் என்று அமைந்துள்ளது. அதன் நுழைவாயிலைப் பக்கத்திற்கொருவராக இரண்டு துவாரபாலகர்கள் காக்கின்றனர். இக்கோவிலில் நின்றகோலத்தில் காட்சிதரும் மற்றோரு மூலவர் இவர். வலது முன் கை அபய முத்திரையும், இடது முன் கை கடியவலம்பிதமும் காட்ட, பின் கைகள் சங்கு சக்கரம் ஏந்தி. கிரீடம், மகரகுண்டலம், அணிகலன்கள் பூண்டு அலங்காரபுருஷராய் சத்தியமூர்த்திப் பெருமாள் காட்சி தருகிறார். இடப்புறம் கருடன் நின்றநிலையில் காட்சி தருகிறார். அவரையடுத்து இலட்சுமி அமர்ந்கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாளின் வலப்புறம் புரூரவச் சக்கரவர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.


விஜயநகர மன்னர்கள் ஆட்சியில், தற்போது காணப்படும் அமைப்பில், மூலவரின் குடைவரைக்கு முன்பு உள்ள சிறிய மண்டபம், மற்றோரு மூலவர் சத்தியமூர்த்திப் பெருமாளுக்கான கருவறை, விஷ்வக்ஷேனர்,இராமர், தாயார் ஆகியோருக்கான கருவறைகள், மண்டபங்கள், கோபுரங்கள் எல்லாம் கட்டப்பட்டன. கோவில் வளாகத்தில் இன்னும் பல சன்னதிகள் உள்ளன.


ஆழ்வார்கள் மங்களாசாசனம்


ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் திருமயம் என்ற திருமெய்யம் 97 வது திவ்ய தேசம். பாண்டிய நாட்டில் அமைந்துள்ள 18 திவ்ய தேசங்களுள் திருமெய்யமும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் தனியாகச் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று.

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை, கைதொழா கையல்ல கண்டாமே.
(நாலாயிர திவ்ய பிரபந்தம் பெரியதிருமொழி 2016-பாசுரம்)

திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில் இங்குள்ள பெருமாளை ‘மெய்யமலையான்’ என்று குறிப்பிடுகிறார். கல்வெட்டுகளில் பெருமாள் பள்ளிகொண்டருளின ஆழ்வார் என்றும் அழகியமெய்யர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். திருமங்கை ஆழ்வார் பெருமாளை மெய்யமலையான் என்று குறித்ததன் வடமொழி மொழிபெயர்ப்பாகவே சத்தியமூர்த்தி என்ற பெயர் விஜயநகர அரசாட்சிக் காலத்தில் வழங்கப்பட்டிருக்கலாம்.

குடைவரையின் காலம்

விடேல் விடுகு என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றும் அறியப்பட்ட முத்தரைய அரசர் சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகுப் பெருந்தேவி என்ற முத்தரைய அரசியால் திருமெய்யர் குடைவரை முகப்பையொட்டி தூண்கள் அமைக்கப்பட்டுக் கோவிலாக மாற்றப்பட்டதாகக் கே.ஆர்.ஸ்ரீநிவாசன் கருதுகிறார். பெரும்பிடுகுப் பெருந்தேவியின் கல்வெட்டு ஒன்று இக்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பற்றிப் பதிவு செய்துள்ளபடியால், இக்கோவிலின் தொன்மை இக்கல்வெட்டு காலத்துக்கும் முந்தியது என்பது எனலாம். இந்தக் குறிப்பிட்ட கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று டி.வி.மகாலிங்கமும், ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று வி.லதாவும் கருதுகிறார்கள். ஒரு குடைவரைக் கோவிலுக்குச் சீரமைப்புத் தேவைப்படுகிறது என்றால் அக்கோவில் குறைந்தது நூறாண்டுகளாவது பழமையானதாக இருந்திருக்க வேண்டும் என்று வி.லதா கருதுகிறார். எனவே இக்குடைவரை ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அகழப்பட்டிருக்கலாம். இக்குடைவரையின் காலம் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் (கி.பி. 580-629) காலத்திற்கு முற்பட்டதாயிருக்கலாம். மத்தியபிரதேசத்தில் உதயகிரி குகையில் அமைந்துள்ள குப்தர்கள் காலத்து விஷ்ணுவிற்கும் திருமெய்யம் மெய்யருக்கும் உள்ள ஒற்றுமையை வி.லதா ஊகிக்கிறார்.

திருவிழா

வைகாசி 10 நாள் திருவிழா மற்றும் பவுர்ணமி தேர்: சத்தியமூர்த்தி பெருமாளுக்கு ஆடி மாதம் காப்பு கட்டி 10 நாள் திருவிழா நடைபெறும். ஆடி கடைசி அன்று சத்தியமூர்த்தி பெருமாள் தேரில் உலா வருவார்.

ஆடிப்பூரம் 10 நாள் திருவிழா.

திருமெய்யருக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருப்பாவாடை என்ற அன்னக்கூடை உத்ஸவம் நடைபெறும்.

கோவிலுக்குச் செல்ல

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

திருமெய்யம்

அமைவிடம்

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில் அமைவிடம் ஊர்: திருமயம் மாவட்டம்: புதுக்கோட்டை,

தாயார் : ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்

மூலவர் : ஸ்ரீ சத்ய கிரிநாதன்
உட்சவர்: ஸ்ரீ மெய்யப்பன்
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : புதுக்கோட்டை
கடவுளர்கள்: சத்யாகிரி நாதன் ,உஜ்ஜீவனா

திவ்யதேச பாசுரங்கள்

1090. 

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்*  உலகு உய்ய நின்றானை* 
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை*  கன்று மேய்த்து  விளையாட வல்லானை வரைமீ கானில்* 
தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்*  தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்* 
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 

    விளக்கம்  

1524.   

கட்டு ஏறு நீள் சோலைக்*  காண்டவத்தைத் தீ மூட்டி 
விட்டானை*  மெய்யம் அமர்ந்த பெருமானை*
மட்டு ஏறு கற்பகத்தை*  மாதர்க்கு ஆய்* வண் துவரை 
நட்டானை நாடி*  நறையூரில் கண்டேனே.

1660.   

அருவிசோர் வேங்கடம்*  நீர்மலை என்றுவாய்- 
வெருவினாள்*  மெய்யம் வினவி இருக்கின்றாள்,*
பெருகுசீர்க்*  கண்ணபுரம் என்று பேசினாள்- 
உருகினாள்*  உள்மெலிந்தாள் இது என்கொலோ!  (2)

    1852.   

சுடலையில்*  சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
நடலை தீர்த்தவனை*  நறையூர்க் கண்டு,*  என்-
உடலையுள் புகுந்து*  உள்ளம் உருக்கிஉண்*
விடலையைச் சென்று காண்டும்*  மெய்யத்துள்ளே.


மைஆர் கடலும்*  மணிவரையும் மாமுகிலும்,* 
கொய்ஆர் குவளையும் காயாவும்*  போன்றுஇருண்ட*
மெய்யானை மெய்ய மலையானை*  சங்குஏந்தும் 
கையானை கைதொழா*  கைஅல்ல கண்டாமே.

No comments:

Post a Comment