Thursday, July 4, 2024

குழம்பு மிளகாய் தூள்

 குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி ..

தேவையான பொருட்கள்:

மஞ்சள்  – 25 கிராம்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 1 கிலோ 
கொத்தமல்லி விதைகள் – 1/2 கிலோ 
மிளகு – 50 கிராம் 
சீரகம் – 200 கிராம் 
பெருஞ்சீரகம் – 100 கிராம் 
வெந்தயம் –25 கிராம் 
கடுகு – 50 கிராம் 
கடலை பருப்பு – 100 கிராம் 
துவரம் பருப்பு – 100 கிராம் 
கருப்பு உளுத்தம் பருப்பு – 10 கிராம் 
பச்சை அரிசி – 100 கிராம்

செய்முறை:

முதலில், வர மிளகாய் மற்றும் மல்லி விதைகளை 2 மணிநேரம் வரை நன்கு வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

நன்கு காய்ந்ததும், அதில் தேவையான அணைத்து பொருட்களையும் சேர்த்து மில்லில் கொடுத்து அரைத்து வர வேண்டும்.

அரைத்து வந்ததும், அதனை ஒரு பெரிய அகலமான தட்டில் கொட்டி சிறிது நேரம் அதன் ஹீட் குறையும் வரை ஆற வைக்க வேண்டும்.

அதன் பிறகு, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் சேமித்து வைத்து மாதக்கணக்கில் பயன்படுத்தி வரலாம்.

No comments:

Post a Comment