உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
மைதா மாவுடன் சமையல் சோடாவைச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். உருளைக் கிழங்கை தனியாக வேகவைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். பட்டாணியுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
எண்ணெயில் சீரகம் போட்டு தாளிக்கவும். பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதுகளை சேர்க்கவும்.
பின்னர் மசித்த உருளைக் கிழங்கு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், தனியாத் தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். கொத்துமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மைதா மாவின் கலவையில் எலுமிச்சை அளவு எடுத்து நீளவாக்கில் உருட்டி தேய்த்து, அதில் உருளை கலவையை வைத்து முக்கோண வடிவில் மடிக்கவும்.
பிறகு வாணலியில் காயவைத்த எண்ணையில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இப்போது உருளைக்கிழங்கு சமோசா ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment