அகத்திக்கீரை சாம்பார்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
அகத்திக்கீரை 1 கட்டு
துவரம் பருப்பு அரை கப்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
புளிக்கரைசல் -கால் கப்
பச்சை மிளகாய் -2
சாம்பார் பொடி அரை டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
தாளிக்க
வடகம் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 3 சிட்டிகை
செய்முறை :
👉 பருப்பை மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேகவைக்கவும். கீரையை நன்கு அலசி நீரை வடிகட்டவும்.
👉கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அகத்திக்கீரை சேர்த்து வதக்கவும்.
👉 பின் வேகவைத்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதித்தவுடன் இறக்கவும்
👉 சாம்பார் பொடி வாசனை போனதும் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
👉வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். இப்போது சுவையான அகத்திக்கீரை சாம்பார் தயார்.
No comments:
Post a Comment