ஸ்ரார்த்தம் - விதிமுறைகள் சில
நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு வருஷமும் அவரவர்களுக்கு சரி என்று தோன்றும் வகையில் ஸ்ரார்தத்தை விடாமல் செய்து வருகிறோம். இன்னும் சிலரோ மிகவும் உத்தமமான முறையில் ஸ்ரார்தத்தை கடைபிடித்து வருகிறார்கள். இருந்தாலும், பல காரணங்களினாலும், இன்றைய விபரீதமான சிந்தனைக் குவியலின் நடுவில் நாம் சிக்கிக் கொண்டிருப்பதினாலும், ஸ்ரார்தத்தில் பல விஷயங்கள் நம்மைவிட்டு மறைந்திருக்கலாம். மறந்தும் இருக்கலாம். அவற்றை ஞாபகபடுத்தவே, இந்த தொகுப்பு.
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு
பரலோகம், பித்ருலோகம்,
பித்ரு கர்மா - நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம். பித்ரு லோகம் இரண்டு உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தாங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும் பிரேத நிலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர். பித்ருக்களை உத்தேசித்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம்.
நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள். மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் ச்ரார்த்தம் அவ்வாறல்ல என்று எனது தகப்பனார் ப்ருஹ்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் அடிக்கடி குறிப்பிடுவார். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ச்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.
யாருக்கெல்லாம் திருப்தி?
ஸ்ரார்த்தம் செய்வதினால்:
1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.
3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்.
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத
நரகத்தில் இருப்பவர்களுக்கும்.
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்.
இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம்
No comments:
Post a Comment